(85) விஜயகாந்த்தைப் பார்த்து மறைந்து நின்றேன்...!
"மக்களாட்சி' படத்தின் மிகப்பெரிய சிறப்பு கலைஞர் அவர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது என்பதை அவருடன் நெருக்கமாகப் பழ கிய பலர் என்னிடம் சொன் னார்கள்.
"மக்களாட்சி' படம் ரிலீ சான நேரத்தில் அவரைப் பார்க்க வந்த கட்சிக்காரர் களிடம் "மக்களாட்சி படம் பார்த்தீர்களா?' என்று ஆவ லாகக் கேட்பாராம். "பார்க்க வில்லை' என்று சொன்னால் "மொதல்ல போய் படத்தைப் பாருங்க' என்று சொல்வாராம். பல சாதனைப் படங்களை எழுதியவர், திரையுலகில் பல சாதனைகள் செய்தவர் "மக்க ளாட்சி' படத்தை ரசித்துப் பார்த்ததோடு இல்லாமல் அதைப் பலரோடும் பேசி மகிழ்ந்திருக்கிறார்.
"மக்களாட்சி' படத்தைப் பற்றி இன்னொரு செய்தி.
ஆர்.கே. செல்வமணி முதலில் அந்த கதையை சூப்பர் ஸ்டார் ரஜினி சாரிடம்தான் சொல்லியிருக்கிறார். அரசியல் படம் பண்ணவேண்டாம் என்று அப்போதைய சூழ்நிலையில் ரஜினி சார் நினைத்திருக்கிறார். அதனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். மம்மூட்டி அவர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றதும், ரஜினி சார் நடித்திருந்தால் படம் வேற லெவலுக்குப் போயிருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அப்படியொரு புரட்சிகரமான வரலாறு நடக்காமல் போய்விட்டது.
ரஜினி மட்டும் அன்று நடித்திருந்தால் தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.
"மக்களாட்சி' படம் மகிழ்ச்சியைத் தந்திருந்தாலும் "ராணி மகாராணி'யில் நான் அடைந்த இழப்பை எப்படி சரி செய்வது? மீண்டும் என் பயணத்தை எப்படித் தொடங்குவது என்ற கவலையும் என்னுள்ளே இருந்துகொண்டேயிருந்தது.
அ

அந்த நேரத்தில்தான் யாமிருக்க பயமேன் என்ற குரல் ஒலித் தது போல சரத்குமார் சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
உடனே அவரைப் போய்ப் பார்த்தேன். ""என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க லியாகத் சார்'' என்று விசாரித்தார்.
மனம் விட்டு அவரிடம் சில விஷயங்களைப் பேசினேன்.
""சார்,… நான் விஜயகாந்த் ஆளுங்கிற முத்திரை சினிமாவுல ரொம்ப ஸ்ட்ராங்கா பதிஞ்சு போச்சு. அவருக்காக ரஜினி சார் படங்கள் உட்பட வேறு சில படங்களுக்கும் அட்வான்ஸ் வாங் கிட்டு ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது விட்டு விட்டுப் போன படங்கள் பல. "விஜயகாந்த்தும் இப்ராகிம் ராவுத்த ரும் கூப்பிட்டால் பாதியிலேயே போய்விடுவார்... ' என்று நான் வாங்கிய பெயர், அதனால் விஜயகாந்த் படங்களைத் தவிர நான் வேறு படங்களில் பணியாற்ற மாட்டேன், வேறு படங்களுக்கு எழுதமாட்டேன் என்று பலர் நினைத்து விட்டதால் யாரிடமும் இருந்து எனக்கு அழைப்பே வரவில்லை'' என்று கூறினேன்.
""லியாகத் சார் இனிமேல் நீங்க வருத்தப்பட வேணாம். உங்க ளுக்கு படமும் வேணும். வாழ்க்கைக்கு பணமும் வேணும். அதுக்கு நான் இருக்கேன். "அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிக்கப் போற அரவிந்தன் படத்துல நடிக்கப்போறேன். நீங்கதான் வசனம் எழுத ணும், டி.சிவாகிட்ட பேசிட்டேன். உடனே போய்ப் பாருங்க'' என்றார்.
