கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் - வசனகர்த்தா லியாகத் அலிகான் (18)

d

dd

(18) நெஞ்சிலே துணிவு!

"சிவப்பு மல்லி' படத்தின் மூலம் எங்களுக்கு நெருக்கமானார் வாகை சந்திரசேகர். விஜயகாந்த் தின் வாழ்க்கைப் பயணத்தில் அவருக்கும் இடம் உண்டு. என்னிடமும் ஒரு சகோதரரைப் போலவே பாசம் காட்டினார். கலைஞரின் அன்புக்குப் பாத்திரமானவர். எங்களது நட்பை அரசியல் பிரித்துவிட்டது. இவர் தி.மு.க.வில் எம்.எல்.ஏ. ஆனார். இப்போது இயல் -இசை -நாடகமன்றத் தலைவராக இருக்கிறார்.

"சிவப்பு மல்லி' திட்டமிட்டபடி 1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் பெரிய வெற்றிபெற்றது. முதலாளி களை எதிர்த்து, தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞனாக, போராட்டம் நடத்தும் துணிச்சல்மிக்கவராக விஜயகாந்த் நடித்திருந்தார். அவருடைய புகழும், வளர்ச்சியும் "சிவப்பு மல்லி' மூலம் மேலும் உயர்ந்தது.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இன்றிருப்பதைவிட தமிழ்நாட்டில் அப்போது வலுவாக இருந்த நேரம். தொழிற்சங்கங்களில் கம்யூனிஸ்ட்களின் கை ஓங்கி யிருந்த நேரம். பொது இடங்களிலும் அரசியல் அரங் கங்களிலும் கம்யூனிஸ்ட் முகங்கள் தனியாகத் தெரி யும். அந்த நேரத்தில் வந்த படம் "சிவப்பு மல்லி'. படம் வெளிவந்த பிறகு கம்யூனிஸ்ட் தோழராகவே விஜயகாந்த்தை பலரும் நினைக்க ஆரம்பித்தார்கள். திரையில் சிவப்புச் சட்டையுடன் தோன்றும் பொழுதெல்லாம் தோழர்கள் குஷியாகிப்போனார் கள். "அவரோட கருப்பு கலருக்கு, சிவப்பு சட்டை யில் பார்க்கிறப்போ எப்படி இருக்கும் தெரியுமா?' என்று சில தி.மு.க. நண்பர் களும் சந்தோஷப்பட்டார் கள். விஜயகாந்த்துடை

dd

(18) நெஞ்சிலே துணிவு!

"சிவப்பு மல்லி' படத்தின் மூலம் எங்களுக்கு நெருக்கமானார் வாகை சந்திரசேகர். விஜயகாந்த் தின் வாழ்க்கைப் பயணத்தில் அவருக்கும் இடம் உண்டு. என்னிடமும் ஒரு சகோதரரைப் போலவே பாசம் காட்டினார். கலைஞரின் அன்புக்குப் பாத்திரமானவர். எங்களது நட்பை அரசியல் பிரித்துவிட்டது. இவர் தி.மு.க.வில் எம்.எல்.ஏ. ஆனார். இப்போது இயல் -இசை -நாடகமன்றத் தலைவராக இருக்கிறார்.

"சிவப்பு மல்லி' திட்டமிட்டபடி 1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் பெரிய வெற்றிபெற்றது. முதலாளி களை எதிர்த்து, தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞனாக, போராட்டம் நடத்தும் துணிச்சல்மிக்கவராக விஜயகாந்த் நடித்திருந்தார். அவருடைய புகழும், வளர்ச்சியும் "சிவப்பு மல்லி' மூலம் மேலும் உயர்ந்தது.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இன்றிருப்பதைவிட தமிழ்நாட்டில் அப்போது வலுவாக இருந்த நேரம். தொழிற்சங்கங்களில் கம்யூனிஸ்ட்களின் கை ஓங்கி யிருந்த நேரம். பொது இடங்களிலும் அரசியல் அரங் கங்களிலும் கம்யூனிஸ்ட் முகங்கள் தனியாகத் தெரி யும். அந்த நேரத்தில் வந்த படம் "சிவப்பு மல்லி'. படம் வெளிவந்த பிறகு கம்யூனிஸ்ட் தோழராகவே விஜயகாந்த்தை பலரும் நினைக்க ஆரம்பித்தார்கள். திரையில் சிவப்புச் சட்டையுடன் தோன்றும் பொழுதெல்லாம் தோழர்கள் குஷியாகிப்போனார் கள். "அவரோட கருப்பு கலருக்கு, சிவப்பு சட்டை யில் பார்க்கிறப்போ எப்படி இருக்கும் தெரியுமா?' என்று சில தி.மு.க. நண்பர் களும் சந்தோஷப்பட்டார் கள். விஜயகாந்த்துடைய அப்பா அழகர்சாமி அவர்கள் காங்கிரஸ் கட்சி யை சேர்ந்தவர். அது தெரிந்த சிலர், "காங்கிரஸ்காரருக்கு பிறந்தவன் கம்யூனிஸ்ட்டா மாறிட்டான்' என்று சொன் னார்கள். "இவனும் அவங்ககூட சேர்ந்து உண்டியல் குலுக்கப் போறான்' என்றார்கள்.

