Advertisment

கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (50)

aa

ff

(50) எழுதுறதுக்கு கை இருக்காது!

"பராசக்தி படத்தில் கலைஞர் வசனம் எழுதி, நடிகர் திலகம் சிவாஜி பேசுன மாதிரி, லியாகத் அலிகான் எழுதி விஜயகாந்த் பேசி அசத்தியிருக்காரு' என்ற பாராட்டை "கேப்டன் பிரபாகரன்' எனக்குக் கொடுத்தது.

Advertisment

சாதாரண பாராட்டா அது? கலைஞர் போல என்னால் எழுத முடியுமா? கனவில் கூட எழுத முடியாது. கலைஞர் எழுதியது போல என்பது, ரசிகர்கள் எனக்குக் கொடுத்த உச்சபட்ச பாராட்டு. அம்பாஸிடர் காரில் போகிற ஒருவனுக்கு "ஆஸ்கர்' கிடைப்பது போன்ற பாராட்டு. கலைஞரின் வசனம்தான், என்னை சினிமாவுக்கு கொண்டுவந்து எழுத வைத்தது. நான் எழுத ஆரம்பித்த பிறகுகூட என்னோடு கலைஞர் வந்துகொண்டே இருந்தார். அதுவும் நான் செய்த பாக்கியம்.

Advertisment

என்னைப் பார்க்காமல் அவர்களாகவே பாராட்டிப் பேசிக்கொண்டு போன ரசிகர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. "கலைஞர் எழுதியது போல' என்று என்னிடம் நேரில் பாராட்டியர்களிடம், நான் சொன்ன பதில்... "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்பதுதான்.

"கேப்டன் பிரபாகரன்' படம் திரையிட்ட ஊர்களில் எல்லாம் பட்டையை கிளப்பிக் கொண்டிருந் தது. அப்பொழுது நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. விஜயகாந்த், ஆர்.கே.செல்வமணி, லியாகத் அலிகான், மன்சூரலிகான் மற்றும் படம் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற பெரிய ஊர்களுக்கு "கேப்டன் பிரபாகரன்' ரிலீஸாகியிருந்த திரை யரங்குகளுக்கு டூர் போவது போல, சரியாகச் சொல்வதென் றால் வெற்றிப் பயணம் போயிருந்தோம். சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டமும், மக்கள் கூட்டமும் அலைமோதி யது. திருப்பூர் தியேட்டர் என்று நினைக்கிறேன், அங்கு நடந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர், காவல்துறை உயரதிகாரி எல் லாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் என்னை பேச அழைக்கும்போது... "பே

ff

(50) எழுதுறதுக்கு கை இருக்காது!

"பராசக்தி படத்தில் கலைஞர் வசனம் எழுதி, நடிகர் திலகம் சிவாஜி பேசுன மாதிரி, லியாகத் அலிகான் எழுதி விஜயகாந்த் பேசி அசத்தியிருக்காரு' என்ற பாராட்டை "கேப்டன் பிரபாகரன்' எனக்குக் கொடுத்தது.

Advertisment

சாதாரண பாராட்டா அது? கலைஞர் போல என்னால் எழுத முடியுமா? கனவில் கூட எழுத முடியாது. கலைஞர் எழுதியது போல என்பது, ரசிகர்கள் எனக்குக் கொடுத்த உச்சபட்ச பாராட்டு. அம்பாஸிடர் காரில் போகிற ஒருவனுக்கு "ஆஸ்கர்' கிடைப்பது போன்ற பாராட்டு. கலைஞரின் வசனம்தான், என்னை சினிமாவுக்கு கொண்டுவந்து எழுத வைத்தது. நான் எழுத ஆரம்பித்த பிறகுகூட என்னோடு கலைஞர் வந்துகொண்டே இருந்தார். அதுவும் நான் செய்த பாக்கியம்.

Advertisment

என்னைப் பார்க்காமல் அவர்களாகவே பாராட்டிப் பேசிக்கொண்டு போன ரசிகர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. "கலைஞர் எழுதியது போல' என்று என்னிடம் நேரில் பாராட்டியர்களிடம், நான் சொன்ன பதில்... "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்பதுதான்.

