ll

(15) அரசியலுக்கு அச்சாரம் போட்ட கூட்டம்!

Advertisment

ள்ளியூர் நிகழ்ச்சியைப் போலவே கள்ளக்குறிச்சியில் 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திருமணத்திற்கு விஜயகாந்த் அவர்களுடன் நானும் சென்றிருந்தேன். திருமணம் நடந்து முடிந்ததும் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு மைதானத்தில் ரசிகர் மன்றத் தினர் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரச்சினைக்குரிய சில விஷ யங்களைப் பற்றி நான் பேசி னேன். பேசினேன் என்பதை விட, ஒரு மாற்றத்திற்கான நெருப்பை பற்றவைத்தேன். விஜயகாந்த் அவர்கள் பேசும்போது, நான் பேசியதை மேற்கோள் காட்டி, அவரும் ஆவேசமாக சில கருத்துக்களைப் பேசினார். நான் பற்ற வைத்த நெருப்பு, அவர் பேசிய பிறகு கொளுந்துவிட்டு எரிய ஆரம் பித்தது. அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கு கள்ளக்குறிச்சி யில் நடந்த அந்தக் கூட்டம்தான் காரணமாக அமைந்தது. அதை வேறு ஒரு அத்தியாயத்தில் விளக்கிக் கூறுகிறேன்.

அதற்கு முன் வள்ளியூர் கூட்டத்தில் நடந்ததைச் சொல்லி முடித்துவிடுவோம்.

பொதுக்கூட்ட மேடை யைச் சுற்றிலும் பலவிதமான போர்டுகளை மன்ற நிர்வாகிகள் வைத்திருந்தார்கள்.

"தமிழ் இனத்தைக் காக்க வந்த கடவுளே!'

"ஏழை எளியோரின் இன்னலைப் போக்க வந்த மனித தெய்வமே!'

"சாதி, மதம் இல்லாத ஆட்சியை அமைக்கப்போகும் ஈடு இணையற்ற தலைவா!'

"தமிழ்நாடே தவமிருக்கிறது தலைவா உன் தலைமைக்கு காத் திருக்கிறது தலைவா!'

என்று விதவிதமாக எழுதப்பட்ட போர்டுகள், பேனர்கள் வைத்திருந்தார்கள்.

திடீரென மழை மேகம் சூழ ஆரம் பித்தது.

மழைக்கு முன் அவர் பேசவேண்டும் என்ற அவசரம் எனக்கு. நான் பேசிக்கொண் டிருந்த பொழுதே மழை பெய்யும் என்று தோன்றியதால், "வருங்கால முதல்வர், புரட்சிக் கலைஞர் பேசுவார்' என்று நானே அறிவித்துவிட்டு அமர்ந்தேன்.

Advertisment

அவர் பேசத் தொடங்கியதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் ரசிகர்மன்ற நிர்வாகிகள் அவருக்கு குடை பிடிக்க வந்தனர். "போய்யா... மக்களே நனைய றாங்க...பெருசா குடை பிடிக்க வந்துட்டீங்க...'' என்று கோபத்துடன் கூற... கூட்டம் ஆர்ப்பரித்தது.

ஒரு பெண் கைக்குழந்தையுடன் நனைந்தவாறு நிற்பதை நான் அவருக்குக் காட்டினேன். "ஏம்மா குழந்தைய நனைய வைக்கிறே. மேடைக்கு வந்துருமா'' என்று அழைத்தார் விஜயகாந்த்.

"என் குழந்தை நனைஞ்சா நனையட்டும்ணே... நீங்க பேசுங்கண்ணே...'' என்று உணர்ச்சவசப்பட்டு கத்தினார் அந்தப் பெண்.

அந்த வாரப் பத்திரிகையில் வந்ததை எழுதுகிறேன்.

