(12) கண் சிவந்த விஜயகாந்த்!
விஜயகாந்த் அவர்கள் "கருப்பு எம்.ஜி.ஆர்.' என்று அழைக்கப்பட்டது எப்படி?
"கேப்டன்' ஆனது எப்படி?
அரசியல் கட்சி தொடங்கியது எப்படி?
-என்று பல "எப்படி?'களுக்கு விளக்கம் சொல்வதற்கு முன்...
என் தாய், தந்தை வைத்த "லியாகத் அலிகான்' என்ற பெயரை மாற்றினால்தான் வசனம் எழுத வாய்ப்புத் தருவேன் என்று சொன்ன தயாரிப்பாளரிடம் ஆவேசமாகப் பதில் சொல்லிவிட்டு வந்ததை விஜயகாந்த் அவர்களிடம் எப்படிச் சொல்வதென தயக்கமாக இருந்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இந்த இடத்தில் சொல்லிவிடலாம்.
பாண்டிபஜார், ராஜாபாதர் தெருவில் விஜயகாந்த் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். நான் போகும்போது விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஹோட்டல் சாப்பாடு. கேரியரில் வந்திருந்தது. "அண்ணே... ஒரு இலை எடுத்துப் போட்டு உக்காருங்கண்ணே'' என்றார் விஜயகாந்த், அவர்களோடு தரையில் அமர்ந்து நானும் சாப்பிட்டேன்.
"எங்கண்ணே காலையில இருந்து ஆளையே காணோம்'' என்று கேட்டார் ராவுத்தர்.
"சாப்பிட்டதும், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ணே'' என்றேன்.
விஜயகாந்த் என்னை "அண்ணே' என்று அழைப் பார். நானும் அவரை "அண்ணே' என்று அழைப்பேன். "விஜிண்ணே' என்றும் அழைப்பேன். இப்ராகிம் ராவுத்தரையும் "அண்ணே' என்று அழைப்பேன். அவரும் என்னை "அண்ணே' என்று அழைப்பார். "யாருக்கு யார் அண்ணன்' என்று சில நண்பர்கள் கேட்பார்கள்.
சாப்பாடு முடிந்ததும்... "என்ன விஷயம்ணே... சொல்லுங்க'' என்றார் விஜயகாந்த்.
தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போனதையும், அவர் என்னிடம்
(12) கண் சிவந்த விஜயகாந்த்!
விஜயகாந்த் அவர்கள் "கருப்பு எம்.ஜி.ஆர்.' என்று அழைக்கப்பட்டது எப்படி?
"கேப்டன்' ஆனது எப்படி?
அரசியல் கட்சி தொடங்கியது எப்படி?
-என்று பல "எப்படி?'களுக்கு விளக்கம் சொல்வதற்கு முன்...
என் தாய், தந்தை வைத்த "லியாகத் அலிகான்' என்ற பெயரை மாற்றினால்தான் வசனம் எழுத வாய்ப்புத் தருவேன் என்று சொன்ன தயாரிப்பாளரிடம் ஆவேசமாகப் பதில் சொல்லிவிட்டு வந்ததை விஜயகாந்த் அவர்களிடம் எப்படிச் சொல்வதென தயக்கமாக இருந்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இந்த இடத்தில் சொல்லிவிடலாம்.
பாண்டிபஜார், ராஜாபாதர் தெருவில் விஜயகாந்த் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். நான் போகும்போது விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஹோட்டல் சாப்பாடு. கேரியரில் வந்திருந்தது. "அண்ணே... ஒரு இலை எடுத்துப் போட்டு உக்காருங்கண்ணே'' என்றார் விஜயகாந்த், அவர்களோடு தரையில் அமர்ந்து நானும் சாப்பிட்டேன்.
"எங்கண்ணே காலையில இருந்து ஆளையே காணோம்'' என்று கேட்டார் ராவுத்தர்.
"சாப்பிட்டதும், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ணே'' என்றேன்.
விஜயகாந்த் என்னை "அண்ணே' என்று அழைப் பார். நானும் அவரை "அண்ணே' என்று அழைப்பேன். "விஜிண்ணே' என்றும் அழைப்பேன். இப்ராகிம் ராவுத்தரையும் "அண்ணே' என்று அழைப்பேன். அவரும் என்னை "அண்ணே' என்று அழைப்பார். "யாருக்கு யார் அண்ணன்' என்று சில நண்பர்கள் கேட்பார்கள்.
சாப்பாடு முடிந்ததும்... "என்ன விஷயம்ணே... சொல்லுங்க'' என்றார் விஜயகாந்த்.
தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போனதையும், அவர் என்னிடம் பேரை மாற்றச் சொன்னதையும், அங்கு நடந்த வாக்குவாதம் பற்றியும் சொன்னேன்.
சொன்னவுடனே பட்டென்று கோபமாக ஒரு கெட்டவார்த்தை யில் அந்த தயாரிப்பாளரைத் திட்டினார் ராவுத்தர்.
"என் வாயிலயும் அதுதாண்டா வந்துச்சு...'' என்றார் விஜயகாந்த்.