"கேப்டன் பிரபாகரன்' படம் திரையிட்ட ஊர்களில் எல்லாம் பட்டையை கிளப்பிக் கொண்டிருந் தது. அப்பொழுது நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. விஜயகாந்த், ஆர்.கே.செல்வமணி, லியாகத் அலிகான், மன்சூரலிகான் மற்றும் படம் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற பெரிய ஊர்களுக்கு "கேப்டன் பிரபாகரன்' ரிலீஸாகியிருந்த திரை யரங்குகளுக்கு டூர் போவது போல, சரியாகச் சொல்வதென் றால் வெற்றிப் பயணம் போயிருந்தோம். சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டமும், மக்கள் கூட்டமும் அலைமோதி யது. திருப்பூர் தியேட்டர் என்று நினைக்கிறேன், அங்கு நடந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர், காவல்துறை உயரதிகாரி எல் லாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் என்னை பேச அழைக்கும்போது... "பேனாவில் மை ஊற்றுவதற்குப் பதிலாக திராவகத்தை ஊற்றி எழுதும் லியாகத் அலிகான் பேசுவார்' என்று கூறினார்.

நான் பேசும்பொழுது ஒரு விஷயத்தை குறிப்பிட் டேன். "கேப்டன் பிரபாகரன்' ரிலீசுக்குப் பிறகு எனக்கு சில மிரட்டல் போன்கள் வந்தன. "எழுது வதற்கு கை இருக்காது' என்று மிரட்டினார்கள். இது என் மனைவிக்குத் தெரியும். எங்க ஏரியா பசங்க, என் தம்பியின் நண்பர்கள் வேறு என் மனைவிடம் வந்து பயத்தை உண்டுபண்ணினார்கள். "அண்ணன் ஏன் இப்படியெல்லாம் எழுதுறாரு' என்று.

தியேட்டர் ரிசல்ட் பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு சாப்பிட அமர்ந்தேன். என் மனைவி தட் டில் சோறு வைத்தார். குழம்பு ஊற்றி சாப்பிடுவதற் காக கையில் சோற்றை எடுத்து வாய்க்கு அருகில் கொண்டு போகும்போது... என் மனைவி, "இனிமேல் இப்படியெல்லாம் எழுதாதீர்கள்... ஏதாவது தப்பா நடந்திருமோன்னு பயமா இருக்கு' என்றார்.

என் மனைவியைப் பார்த்தேன். கையில் இருக்கும் சோற்றையும் பார்த்தேன். பிறகு என் மனைவியிடம் சொன்னேன்... "இந்த சோறு கொடுத்த விஜயகாந்த்... எனக்கு பாதுகாப்பு கொடுக்க மாட்டாரா?'' என்று.

dd

இப்படி நான் பேசியவுடன் அரங்கத்தில் இருந்த விஜயகாந்த் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து உணர்ச்சிபொங்க முழக்கமிட்டார்கள்.

"அண்ணே... நாங்க இருக்கோம்... நாங்க இருக் கோம்... நீங்க யாருக்கும் பயப்படாம எழுதுங்கண்ணே'' என்றார்கள். இது அப்பொழுது நடந்த உணர்ச்சி மயமான காட்சி. இப்பொழுதும் என் கண்ணுக் குள்ளும், நெஞ்சுக்குள்ளும் நிறைந்திருக்கும் காட்சி.

யாருக்காக அப்படியெல்லாம் எழுதினே னோ, அவரையும் பிரிந்துவிட்டேன். எனக்காக உணர்ச்சி பொங்க, ஆவேசமாகக் குரல் எழுப்பி னார்களே, அந்த அன்புத் தம்பிகளையும் பிரிந்துவிட்டேன்... இல்லை பிரித்துவிட்டார்கள். அதைப்பற்றி பிறகு பேசுவோம்.

இப்பொழுது "கேப்டன் பிரபாகரன்' படத் தின் க்ளைமாக்ஸ் கோர்ட் சீனைப் பற்றி பேசுவோம்.

வீரப்பனை நியாயப்படுத்தி அப்பொழுது நான் எழுதிய வசனங்களை, வீரப்பனை பயன் படுத்தி ஆதாயம் அடைந்த அதிகாரவர்க்கத்தைப் பற்றி நான் எழுதிய வசனங்களை இன்றைய இளை ஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதில் ஒரு சில பகுதிகளைச் சொல்கிறேன்.

கோர்ட் கூண்டில் பிரபாகரனாக விஜயகாந்த் இருப்பார். பப்ளிக் ப்ராஸிகியூட்டர் (அரசு வக்கீல்) அவர் மீது குற்றம் சுமத்துவார்.

