Advertisment

கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (113)

11

aa

(113) "கோட்டை'யை விட்ட விஜயகாந்த்!

2011-ல் அ.தி.மு.க. -தே.மு.தி.க. இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுவதற்கு முன் நடந்தது என்ன என்பதைச் சொல்கிறேன்.

Advertisment

2011ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் திருச்சி, கோவை, மதுரையில் ஜெயலலிதா கலந்துகொண்ட கூட்டங்கள் நடந்தது. அந்தக் கூட்டங்கள் அ.தி.மு.க. தொண்டர்களின் எழுச்சியை தமிழக மக்களுக்கு உணரவைத்தது. ஒவ்வொரு கூட்டமும் ஒரு மாபெரும் மாநாடு போலவே நடந்தது. நான்கூட அந்தக் கூட்டங்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது "திருச்சி திரும்பிப் பார்க்க வைத்தது... கோவை குலுங்கியது... மதுரை மலைக்க வைத்தது' என்று சொன்னேன்.

Advertisment

அந்த எழுச்சியிலிருந்தே தொண்டர்களின் வேகத் தையும் மக்களின் நாடித் துடிப்பையும் தெரிந்துகொண்டார் ஜெயலலிதா. தமிழக அரசியல் களம் தி.மு.க.விற்கு எதிராகத் திரும்புகிறது என்பதை புரிந்துகொண்டார். அடுத்து அ.தி.மு.க.வின் ஆட்சிதான் என்ற நம்பிக்கை அவர் மனதில் உதயமாகிவிட்டது. அதனால் தே.மு.தி.க.வின் கூட்டணியை அவர் விரும்பவில்லை. தே.மு.தி.க. இல்லாமலே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற உறுதியோடு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முடிவு செய்தார். எந்த தேதியில் அவர் பிரச்சாரத்தை தொடங்கப் போகிறார் என்ற விபரங்களையும் தலைமைக் கழகம் வெளியிட்டது.

11

அந்த நேரத்தில் "துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியரும், நடிகருமான சோ, ஜெயலலிதாவை சந்தித்து, "தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தியுங்கள்' என்று வற்புறுத்தினார். அதற்கு ஜெயலலிதா முதலில் சம்மதிக்கவில்லை. கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து ஒருவேளை வெற்றி கிடைக்காமல் போனால் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறி தே.மு.தி.க.வின் கூட்டணிக்கு சம்மத

aa

(113) "கோட்டை'யை விட்ட விஜயகாந்த்!

2011-ல் அ.தி.மு.க. -தே.மு.தி.க. இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுவதற்கு முன் நடந்தது என்ன என்பதைச் சொல்கிறேன்.

Advertisment

2011ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் திருச்சி, கோவை, மதுரையில் ஜெயலலிதா கலந்துகொண்ட கூட்டங்கள் நடந்தது. அந்தக் கூட்டங்கள் அ.தி.மு.க. தொண்டர்களின் எழுச்சியை தமிழக மக்களுக்கு உணரவைத்தது. ஒவ்வொரு கூட்டமும் ஒரு மாபெரும் மாநாடு போலவே நடந்தது. நான்கூட அந்தக் கூட்டங்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது "திருச்சி திரும்பிப் பார்க்க வைத்தது... கோவை குலுங்கியது... மதுரை மலைக்க வைத்தது' என்று சொன்னேன்.

Advertisment

அந்த எழுச்சியிலிருந்தே தொண்டர்களின் வேகத் தையும் மக்களின் நாடித் துடிப்பையும் தெரிந்துகொண்டார் ஜெயலலிதா. தமிழக அரசியல் களம் தி.மு.க.விற்கு எதிராகத் திரும்புகிறது என்பதை புரிந்துகொண்டார். அடுத்து அ.தி.மு.க.வின் ஆட்சிதான் என்ற நம்பிக்கை அவர் மனதில் உதயமாகிவிட்டது. அதனால் தே.மு.தி.க.வின் கூட்டணியை அவர் விரும்பவில்லை. தே.மு.தி.க. இல்லாமலே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற உறுதியோடு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முடிவு செய்தார். எந்த தேதியில் அவர் பிரச்சாரத்தை தொடங்கப் போகிறார் என்ற விபரங்களையும் தலைமைக் கழகம் வெளியிட்டது.

