Advertisment

கருப்பு + சிவப்பு = புரட்சி -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (39)

dd

dd

(39) கர்மவீரர் -மக்கள் திலகம் -கலைஞர் -தளபதி!

Advertisment

"தாய்ப்பாசம்' படத் தில் சார்-, அர்ஜுனிடம் "ஆமா மூணு எழுத்து மறைஞ்சிருச்சு எம்.ஜி.ஆர். அதனால ஆங்கில எழுத் துக்கள் 23தான்'' என்று பேசுவதுபோல் எழுதிக் கொடுத்தேன். இந்த வசனத்துக்கு தியேட்டர் கைத்தட்டலால் அதிர்ந்தது... விசில் பறந்தது. இது என் வசனத்துக்கு கிடைத்த பாராட்டல்ல. எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் கிடைத்த கைத்தட்டல். மறைந்த பிறகும் மக்கள் மனதில் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை அடையாளம் காட்டும் கைத்தட்டல்.

எந்த வசனத்தை எந்த இடத்தில் எழுதினால் பெரிய வரவேற்பும் கைத்தட்டலும் கிடைக்கும் என்பதை தெரிந்து எழுதுவது ஒரு கலை.…அந்தக் கலையை இறைவன் எனக்குக் கொடுத் திருக்கிறான் என்றுதான் இப்பொழுதும் நினைக் கிறேன். நிறைய படங்களுக்கு எழுதியிருக்கிறேன். படங் களுக்கு இல்லாமல் விஜய காந்த் வளர்ச்சிக்காகவும் நிறைய எழுதியிருக்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்த பிறகு பல சூழ்நிலையில் தலைவர்களுக்காகவும், கட்சிக்காகவும் நிறைய எழுதியிருக்கிறேன். அப்படியெழுதும் பொழுதெல்லாம் என்ன எழுதுவது என்கிற எந்த ஐடியாவும் இல்லாமல்தான் பேப்பரையும், பேனாவையும் எடுப்பேன். முப்பது பக்கங்கள், நாற்பது பக்கங்கள், அதற்கும் மேலே எழுதி முடித்த பிறகுதான் எனக்குத் தோன்றும். இவையெல்லாம் என் மனதிற்குள் இருந்ததா? இல்லையே, பின் எப்படி வந்தது?

Advertisment

எனக்கு புரிந்தது, நான் எழுதவில்லை... இறைவன் எழுத வைக்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் கொடுத்ததுபோல் இறைவன் எனக்கு இந்த வரத்தைக் கொடுத்திருக்கிறான். எனவே "நான் எழுதினேன்' என்ற இடங்கள் வரு

dd

(39) கர்மவீரர் -மக்கள் திலகம் -கலைஞர் -தளபதி!

Advertisment

"தாய்ப்பாசம்' படத் தில் சார்-, அர்ஜுனிடம் "ஆமா மூணு எழுத்து மறைஞ்சிருச்சு எம்.ஜி.ஆர். அதனால ஆங்கில எழுத் துக்கள் 23தான்'' என்று பேசுவதுபோல் எழுதிக் கொடுத்தேன். இந்த வசனத்துக்கு தியேட்டர் கைத்தட்டலால் அதிர்ந்தது... விசில் பறந்தது. இது என் வசனத்துக்கு கிடைத்த பாராட்டல்ல. எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் கிடைத்த கைத்தட்டல். மறைந்த பிறகும் மக்கள் மனதில் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை அடையாளம் காட்டும் கைத்தட்டல்.

எந்த வசனத்தை எந்த இடத்தில் எழுதினால் பெரிய வரவேற்பும் கைத்தட்டலும் கிடைக்கும் என்பதை தெரிந்து எழுதுவது ஒரு கலை.…அந்தக் கலையை இறைவன் எனக்குக் கொடுத் திருக்கிறான் என்றுதான் இப்பொழுதும் நினைக் கிறேன். நிறைய படங்களுக்கு எழுதியிருக்கிறேன். படங் களுக்கு இல்லாமல் விஜய காந்த் வளர்ச்சிக்காகவும் நிறைய எழுதியிருக்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்த பிறகு பல சூழ்நிலையில் தலைவர்களுக்காகவும், கட்சிக்காகவும் நிறைய எழுதியிருக்கிறேன். அப்படியெழுதும் பொழுதெல்லாம் என்ன எழுதுவது என்கிற எந்த ஐடியாவும் இல்லாமல்தான் பேப்பரையும், பேனாவையும் எடுப்பேன். முப்பது பக்கங்கள், நாற்பது பக்கங்கள், அதற்கும் மேலே எழுதி முடித்த பிறகுதான் எனக்குத் தோன்றும். இவையெல்லாம் என் மனதிற்குள் இருந்ததா? இல்லையே, பின் எப்படி வந்தது?