அரசு வக்கீல்: யுவர் ஆனர்... தங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கின்ற பிரபாகரன், குற்றவாளி தான் என்பதை நிரூபிக்க ஆதாரங்களும் தேவை யில்லை, சாட்சியங்களும் தேவையில்லை. காரணம், பலர் அறிய ஒரு பொதுஇடத்தில் பல கொலை களைச் செய்திருக்கிறார். இவரால் கொல்லப்பட்ட வர்கள் சாதாரண ஆட்களே அல்ல. மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்த ஒரு எம்.எல்.ஏ., சட்டம்-ஒழுங்கை பாதுகாத்துக்கொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு மாவட்டத்தை கட்டியாளும் கலெக்டர். இப்படி தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியிருக்கும் இத்தனை கொலைகளைச் செய்த இவரைத் தண்டிப்பதற்கு இங்கு விசாரணையே தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

நீதிபதி: மிஸ்டர் பிரபாகரன்... கொலை செய்த குற்றத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

பிரபாகரன்: என் மனசாட்சிப்படி நான் குற்றவாளி இல்லை.

அரசு வக்கீல்: மிஸ்டர் பிரபாகரன்.. நீங்க ஒரு வக்கீலை வச்சு வாதாடுறதுதான் நல்லதுன்னு நினைக் கிறேன். ஏன்னா, உங்களுக்கு சட்டம் தெரியாது.

பிரபாகரன்: எனக்கு தர்மம் தெரியும், நியாயம் தெரியும், நீதிக்குத் தலைவணங்கவும் தெரியும்.

நீதிபதி: பிரபாகரன்... நீங்க கொலை செஞ்சீங்களா, இல்லையா?

பிரபாகரன்: யுவர் ஆனர்... வீரபத்ரனைப் பிடிக்கணும். அவனோட அராஜகத்தை அழிக்கணும்... மக்கள் அமைதியா வாழணும். இது அரசாங்கம் எனக்கு கொடுத்த வேலை. அந்த வேலையைத்தான் நான் செஞ்சு முடிச்சேன். இது எப்படி குற்றமாகும்?

அரசு வக்கீல்: அப்படின்னா நீங்க வீர பத்ரனைத்தான் சுட்டிருக்கணும். அத விட்டுட்டு, எம்.எல்.ஏ., டி.எஸ்.பி., கலெக்டர்னு சுட்டதுக்கு காரணம், யார் பெரியவங்கன்ற உங்களுக்குள்ள ஏற் பட்ட தகராறுதான். சுருக்கமா சொன்னா... நீங்க அதி காரச் சண்டை நடத்தியிருக்கீங்க. அதுக்கு நியாயம் கற்பிக்கிறீங்க. கடமைன்னு கதை விடறீங்க.

பிரபாகரன்: நோ... இந்த நாட்ல குற்றங்களே நடக்காம தடுக்கணும்னா குற்றவாளிகளை அழிச்சா மட்டும் பத்தாது... குற்றவாளிகளை உருவாக்குறவங்களையும் அழிக்கணும். அதனாலதான் வீரபத்ரனை உருவாக்குன எம்.எல்.ஏ.வ சுட்டேன், டி.எஸ்.பி.ய சுட்டேன், அவங்களுக்கு துணையா இருந்த கலெக்டரை சுட்டேன்.

அரசு வக்கீல்: அப்போ... வீரபத்ரனை தப்புபண்ணத் தூண்டுனது அவங்கதான்னு சொல்றீங்களா?

பிரபாகரன்: நிச்சயமா அவங்கதான். தப்பான வழியில கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் வீரபத்ரனுக்கு இல்ல.

நீதிபதி: அவ்வளவு உறுதியா எப்படிச் சொல்றீங்க பிரபாகரன்?

