(31) கவனிப்பவன்... கணிப்பவனானேன்!
அண்ணன் ஓ.பி.எஸ். சொன்னதையடுத்து, மறுநாள் காலை போயஸ் கார்டனில் ஜெயலலிதா அம்மா வீட்டுக்குச் சென்றேன்.
சிறிது நேரத்தில் அண்ணன் ஓ.பி.எஸ்.ஸும் அங்கே வந்துவிட்டார்.
சரியாக 10 மணிக்கு அறைக்குள் கும்பிட்டபடி வந்தார். அந்த அறையே திடீரென ஒளி வெள்ளமானது போல இருந்தது எனக்கு. நானும் வணக்கம் சொன்னேன்.
"நல்லா இருக்கீங்களா?''
"நல்லா இருக்கேம்மா.''
"உங்களைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். நீங்க எழுதுன படங்களைப் பத்தியும் தெரியும்'' என்றார்.
அந்த ஏ.சி. அறையிலும் வியர்ப்பதுபோல இருந்தது எனக்கு.
அவரை விமர்சித்து, கடுமையாகத் தாக்கி வசனங்கள் எழுதியவன் நான். என்னை விசாரித்தவர் ஊரை, குடும்பத்தினரை விசாரித் தார்.
"என்னை நம்பி கட்சிக்கு வந்திருக்கீங்க... ரொம்ப சந்தோஷம். உங்களோட வளர்ச்சிக்கு என்ன பண்ணணுமோ நிச்சயமா அம்மா பண்ணுவேன்'' என்றார்.
"எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு தொண்டனா உங்ககிட்ட சேர்ந்திருக் கேம்மா'' என்றேன்.
"ஓ.பி.எஸ்.கூட தொண்டனா வந்தவர்தான்'' என்று சிரித்தார்.
"நல்லா எழுதுறீங்க, நல்லா பேசுவீங்கன்னும் நம்பறேன். நிறைய கூட்டம் போடச் சொல்றேன். எழுதுறது மாதிரியே துணிச்சலா பேசுங்க'' என்றார்.
"சரிங்கம்மா...'' என்றேன்.
நான் கொண்டுவந்திருந்த பொக்கேவை வைத்துக்கொண்டு, வே
(31) கவனிப்பவன்... கணிப்பவனானேன்!
அண்ணன் ஓ.பி.எஸ். சொன்னதையடுத்து, மறுநாள் காலை போயஸ் கார்டனில் ஜெயலலிதா அம்மா வீட்டுக்குச் சென்றேன்.
சிறிது நேரத்தில் அண்ணன் ஓ.பி.எஸ்.ஸும் அங்கே வந்துவிட்டார்.
சரியாக 10 மணிக்கு அறைக்குள் கும்பிட்டபடி வந்தார். அந்த அறையே திடீரென ஒளி வெள்ளமானது போல இருந்தது எனக்கு. நானும் வணக்கம் சொன்னேன்.
"நல்லா இருக்கீங்களா?''
"நல்லா இருக்கேம்மா.''
"உங்களைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். நீங்க எழுதுன படங்களைப் பத்தியும் தெரியும்'' என்றார்.
அந்த ஏ.சி. அறையிலும் வியர்ப்பதுபோல இருந்தது எனக்கு.
அவரை விமர்சித்து, கடுமையாகத் தாக்கி வசனங்கள் எழுதியவன் நான். என்னை விசாரித்தவர் ஊரை, குடும்பத்தினரை விசாரித் தார்.
"என்னை நம்பி கட்சிக்கு வந்திருக்கீங்க... ரொம்ப சந்தோஷம். உங்களோட வளர்ச்சிக்கு என்ன பண்ணணுமோ நிச்சயமா அம்மா பண்ணுவேன்'' என்றார்.
"எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு தொண்டனா உங்ககிட்ட சேர்ந்திருக் கேம்மா'' என்றேன்.
"ஓ.பி.எஸ்.கூட தொண்டனா வந்தவர்தான்'' என்று சிரித்தார்.
"நல்லா எழுதுறீங்க, நல்லா பேசுவீங்கன்னும் நம்பறேன். நிறைய கூட்டம் போடச் சொல்றேன். எழுதுறது மாதிரியே துணிச்சலா பேசுங்க'' என்றார்.
