கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் - வசனகர்த்தா லியாகத் அலிகான் (24)

ss

aa

(24) விஜயகாந்த்துக்கு போட்டியா முரளி!

ம்.ஜி.ஆருடன் பழக முடியவில்லையே என்கிற கவலை விஜயகாந்த்துக்கு.

இப்ராகிம் ராவுத்தருக்கு... ஏன் எனக்கும்தான் வேறு ஒரு கவலை திடீரென ஏற்பட்டுவிட்டது.

"சாட்சி' படத்திற்குப் பிறகு விஜயகாந்த் பிஸியாகிவிட்டார். அவர் செல்வாக்கும் புகழும் ஏறுமுகமாகிவிட்டது. அவர் போகுமிட மெல்லாம் வரவேற்பு அதிகமாகிவிட்டது. அவர் நடித்து 1984-ல் கிட்டத்தட்ட 18 படங்கள் ரிலீஸானது. நான் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய "தீர்ப்பு என் கையில்' படம் ரிலீஸானது.

தாசரி நாராயணராவ். தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனர். மிகச்சிறந்த கதை வசனகர்த்தா. விஜயகாந்த் நடித்த "தீர்ப்பு என் கையில்' படத்தைப் பார்த்து விஜயகாந்த்தை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

இந்த மகிழ்ச்சியான சமயத்தில்தான் இப்ராகிம் ராவுத்தரையும் என்னையும் அந்தக் கவலை தொற்றிக்கொண்டது.

1984-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தயாரிப் பில் அமீர்ஜான் இயக்கத்தில் முரளி கதாநாயகனாக நடித்த "பூ விலங்கு' படம் வெளியானது. அந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டபொழுதே பேப்பர் களில் விளம்பரம் வந்தது. அதில் வந்த முரளி படத்தைப் பார்த்துவிட்டு, "இந்தப் பையன் நம்ம விஜி மாதிரியே இருக்கானே'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.

"அப்படித்தான் தெரியுது'' என்று சொல்லி, நானும் விஜயகாந்த்தும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்ராகிம் ராவ

aa

(24) விஜயகாந்த்துக்கு போட்டியா முரளி!

ம்.ஜி.ஆருடன் பழக முடியவில்லையே என்கிற கவலை விஜயகாந்த்துக்கு.

இப்ராகிம் ராவுத்தருக்கு... ஏன் எனக்கும்தான் வேறு ஒரு கவலை திடீரென ஏற்பட்டுவிட்டது.

"சாட்சி' படத்திற்குப் பிறகு விஜயகாந்த் பிஸியாகிவிட்டார். அவர் செல்வாக்கும் புகழும் ஏறுமுகமாகிவிட்டது. அவர் போகுமிட மெல்லாம் வரவேற்பு அதிகமாகிவிட்டது. அவர் நடித்து 1984-ல் கிட்டத்தட்ட 18 படங்கள் ரிலீஸானது. நான் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய "தீர்ப்பு என் கையில்' படம் ரிலீஸானது.

தாசரி நாராயணராவ். தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனர். மிகச்சிறந்த கதை வசனகர்த்தா. விஜயகாந்த் நடித்த "தீர்ப்பு என் கையில்' படத்தைப் பார்த்து விஜயகாந்த்தை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

இந்த மகிழ்ச்சியான சமயத்தில்தான் இப்ராகிம் ராவுத்தரையும் என்னையும் அந்தக் கவலை தொற்றிக்கொண்டது.

1984-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தயாரிப் பில் அமீர்ஜான் இயக்கத்தில் முரளி கதாநாயகனாக நடித்த "பூ விலங்கு' படம் வெளியானது. அந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டபொழுதே பேப்பர் களில் விளம்பரம் வந்தது. அதில் வந்த முரளி படத்தைப் பார்த்துவிட்டு, "இந்தப் பையன் நம்ம விஜி மாதிரியே இருக்கானே'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.

"அப்படித்தான் தெரியுது'' என்று சொல்லி, நானும் விஜயகாந்த்தும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்ராகிம் ராவுத்தர் மனதில் அது ஆழப் பதிந்துவிட்டது. இடையிடையே அவ்வப்போது "பூ விலங்கு' படத்தின் செய்திகள் சினிமா பத்திரிகையில் வரும்பொழுதெல்லாம் என்னிடம் சொல்லிக் கொண்டேயிருப்பார்.

"நம்ம விஜி மாதிரியே இருக்காண்ணே. தமிழ் பையன் இல்ல... பெங்களூர்காரப் பையன் போல இருக்கு.''