"சிவப்பு மல்லி' வெற்றியைத் தொடர்ந்து அதேபோல கம்யூனிஸ்ட் கொள்கைகளோடு தொழிலாளர்களைப் பற்றிய கதைகளோடு, அநீதியை எதிர்த்துப் போராடும் ஆவேசமான இளைஞனாக, அவருக்காக கதை தயார் செய்து தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் வந்து கால்ஷீட் கேட்டார்கள்.

ஒரே மாதிரி கதைகளாகிவிடுமோ என்ற யோசனை ஒருபுறம், எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்த தன்னை கம்யூனிஸ்ட்காரனாக நினைக்கிறார்களே என்ற சிந்தனை ஒருபுறம், அந்த நேரத்தில் மீண்டும் எஸ்.ஏ.சந்திரசேகர் சார், நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்கள் தயாரிக்கும் (எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் வில்லனாக நடித்தவர், எம்.ஜி.ஆர். நடித்த படத்தையும் தயாரித்தவர் வீரப்பா) படத்திற்கு கால்ஷீட் கேட்டார். திரையுலகில் தன்னை வெற்றிப்பாதைக்கு திருப்பிவிட்ட அவருக்கு, உடனே ஓ.கே. சொன்னார் விஜயகாந்த். படத்திற்குப் பெயர் "நெஞ்சிலே துணிவிருந்தால்'.

aa

இந்த நேரத்தில் துணிவு பற்றி பல சிந்தனைகள். மதுரையில் பவர்ஃபுல் பொலிட்டீசியனாக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த மதுரை முத்துவுக்கு, துணிச்சலாக புடவையும் வளையலும் அனுப்பி வைத்தவர், சண்டைக் காட்சிகளில் ரிஸ்க்கான ஷாட்களில் கூட இயக்குநரும் ஸ்டண்ட் மாஸ்ட ரும் டூப் போடலாம் என்றால்கூட, மறுத்துவிட்டு "நானே பண்ணுகிறேன்' என்று துணிச்சலாக ஃபைட் காட்சியில் நடித்தவர். இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்கு திரையுலகத்தினர் தயங்கிய போதும், புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரித்துப் பேச திரையுலகினர் யோசித்தபோதும் கூட, கொஞ்சம்கூட தயங்காமல் துணிச்சலாக ஊர்வலம் நடத்தியவர், உண்ணாவிரதம் இருந்தவர். கலைஞர் அவர்களுக்கு விழா எடுக்க பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் தயங்கிய போது, பெரிய... பெரிய நடிகர்கள் பயந்தபொழுது, விழா எடுத்தால் அப்பொழுது ஆட்சி நடத்திக்கொண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கோபத்திற்கு ஆளாகநேரிடும், அதனால் நமது படங்களுக்கு இடையூறு வரலாம், இழப்புகள் வரலாம் என்று அச்சப்பட்டு ஒதுங்கியபொழுது... விழா எடுக்க முடிவெடுத்தார்.

"வேண்டாம் விஜி விட்டு விடுங்கள்... தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க' என்று பலர் பலவிதமாக அச்சப்படுத்திய போதும், அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு மதுரை வீரனாக துணிச்சலோடு கலைஞருக்கு சென்னை கடற் கரையில் மிகப் பிரம்மாண்ட விழா எடுத்து தங்கப் பேனா பரிசு கொடுத்தவர்.

"நமக்கு காவிரி நீர் தராத கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் கொடுக்கக் கூடாது' என்று திரையுலகினர் நடத்திய போராட்டத்தில்... அ.இ.அ.தி.மு.க. ஆதரவு, தி.மு.க. ஆதரவு என்று பிரிந்துநின்ற பொழுது, லண்டனில் இருந்து, தமிழர்களின் நலனுக்காக உடனே சென்னை கிளம்பி வந்து கலை ஞர் அவர்களை நேரில் சந்தித்துப் பேசி சமாதானப்படுத்தி இரண்டு அணி என்பதை மாற்றி ஓர் அணியாக துணிச்ச லோடு நெய்வேலி நோக்கி பேரணி சென்றவர்.