"சரிங்கம்மா...'' என்றேன்.
நான் கொண்டுவந்திருந்த பொக்கேவை வைத்துக்கொண்டு, வேறு பொக்கே கொடுத்தார். அதை நான் அவர்களிடம் கொடுத்தேன். அவர் கையால் எனக்கு உறுப்பினர் அட்டை கொடுத்தார். புகைப்படம் எடுத்தார்கள். ஓ.பி.எஸ். அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.
வணக்கம் சொல்லி விடைபெற்றேன்.
வெளியே வந்ததும் ஓ.பி.எஸ். அண்ணன் சொன்னார்.
"அம்மா இன்னிக்கு உங்ககிட்ட ரொம்ப நல்லா பேசுனாங்கண்ணே.''
அவரும் என்னை "அண்ணே' என்றுதான் கூப்பிட்டார். பொதுவாக பலரையும் அப்படித்தான் மரியாதையாய் அழைப்பார்.
கட்சியில் சேர்ந்ததிலிருந்து ஓ.பி.எஸ். அண்ணன்கூட எனக்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டது. 15 ஆண்டுகால நெருக்கம் தர்ம யுத்தம்வரை நீண்டது. அவர் நடத்திய தர்ம யுத்தத்தில் எனது பங்களிப்பு நிறைய இருக்கிறது. அது தொடங்கி ஏழுமாத காலங்கள் என்னுடைய எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு தினமும் காலையில் இருந்து, நள்ளிரவு வரை க்ரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிலேயே இருந்தேன்.
எனது திரைப்படப் பணிகள் பாதித்தது. என்னைத் தேடிவந்த வேலைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் வருகிற வருமானம் பாதித்தது மட்டுமல்ல... அவர் முழுநேர அரசியல் வாதியாகிவிட்டார். தர்மயுத்தத்தில் ஓ.பி.எஸ். அண்ணனுடன் ஐக்கியமாகிவிட்டார் என்பது பரவிப்போனது. புதிய வாய்ப்புகள் வரவில்லை. ஓ.பி.எஸ். அண்ணனுடன் எனது நெருக்கம் திரையுலகில் தெரியாதவர்களுக்கும் தெரிந்தது. அரசியலில், அ.தி.மு.க.வில் கூட எல்லோருக்கும் தெரிந்தது.
2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி அவரது முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நாளன்று, இரவு அவரைச் சந்தித்துப் பேசினேன். பிப்ரவர் 6-ஆம் தேதி தர்மயுத்தம் தொடங்கினார். அன்றிலிருந்து அண்ணன்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணையும்வரை என்னை தர்மயுத்தத்தில் அர்ப்பணித்துக் கொண்டேன்.
அ.இ.அ.தி.மு.க.வில் பல அமைச்சர்களுடன் நான் நன்றாகப் பழகியவன். மாமா, மாப்ளே, சின்னையா என்றெல்லாம் அழைத்து என்னுடன் பழகுவார் கள். எதையும் எதிர்பார்த்து அவர்களிடம் போகாமல் மரியாதை நிமித்தமாய் போய் சந்திப்பேனே தவிர என்னைச் சந்தித்துப் பேசுவதற்காக விரும்பி அழைத்த அமைச்சர் களும் உண்டு.
எல்லோருமே அண்ணன் இ.பி.எஸ். பக்கம் இருந்தார்கள். அவர்கள் அத்தனைபேரின் அன்பையும் விட்டுவிட்டு ஓ.பி.எஸ். அண்ணன் ஒருவரை ஆதரித்து அவர் பக்கம் போனேன். பல அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளின் பிரியத்தை இழந்தேன்... ஆனால் அதைப் பற்றியெல்லாம் அப்பொழுது கவலைப்படவில்லை.
தர்மயுத்தத்தால் எனது சாப்பிடும் நேரம் மாறிப்போனது. தூங்கும் நேரமும் குறைந்து போனது.
தர்மயுத்தம் தொடங்கியது முதல் முடியும்வரை, அதாவது... அண்ணன்கள் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணையும்வரை திரை மறைவில் என்ன நடந்தது? உண்மையிலேயே அது தர்ம யுத்தம்தானா?
