(55) நடிகையை மாற்றிய மந்திரி!
விஜய காந்த்தை வைத்து நான் இயக்கிய படம் "ஏழை ஜாதி'. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அப்போது, கர்நாடக காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந் தார். விஜயகாந்த்தின் நண்பரான அவர் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்.
பூஜைக்கு முதல்நாள் என்னை அழைத்தார்.
""ஏழை ஜாதி படத்தோட ஹீரோயின் யார் தெரியுமா?''“ என்று கேட்டார்.
""என்ன சார் இப்படி கேக்கறீங்க. நான் ஏற்கனவே சொன்னபடி பானு பிரியாவும், கஸ்தூரியும்தான். அவங்க ரெண்டு பேரும்தான் கதைக்குப் பொருத்தமா இருப்பாங்க. இன்னிக்கு அவங்களுக்கு அட்வான்ஸ் குடுக்கப் போறோம்ல''“என்றேன்.
ஆனால் தயாரிப்பாளர் எனக்கு பெரிய ஷாக் கொடுத்தார்.
""ஹீரோயின் அவங்க இல்ல... ஜெயப்பிரதா''“ என்றார்.
ஷாக்காகிப் பார்த்தேன்.
""அட்வான்ஸும் குடுத்தாச்சு'' என்றார். தன்னுடைய குடும்ப நண்பர் என்பதால் ஜெயப்பிரதாவே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து எனக்குத் தெரியாமலே அட்வான்ஸும் கொடுத்துவிட்டார்.
""கதையில அவங்களுக்கு கேரக்டரே இல்லியே சார்''“என்றேன்.
""விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரிடமும் சொல்லிவிட்டுத்தான் அட்வான்ஸ் கொடுத்தேன்'' என்றார்.
"எனக்குக்கூடச் சொல்லாமல் எப்படி அவர்கள் முடிவெடுத்தார்கள்?' என யோசித்தபடி அவர்களிடம் போய்க் கேட்டேன்.
""புரொடியூஸர் ரொம்பவும் பிடிவாதம் பிடிக்கிறார். எங்களால் மறுக்க முடியவில்லை''“என்றார்கள்.
"வேறு வழியில்லை. கதையை மாற்ற வேண்டும்' என்று முடி வெடுத்தேன்.
இரண்டு நாட்களாக ஒரே குழப்பம். பூஜை போட்டாகி விட்டது. இரண்
(55) நடிகையை மாற்றிய மந்திரி!
விஜய காந்த்தை வைத்து நான் இயக்கிய படம் "ஏழை ஜாதி'. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அப்போது, கர்நாடக காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந் தார். விஜயகாந்த்தின் நண்பரான அவர் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்.
பூஜைக்கு முதல்நாள் என்னை அழைத்தார்.
""ஏழை ஜாதி படத்தோட ஹீரோயின் யார் தெரியுமா?''“ என்று கேட்டார்.
""என்ன சார் இப்படி கேக்கறீங்க. நான் ஏற்கனவே சொன்னபடி பானு பிரியாவும், கஸ்தூரியும்தான். அவங்க ரெண்டு பேரும்தான் கதைக்குப் பொருத்தமா இருப்பாங்க. இன்னிக்கு அவங்களுக்கு அட்வான்ஸ் குடுக்கப் போறோம்ல''“என்றேன்.
ஆனால் தயாரிப்பாளர் எனக்கு பெரிய ஷாக் கொடுத்தார்.
""ஹீரோயின் அவங்க இல்ல... ஜெயப்பிரதா''“ என்றார்.
ஷாக்காகிப் பார்த்தேன்.
""அட்வான்ஸும் குடுத்தாச்சு'' என்றார். தன்னுடைய குடும்ப நண்பர் என்பதால் ஜெயப்பிரதாவே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து எனக்குத் தெரியாமலே அட்வான்ஸும் கொடுத்துவிட்டார்.
""கதையில அவங்களுக்கு கேரக்டரே இல்லியே சார்''“என்றேன்.
""விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரிடமும் சொல்லிவிட்டுத்தான் அட்வான்ஸ் கொடுத்தேன்'' என்றார்.
"எனக்குக்கூடச் சொல்லாமல் எப்படி அவர்கள் முடிவெடுத்தார்கள்?' என யோசித்தபடி அவர்களிடம் போய்க் கேட்டேன்.
""புரொடியூஸர் ரொம்பவும் பிடிவாதம் பிடிக்கிறார். எங்களால் மறுக்க முடியவில்லை''“என்றார்கள்.
"வேறு வழியில்லை. கதையை மாற்ற வேண்டும்' என்று முடி வெடுத்தேன்.
இரண்டு நாட்களாக ஒரே குழப்பம். பூஜை போட்டாகி விட்டது. இரண்டு கதாநாயகிகள் என்றிருந்த கதையை ஒரு கதா நாயகியாக்க வேண்டும். உதவி யாளர்களிடம் ஆலோசனை செய்தேன். அவர்கள் என்னைவிட அதிர்ச்சியில் இருந்தார்கள்.
""சார், விஜயகாந்த் நடிக்க வருவதற்கு முன்பே நடிக்க வந்தவர் ஜெயப்பிரதா. அவர எப்படி விஜய காந்த் சாருக்கு ஜோடியா ஒத்துக் கிட்டீங்க?''“என்று கேட்டார்கள்.
ஜெயப்பிரதா நடிக்க வந்தது விஜயகாந்த் வருவதற்கு முன்பா, பின்பா என்று ஆராய்ச்சி செய்யும் மனநிலையில் நான் இல்லை.
என் குடும்ப உறுப்பினர்கள், கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் என்னைக் கிண்டல் செய்தார்கள்.
""உங்களுக்கு வேறு ஹீரோ யின் கிடைக்கலியா?''“என்றார்கள்.
""ஜெயப்பிரதா மிகச்சிறந்த நடிகை. அழகென்றால் அப்படி யொரு அழகு. தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் புகழ்பெற்ற வர். பின் எதற்காக ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
""நீங்கள் சொல்வதெல்லாம் சரி...… ஆனால் விஜயகாந்த் அவர் களுக்கு ஒரு இளம் நடிகையை ஜோடியாகப் போடாமல் அவரைப் போடுவது சரியான முடிவல்ல'' என்று கூறினார்கள்.
அவர்கள் சொல்வது இருக் கட்டும். முதலில் அவருக்கேற்ற வாறு கதையைச் சரி செய்ய வேண்டுமே!
நடிகையாகி அரசியலுக்கு வந்து எம்.பி. ஆனவர் என்று கதை யில் முடிவு செய்தேன். வயதான ஹீரோயின் என்று அப்பொழுது தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத் தேன். என்னுடைய முடிவை என் உதவியாளர்கள் தற்காலிகமாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களா?
"ஏழை ஜாதி' படத்தில் ஜெயப்பிரதாவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தவிப்பு படம் ரிலீஸான நாளன்று எனக்கு அதிகமானது. முதல்நாள் முதல் காட்சியைப் பார்க்க காசி தியேட்ட ருக்குப் போனேன். என் உதவி இயக்குநர்களை அண்ணா சாலையில் இருந்த அலங்கார் தியேட்டருக்கு அனுப்பி வைத்தேன். (அலங்கார் தியேட்டர் இப்போது இல்லை)
காசி தியேட்டர் திருவிழா போல இருந்தது. விஜய காந்த் ரசிகர்களால் அந்த ஏரியாவே அமர்க்களப்பட்டது.
உள்ளே சென்று அமர்ந்தேன். படம் தொடங்கியது. படத்தின் முதல் ரீலில் ஒரே கைதட்டலும், விசில் சத்தமும் காசி தியேட்டரையே நடுநடுங்க வைத்தது.
இரண்டாவது ரீலில் ஜெயப்பிரதாவின் அறிமுகக் காட்சி. காவல் நிலையத்திற்கு காரில் வந்து இறங்குவார். அவரைத் திரையில் பார்த்ததும் வயதானவர் என்பதைக் குறிக்கும் விதமாக ஒரு வார்த்தையை சொல்லி ரசிகர்கள் சத்தமிட்டார்கள். (நாகரிகம் கருதி அந்த வார்த்தையைத் தவிர்க்கிறேன்). ரசிகர்களின் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனேன்.
சில நிமிடங்களிலேயே அந்த அதிர்ச்சி மறைந்து மனம் மகிழ்ச்சியானது. ரசிகர்கள் ஒட்டுமொத்த படத்தையும் ஓஹோ என்று ரசித்தார்கள். படம் முடிந்து வெளியே வந்தேன். விஜயகாந்த் ரசிகர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்காத குறைதான். படத் தை எழுதி இயக்கியவன் என்ற முறையில் மட்டுமல்ல, நான் விஜயகாந்த்தின் நண் பன் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த அன்பின் வெறித்தனமான வெளிப்பாடாக இருந்தது அவர்களின் பாராட்டு... ஆனால் எல்லோரும் ஒன்றைச் சொன்னார்கள்.
""அண்ணே... நீங்க ஹீரோயினா ஜெயப்பிரதாவை போட்டிருக்கக்கூடாது''
அதே நினைப்புடன் எனது அலுவலகத்திற்கு வந்தேன். அலங்கார் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு எனது உதவியாளர்கள் வந்தார்கள்.
""ரிசல்ட் எப்படி இருக்கு?'' என்று கேட்டேன். அவர்கள் அதற்குப் பதில் சொல்லவில்லை.
""காசி தியேட்டர்ல ஜெயப்பிரதா அறிமுகக் காட்சியில் ரசிகர்கள் ஏதாவது கத்துனாங்களா சார்?'' என்று என்னிடம் கேட்டார்கள்.
""ஏன் கேக்கறீங்க? அலங்கார் தியேட்டர்ல எதாவது சொல்லி கத்துனாங்களா?'' என்று நான் கேட்டேன்.
""ஆமா சார்'' என்றார்கள்.
காசி தியேட்டரில் சொல்லாத வேறு ஒரு வார்த்தையை சொல்லி ரசிகர்கள் சத்தமிட்டிருக்கிறார்கள். அதுவும் வயதானவர்களைச் சொல்லும் வார்த்தைதான்.
""படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க சார். நல்லாவே ரசிச்சாங்க சார்... நிறைய எடத்துல கைதட்டல் சார். ஆனா ஜெயப்பிரதாவுக்குப் பதிலா வேற ஒரு ஹீரோயின் போட்டி ருக்கணும்னு சொல்றாங்க சார்'' என்றார்கள்.
"ஏழை ஜாதி' படம் வந்தபொழுது குஷ்பு அவர்கள் கொடிகட்டிப் பறந்த நேரம். ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டிக் கொண்டாடிய நேரம்.
"ஜெயப்பிரதாவுக்குப் பதில் குஷ்பு நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்' என்று கற்பனை செய்து பார்த்தேன். "ஏழை ஜாதி' படத்தின் வெற்றி இன்னும் அதிகமாகியிருக்கும். இந்த அனுபவத்தை ரசிகர்களுக்காக மட்டுமல்ல, இன்று புதிதாக வந்திருக்கும் இளம் இயக்குநர்களுக்காகவும் சொல்கிறேன்.
கதை, திரைக்கதை, வசனம் மூன்றுமே சிறப்பாக அமைந்திருந்தாலும் நடிகர், நடிகைகளும் முக்கியம். கவனமாகத் தேர்வு செய்யவேண்டும், இல்லையென்றால் உழைப்பின் முழு பயனும் கிடைக்காமல் போய்விடும்.
"ஏழை ஜாதி' படத்தில் கதாநாயகி மாறியதால் கதை யும் மாறிப் போனது. இதை யெல்லாம் நாம் ரசிகர்களி டத்தில் விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தேவை யில்லாதது. திரையில் பார்ப்பதை வைத்துதான் அவர்கள் படத்தை ரசிப்பார்கள்.
ஒரு பாடல் காட்சியை இரண்டு நாட்களில் படமாக்கி னோமா, இருபது நாட்களில் எடுத்தோமா என்பதைப் பற்றியோ, ஒரு சண்டைக் காட்சியை மூன்று நாட்களில் எடுத்தோமா, முப்பது நாட் களில் எடுத்தோமா என்பதைப் பற்றியோ, ஒரு முழுப் படத் தையும் ஐம்பது நாட்களில் எடுத்தோமா, இருநூறு நாட்களில் எடுத்தோமா என்பதைப் பற்றியெல்லாம் ரசிகர்களுக்கு கவலையில்லை.
திரைக்குப் பின்னால் ஒரு நல்ல கதையை யாரோ சிலர் தவறாக மாற்றிவிட்டார்கள் என்பதைப் பற்றியும், ஒரு சுமாரான கதையை சிலர் நல்ல ஆலோசனைகள் கொடுத்து சிறப்பான கதையாக மாற்றி விட்டார்கள் என்பதைப் பற்றி யும் ரசிகர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.
திரையிலே என்ன பார்த் தார்களோ அதை வைத்துதான் படத்தின் தரத்தையும் ஒரு எழுத்தாளரின், இயக்குநரின் திறமையையும் எடை போடுவார்கள்.
அதனால் ஒரு திரைப் படத்தை உருவாக்கும் பொழுது வளைந்து கொடுக்கவேண்டிய விஷயங்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டும். நிமிர்ந்து நிற்க வேண்டிய விஷயங் களுக்கு நிமிர்ந்து நிற்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் நினைத்த வெற்றியை அடைய முடியும்.
ஏழை ஜாதி படச் சுருளை தூக்கிக்கொண்டு ஓடினார்கள்...
(வளரும்...)
படம் உதவி: ஞானம்