சாக்கடை அரசியலை, மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை, அதிகாரிகளை வச னங்களால் வறுத்தெடுத்தவர்...

இதையெல்லாம் தாண்டி துணிச்சலாக தே.மு.தி.க. அர சியல் இயக்கத்தை தனது ரசிகர்கள் பலத்தோடும் மக்க ளின் ஆதரவோடும் தொடங்கி யவர்.... ஏன் சறுக்கினார்?

அவர் பெரிய ஹீரோவாக வேண்டும் என்று நினைத் தேன்... நடந்தது. அவர் அரசிய லுக்கு வரவேண்டும் என்பதற்காக எழுதினேன்... நடந்தது. அவர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று நினைத்தேன்... நடந்தது.

அவர் முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்தேன்... அது நடக்கவில்லை.

நான் இதை எழுதிக்கொண்டிருந்தபொழுது (02-03-2023) ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருந்தது. அவர் தொடங்கிய கட்சி ஏன் இப்படி ஆனது? என்று மனம் உண்மையிலேயே வேதனைப்பட்டது.

அவர் கட்சி தொடங்கியபொழுது எப்படி பரபரப்பாக இருந்தது. விருதாச்சலம் தொகுதியில் அவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானபொழுது எப்படி வீரியமாக இருந்தது...

ஈரோடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க. ஏன் இப்படி ஆகிப்போனது?

தேர்தல் முடிவு வந்ததும், இன்னமும் தே.மு.தி.க.வில் இருந்து என்னுடன் நன்றாகப் பழகிக்கொண்டிருப்பவர்கள் போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார்கள். வேறு கட்சி நண்பர்களும் வேதனைப்பட்டார்கள். நான் விஜயகாந்த்தை விட்டுப் பிரிந்து வந்து பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட அவர்கள் என்னைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அவரோடு இருந்த நெருக்கமும், பழக்கமும், பயணமும் அப்படி.

தே.மு.தி.க. அதன் பலத்தை இழந்துவிட்டதே என்று சந்தோஷப்படுபவர்களை விட கவலைப்படுபவர்களே அதிகம். அதற்குக் காரணம் இன்னமும் அவர்கள் விஜயகாந்த்தை நேசிக் கிறார்கள். அவர் மீண்டு வரவேண்டும் என்று ஆசைப்படு கிறார்கள். ஏன்... பிரார்த்தனையே செய்கிறார்கள். அதற்குக் காரணம்... விஜயகாந்த் அவர்களின் தாராள குணம், தர்ம சிந்தனை, தமிழ் உணர்வு, தைரியம், கடும் உழைப்பு... அதனால் அவர் மேல் ஏற்பட்டிருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு. அதெல்லாம் எப்படி உருவானது?

விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் அலுவலகத்தில் ரகமத்துல்லா என்ற நண்பர், அவர்தான் பண வரவு-செலவு கணக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். லேண்ட் ûலைன் போன் மட்டும் இருந்த காலம். ஐநூறு நம்பர்கள் என்றாலும் பார்க்காமலே சொல்வார். யார் நம்பர் என்றாலும் உடனே டயல் செய்வார். ரசிகர்கள் எழுதிய கடிதங்களுக்கு பதில் கடிதம் எழுது வார். அவர் எழுதும் கடிதங்களுக்கு என்னுடைய ஆலோசனை களும் இருக்கும். ரசிகர்களின் கடிதங்களுக்குப் பதில் எழுதுவதற் காகவே தனியாக நேரம் ஒதுக்கி, அது எத்தனை கடிதங்களாக இருந்தாலும், எவ்வளவு நேரமானாலும் சளைக்காமல் எழுதுவோம்.

விஜயகாந்த் அவர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு இணைப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தோம். இரவு நேரங்களில் அதிக நேரம் தூங்காமல் விழித்திருந்துகூட எழுதுவோம்.

"எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே' என்பதைப்போல... எங்கள் சிந்தனை எல்லாம் விஜயகாந்த்தின் வளர்ச்சியைப் பற்றியே திட்டமிட்டுக்கொண்டிருந்தது.

(வளரும்...)

nkn060523
இதையும் படியுங்கள்
Subscribe