தர்மயுத்தத்தில் அண்ணன் ஓ.பி.எஸ்.ஸுடன் நெருக்கமாக இருந்த பலர், ஏன் அவரை விட்டுப் போனார்கள்?
புதிய தகவல்கள் பல இருக்கின்றன.
நான் சிறுவயதிலிருந்தே அரசியல் ஆர்வம் கொண்டவன். அரசியலை உற்றுக் கவனிப்பவன் என்று சொன்னேன். கவனிப்பவ னாக இருந்த நான் திரை யுலகுக்கு வந்து எழுத ஆரம் பித்த பிறகு அரசியல் கட்சிகளை, தலைவர்களை கணிப்பவனாகவும் மாறினேன். பொதுவாக என் கணிப்பு தவறியதில்லை. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். அண்ணன்கள் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். பிரிந்தபொழுது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது.
இ.பி.எஸ். அவர்களின் சார்பாக தினகரனும், ஓ.பி.எஸ். அவர்களின் சார்பாக மதுசூதனன் அவர்களும் நின்றார்கள். தி.மு.க.வின் வேட்பாளர் வேறு.
நான் ஓ.பி.எஸ். அண்ணனுடன் தர்ம யுத்தத்தில் தீவிரமாக இருந்தேன். எங்கள் அணியில் இருந்த நட்சத்திரப் பேச்சாளர்களை எங்கெங்கு அனுப்புவது என்று சார்ட் தயாரித்து, அனுப்பி வைத்தேன். பிரச்சாரம் சூடுபிடித்து நடந்துகொண்டிருந்தது. ஓ.பி.எஸ். அண்ணனும், மதுசூதனன் அண்ணனும் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. வரவேற்பு பலமாக இருந்தது. அப்போது ஓ.பி.எஸ். அணியில் இருந்த ஒரு தலைவரிடம் சொன்னேன். "மதுசூதனன் ஜெயிக்கமாட்டார்'' என்று. அவர் முகம் சிவந்துபோனது.
"என்ன இப்படிச் சொல்ற,…அதுவும் அபசகுனமா பேசற?… ஆர்.கே.நகர் முழுவதும் நம்ம அணியோட அலை எப்படி வீசுது தெரியுமா?''…என்றார். மறுபடியும் முன்னைவிட... "இனிமே இப்படியெல்லாம் அபசகுனமா பேசாதே… மதுசூதனன் தோப்பார்னு சொல்லாதே''… என்றார். "சரி… அப்படிச் சொல்லல...…டி.டி.வி.தினகரன் ஜெயிப்பார்''னு சொன்னேன்.
"பாக்கலாமா'' என்றார்.
"பாக்கலாம்'' என்றேன்.
நான் புரட்சித் தலைவரோட பயணிச்சவன்,… புரட்சித் தலைவி அம்மாவோட பயணிச்சவன்,… எம்.எல்.ஏ.வா இருந்தவன்… அரசியல்ல எத்தனை வருஷம் அனுபவம் இருக்கு தெரியுமா எனக்கு? என்றார் கோபமாக.
அதைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் "ரிசல்ட் வரட்டும்… அப்புறம் வச்சுக்கிறேன் உன்னை...'' என்றார்.
ரிசல்ட் வரவில்லை. இடைத்தேர்தல் நின்று போனது. அதிகமான பணம் புழங்கியதால், வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் அள்ளி வழங்கியதாக தேர்தல் ஆணை யம் கண்டுபிடித்தது. எவ்வளவு திறமை வாய்ந்த ஆணையம் என்பதை அறிந்து தமிழ்நாட்டு மக்கள் குதூகலித்தார்கள்.
அதற்குப் பிறகும் தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தல் களை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருக்கிறது. இரண்டு கண்கள் உடைய சாதாரண மனிதனுக்கே தொகுதியில் நடக்கும் தவறுகள் தெரியும்போது ஆயிரம் கண்கள் உடைய (அதாவது தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள்) தேர்தல் ஆணையத்திற்கு எப்படி தெரியாமல் போகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
(வளரும்...)