aa

(73) போலீஸ் புள்ளிவிபரம்!

1990 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முகமூடிக் கொள்ளையர்கள் பற்றிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோர்ட் சீன்களுக்கு வசனம் எழுதும் போது சில வழக்கறிஞர்களிடம் நான் ஆலோசிப்பேன். போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் எழுத வேண்டும் என்றால் நட்போடு பழகிக் கொண்டிருக்கும் சில காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசிப்பேன்.

Advertisment

அந்த நேரத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் ஜி.தியாகராஜன் சார் தயாரிப்பில், ராம்கி ஹீரோவாக நடித்த, மறைந்த என் நண்பர் மனோபாலா இயக்கத்தில் "வெற்றிப் படிகள்' என்ற படத்திற்கு நான் வசனம் எழுதிக்கொண்டிருந்தேன். முகமூடிக் கொள்ளையர்கள் பற்றியும், காவல்துறை பற்றியும் சொல்வதற்காகவே ஒரு காட்சியை எழுதினேன்.

முதலமைச்சர் தன் கட்சிக்காரர்களிடம் சொல்வார்.

முதல்வர்: முக்கியமான சிலரை மட்டும் ஏன் வரச் சொல்லியிருக்கேன் தெரியுமா? "நாம அமைதியாக இருந்தா மட்டும் போதாது, நாடு அமைதியா இருக்கணும். முகமூடிக் கொள்ளைகள் நடக்கிறதுக்குக் காரணமே ஆளுங்கட்சிக்காரங்க தான்னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்றாங்க. அதையும் ஜனங்க நம்பறாங்க. இதுக்கெல்லாம் காரணம் கவனக்குறைவா இருக்கிற போலீஸ் டிபார்ட்மெண்ட்தான்'

Advertisment

(என்று சொன்னதும் சீன் கட் ஆகி ஒரு போலீஸ் அதிகாரி எழுந்து ஐ.ஜி.யிடம் பேசுவது போல் இருக்கும்.)

ஒரு அதிகாரி: சார் எடுத்ததுக்கெல்லாம் போலீஸ்காரங் களையே குறை சொல்றத என்னால ஏத்துக்க முடியல சார். போலீஸ்காரங்ககிட்ட மட்டும் குறை இல்ல சார்... நம்ம டிபார்ட்மெண்ட் அமைப்புலயே இருக்கு சார்.

ஐ.ஜி: வாட் யூ மீன்?

அதிகாரி: எஸ் சார். நம்ம நாட்டோட ஜனத்தொகையோட அடிப்படையில் பார்த்தா ரெண்டாயிரம் பொதுமக்களுக்கு ஒரு போலீஸ்ங்கிற விகிதத்துலதான் நம்ம நாட்ல போலீசோட எண்ணிக்கையே இருக்கு. அதாவது ரெண்டாயிரம் பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற பொறுப்பு ஒரு போலீஸ்காரன் கிட்ட. இந்த ரெண்டாயிரம் பேர்ல அட்லீஸ்ட் இருபது பேராவது பிக்பாக்கெட் அடிக்கிறவங்க, கள்ளச்சாராயம் காய்ச்சறவங்க, கடத்தல் பண்றவங்க, விபச் சார விடுதி நடத்தறவங்க, கொள்ளை அடிக் கிறவங்க... ஏன் கொலை பண்ணக்கூட அஞ்சாத ரவுடிங்க இருப்பாங்க. இந்த இருபது பேரையே நம்மளால சமாளிக்க முடியலேன்னா ரெண் டாயிரம் பொதுமக்களுக்கு ஒரு போலீஸ்காரன் எப்படி சார் பாதுகாப்பளிக்க முடியும்?

ஐ.ஜி: இதெல்லாம் ஒரு எம்.எல்.ஏ. சட்டசபையில பேச வேண்டிய பேச்சு சார். ஒரு போலீஸ் அதிகாரி பேசுற பேச்சு இல்ல.

