dd

(8) கலைஞருக்கு குழம்பு ஊத்தினேன்!

Advertisment

"சோத்துக் கட்சி' படத்தின் பூஜை பிரமாதமாக நடந்தது. ஆனால் படம் எடுக்கப்படவில்லை. எனக்கு காரணம் தெரியவில்லை, நானும் பார்த்திபனிடம் கேட்கவில்லை.

இப்பொழுது இந்த தொடர் சம்பந்தமாக தம்பி கரு.பழனியப்பனிடம் பேசியபோதுதான் படம் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டேன்.

"ஏன் சோத்துக் கட்சி படத்த ஆரம்பிக்கல''

"தெரியலண்ணே... அன்னிக்கும் தெரியல, இன்னிக்கும் தெரியல. இதே மாதிரி பிரமாதமா பூஜை போட்ட வேற படங்கள் கூட இருக்கு. எங்க டைரக்டர் ஏன் அந்தப் படங்கள தொடங்கலன்னு தெரியல. அதையெல்லாம் விட்டுட்டு, அடுத்தடுத்த படங்களுக்கு உற்சாகமா தயாராயிருவாரு'' என்றார் கரு.பழனியப்பன்.

Advertisment

கே.பாலசந்தர் சார், என்னை எழுதச் சொன்ன நாடகம் தொடங்கப்படவில்லை. ஆர்.பார்த்திபன் சார் என்னை வசனம் எழுதச் சொன்ன "சோத்துக் கட்சி' படமும் தொடங்கப்படவில்லை.

ஒருபக்கம் வருத்தமிருந்தாலும் எனக்கு அதில் வேறொரு மகிழ்ச்சி.

கே.பி.சார் ஒரு லெஜண்ட். அவரைப் பற்றி நான் சொன்னது கொஞ்சம். அவர் எழுதிய படங்கள் ஒரு வரலாறு.

பார்த்திபன் சார் வசனங்களால் தோரணம் கட்டியவர். அவர் வசனங்களில் மத்தாப்பூலிவும் இருக்கும், சங்கு சக்கரமும் இருக்கும், லட்சுமி வெடியும் இருக்கும், அணுகுண்டு போல் வெடித்துச் சிதறும்... திரையரங்குகள் சிரிப்பலையில் மூழ்கும்... கைத்தட்டலால் அதிரும்.

Advertisment

-இப்படி சாதனை புரிந்த இரண்டு மாபெரும் வசனகர்த்தாக்கள் என்னை வசனம் எழுதுங்கள் என்று கேட்டது, நான் செய்த பாக்யம் என்றே நினைத்தேன். என் வசனத்திற்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்று நினைத்தேன்.

இந்தப் பெருமைகள் எனக்குக் கிடைப்பதற்கு காரணமானவர்களை நினைத்துப் பார்த்தேன்.

நான் திரையுலகிற்கு வந்து வசனம் எழுதுவதற்கு விதை போட்டவர் டாக்டர் கலைஞர். அதற்கு உரம்போட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து பயிராக்கியவர் புரட்சிக் கலைஞர்.

நான் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வசனகர்த்தாவாக ஆனதற்குக் காரணம் விஜயகாந்த் அவர்கள் என்பது பலருக்கும் தெரியும். பல பேட்டிகளில் நானே சொல்லியிருக்கிறேன். இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு நான் எழுதிய படங்களும் சாட்சியாக இருக்கின்றன.

கலைஞர் எப்படி காரணமாக இருந்தார்...?

அவர்தான் விதை போட்டார் என்று சொன்னேன். அவர் எப்படி விதை போட்டார்...

எனது ஊர் கம்பத்தில் பள்ளிச் சிறுவனாக நான் வலம் வந்தபோதே எனக்குள் சினிமா ஆர்வத்தோடு, அரசியல் ஆர்வமும் சேர்ந்தே வளர்ந்துவிட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிச் சொல்லும்போதே சொன்னேன்...

அவர் அரசியல்வாதியாகவும் இருந்ததால் சினிமாவில் தனித்துத் தெரிந்தார்.

கலைஞர் அவர்களும் அப்படித்தான்! அவர் அரசியல்வாதி யாகவும் இருந்ததால் சினிமாவிலும் தனித்துத் தெரிந்தார்.

அண்ணா அவர்களை நான் நேரில் பார்த்ததில்லை. அவரது மேடைப் பேச்சை நேரில் கேட்டதில்லை.

ஆனால்... கலைஞர் அவர்களை எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே நேரில் பார்த்து வந்தி ருக்கிறேன். அவரது மேடைப் பேச்சையும் நேரில் கேட்டிருக்கிறேன். தி.மு.க.வில் எத்தனையோ தலைவர்கள் இருந்தார்கள். இருந்தாலும் என்னைக் கவர்ந்தவர்கள் இருவர்.

டாக்டர் கலைஞர்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி நிறைய பேசுவோம்.

இங்கு கலைஞரைப் பற்றி முதலில் பேசு வதற்கு காரணம், நான் வசனம் எழுதவேண்டும் என்ற வெறியை ஊட்டியவர். அவரது மேடைப் பேச்சே சினிமா வசனம் போலவே எனக்குத் தெரியும். கைத்தட்டல்கள், விசில் பறக்கும்.

kalaingar

எங்கள் ஊர் கம்பத்தில் சிக்கந்தர் என்ற உறவினர் இருந்தார். எனக்கு மாமா முறை வேண்டும். "கம்பம் சிக்கந்தர்' என்றுதான் கூப்பிடு வார்கள். தி.மு.க.வில் பிரபலமாக இருந்தார்.