இயற்கைப் பேரிடர் வந்து, புயல் மழையால் வெள்ளத்தின் நடுவில் சிக்கித் தவிக்கும்போது யாராவது வந்து காப்பாற்றமாட் டார்களா என்று மனம் துடிக்கும்போது ஹெலிகாப்டரில் வந்து ஒருவர் காப்பாற்றி அழைத்துச் செல்லும்போது என்ன மனநிலையில் ஒருவன் இருப்பானோ அப்படி இருந்தேன் நான். இதைவிட வேறு உதாரணம் சொல்லத் தோன்றவில்லை.
அம்மா கிரியேஷன்ஸ் அலுவலகம் சென்று அன்பு சகோதரர் டி.சிவா அவர்களைப் பார்த்தேன். "அரவிந்தன்' படத்திற்காக அட் வான்ஸ் கொடுத்தார். இந்தப் படத்தில் எனக்கு இன்னொரு மகிழ்ச்சி, இயக்குநராக அறிமுகம் ஆவது எனது உதவியாளர் நாகராஜன். என்னிடம் சில படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியவர். சிஷ்யன் இயக்கும் படத்திற்கு குரு வசனகர்த்தா.…"அரவிந்தன்' படத்தின் கதை விவாதம் முடிந்து வசனம் முழுவதையும் எழுதி இயக்குநர் நாகராஜிடமும் உதவி இயக்குநர்களிட மும் படித்துக் காட்டினேன். அவர்களுக்கு மகிழ்ச்சி. அதில் வரும் முதலமைச்சர் கேரக்டருக்கு மணிவண்ணன் சாரைப் போடலாம் என்று சொன்னேன். நாகராஜும், உதவி இயக்குநர்களும் தனியாகப் போய் ஏதோ ஆலோசனை செய் தார்கள். பிறகு என்னிடம் வந்து முதலமைச்சராக என்னையே நடிக்கச் சொன்னார்கள்.
"அரவிந்தன்' படத்தில் ஒரு நட்சத்திரப் பட் டாளமே இருந்தது. சரத்குமார், ஆர்.பார்த்திபன், ஆனந்த்ராஜ், பிரகாஷ்ராஜ், விசு, தலைவாசல் விஜய், டெல்லி கணேஷ், பொன்னம்பலம், மலையாள நடிகர் திலகன், நக்மா, ஊர்வசி இவர்களுக் கிடையே முதலமைச்சராக நான்.
"அரவிந்தன்' படத்தின் ஷூட்டிங் தொடங் கியது. பல இடங்களில் ஷூட்டிங் நடந்தாலும், நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கத்தில் படப்பிடிப்பு நடந்த நாட்கள் மறக்க முடியாதவை. சரத்குமார் சாருடன் நெருங்கிப் பழகி பேசுகின்ற வாய்ப்பு கிடைத்த நாட்கள் அவை. அவர் தங்குவதற்காக ஒரு பெரிய கெஸ்ட்ஹவுஸ் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் இரண்டு பெரிய அறைகள் இருந்தன.
""லியாகத் சார்… நீங்க என் கூடவே தங்கிக்குங்க'' என்றார் சரத்குமார்.
ஒரு வாரத்திற்கும் மேலாக அவருடன் ஒரே இடத்தில் தங்கியிருந்தேன். அப்பொழுதுதான் அவருடைய அரசியல் ஆர்வம். நல்ல அரசியலுக்கான புதிய சிந்தனை கள், தமிழக அரசியல் மட்டுமல்ல, இந்திய அரசியலைப் பற்றியும், அவரிடமிருந்த ஞானம், எதிர்கால இந்தியா எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற அறிவாற்றல், அவருடைய சொல்லாற்றல், பேச்சாற்றல் இவை எல்லாவற்றை யும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது.
படப்பிடிப்பு முடிந்து ஒருநாள் திடீரெனக் கேட்டார்.
""லியாகத் சார்… எனக்கேத்த மாதிரி கதை வச்சிருக்கீங்களா?''