"இந்த மாதிரி ஆளுங்ககிட்ட ஏண்ணே போறீங்க?'' என்றார் ராவுத்தர்.
"போறதுக்கு முன்னால அந்த ஆளைப்பத்தி அண்ணனுக்கு எப்படிடா தெரியும்?. அந்த ஆளு பேசுனதுக்கு அப்புறம்தான தெரிஞ்சிருக்கு'' என்றார் விஜயகாந்த்.
"இந்த மாதிரி ஜாதி, மதம் பார்க்கற வனை செருப்பாலயே அடிக்கணும்'' என்றார் ராவுத்தர். சொன்னதும் மூன்றுபேரும் ஒரே நேரத்தில் அந்த அறையில் ஒரு டீப்பாயில் வைக்கப் பட்டிருந்த போட்டோக்களை திரும்பிப் பார்த்தோம். அதில் அத்தனை மதங் களைச் சேர்ந்த போட்டோக் களும் இருந்தது.
இந்து -முஸ்லிம் -கிறிஸ்து என்ற வேறு பாடு இல்லாமல் வித விதமான போட் டோக்கள். ஒவ் வொரு போட் டோவிலும் பூ வைக்கப்பட்டு பார்ப்பதற்கே ரம்யமாக, மங்களகரமாக, தெய்வீகமாக காட்சியளித்தது. மத நல்லிணக் கத்துக்கு உதா ரணமாகத் திகழ்ந்தது விஜய காந்த் அவர் களின் அந்த அறை. அத்தனை படங்களையும் வைத்து அதில் பூ வைத்து, குளித்துவிட்டு, ஈரத்துண்டுடன், ஈர லுங்கியுடன் உடம்பைக் கூட துடைக்காமல் அத்தனை போட் டோக்களையும் பார்த்து தொழுது வணங்குவார் ராவுத்தர். அது பார்ப்பவர் களுக்கு அதிசயக் காட்சியாக மட்டுமல்ல... ஆனந்தக் காட்சியாகவும் இருக்கும். அப்படி வளர்ந்தவர்கள் நாங்கள், சரி விஷயத்துக்கு வருவோம்...!
"அந்த ஆளுகிட்டபோய் (தயாரிப்பாளர்) அசிங்கப்பட்டுட்டு வந்திருக்கீங்கண்ணே'' -இது விஜயகாந்த்.
"இவர் எங்கப்பா அசிங்கப்பட்டு வந்திருக்காரு. அவனை அசிங்கப்படுத்திட்டு வந்திருக்காரு...'' -இது ராவுத்தர்.
"எனக்கு மனசு ஆறலடா இப்ராகிம்...'' -இது விஜயகாந்த்.
எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் தனக்கு ஏற்பட்டதாகவே நினைத்துக் கொதித்துப்போனார் விஜயகாந்த்.
நான் சிலிர்த்துப்போனேன்.
"நட்பு ஏற்பட்டு சில காலங்களிலேயே எனக்காக இவ்வளவு அக்கறைப்படுகிறாரா விஜயகாந்த்? எனக்காக இவ்வளவு துடித் துப்போகிறாரா? -இப்படி ஒருவருக்கு நண்பனாக, சகோதரனாக நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என நினைத்துக்கொண் டேன்.
"அந்த ஆளைப் போய் பார்த்து நாலு கேள்வி கேட்டுட்டு வரலாமாடா இப்ராகிம்...''
"அதான் அண்ணனே கேட்டுட்டு வந்துட்டாருல்ல... விடு. சினிமால வாய்ப்புத் தேடறப்போ இதெல்லாம் சகஜம். எல்லா எடத்துலயும் நடக்கறதுதான். நாம அசிங் கப்படலையா...? அவமானப் படலையா...? இதாண்டா நமக்குள்ள ஒரு வைராக்கியத்த வரவைக்கும்...''
ராவுத்தர் சொன்னதும், மௌனமானார் விஜயகாந்த். அவரது கண்கள் சிவந்திருந்தன. "அண்ணே, இனிமே எங்களுக்குத் தெரியாம வாய்ப்புக்காக நீங்க எங்கேயும் போகக்கூடாது, யாரையும் பாக்கக்கூடாது. உங்கள நான் பெரிய ஆளாக்குறேண்ணே...'' உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் விஜயகாந்த்.
பதில் சொல்லாமல் அவரையே பார்த்தேன்.
"ஏண்ணே, எங்க மேல நம்பிக்கை இல்லையா? நான் பெரிய ஹீரோவா ஆகமாட்டேனா? நான் ஆனா, ஒரே நாள்ல உங்கள ஆக்கிருவேண்ணே... சொல்லுடா இப்ராகிம்..''
"அண்ணே... விஜி உங்களப் பத்தி அடிக்கடி என்கிட்டப் பேசுவாண்ணே. எனக்கே ஆச்சரியமா இருக்கும்ணே. உங்க மேல இவனுக்கு எப்படி இவ்வளவு பாசம் வந்துச்சுன்னு'' -என இப்ராகிம் ராவுத்தர் சொன்னார்.