Advertisment

விஜயகாந்த் அவர்கள் முக்கால்மணி நேரம் பேசினார். முக்கால் மணி நேரமும் மழை இடைவிடாது பெய்தது. அங்கு திரண்டிருந்த ஆண்களும் பெண்களும் அப்படியே மழையில் நின்றுகொண்டேயிருந்தனர். யாரும் கலைந்து செல்லவில்லை. கொட்டும் மழையிலும் நனைந்தபடியே தனது பேச்சை மக்கள் உன்னிப்பாய் கேட்டதைப் பார்த்து விஜயகாந்த் அவர்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மிகவும் ஆவேசமாகப் பேசினார்.

ll

"நமக்கு மழை முக்கியம். இந்த விழா நின்றாலும் கூட பரவாயில்லை... மக்க ளுக்கு மழை வேண்டும்...'' என்று கைதேர்ந்த அர சியல்வாதியைப்போல் தொடங் கியவர், சட்டென டாப் கியரில் பேசத் தொடங்கினார்.

"நான் அரசிலுக்கு வரப் போறேன்... கட்சி தொடங்கப்போறேன்னு எல்லோரும் பேசுறாங்க. பத்திரிகையில் எழுதுறாங்க. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தன் தொண்டர்களுக்கு, போராட்டம் பண்ணுங்க, மக்கள் பிரச்சினையில் தலையிடுங்கன்னு கட்டளையிடும். ஆனா நான் என் மன்றத்தினரை அப்படி வளர்க்க வில்லை. இயன்ற அளவு நல்லது செய்யுங்கள்னு சொல்லியிருந்தேன். என்னோட ரசிகர்களை கோழைங்கன்னு சொல்றவங்க, நான் கட்சி ஆரம்பிச்சா, அது எங்கே போய் முடியுமோன்னு சொல்றாங்க. எல்லாம் போகப் போகத்தான் தெரியும். நானும் இளைஞனாய் இருந்து ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவன்தான். இளைஞர்களை தடுத்து நிறுத்த முடியாது. இளைஞர்களால்தான் ஒரு நாட்டின் தலைவிதியை மாற்ற முடியும். என்னைப் பொறுத்தவரை தப்பு செஞ்சா கண்டிப்பேன். அப்படிக் கேட்டதுனாலயே என்னைக் கெட்டவன்னு சொல்றாங்க. நான் 146 தமிழ் படங்கள்ல நடித்திருக்கிறேன். வெளி மொழிப் படங்களில் நடித்தது கிடையாது. ஏன்னா, எனக்கு சம்பாதிக்கணும்னு ஆசை இல்லை.

நமது இளைஞர்கள் யாரும் வரதட்சணை வாங்கக்கூடாது. நான் 1000 பேருக்கு அதிகமாவே தாலி வாங்கிக் கொடுத்திருக்கேன். ஒரு சாதாரண கருப்பு மனிதனான நான் இப்படி வளருவேன்னு நினைக்கவே இல்லை. அதற்குக் காரணம் என் தமிழ் மக்கள்தான். நான் அவர்களுக்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டும். அதனால்தான் "இயன்றவரை கொடுக்க வேண்டும் இல்லாதவருக்கு'ன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நானும் அதை செஞ்சுக் கிட்டிருக்கேன்.

"விஜயகாந்த் இந்த மன்றத்தை வச்சு என்ன செய்வான்? அவனால் என்ன செய்ய முடியும்'னு பேசுறாங்க. பொறுத்திருந்து பாருங்க. என் மன்றத்தைச் சேர்ந்தவங்க ஏழைங்க. எனது மனமோ சுத்தம். உங்க மனமும் சுத்தமா இருப்ப தால்தான் இந்த மழையிலும் என் பேச்சைக் கேக்கறீங்க. இன்னைக்கு காலையில கூட கல்யாண மண்ட பத்துல வச்சு எப்ப கட்சி ஆரம்பிக்கப் போறீங்கன்னு கேட்டாங்க. அவங்ககிட்ட நான் சொன்னேன். "நான் திருட்டுக் கல்யாணம் பண்ணமாட்டேன். ஊரைக் கூட்டிவச்சுச் சொல்லுவேன்'னு. ஆனா விஷயம்... நான் மூன்று தடவை வள்ளியூருக்கு வந்திருக்கேன். அடுத்த தடவை நிச்சயம் வேறு ரூபத்தில் (கட்சித் தலைவர்) வருவேன்.