மதுரையில் அப்போது கொடிகட்டிப் பறந்தவர் மதுரை முத்து. மாவட்டச் செயலாளர். தி.மு.க.வின் மேல்மட்டத் தலைவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், மூத்த தலைவர்.

ஒருமுறை மதுரை மாவட்டச் செயலாளர் தேர்தலில் மதுரை முத்துவை எதிர்த்துப் போட்டியிட்டவர் எனது மாமா கம்பம் சிக்கந்தர். வெற்றி பெறவில்லை, இருந்தாலும் தி.மு.க.வில் எவ்வளவு முக்கியமானவராக இருந்தார் என்ப தற்காகச் சொல்கிறேன். கலைஞர் கம்பத்திற்கோ, அதைச் சுற்றியுள்ள பகுதி களுக்கோ தி.மு.க. பொதுக்கூட்டங்களுக்கு வந்தால் அங்கே நான் இருப்பேன். அவரது பேச்சைக் கேட்பதில் அவ்வளவு ஆர்வம்.

சில நேரங்களில் சாப்பிடுவதற்காக கலைஞர் அவர்கள் சிக்கந்தர் மாமா வீட்டுக்கு வந்திருக் கிறார். அரைக்கால் டவுசர் போட்ட சிறுவனாக அங்கே யும் நான் இருந்திருக்கிறேன். கலைஞருடன் பல தி.மு.க. வினரும் சாப்பிடுவார்கள். சினிமாவில் எழுதி கைத்தட் டல் வாங்குபவர், மேடையில் பேசி கைத்தட்டல் வாங்கு பவர்... அவர் சாப்பிடும்போது அவர் அருகில் நான்... என்று நினைக்கும்பொழுதே ஆனந்த மாக இருக்கும். குழம்பு வாளி யெல்லாம் எடுத்துக்கொண்டு போய் அவருக்கு குழம்பு ஊற்றியிருக்கிறேன்.

தி.மு.க.வில் நான் மிக நெருக்கத்தில் பார்த்த கலைஞ ருடன், பிற்காலத்தில் நான் திரைப்படத்துறைக்கு வந்து அவருடன் நெருக்கமாக இருப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவே இல்லை.

கலைஞர் நிறைய எழுதியிருக்கிறார். அவரைப் பற்றியும் நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகையில் அவரைப் பற்றி எழுதியதைப் படித்தேன்.

அதை நக்கீரன் வாசகர்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

1950லிகளில் திராவிட இயக்கக் கருத்துக் களையும், கனவுகளையும் சுமந்துகொண்டு ஒரு இளம்புயல் வீசியது. அது சிலருக்கு இனிப்பாகவும், சிலருக்கு எச்சரிக்கை மணியாகவும் இருந்தது.

அந்தப் புயலின் பெயர் கலைஞர்.

கலைஞர் -வெறும் பெயரல்ல...

டஐஊசஞஙஊசஞச

திரைக்கதை வசனமென்றாலே தமிழர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் பெயர் -கலைஞர்

இந்தப் புகழின் உச்சியைத் தொட கலைஞர் பட்ட ரணங்கள்தான் எத்தனை... எத்தனை...

kk

"ஒடிந்த வாளானாலும்

ஒரு வாள் கொடுங்கள்'

என்று ரௌத்திரமும் ரம்யமும் கலந்த புதிய தமிழில் "அபிமன்யு' என்ற படத்திற்கு கலைஞர் வச னம் எழுதினார். ஆனால் அந்தப் படத்தில் கலைஞ ரின் பெயர் இல்லை.

இன்று-

கலைஞரின் பெயர் இல்லையென்றால் படத் திற்கு வியாபாரமே இல்லை.

கலைஞர் எழுதிய "மருதநாட்டு இளவரசி' படம்தான் எம்.ஜி.ஆருக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்தது.

கலைஞர் வசனம் எழு திய "பராசக்தி' படம்தான் சிவாஜிக்கு சினிமாவில் சிம்மாசனத்தை தந்தது.

கிருஷ்ணன்-பஞ்சு, எல்.வி.பிரசாத், எஸ்.எஸ். ராஜேந்திரன் போன்ற கலைஞர்களின் வெற்றிக்கு தோள் கொடுத்தது கலைஞ ரின் வசனங்கள்.

கொஞ்சும் தமிழை கோபத் தமிழாக்கியவர் கலைஞர். தமிழ் சினிமாவை ஆயுதமாக்கிய அற்புதக் கலைஞர். சினிமாவை வெறும் வியாபாரமாக மட்டும் நினைக்காமல், தான் தாங்கி நிற்கும் இயக்கத்தின் கொள்கைகளை வளர்த்திடும் வேள்வியாக்கியவர்.

"பேனா ஒரு போர்வாள்' -இது -கலைஞரின் பிரகடனம்.

விதவை மறுமணத்தை வலியுறுத்திய "ராஜா ராணி'

சாதி, மத வேறுபாட்டைச் சாடிய "ஒரே ரத்தம்'

அரசியல் சூதாடிகளை அம்பலப்படுத்திய "பாலைவன ரோஜாக்கள்', "நீதிக்குத் தண்டனை'

இப்படி -கலைஞர் தொட்ட சிகரங்கள் எத்தனை... எத்தனை...

கலைஞரின் வசனங்கள் இலக்கியமல்ல, இலக்கியத்துக்கே இலக்கணம் படைத்தவை.

கலைஞரின் வசனம் தமிழுக்கு வாலிபத்தைத் தந்தது

சிலருக்கு வாழ்வைத் தந்தது.

கலைஞரைப் பற்றிய இந்தக் கட்டுரையை 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாரப் பத்திரிகையில் படித்தேன்.

இசைத்தட்டில் தீப்பொறி...!

(வளரும்...)