Advertisment

எனக்கு புரிந்தது, நான் எழுதவில்லை... இறைவன் எழுத வைக்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் கொடுத்ததுபோல் இறைவன் எனக்கு இந்த வரத்தைக் கொடுத்திருக்கிறான். எனவே "நான் எழுதினேன்' என்ற இடங்கள் வரும்பொழுதெல் லாம் வாசகர்கள், அதை நானாக நினைக்கவேண் டாம். தற்பெருமையாகவோ, தம்பட்டமாகவோ நினைக்க வேண்டாம். எல்லா புகழும் இறை வனுக்கே. அப்படி திடீரென நான் எழுதியதுதான் "தாய்ப்பாசம்' படத்தில் எம்.ஜி.ஆர். பற்றிய வசனம்.

மனிதருள் மாணிக்கமாக விளங்கிய எம்.ஜி.ஆர். அவர்களை நான் சந்தித்த நாள்... என்னால் மறக்கவே முடியாத நாள்.

கோவை செழியன்… அப்பொழுது பெரிய தயாரிப்பாளர், வசதியானவர்.… எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரையெல்லாம் வைத்து படமெடுத்தவர். எம்.ஜி.ஆரே அவரை "முதலாளி' என்றுதான் கூப்பிடுவார். தி.மு.க.வில் இருந்தார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடங்கியதும் அந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர் சிவாஜி-விஜயகாந்த் இருவரையும் வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார். கதை அனுராதா ரமணன் எழுதியது. "கல்கி' பத்திரிகையில் தொடராக வந்தது என்று நினைக்கிறேன். டைரக்டராக கே.ரங்கராஜ் அவர்கள். பல வெற்றிப் படங்களை இயக்கியவர். கூடுதல் சிறப்பு அவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் உதவியாளராக இருந்தவர். கோவை செழியன் என்னை அழைத்தார். "நீதான் திரைக்கதை, வசனம் எழுத வேண்டும்'' என்றார். எவ்வளவு பெரிய வாய்ப்பு. எவ்வளவு பெரிய தயாரிப்பாளர். எவ்வளவு பெரிய காம்பினேஷன். சிவாஜி- விஜயகாந்த்.

கோவை செழியன் சொன்ன இன்னொரு செய்தி எனக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தது.

"என் வீட்டிற்கு வந்து படத் துவக்கவிழாவிற்கு குத்து விளக்கேற்றி வைக்க எம்.ஜி.ஆரை கூப்பிடப் போகிறேன். நாளை காலை அதற்காக அவரை சந்திக்கப்போகிறேன்'' என்றார்.

"அண்ணே… எம்.ஜி.ஆரைப் பார்க்கப் போறப்ப நானும் கூட வரவாண்ணே'' என்றேன்.

"காலையில் வந்திரு.… டிபன் சாப்பிடாம வா,… நாம அங்க சாப்பிட்டுக்கலாம்'' என்றார்.

"பழம் நழுவி பாலில் விழுவதுபோல' என்பார்களே, அதுதானா இது?

மறுநாள் காலை ராமாவரம் தோட்டத் திற்குப் போனோம். அங்கே கோவை செழியனுக்கு நல்ல வரவேற்பு.

எம்.ஜி.ஆரின் அறையில் அமர்ந்தோம்.

"எம்.ஜி.ஆரைப் பார்க்க அப்பாயின்ட் மெண்ட் கேட்டப்பவே, "டிபன் என்கூட சாப்பிடலாம் வாங்க'ன்னு சொல்லிட்டார்'' என்றார் கோவை செழியன்.

dd

எம்.ஜி.ஆர். வந்தார். சூரியன் வந்ததுபோல இருந்தது.… எனக்கு அப்பொழுது அப்படித்தான் தோன்றியது. இப்பொழுது என்றால் முழுநிலா வந்ததுபோல என்று சொல்லியிருப்பேன்.

நான் வணக்கம் சொன்னேன். கைகள் லேசாக நடுங்கியது. சிரித்தார், சிரிப்பா அது... அந்தச் சிரிப்பிலேதான் தமிழ்நாடே மயங்கியது. அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் கோவை செழியன். "பெரிய எழுத்தாளரா வரணும்,… மக்களுக்காக எழுதணும்' என்றார் எம்.ஜி.ஆர். நான் கேட்காம லேயே ஆசிர்வாதம் போல அவர் வாயிலிருந்து வந்த வார்த்தை அது. அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போலத் தோன்றியது.

எடுக்கப் போகும் படத்தைப் பற்றி எம்.ஜி.ஆர். விசாரித்தார்.

"நல்ல கதையா முதலாளி''

"நல்ல கதை... நல்லா வரும்.''

நிறைய பேசினார்கள். அரசியலைப் பற்றியும் பேசினார்கள். நான் கேட்டுக்கொண்டே இருந் தேன். உதவியாளர் வந்தார். அவரைப் பார்த்த வுடனே எம்.ஜி.ஆர். கேட்டார். "முதலாளி டிபன் சாப்பிட லாமா?''

போய் டைனிங் டேபிளில் அமர்ந்தோம்.