பிரபாகரன்: எஸ் யுவர் ஆனர். அவன் குழந்தைய கார்ல அனுப்பி கான்வென்ட்ல படிக்க வைக்கிறதா இருந்தா அவனுக்குப் பணம் தேவை. கழுத்து நிறைய நகை போட்டு, வேளைக்கு ஒரு சேலை கட்டி ஆடம்பரமா அவன் மனைவி வாழ நினைச்சிருந்தா அதுக்குப் பணம் தேவை. ஏ.சி. ரூம்ல வாழ்க்கைய அனுபவிக்கிறவனா இருந்தா, அவனுக்குப் பணம் தேவை. அவன் குடும்பத்துல யாருக்காவது அரசாங்க வேலை வாங்கிக் குடுக்கணும்னா, மந்திரிக்கு கொடுக்க பணம் தேவை. எம்.எல்.ஏ.வுக்கு கொடுக்க பணம் தேவை. அவன் ஒரு அரசியல்வாதியா இருந்தா, கட்சி நடத்துறதுக்கு பணம் தேவை. ஆனா சுதந்திரமா வாழ முடியாம, காட்டுக்குள்ள மறைஞ்சு வாழறதுக்கு, கட்டுன பொண்டாட்டிகூட ஒரு சராசரி மனுஷனப் போல ஒருநாள் கூட நிம்மதியா வாழமுடியாதவனுக்கு, எந்த நேரத்துலயும் போலீசால புடிக்கப்படலாம்கிற பயத்துல, ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒரு யுகமா கழிக்கிறவனுக்கு எதுக்கு சார் பணம் வேணும்?

அந்த எம்.எல்.ஏ.வுக்கு பணம் வேணும், டி.எஸ்.பி.க்கு பணம் வேணும், கலெக்டருக்குப் பணம் வேணும்... அவங்கள்லாம் பொதுவாழ்க்கையில இருக்கிறதுனால திருட்டுத்தனமா சம்பாதிச்சுக் கொடுக்குறதுக்கு ஒரு ஆள் வேணும். அதுக்காக, அவங்களால உருவாக்கப்பட்டவன்தான் வீரபத்ரன்.

அரசு வக்கீல்: மிஸ்டர் பிரபாகரன்... எம்.எல்.ஏ., டி.எஸ்.பி., கலெக்டர் மூணுபேரையும் நீங்க உயிரோட கொண்டுவந்து சட்டத்தின் முன்னாலதான் நிறுத்தியிருக்கணும். சட்டப்படிதான் அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கணும். மக்களுக்கு உண்மை தெரியறதுக்கு அரசாங்கம் விசாரணைக் கமிஷன் அமைச்சிருக்கும்.

பிரபாகரன்: விசாரணைக் கமிஷனா? இதுவரைக்கும் இந்தியாவுல எந்த விசாரணைக் கமிஷனுக்கு முடிவு தெரிஞ்சிருக்கு. இதுவரைக்கும் எந்த அரசியல்வாதி தண்டிக்கப்பட்டிருக்கான்?

அரசு வக்கீல்: அரசியலையும் அரசியல்வாதி களையும் விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை.

பிரபாகரன்: ஏன் இல்ல? மக்களுக்கு நல்லது பண்ணுவோம்னு வாக்கு கொடுத்துதான ஓட்டு கேக்குறாங்க. அந்த வாக்குறுதிய மறந்தவங்கள தட்டிக் கேக்க எங்களுக்கு உரிமையில்லையா? எதிர்க் கட்சிக்காரங்க, ஆளுங்கட்சிக்காரங்களப் பாத்து ஊழல்பேர்வழிங்க, திருடன்னு சொல்றாங்க. மக்களும் அதை நம்பி எதிர்க்கட்சிக்காரங்கள, ஆளும்கட்சியா ஆக்குனா இவங்க, அவங்கள திருடன்னு சொல்றாங்க.

அரசு வக்கீல்: நேத்து அவங்க திருடுனாங்க. இன்னிக்கு இவங்க திருடுறாங்க. நாளைக்கு யாரோ திருடுவாங்க... அதைப்பத்தி உங்களுக்கென்ன?

நீதிபதி: இப்ப நாம யார் திருடன்னு விவாதிக்கல... ஈர்ம்ங் ற்ர் ற்ட்ங் ல்ர்ண்ய்ற்...

இப்படி பரபரப்பான விவாதம் நிறைந்த கோர்ட் சீன்.... முழுவதையும் நான் சொல்லவில்லை. ஆனால் சமுதாயச் சிந்தனையுள்ள இன்றைய இளைஞர்கள், ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த இளைஞர்களும் சரி, கட்சி சாராத இளைஞர்களும் சரி, "கேப்டன் பிரபாகரன்' படத்தில் வரும் கோர்ட் சீனை அவசியம் பார்க்க வேண்டும்.

(வளரும்...)

nkn260823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe