கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (52)

ss

aa

(52) டென்ஷனாக்கிய "நம்பர்-2 நாவலர் வசனம்!'

ளையராஜா அண்ணன் "பூந்தோட்டக் காவல்காரன்' கதையைக் கேட்டார். ஆனால் நான் என் சொந்த கதையைச் சொல்லிக்கொண்டிருந் தேன். சிறு வயதிலேயே அவரைப் பார்த்து ரசித்ததைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

"டேய்… படத்தோட கதையைச் சொல்லுடா''“ என்றார்.

சொன்னேன்.… சொல்லச் சொல்ல, ரசித்துக்கொண்டேயிருந்தார். "கதையை ரசித்தாரோ நம் ஊர்க்காரப் பையன் நன்றாகக் கதை சொல்கிறானே என்று நினைத்து ரசித்தாரோ' தெரியவில்லை.

சொல்லி முடித்துவிட்டு அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"என்ன... கதை எப்படின்னு சொல்லணுமா?'' என்றார்.

"ஆமாண்ணே''“என்று சொல்லிவிட்டு... அமைதியாக இருந்தேன்.

"நல்லா சொல்றே...… நல்லா வருவே''“என்றார்.

இது அவருக்கு நான் நெருக்கமான கதை.

"பூந்தோட்டக் காவல்காரன்'“படம் எனது திரைக்கதை, வசனத்தில் அண்ணன் இளையராஜா அவர்களின் இசையால் செந்தில்நாதன் இயக்கத் தால் வெள்ளிவிழா படமானது.

விஜயகாந்த்தின் அரசியல் பயணத்திற்கு அந்தப் படத்திலேயே நான் அச்சாரம் போட்டுவிட்டேன்.

மறைந்த நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன் அவர்கள் அரசியல்வாதியாக நடித் திருப்பார். எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் எளிமையான மனிதர் அவர். அப்பொழுது அவர் கலைஞர் அவர்களின் அன்புத்தம்பியாக இருந்தார். நானும் கலைஞரின் தம்பிகளில் ஒருவனாக இருந்ததால் இருவருக்குமிடையே ஒரு பாசம் உருவானது. “பூந்தோட்டக் காவல்காரன்“ படத்தில் அவரது அரசியல்வாதி கேரக்டரை எப்படி வைத்துக்கொள்ளலாம் என்று அவரிடம் கேட்டேன்.

"எழுதறவன் நீ,… என்னைக் கேக்குறீயே?'' என்றார்.

"நாவலர் நெடுஞ்செழியன்“ மாதிரி வைத்துக்கொள்ளலாமா?''“என்று கேட்டேன்.

நாவலர் நெடு

நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் முக்கியமான தலைவர்.…அவரது பேசும் ஸ்டைலே தனியாக இருக்கும். நான் சொன்னவுடனேயே அண்ணன் எஸ்.எஸ்.சந்திரன் அவரைப் போல பேசிக் காண்பித்தார். மேக்கப் மேனை அழைத்து நாவலர் நெடுஞ்செழியனைப் போலவே பென்சிலில் மெலிதாக மீசை வரையச் சொன்னார்.

dd

"அசத்திடுவோம்“ லியாகத்'' என்றார்.

படம் முடிந்து ரிலீசுக்கு முன் சென்சார் கமிட்டிக்கு போட்டுக் காட்டவேண்டும். அவர்கள் பார்த்து, கட் பண்ண வேண்டிய காட்சிகளோ, வசனங்களோ இருந்தால் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை கட் பண்ணிவிட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும்.

"பூந்தோட்டக் காவல்காரன்'“ படம் சென்சாருக்கு போனது.… சென்சார் அதிகாரியும், உறுப்பினர்களும் படம் பார்த்தார்கள். படம் பார்த்து முடித்துவிட்டு அவர்களுக்குள் ஆலோசனை நடந்துகொண்டிருந்தது. இப்ராகிம் ராவுத்தர், நான், படத்தின் இயக்குநர் செந்தில் நாதன் மூவரும் வெளியே நின்றிருந்தோம். படம் பார்த்து முடித்து மூன்றுமணி நேரமாகியும் அவர்கள் எங்களை அழைக்கவில்லை. எங்களுக்குள் குழப்பமாகிவிட்டது. "அரசியல் வசனங்களை கட்பண்ணச் சொல்வார்களோ,…அதைப் பேசி முடிப்பதற்கு அரைமணி நேரம் போதுமே, ஆனால் மூன்றுமணி நேரமாக என்ன பேசிக்கொண்டி ருக்கிறார்கள்' என்று எங்களுக்கு சற்று பதட்டமாகிவிட்டது. இப்ராகிம் ராவுத்தரின் முகத்தில் பயம் தெரிய ஆரம்பித்துவிட்டது.