இன்னொரு அதிகாரி: சார் அவர் சொல்றதுல என்ன சார் தப்பு? இன்னிக்கு அரசியல் கட்சித் தலைவருங்க எல் லாம் தேவையில் லாத விஷயத்துக் கெல்லாம் ஊர் வலமா போறாங்க. உண்ணாவிரதம் இருக்காங்க. ஆர்ப் பாட்டம் பண்றாங்க. போராட்டம் நடத்த றாங்க. ஜாதிக்கொரு சங்கம், கட்சிக்கு ஒரு யூனியன் இவங்களுக்கு பாதுகாப்பு கொடுக் கிறதுக்கே நமக்கு நேரம் பத்தல சார்.

அதிகாரி: சார் சில நேரங்கள்ல ஒரு அம்பது பேரு போற ஊர்வலத்துக்கு நூறு போலீஸ்காரங்க துப்பாக்கியோடு பாதுகாப்பு தரவேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கு.

aa

ஐ.ஜி: என்னய்யா பேசுறீங்க... என்ன பேசுறீங்க. இதையெல்லாம் நான் போய் முதலமைச்சர்கிட்டேயும் பொதுமக்கள்கிட்டேயும் சொல்ல முடியுமா? அப்படி சொன்னாத்தான் ஏத்துக்குவாங்களா? போலீஸோட எண்ணிக்கை இப்ப இல்ல, அந்தக் காலத்தில இருந்தே குறைவாத்தான் இருக்கு. ஆனா இப்ப குற்றங்கள் பெருகிப் போச்சு. குற்றவாளிகள் அதிகமாயிட்டாங்க. அதையெல்லாம் கணக்குப் பார்த்தா போலீஸ் டிபார்ட்மெண்ட்டே செயல்பட முடியாது. யானை பெருசா இருந்தாலும் அதை அடக்குற அங்குசம் சிறிசுதான். அந்த அங்குசம் மாதிரிதான் நாம செயல்படணும்.

-இதுதான் அந்தக் காட்சிக்கு நான் எழுதிய வசனம். இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு போலீஸ் அதிகாரி சொன்னது.

வசனம் எழுதுவதற்கே ஒரு அதிகாரியிடம் போய் ஆலோசனை கேட்ட நான், என்னுடைய வாழ்க்கைக்கு யாரிடமும் ஆலோசனை கேட்காமல் இருந்துவிட்டேன். அதாவது விதியை மதியால் வெல்லும் முயற்சியை நான் செய்யவில்லை. இது என்னு டைய தவறு என்பதை காலம் கடந்து உணர்கிறேன்.

"எங்க முதலாளி' படம் எனக்கு வேறு ஒரு வேதனை யையும் ஏற்படுத்தியது. படம் பார்த்த ரசிகர்கள் "வசனம் நல்லா எழுதுவான். இந்தப் படத்துல அதுகூட இல்லியே?' என்று விமர்சனம் செய்தார்கள்.

காரணம், நான் எழுதி சுமாராக ஓடிய படங்களில் கூட வசனம் காரசாரமாக இருக்கும். எனக்கு கைதட்டலை வாங்கிக் கொடுக்கும். "எங்க முதலாளி' படத்திற்கு நான் வசனம் எழுதவில்லை. காரசாரமாக எழுதக்கூடிய கதையும் இல்லை. காட்சிகளும் இல்லை. அதற் காகவே அந்தப் படத்தை இயக்க வாய்ப்பு வந்தபோது நான் மறுத்திருக்க வேண்டும். சில இயக்குநர்களிடமிருந்து சில எழுத்தாளர்களிடமிருந்து ரசிகர்கள் சில விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். அது இல்லாவிட்டால் ஏமாந்துபோவார்கள். அப்படித்தான் "எங்க முதலாளி' படமும். நான் வசனம் எழுதியதாக நினைத்து என்னை விமர்சனம் செய்தார்கள்.

எத்தனையோ பேர் வாழ்க்கையில் வெற்றிபெற எத்தனையோ படங்கள் வெற்றிப்பட மாக அமைய நான் பலருக்கு பலவிதமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கைக்கு, என் வெற்றிகளுக்கு மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று எனக்குத் தோன்றாமலே போய்விட்டது.

அதற்குப் பெயர்தான் விதி.

விதியாலும் சதியாலும் வீழ்ந்து போவது அரசியலிலும் சினிமாவிலும் மிக மிக அதிகம்.