அவர் கேட்கும் பொழுது இரவு மணி 12 இருக்கும்.
""இருக்கு சார்''
""சொல்றீங்களா...?''
""சொல்றேன் சார்''
முதல் பாதியை சொல்லி முடித்து ""இடைவேளை சார்...'' என்றேன்.
""அருமையா இருக்கு'' என்றபடி மணியைப் பார்த்தார்.
""ரொம்ப நேரமாயிருச்சு. காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும். செகண்ட் ஆஃப் அப்புறமா கேட்டுக்கிறேன்'' என்றார். அதற்குப் பிறகு அங்கிருந்த இரண்டு, மூன்று நாட்களும் அவரால் கேட்க முடியவில்லை. இடைவிடாத படப் பிடிப்பு,…அவரைச் சந்திக்க வரும் வி.ஐ.பி.க்கள் சந்திப்பு என பிஸியாக இருந்தார்.
நெய்வேலியில் படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது ""லியாகத் சார்… என் கூடவே வந்திருங்க போயிரலாம்'' என்றார்.
அவர் காரை அவரே ஓட்ட, நானும் அவருடன் சென்னை நோக்கி பேசிக்கொண்டே வந்தோம். டிரைவர் இல்லை, உதவியாளர் இல்லை. நானும் அவரும் மட்டும்.
""கூட யாரையாவது கூப்பிட்டுக்கலாமே சார்''
""ஏன் பயமா இருக்கா?''
""உங்களுக்கு ஹெல்ப்பா இருக்குமே''
""நம்ம ஊர்ல நம்ம மக்களைப் பார்த்துக்கிட்டே போகப்போறோம். இந்த அனுபவம் எப்பவும் கிடைக்காது சார்'' என்றவர், கார் ஓட்டியபடி பல விஷயங்கள் பேசிக்கொண்டே வந்தார். வழியில் சிறு, சிறு டீக்கடைகளில் இறங்கி டீ சாப்பிட்டோம். அங்குள்ள மக்களும், ரசிகர்களும் சரத் சாரை பார்த்து பிரமித்தார்கள். மிகப்பெரிய ஹீரோ மிகச் சாதாரணமாக சின்னச் சின்ன கடைகளில் இறங்கி அவர்களுடன் சகஜமாக பேசி, சிரித்து மகிழ்ந்ததைப் பார்த்து நானும் பிரமித்தேன். சென்னை வந்ததும் வேறு ஒரு காரில் என்னை என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நெய்வேலியில் அவருடன் தங்கியிருந்ததும், அவருடன் தனியாக காரில் வந்ததும் அவருடன் எனக்கு நெருக்கத்தையும் ஒரு பாச உணர்வையும் ஏற்படுத்தியது.
சென்னை வந்ததும் அவரிடம் ""சார் இடைவேளைக்கு அப்புறம் கதைய எப்ப கேக்குறீங்க?'' என்றேன்.
""நிச்சயம் நீங்க நல்லாத்தான் பண்ணியிருப்பீங்க. எப்பன்னு நான் சொல்றேன்'' என்றார்.
"ராணி மகாராணி' படத்தில் ஏற்பட்ட மன வருத்தத்தினாலும் "அரவிந்தன்' பட வேலைகளினாலும், விஜயகாந்த்தையும் இப்ராகிம் ராவுத்தரையும் சந்திக்காமலேயே இருந்தேன்.
"ராணி மகாராணி' படத்தால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை இன்னும் வெளிப்படையாகச் சொல்வது நாகரிகமாக இருக்காது என்பதால் என்ன சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லியிருக்கிறேன். அந்தப் படத்தின் இழப்புகளால் எனக்குக் கிடைத்த வெகுமதி சரத்குமார் சாரின் அன்பும், நட்பும். அந்தக் காரணத்தினாலும் விஜயகாந்த்தை சந்திக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டேயிருந்தது. என் மனம் ஏனோ அவரைச் சந்திப்பதை தவிர்த்தது.
விஜயகாந்த்தைப் பார்த்து மறைந்து நின்றேன்...!
(வளரும்...)
படம் உதவி: ஞானம்