விதவிதமான அயிட்டங்கள்.

தோட்டத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்க்கப் போனால் சாப்பிட வைக்காமல் அனுப்பமாட்டார் என்பார்கள். முதல் கேள்வியே "சாப்பிட்டீங்களா?' என்றுதான் இருக்கும் என்றெல்லாம் நான் நிறைய கேள்விப்பட்டி ருக்கிறேன். அவரைப் பார்க்க வருவதற்கு முன் பாகவே சந்திக்க வேண்டும் என்று அப்பாயின்ட் மெண்ட் கேட்டபோதே, "சாப்பிட வந்திடுங்க' என்று அழைத்த மக்கள் திலகம்,… ஹீரோவாக வெள்ளித் திரையில் மின்னிக்கொண்டிருந்த போதும், முதலமைச்சராக அரசியல் களத்தில் அதிரடித் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருந்தபோதும் எத்தனையோ ஏழை-எளியோரின் பசியாற்றிய கொடை வள்ளல். மாணவர்கள் அவ சியம் கல்வி கற்கவேண்டும், அவன் பசியோடு இருந்தால் படிப்பு ஏறாது என்று மதிய உணவு கொடுத்து கல்வியும் கொடுத்தவர் கர்ம வீரர் பெருந்தலைவர் காமராசர். அதை சத்துணவுத் திட்டமாக மாற்றி விரிவுபடுத்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். "சத்துணவு தந்த சரித்திர நாயகன்' என்று புகழப்பட்டார். "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

அவர் விரிவுபடுத்திய சத்துணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி மாணவச் செல்வங்களுக்கு மதிய உணவில் முட்டையும் வழங்க உத்தர விட்டவர் கலைஞர். அதையும் தாண்டி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்திருப்பவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

(அரசியல் வேறுபாடு இல்லாமல் நல்லவைகளை பாராட்டி எழுதினால்தான் தொடர் நடுநிலையோடு இருக்கும். நான் எழுதுவதிலும் ஒரு நியாயம் இருக்கும். நிறைகளை எழுதினால்தான், குறைகளையும் சுட்டிக்காட்ட முடியும்.'

இன்று எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் எத்தனையோ தலைவர்கள் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததுகூட இல்லை.

எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. எம்.ஜி.ஆரைப் பார்த்தது மட்டுமல்ல… அவருடன் அமர்ந்து சாப்பிடும் பாக்கியமும்.…

சாப்பிடும்பொழுது அவர் சொன்னார்...?…

"முதலாளி… படம் பண்றது பெரிய விஷயம் இல்ல. லாபம் வர்ற மாதிரி பண்ணணும். லாபம் வந்தாதானே நாலுபேருக்கு நீங்க உதவி பண்ண முடியும்''என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

"தான் மட்டும் உதவி செய்தால் போதாது, மற்றவர்களும் உதவி செய்ய வேண்டும். செய்ய வைக்க வேண்டும்' என்பதை வற்புறுத்தியவராக இருந்தார் எம்.ஜி.ஆர். என்பதை நேரடி யாகப் பார்த்தேன். அவர் வள்ளலாக மட் டும் இல்ல, "வசதி உள்ளவர்கள் வாரிக் கொடுங்கள்' என்று வழி காட்டியாகவும் இருந்தார்.

சாப்பிட்டு முடித்து விட்டு எம்.ஜி.ஆர். கேட்டார்.

"பட்ஜெட்டெல்லாம் போட்டுட்டீங்களா.''

"இனிமேல்தான்.''

"நீங்க சொல்றப்பவே பெரிய படமா வரும்போல தெரியுது.… பூஜை எப்போன்னு தேதிய முடிவு பண்ணிச் சொல்லுங்க'' என்றார்.

"என்னிடம் ஏதாவது பேசமாட்டாரா, கேட்க மாட்டாரா' என்று ஏக்கமாக இருந்தது.

"சரி கிளம்புங்க முதலாளி'' என்று கும்பிட்டார். எனக்கு பேச்சு வரவில்லை.

கோவை செழியன்தான் சொன்னார்.

"உங்களைப் பாக்கப் போறேன்னு சொன்னப்ப, நானும் வர்றேன்னு ரொம்ப ஆர்வமா கேட்டாரு தம்பி'' என்று என்னைக் காட்டினார்.

எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு சொன்னார்.

"எனக்கு இஸ்லாமியர்களை ரொம்பப் புடிக்கும். ஆனா உன்னை ஒரு இஸ்லாமியன்ங் கிறதுக்காக மட்டும் எனக்கு புடிக்கக்கூடாது. நீ எழுதுறது எனக்குப் புடிக்கணும்...… எல்லாருக்கும் புடிக்கணும்'' என்றார். தலைவணங்கினேன். என் தலையைத் தொட்டு ஆசிர்வாதம் பண்ணி அனுப்பிவைத்தார்.

(வளரும்...)

nkn190723
இதையும் படியுங்கள்
Subscribe