"என்னண்ணே…ஏன் இப்படி லேட் பண்றாங்க?''“என்று தவிக்க ஆரம்பித்துவிட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களை அழைத்தார்கள்.

"நீங்கதான ரைட்டர்''“ என்று என்னைப் பார்த்து கேட்டார் சென்சார் அதிகாரி.

"ஆமா சார்''“

"எஸ்.எஸ்.சந்திரன் கேரக்டர, யாரை மனசுல வச்சுப் பண்ணீங்க?'' என்று அவர் கேட்டதும் "திக்' என்றிருந்தது.

இப்ராகிம் ராவுத்தர் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தார்.

"யாரையும் மனசுல வச்சு பண்ணல சார்''“ என்றேன்.

"இல்ல,… நீங்க ஒரு பெரிய அரசியல் தலைவரை மனசுல வச்சுத்தான் பண்ணியிருக்கீங்க. எங்க மெம்பர்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்றாங்க. நீங்க உண்மைய ஒத்துக்கிட்டா சில கட்ஸ் குடுத் துட்டு படத்தை விட்டுர்றோம். சொல்லலேன்னா எஸ்.எஸ்.சந்திரன் கேரக்டரையே படத்திலிருந்து முழுசா கட்பண்ண வேண்டியிருக்கும்''“என்றார் அந்த அதிகாரி.

என்ன பதில் சொல்வது என்று யோசித்தேன். நான் சொல்கிற பதிலால் படத்திற்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டுவிட்டால்… மறுபடியும் ஷூட்டிங் நடக்கவேண்டும். பணம் செலவு செய்ய வேண்டும். படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும். அது மட்டுமில்லாமல் எஸ்.எஸ்.சந்திரன், நாவலர் நெடுஞ்செழியனைப் போலவே நடித்து அதையெல்லாம் நாங்கள் சிரித்து ரசித்திருக்கிறோம் எதை இழப்பது?… எதையுமே இழக்க முடியாது.

"உண்மையச் சொன்னா அந்தக் கேரக்டரை அப்படியே விட்டுர்றோம்' என்று அதிகாரி சொல்கிறார். அவர் சொன்ன மாதிரி செய்யாமல் பிரச்சினையாகிவிட்டால் என்ன செய்வது?

dd

பணம் போட்டு படம் எடுத்தவர் இப்ராகிம் ராவுத்தர். அவர் சொல்லட்டும் என்று நான் அவரைப் பார்க்க... "நீங்கள் சொல்லுங்கள்' என்பது போல அவர் என்னைப் பார்த்தார்.

"சரி... உண்மையைச் சொல்லிவிடுவோம்' என்று மனதிற்குள் ஒரு முடிவெடுத்து "ஆமா சார்,… நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை மனசுல வச்சுத்தான் எஸ்.எஸ்.சந்திரன் கேரக்டரை எழுதினேன்.''“

நான் சொன்னதும் சென்சார் அதிகாரி, மற்ற உறுப்பினர்களைப் பார்த்தார்.

"வெளியே இருங்கள், பேசிவிட்டுச் சொல்கிறோம்'' என்றார்கள். வெளியே வந்து டென்சனோடு காத்திருந்தோம். சில நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே அழைத்தார்கள்.

"நீங்கள் உண்மையை ஒத்துக்கொண்டீர்கள். அதனால் அந்தக் கேரக்டரை விட்டுவிடுகிறோம்'' என்று சொன்னார் சென்சார் அதிகாரி.

இத்தனைக்கும் நாவலர் நெடுஞ்செழியனின் மரியாதையைக் குறைக்கும்படியாக எந்தக் காட்சியும் இல்லை. ஒரே ஒரு வசனம் அவர்களுக்கு நெருடலாக இருந்தது.

ஒரு காட்சியில் "நம்பர் டூ யாரு?' என்று உதவியாளர் கேட்க... "எப்பவுமே நான்தான்' என்று எஸ்.எஸ்.சந்திரன் சொல்வார். பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையி லும், கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோதும் இரண்டாவது இடத்திலேயே இருந்தார் நாவலர் நெடுஞ்செழியன். முதலமைச்சர் ராசி அவருக்கு இல்லாமலேயே போய்விட்டது. அதைத்தான் நான் நாசூக்காக வசனத்தில் சொல்லியிருந்தேன்.

நான் எழுதியது போலவே ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் நாவலர் நெடுஞ்செழியன் நம்பர் டூவாகத்தான் இருந்தார்.

“பூந்தோட்ட காவல்காரன்“ படம் மட்டுமல்ல, நான் எழுதிய பல படங்கள் சென்சாரில் பிரச்சினைகளை சந்தித்தது.

ஏவி.எம்.மின் "மாநகர காவல்' பட சென்சாரின்போது ஏவி.எம்.சரவணன் சார் மிகவும் டென்ஷனோடு நடந்து கொண்டிருந்தார். என் அருகில் இருந்த நண்பரிடம், "சரவணன் சார் ரொம்ப டென்ஷனோடு தவிக்கிறாரே'' என்றேன்.

நான் சொன்னது அவரது காதில் விழுந்துவிட்டது. "ஏன் சொல்லமாட்டீங்க லியாகத். நாங்க ஏவி.எம்.ல தயாரிச்ச எந்த படத்துக்கும் இப்படி சென்சார் டென்ஷன் வந்ததே இல்ல. நீங்க வரவச்சுட்டீங்க'' என்றார். காரணம், படத்தில் நான் எழுதிய அரசியல் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும்.…சென்சார் அதிகாரிகளுடன் வாதாடி சர்டிபிகேட் வாங்கினோம்.

அப்படி பிரச்சினை ஏற்பட்ட படங்களைப் பற்றி பிறகு பேசுவோம்.

ஆனால் "தாய்மொழி' படத்தில் நடந்த சம்பவத்தை மட்டும் சொல்லியாக வேண்டும். நான் அப்பொழுது அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை. கலைஞர் அவர்களிடம் தீவிர அன்புகொண்டிருந்த நேரம். "தாய் மொழி' படத்தில் ஹீரோ சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், வில்லன் மன்சூரலிகான்.…

மன்சூரலிகான் மீது ஒரு புகார். விசாரிப்பதற்காக பஞ்சாயத்து கூடி யிருக்கிறது. பஞ்சாயத்து தலைவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். ஊர்மக்கள் கூடியிருக்கிறார்கள். மன்சூரலிகான் வரும்போது பஞ்சா யத்து தலைவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அவர்கள் அப்படி எழுந்து நிற்கக்கூடாது. இருந்தாலும் வில்லன் பெரியஆள் என்பதால் எழுந்து பணிவாக வணக்கம் சொல்வார்கள். அப்பொழுது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒருவர் பக்கத்தில் இருந்தவரிடம், "சட்டசபையில முதலமைச்சர் வர்றப்ப சபாநாயகர் எழுந்து நிக்கிற மாதிரி நிக்கிறாரு'“ என்று பேசுவதுபோல ஒரு வசனம் எழுதியிருந்தேன்.

சட்டமன்றத்தில் சபாநாயகர் வரும்பொழுது முதலமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்தான் எழுந்து நின்று வணக்கம் சொல்லவேண்டும். இதுதான் மரபு. "தாய்மொழி' ஷூட்டிங் நேரத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் இருந்தார்கள். சபாநாயகராக சேடப் பட்டி முத்தையா இருந்தார்.

சபைக்கு முதலமைச்சர் வந்தபொழுது மரபை மீறி, சேடப் பட்டி முத்தையா எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னார். இதை விமர்சனம் செய்யும் வகையில் அந்த வசனத்தை நான் எழுதி யிருந்தேன்.

சென்ஸாரில் இந்த சீனுக்கு பிரச்சினையை உண்டாக்கிய பெண் உறுப்பினர்...

(வளரும்...)

படம் உதவி: ஞானம்

nkn020923
இதையும் படியுங்கள்
Subscribe