என்னை சிலபேரு சீண்டிப் பாக்கறாங்க. நான் எதற்குமே பதில் சொல்லவில்லை. ஆனால் பதில் சொல்லவேண்டிய நேரம் சீக்கிரம் வரும், அப்போது பதில் சொல்வேன்.

என்னைப் பொறுத்தவரை முன்வைத்த காலை பின் வைப்பது இல்லை. இப்போது ஒரு அடி முன்னால் வைத்துவிட்டேன். இனி பின்வாங்கமாட் டேன். எனக்கு அரசியல் தெரியுமான்னு கேக்கறாங்க. எனக்கு அரசியல் தெரியுமா, தெரியாதா என்பது போகப் போகத் தெரியும். எனக்கு இரண்டே இரண்டு பையன்கள்தான். அவர்கள் சொந்தக் காலில் நின்றுகொள்வார்கள். எனது சம்பாத்தியம் எல்லாம் மக்களுக்குத்தான். நான் பதுங்குவது ஒதுங்கு வதற்கு அல்ல... பாய்வதற்கு'' என்று பேசியதும் அந்தக் கொட்டும் மழையின் சத்தத்தையும் தாண்டி கைத்தட்டல் காதைப் பிளந்தது. "மழை பெய்கிறது, நீங்க நனைஞ்சுக் கிட்டிருக்கிறதப் பாத்தா என் மனசு தாங்கல... முடிச்சுக்கிறேன்'' என்றார்.

"இன்னும் பேசுங்க... பேசுங்க... எவ்வளவு மழை பெஞ்சாலும் நாங்க நிப்போம்'' என்று குரல்கள் ஒலித்தன. அவர் பேசி முடித்து, நலத் திட்டங்கள் கொடுத்து முடித்த பிறகும் கூட மைதானத்தில் இருந்த கூட்டம் கலையவே இல்லை.

"நீங்க மொதல்ல போங்க விஜிண்ணே... நான் பின்னால வர்றேன். நீங்க போனாத்தான் கூட்டம் கலைஞ்சு போகும்'' என்று கூற, அவரும் காரில் ஏறப் போனார். மக்களும், ரசிகர்களும் காரை சூழ்ந்துகொண்டனர். கார் அந்த இடத்தை விட்டு நகரவே அதிகமான நேரமாகிப் போனது.

எவ்வளவு வெயில் அடித்தாலும் கலையாமல் நின்ற கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். எவ்வளவு குளிரடித்தாலும் கலையாமல் நின்ற கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கொட்டுகிற மழையில், இளைஞர்கள் மட்டுமல்ல... பெரியவர்கள்... கைக்குழந்தை யோடு பெண்கள்... இப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்ததில்லை. அவரது ரசிகர்களிடத்திலும், மக்களிடத்திலும் அவர்மேல் இருந்த ஈர்ப்பும், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆர்வமும்தான் அதற்குக் காரணம் என்பது நன்றாகத் தெரிந்தது.

"விஜயகாந்து பெரிய நடிகரா வருவாராப்பா''ன்னு என் அம்மா கேட்ட கேள்வி, அவருக்குப் புரிய வைப்பதற்காக "கருப்பு எம்.ஜி.ஆர்.'னு 1981-ஆம் ஆண்டு தற்செயலாகச் சொன்னேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2004ஆம் ஆண்டு வள்ளியூரில் அவரோடு நான் பயணம் செய்த அனுபவத்தில் ரசிகர்களும், மக்களும் அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்று தெரிந்துகொண்ட பிறகு, மேடையில் முழங்கினேன்.

அன்று முதல் "கருப்பு எம்.ஜி.ஆர்.' என்ற பட்டம் அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டது. அப்படி நான் நினைக்கிற அளவுக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளுகிற அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார்?

(வளரும்...)