11

அந்த நேரத்தில் "துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியரும், நடிகருமான சோ, ஜெயலலிதாவை சந்தித்து, "தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தியுங்கள்' என்று வற்புறுத்தினார். அதற்கு ஜெயலலிதா முதலில் சம்மதிக்கவில்லை. கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து ஒருவேளை வெற்றி கிடைக்காமல் போனால் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறி தே.மு.தி.க.வின் கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார் சோ. அதற்குப் பிறகு அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி உருவானது. நான் எழுப்புகிற கேள்வி இதுதான். தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியாக இருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு எதிராக இருக்கிறார்கள். அது நமக்கு சாதகமாக இருக்கும் என்று ஜெயலலிதா உறுதியாக நம்பியபோது, அந்த நம்பிக்கை விஜயகாந்த்துக்கு இல்லாமல் போனது ஏன்?

2006ல் தனியாக நின்று தேர்தலை சந்தித்த அவர், 2011 தேர்தலையும், தனியாக சந்தித்திருக்கலாமே?

தி.மு.க.விற்கு எதிரான மக்களின் மனநிலை விஜயகாந்த்துக்கு சாதகமாக திரும்பியிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம். அதை அவர் சோதித்துப் பார்த்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் சில விஷயங்கள் தெளிவாயிருக்கும். விஜயகாந்த் ஆட்சியைப் பிடித்திருக்கலாம். மக்கள் அ.தி.மு.க.விற்கு பதில் தே.மு.தி.க.வை விரும்பியிருக்கலாம்.

2006ல் விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2011ல் தனியாக நின்றிருந்தால் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருப்பார்கள் என்று தெரிந்திருக்கும். 2006 தேர்தலில் வாங்கிய வாக்குகளைவிட அதிகமாயிருக்கிறதா என்பதும் தெரிந்திருக்கும். இவை எதையுமே ஏன் விஜயகாந்த் சோதித்துப் பார்க்கவில்லை. அது ஏன்? அ.தி.மு.க., தி.மு.க.விற்கு மாற்று விஜயகாந்த்தான் என்று நம்பிய மக்களுக்கு ஏமாற்றம் அளித்தது ஏன்?

ஒரே ஒரு சட்டமன்றத் தேர்தலை சந்தித்துவிட்டு அடுத்த தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் ஏன்? அவசரம் ஏன்?

நல்ல முடிவோ, தவறான முடிவோ கூட்டணி அமைக்காமல் கூட விட்டுவிட லாம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற கௌரவம் கிடைத்தும், அதைத் தக்கவைத்துக் கொள்ளாமல் கூட்டணி உறவை நூறு நாட்களில் முறித்துக்கொண்டார். அதற்குக் காரணம் அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்கு காரணமே தே.மு.தி.க.தான் என்ற தொனியில் பேச ஆரம்பித்தது தான்.

''

தே.மு.தி.க. கூட்டணி இல்லாமலேயே தேர்தலை சந்திக்க முடிவெடுத்த ஜெயலலிதாவுக்கு தே.மு.தி.க.வால்தான் வெற்றி பெற்றதாகப் பேசப்பட்டது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சட்டமன்றத்திலேயே விஜயகாந்த்தைப் பார்த்து சவால்விட்டார். "இனி தே.மு.தி.க.விற்கு இறங்குமுகம்தான்... ஏறுமுகம் இல்லை' என்று ஆவேசமாகப் பேசினார். அவர் சொன்னது போலவே நடந்தது. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். அந்த அம்மா சொன்னது போலவே செய்து காண்பித்துவிட்டார் என்று விமர்சனம் செய்ததை, நானே பல இடங்களில் கேட்டிருக்கிறேன்.

விஜயகாந்த் சொன்னது போல, அவரால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது என்பது உண்மையாகக்கூட இருந்தாலும், அதாவது அவர் அப்படி நினைத்துக்கொண்டாலும் அதை வெளியிலே பேசியிருக்கக்கூடாது.

அவர் பேசியதால் இரண்டு விஷயங்கள் நடந்ததை மக்கள் பார்த்தார்கள். அ.தி.மு.க. வலுவடைந்தது தே.மு.தி.க. வலுவிழந்தது. அதை வைத்துதான் ஜெயலலிதா பகிரங்கமாக சவால் விட்டார்.

சட்டசபை நடவடிக்கைகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சட்டமன்றத்திற்குரிய மாண்பு, அரசியல் அமைப்புச் சட்டம் இவற்றை தாண்டி அங்கே ஆளும் கட்சி நினைப்பதுதான் நடக்கும். காரணம் சபாநாயகராக அங்கே அமர்ந்திருப்பது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பது பல நேரங்களில் வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும்தான் இருக்கும்.

எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், எவ்வளவு அனுபவம் உள்ளவராக இருந்தாலும் சபாநாயகரை மீறி செயல்பட முடியாது. விஜயகாந்த் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. சினிமா வேறு, சட்டமன்றம் வேறு என்று அவரை ஆளும் கட்சியினர் விமர்சனம் செய்ததையும் மக்கள் பார்த்தார்கள். சட்டமன்றத்தில் அவரது செயல்பாடுகளுக்கு ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. அதுதான் அரசியல்.