அந்தப் படம் எப்பொழுது ரிலீசாகும் என்று ஹீரோ முரளி காத்திருந்தாரோ இல்லையோ, முதன்முதலாக இயக்குநராக அறிமுகமாகும் அமீர்ஜான் காத்திருந்தாரோ இல்லையோ.. இப்ராகிம் ராவுத்தர் காத்திருந்தார்.

"எப்ப ரிலீசாகுதுணே... எந்தெந்த தியேட்டர்ல ரிலீஸாகுதுணே'' என்று என்னிடம் கேட்டுக் கொண்டேயிருப்பார். அவர் மனது எதையோ நினைத்துத் தவிக்கிறது என்பது எனக்குப் புரிந்தது.

படம் ரிலீஸாகும் நாள் வந்தது.

விஜயகாந்த் படம் ரிலீஸானாலே தியேட்டருக்கு வரமாட்டார். பிரிவியூ தியேட்டரில் பார்ப்பதோடு சரி. நானும் மற்றவர்களும் பார்த்துவிட்டு வந்து அவரிடம் சொல்வோம். ஆவலாகக் கேட்பார்.

"பைட் சீன் எப்படிண்ணே ரசிக்கிறாங்க''

"நல்லா ரசிக்கிறாங்கண்ணே''

"க்ளைமாக்ஸ் பைட்ல கை தட்றாங்களாண்ணே...''

"தட்றாங்கண்ணே...''

இப்படி எதாவது ஒரு சீனை சொல்லி, "அந்த சீன்ல எப்படிண்ணே... விசிலடிச்சிருப்பாங்களே...'' எனக் கேட்பார்.

"ஆமாண்ணே... ஒரே விசில் சத்தம்ணே''

"விஜி நடிப்பைப் பத்தி என்னண்ணே பேசிக்கிறாங்க''

"சூப்பரா நடிக்கிறதா சொல்றாங்கண்ணே''

இப்படி அவர் கேட்க, நான் சொல்ல... அவருடைய மனக்கண் முன்னே ஓடவிட்டு ரசித்துக்கொள்வார். மேலே கைகளை உயர்த்தி வணங்குவார். ஆனால் தியேட்டருக்கு வந்து பார்க்கமாட்டார். இங்கிலீஷ் படம், இந்திப் படமெல்லாம் தியேட்டருக்குப் போய் பார்ப்போம்.

"வாங்கண்ணே நீங்களே தியேட்டருக்கு வந்து எப்படி ரசிக்கிறாங்கன்னு பாருங் கண்ணே'' என்று வற்புறுத்தினால்கூட விஜயகாந்த் நடித்த படத்திற்கு வரமாட்டார்.

aa

"அதான் நீங்க பார்த்துட்டு வந்து சொல்றீங்களேண்ணே, அது போதும்''னு சொல்வார். அப்படிப்பட்டவர் "பூ விலங்கு' படம் ரிலீசான அன்று, "முதல் ஷோவுக்கே போய் படம் பார்க்கலாம்ணே'' என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது.

"ம்... போகலாம்ணே...'' என்றேன்.

சொன்னபடி போனோம்.

தியேட்டரில் கூட்டம் எப்படி இருக்கிறது என்று நோட்டமிட்டார்.

"கூட்டம் இருக்கு'' என்றார்.

"கே.பாலசந்தர் தயாரிச்ச படம்ணே. ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்ல...'' -இது நான்.

இன்று இருப்பதைப் போல அப்பொழுது திருட்டு வி.சி.டி., பைரஸி போன்றவைகள் எல்லாம் இல்லை. எந்தப் படமாக இருந்தாலும் ஓரளவு கூட்டம் வரும்.

உள்ளே போய் படம் பார்த்தோம். படம் நன்றாக இருந்தது. ஆடியன்ஸ் நன்றாக ரசித்துப் பார்த்தார்கள்.

படம் முடிந்து வெளியே வந்தோம். படம் பார்த்துவிட்டு வந்த அத்தனை ரசிகர் கள் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. இப்ராகிம் ராவுத்தரின் முகம் மட்டும் இருண்டுபோயிருந்தது.

"அண்ணே படம் எப்படி. அந்தப் பையனைப் பத்தி (முரளி) என்ன சொல்றாங்கன்னு விசாரிங்கண்ணே'' என்றார்.

நான் ரசிகர்களிடம் போய் பேச்சுக் கொடுத்தேன்... விசாரித்தேன்.

"படம் நல்லா இருக்குன்னு சொல்றாங் கண்ணே...'' என்றேன்.