இப்ராகிம் ராவுத்தர் என்மீது அன்பு வைப்பதற்கு நானும் ஒரு இஸ்லாமியன் என்பது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் விஜயகாந்த் என்மீது அன்பு வைப்பதற்கு காரணம்? பொதுவாகவே அவர் இஸ்லாமியர்களை நேசிப்பார். என்மீது அன்பு வைப்பதற்கு வேறு என்ன காரணம்? ஒரே காரணம்... இறைவன் ஏற்படுத்திய பந்தம்!
வேறு... வேறு மதங்கள், வேறு... வேறு தாய் வயிற்றில் பிறந்தவர்கள், ஒரே தாய் வயிற்றில் பிறந்தது போல ஆனதற்கு அது இல்லாமல் வேறு என்ன காரணமாக இருக்கும்.
அன்று உறுதியாகச் சொன்னேன்... "விஜிண்ணே, இனிமே நான் எங்கேயும் போகமாட்டேன். உங்களுக்குத் தெரியாம யார்கிட்டயும் போய் வாய்ப்பு கேட்கமாட்டேன். எதிர்காலத்துல என்னைத் தேடி வாய்ப்புகள் வந்தாலும், உங்ககிட்ட சொல்லுவேன். நீங்க சரின்னு சொன்னாத்தான் நான் செய்வேன்'' என்று சொன்னேன்.
விஜயகாந்த் என் கைகளை அழுத்திப் பிடித்தார். அந்தப் பிடியில் அன்பு, பாசம், நம்பிக்கை, என் எதிர்காலம் எல்லாமே தெரிந்தது.
அப்படிப்பட்ட விஜயகாந்த் அவர்களை நான் சந்திக்கவும், அவருடன் நட்பு ஏற்படவும் காரணம் புகழேந்தி அண்ணன் அவர்கள்.
புகழேந்தி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. சென்னைக்குப் போனேன். அண்ணன் வீட்டில் தங்கினேன். ராஜாபாதர் தெருவில் விஜயகாந்த் அவர்களை சந்திக்கப் போனேன். அந்தச் சந்திப்புதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தச் சந்திப்புதான் என்னை சினிமாவில் வசனகர்த்தா ஆக்கியது. அந்தச் சந்திப்புதான் என்னை சினிமா இயக்குநராக ஆக்கியது. அந்தச் சந்திப்புதான் நாலுபேருக்கு மட்டுமே தெரிந்த என்னை நாட்டுக்கே தெரிய வைத்தது.
(விஞ்ஞான வளர்ச்சியில் தொலைக்காட்சி, ஊடகங்கள், யு-டியூப், ஃபேஸ்புக் மூலம் தமிழ் சினிமா உலக அளவில் தெரிந்த ஒன்றாக ஆகிவிட்டது. நான் விஜயகாந்த் அவர்களுக்காக எழுதிய படங்கள் இப்பொழுது கூட வந்துகொண்டிருக்கிறது. சூப்பர் ஸீன் என்று திரையரங்குகளில் கைதட்டல் வாங்கிய காட்சிகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறது, அதனால்தான் உலகிற்கே என்று சொன்னேன்.)
விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கம் சொன்னேன். அவரும் வணக்கம் சொன்னார். இப்ராகிம் ராவுத்தர் அவர்களுக்கு "சலாம்' சொன்னேன். "சினிமாவுக்கு வந்துட்டா எல்லா ருக்கும் வணக்கம்தான்' என்று சிரித்தார் அவர்.
"ஊரு கம்பம்''
"புகழேந்தி அண்ணன் சொல்லிட்டாரு''
"வசனம் எழுதணும் கிறதுதான் என்னோட ஆசை''
"புகழேந்தி அண்ணன் சொல்லிட்டாரு''
"அவர்தான் உடனே கிளம்பி வாங்கன்னு சொன் னாரு...''
"உங்களைப் பத்துன எல்லாத்தையும், புகழேந்தி அண்ணன் சொல்லிட்டாரு''
என்மீது புகழேந்தி அண்ணனுக்கு இருந்த அக்கறைக்கு, அவரைப் பார்த்து புன்னகையிலேயே நன்றி சொன்னேன்.
என் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து தினமும் விஜயகாந்த் அறைக்கு வந்துவிடுவேன். பத்து ஆண்டுகள் பழகினால் ஏற்படும் பிணைப்பும் பாசமும், நட்பும் பத்தே நாட்களில் எங்களுக்குள் ஏற்பட்டது.
இப்ராகிம் ராவுத்தர்... அப்பொழுதெல் லாம் அவர் இப்ராகிம் ராவுத்தர் இல்லை. இப்ராகிம் மட்டும்தான். நண்பர்கள் இப்ராகிம் என்பார்கள். சிலர் இப்ராகிம் சார் என்பார்கள். நான் இப்ராகிம் அண்ணே என்பேன். அவர் பெயருடன் ராவுத்தர் சேர்ந்தது எப்போது, ஏன் சேர்ந்தது என்பதை அந்த நேரம் வரும்போது சொல்கிறேன்.
(வளரும்...)