அரசியல் என்னை ஏமாற்றியது.

சினிமாவில் நான் ஏமாந்து போனேன்.

பொதுமனிதனாக இருந்து சினிமாவில் அரசியல் அவலங்களை எழுதிய நானே, ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தது விதி. கதை, வசனம் எழுதி இயக்கி கைதட்டலை வாங்கிக் கொண்டிருந்த நான் கைக்காசை இழப்பதற்காக தயாரிப்பாளராக மாறியதும் விதி.

அதனால் ஏற்பட்ட காயங்களை வாசகர்களி டம் பகிர்ந்து கொண்டால் மனதிற்கு மருந்து போட்டது போல இருக்கும் என்று நினைக்கிறேன்.

"எங்க முதலாளி' படத்தால் ஏற்பட்ட வேதனையை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பொழுதுதான் ஒரு தயாரிப்பாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

பல படங்களைத் தயாரித்தவர். பழகுவதற்கு நல்ல மனிதர். டி.எஸ்.சேதுராமன் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து படம் எடுத்தவர். அவர் தயாரித்த படத்தை சகோதரர் ஆர்.கே.செல்வமணி இயக்கியிருக்கிறார். என்னை இருமுறை அழைத்து அவர் படங்களை இயக் கச் சொன்னார். அப் பொழுது நான் பிஸியாக இருந்ததால் மறுத்து விட்டேன். அவர்தான் மூன்றாவது முறையாக என்னை வரச்சொன்னார். இப்பொழுதும் மறுத்தால் அது நியாயமாக இருக் காது என்பதால் உடனே அவரைப் போய்ப் பார்த்தேன்.

"லியாகத் அலிகான், இப்பவாவது என் படத்தை எழுதி இயக்கணும், முடியுமா?'' என்றார்.

"பண்ணலாம் சார்'' என்றேன்.

"விஜயகாந்த் கூப்பிட்டார், இப்ராகிம் ராவுத்தர் கூப்பிட்டார்னு பாதியிலேயே விட்டுட்டுப் போயிட மாட்டீங்களே?''

"இல்ல சார்... போக மாட்டேன் சார்'' என்றேன்.

"ரஜினி, கமல் தவிர வேறு எந்த ஹீரோவா இருந்தாலும் ஓ.கே.'' என்றார்.

"அந்தச் சமயத்தில் ரஜினி சாரும், கமல் சாரும் உச்சத்தில் இருந்தார்கள். அவர்கள் கால்ஷீட் கிடைக்காது என்பதால்' அப்படிச் சொன்னார்.

"உங்ககிட்ட கதை இருக்கா. ரூம் போடவா?'' என்று கேட்டார்.

என்னுடைய பதிலை எதிர்பார்க்காமலேயே மேனேஜரை அழைத்து எனக்காக ஹோட்டலில் ரூம் போடச் சொன்னார்.

தினமும் என்னுடைய ரூமுக்கு வருவார். "ஒவ்வொரு நாளும் ஒரு ஹீரோ பெயரைச் சொல்லி அவருக்குப் பண்ணலாம்' என்பார்.

நான் அதிர்ச்சியாகிப் போனேன்.

"என்ன சார்… பெரிய ஹீரோவை வச்சு பெரிய படம் பண்ணலாம்னு சொன்னீங்க. இப்போ ஜனக ராஜை வச்சு பண்ணச் சொல்றீங்களே?'' என்றேன்.

"தம்பி, ஓடற படம்தான் பெரிய படம். கதை நல்லா இருந்தா ஜனகராஜ் நடிச்சாலும் ஓடும். நல்லா இல்லேன்னா ஜாக்கிசான் நடிச்சாலும் ஓடாது'' என்றார்.

"நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா என் னால திடீர்னு ஜனகராஜை ஹீரோவா யோசிக்க முடியல. ஒண்ணு பண்ணுவோம்... ரூமை காலி பண்ணிருவோம் அப்புறமா யோசிக்கலாம்'' என்றேன்.

"உங்கள நான் விடற மாதிரி இல்ல'' என்றார்.

சொன்னது "அவர்' என்று அப்பொழுது நினைத்தேன்.

"விதி' என்பது பின் னால்தான் தெரிந்தது.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்