நான் பதில் சொல்லுமுன் விஜயகாந்த் ரசிகர்கள் இருவர், எங்களை அடையாளம் கண்டு கொண்டு எங்கள் அருகில் வந்தனர். வணக்கம் சொல்லி இருவரிடமும் கைகுலுக்கி னார்கள்.

"நம்ம அண்ணன் மாதிரியே இருக்காண்ணே...'' என்று இருவருமே சொன் னார்கள்.

அவர் முகம் மேலும் வாடிப்போனது.

தியேட்டரை விட்டு வெளியே வந்தோம். ரூமுக்கு வரும்வரை பேசாமலேயே வந்தார்.

வந்தவுடனே ஆபீஸில் வேலை பார்க்கும் பையன் "சாப்பாடு எடுத்து வைக்கவாண்ணே'' என்று கேட்டான்.

"வேண்டாம்டா'' என்றார் இப்ராகிம் ராவுத்தர். முரளியின் வருகை விஜயகாந்த்தின் வளர்ச்சியைப் பாதித்துவிடுமோ என்ற கவலை அவருக்குள்ளே வந்துவிட்டது. அதை என்னிடம் வெளிப்படுத்திவிட்டார்.

"ஏண்ணே... முரளி, விஜி மாதிரியே இருக்கான், விஜி மாதிரியே கருப்பா இருக்கான். பைட்டும் பண்றான், படம் வேற ஹிட் ஆயிருச்சு. விஜியைவிட பெருசா ஆயிரு வானா? நம்ம விஜி மார்க்கெட் டல்லாயிருமா. விஜிக்கு வர்ற படங்கள் முரளிக்கு போயிருமா...?'' என்றார்.

"ஏண்ணே அப்படியெல்லாம் நினைக்கி றீங்க. நீங்க ரொம்ப ஓவரா திங்க் பண்றீங்க. கிரிக்கெட்ட எடுத்துக்குங்க. கவாஸ்கர், கபில்தேவ் இவங்கள்லாம் சூப்பர் பிளேயர்ஸ். அவங்க காலத்துல புதுசு புதுசா நெறைய பிளேயர்ஸ் வந்தாங்க. ஒண்ணு, ரெண்டு மேட்ச் பிரமாதமா விளையாடினாங்க... கவாஸ்கர், கபில்தேவைவிட ரன்னும் எடுத்தாங்க. நிலைக்கலியே...?''

ஏன் சினிமாவை எடுத்துக்குங்க... எம்.ஜி.ஆர்., சிவாஜிதான் கிரேட். அவங்க காலத்துல ஜெமினிகணேசன் படம், எஸ்.எஸ்.ஆர். ddபடம், ஜெய்சங்கர் நடிச்ச படம்கூட நல்லா ஓடியிருக்கு. பெருசா ஹிட் ஆயிருக்கு. அதனால எம்.ஜி.ஆர்., சிவாஜி மார்க்கெட் போயிருச்சா? புதுசா எவ்வளவோ ஹீரோ வருவாங்க, அவங்க படம் ஹிட் ஆகும். அதையெல்லாம் நெனைச்சுப் பயந்தா எப்படிண்ணே'' என்றேன் நான்.

"என்னண்ணே... ராவுத்தன் புலம்பறானா?'' என்றபடி அறைக் குள்ளே வந்தார் விஜயகாந்த்.

சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. கிளம்பி ரூமுக்கு வந்தவர், நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த படி வெளியே நின்றிருக்கிறார். அவர் வந்ததைக் கவனிக்காமல் நாங்கள் பேசிக்கொண்டிருந் தோம்.

"டேய் இப்ராகிம்... நடிகனாகணும்கிற ஆசையில் சென்னைக்கு வந்தோம்... ஆனோம். நான் ஹீரோவா நடிச்ச படம் நல்லா ஓடணும்னு நினைச்சோம்... ஓடுச்சு. நிறைய படங்கள் வரணும்னு நெனைச்சோம்... வந்துச்சு. கையில நிறைய படங்கள் இருக்கு. நீ ஏண்டா கவலைப்படறே. நம்ம வாழ்க்கையை ஆண்டவன் ஏற்கனவே முடிவுபண்ணி வச்சிருப்பான். புதுசா அழிச்செல்லாம் எழுதமாட்டான். நான் தூங்கணும்... புலம்பறதா இருந்தா வெளிய போய் புலம்பு...'' என்றபடியே அப்படியே படுத்துவிட்டார்.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்

nkn270523
இதையும் படியுங்கள்
Subscribe