"மக்கள் ஆதரவளிப்பது போல அவரது எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகள் அமையவில்லையா. இல்லை... அப்படி அமையாதது போல ஆளும் கட்சியால் வியூகம் வகுக்கப்பட்டதா?' என்று தெரிந்து விஜயகாந்த் செயல்பட்டிருக்க வேண்டும். மொத்தத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் எதையும் சாதிக்க முடியாமல் போனது ஏன் என்பதுதான் அப்போது பலர் மனதிலே எதிரொலித்துக்கொண்டிருந்த கேள்வி, கையில் பவர் கிடைத்தும் பலன் இல்லாமல் செய்துவிட்டார் என்று சிலர் வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார்கள்.

பல வருடங்கள் அவருடன் பயணித்த வன் என்ற முறையில் அந்த விமர்சனங்களால் என் மனதும் வலித்தது.

விஜயகாந்த், அ.தி.மு.க.வுடனான உறவை மூன்று மாதங்களில் முறித்திருக் கக்கூடாது. குறைந்தது மூன்று வருடங்களாவது நீடித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தே.மு.தி.க.விற்கு இரண்டு மூன்று எம்.பி.க்கள் கிடைத்திருப் பார்கள். இரண்டு மேயர்களும், உள்ளாட்சி களில் பல பொறுப்புகளும் கிடைத்திருக்கும். கட்சி பலமாகவும் ஆகியிருக்கும் கட்சிக்காரர்கள் வளமாகவும் ஆகியிருப்பார்கள்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வை விட்டு மெல்ல மெல்ல விலகி, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பித்து, மக்களுக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தி, மக்களுடைய ஆதரவை அதிகரித்துக் கொண்டு 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு தேர்தலை சந்தித்திருக்க வேண்டும்.

அரசியல், சாதுர்யம், சாமர்த்தியம், சாணக்கியத் தனம் இவற்றோடு நிதானமும் மிக மிக அவசியம்.

தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் எதிர்க்கட்சியாகவே இருந்து, கலைஞர் நிதானமாகவே செயல்பட்டு தொண்டர்களை துடிப்போடு வைத்திருந்து, தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்றினார்.

விஜயகாந்த்துக்கு அமைந்த தொண்டர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. துடிப்புமிக்க இளைஞர்கள் விஜயகாந்த் சொல் என்ற வில்லில் இருந்து கிளம்பக் காத்திருக்கும் அம்புகள் போன்றவர்கள் அவர்கள் வெறும் ரசிகர்கள் அல்ல. அயராது உழைக்கக்கூடியவர்கள். அவர்களின் வேகத்தை நான் நன்றாக அறிந்தவன். தொண்டர்கள் வேகமாக இருக்கலாம். அவர்களை வழிநடத்தும் தலைவன் விவேகமாக இருக்க வேண்டும்.

அ.தி.மு.க கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் விவேகமாக நடந்துகொண்டிருக்க வேண்டும். இது எனது கருத்து மட்டுமல்ல அரசியல் நோக்கர்களின் கருத்தும் இதுதான். விவேகமில்லாத வீரம் வெற்றி பெறாது என்பார்கள் பெரியவர்கள்.

இவை ஒருபுறமிருக்க, விஜயகாந்த் சந்தித்த இன்னொரு அதிர்ச்சி, அதை அதிர்ச்சி என்று சொல்வதை விட துரோகம் என்றே கூறலாம்.

(வளரும்...)

_______

இறுதிச் சுற்று!

ff

சென்னை பெரம்பூர் பிரணவ் மதுரா அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர், முன்னாள் ரயில்வே துறை பொதுமேலாளர் இளவரசன். 2019ஆம் ஆண்டு பணி ஓய்வுபெற்ற இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியிலிருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதையடுத்து, ஆறுபேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் ஏப்ரல் 8, திங்களன்று காலை முதல் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர் பணியிலிருந்த போது, ரயில்வே துறை சார்பில் நடைபெற்ற பணிகளுக்கான டெண்டர்கள், ரயில் நிலைய கேண்டீன் நடத்த அனுமதி வழங்கியது, பணியிடங்கள் நிரப்பப்பட்டது தொடர்பாகவும், அவரது தற்போதைய சொத்து மதிப்பு குறித்தும், இளவரசனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சி.பி.ஐ. ரெய்டு காரணமாக, ரயில்வே துறையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் பலரும் கலக்கமடைந்துள்ளனர்.

-அரவிந்த்

nkn100424
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe