(10) ஆறாம் வகுப்பில் அடுக்குமொழி!
சும்மா கேட்டுவிட்டு போவதற்கும் பாட்டு இருக்கிறது. நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கவும் பாட்டு இருக்கிறது. பாட்டுக்கு அப்படி ஒரு வல்லமை இருக்கிறது. அதைப்பற்றி அண்ணன் புகழேந்தியும் நானும் விவாதிப்போம்.
"போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்''
என்ற பட்டுக்கோட் டையாரின் பாடலைப் பற்றிப் பேசுவோம்.
"மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்
என்ற கண்ணதாசனின் பாடலையும் அலசுவோம்.
"மயக்கமா... கலக்கமா... என்கிற பல்லவி கொண்ட பாடலின் சரணங்கள் மிக அற்புதமானவை.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்
...
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத்தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...''
இது வெறும் திரைப்பாடல் மட்டுமல்ல... தோல்வியில் துவண்டு கிடப்பவனுக்கு வேதனையில் வாடிக் கிடப்பவனுக்கு மிகப்பெரிய ஆறுதல்... நம்பிக்கை. வேதனையை மறந்து சாதனை ப
(10) ஆறாம் வகுப்பில் அடுக்குமொழி!
சும்மா கேட்டுவிட்டு போவதற்கும் பாட்டு இருக்கிறது. நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கவும் பாட்டு இருக்கிறது. பாட்டுக்கு அப்படி ஒரு வல்லமை இருக்கிறது. அதைப்பற்றி அண்ணன் புகழேந்தியும் நானும் விவாதிப்போம்.
"போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்''
என்ற பட்டுக்கோட் டையாரின் பாடலைப் பற்றிப் பேசுவோம்.
"மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்
என்ற கண்ணதாசனின் பாடலையும் அலசுவோம்.
"மயக்கமா... கலக்கமா... என்கிற பல்லவி கொண்ட பாடலின் சரணங்கள் மிக அற்புதமானவை.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்
...
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத்தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...''
இது வெறும் திரைப்பாடல் மட்டுமல்ல... தோல்வியில் துவண்டு கிடப்பவனுக்கு வேதனையில் வாடிக் கிடப்பவனுக்கு மிகப்பெரிய ஆறுதல்... நம்பிக்கை. வேதனையை மறந்து சாதனை படைக்க ஏற்றி வைக்கப்படும் விளக்கு.
"ஒரு பாடல் வேதனையைத் தீர்க்க முடியும், உற்சாகத்தை உண்டாக்க முடியும், அநீதியை எதிர்த்துப் போராட வைக்கும், ஏழை-எளியவர்களுக்காக பாடுபட வைக்கும், தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க வைக்கும், தர்மம் செய்பவர்களை தட்டிக் கொடுக்க வைக்கும், பிரிவினையை உண்டாக்கும், ஒற்றுமையை வளர்க்கும், புரட்சியை உருவாக்கும்...' என்பதையெல்லாம் பேசுவோம். "ஒரு பாடலால் இவ்வளவும் செய்ய முடியும் என்றால் வசனத்தால் இன்னும் அதிகமாக சாதிக்க முடியும். சமுதாயத்தையே மாற்றியமைக்க முடியும்' என்றும் பேசுவோம்.
அப்படி ஒரு தீப்பொறியை கலைஞர், என் மனதிலும் உருவாக்கிவிட்டார் என்று சொன்னேன். அவருக்குப் பிடித்த கலைஞர் ஆயிற்றே... அதனால் என்மீது அதிகமான நம்பிக்கை ஏற்பட்டது புகழேந்திக்கு.
வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும் போதுமா, அதற்கான தகுதி வேண்டாமா? அவர் கேட்பதற்கு முன் நானே சொன்னேன். "ஸ்கூலில் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்கியிருக்கிறேன். பள்ளி நாட்களில் நடித்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது நடந்த பேச்சுப் போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறேன்'' என்றேன்.
அது போதாது என்பது போல பார்த்தார்.
கேரளாவில் உள்ள மூணாறு. என் மாமா அங்கே ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்தார். அதுவும் பங்கஜம் சினிமா தியேட்டருக்கு எதிரே. காலாண்டு, அரையாண்டு, பள்ளி விடுமுறை நாட்களில் எல்லாம் என் மாமா என்னை அங்கு அழைத்துச் செல்வார் அப்பொழுது இந்தியாவிலேயே பெரிய பஞ்சாயத்து மூணாறு. 40 எஸ்டேட்டுகள் சேர்ந்த பஞ்சாயத்தாக மூணாறு இருந்தது. ஒவ்வொரு எஸ்டேட்டுக்கும் ஒரு பெயர் உண்டு.
பல எஸ்டேட்களில் கோவில் திருவிழா காலங்களில் நாடகங்கள் நடத்துவார்கள். அவர்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு நாடகங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறேன். "இந்த வயசுலயே நல்லா எழுதறயே...' என்று பாராட்டியதையும் சொன்னேன்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நான் எழுதிய சரித்திர நாடகத்தில் ஒரு காட்சியின் வசனம்... கதாநாயகன் பேசுவது போல...
"நான் விடும் அம்பு...
யானையின் கொம்பு...
நம்பினால் நம்பு...
இல்லையேல் வம்பு...''
இதை நான் சொன்னதும், "அடுக்கு மொழியா?'' என்று கேட்டார் புகழேந்தி.
"ஆம்... 6-ஆம் வகுப்பு படிக்கும் போது எழுதியது...'' என்று சொன்னேன்.
6-ஆம் வகுப்பு படிக்கும்போது எழுதியது என்பதால் "அருமை'' என்றார்.
மூணாறு எஸ்டேட்டில் நடந்த நாடகத்தில் நான் எழுதிக்கொடுத்த வசனத்தைச் சொன்னேன். கதாநாயகி மேல் வில்லனுக்கு ஆசை. வில்லன் நல்லவன் என்று நினைத்து அவனிடம் ஒரு உதவி கேட்டு வருகிறாள் கதாநாயகி. நல்லவன் போல பேசி அவளை அனுப்பிவிடுகிறான் வில்லன். வில்லனின் அடியாள் அவனிடம் அவள் வந்ததை சொல்வான்.
"தேடி வந்தும் அவளை விட்டுவிட்டீர்களே பாஸ்' என்பான்.
"அவளை நம்ப வைத்து அடையவேண்டும்' என்ற தன் ஆசையை வில்லன், அவனிடம் சொல்வது போல வசனம்.
"இங்க வர்ற எந்தப் பொண் ணும் சேதாரம் இல்லாமப் போன தில்ல. இந்தப் பச்சைக்கிளி பத்திரமா திரும்பிப் போறா'' என்பான் அடியாள்.
வில்லன் சிரித்தபடி பேசுவான்.
"வலையைத் தேடி பச்சைக் கிளி வந்த கதை.. இப்பொழுதே பிடித்திருப்பேன் அதை...
அதைக் காட்டிலும் பெரிய சுவை... என் சாகஸ நிலத்திலே விழுந்திருக்கிறது ஒரு விதை...
அது வளர்ந்து மரமாகி, பூப்பூத்து காயாகி, கனியாகி... அப்பொழுது சுவைக்க வேண்டும்'' என்று சிரிப்பான்.
"அப்போ செய்கூலி மிச்சம்'' என்பான் அடியாள்.
"ஒரே அடுக்குமொழியாக இருக்கிறதே'' என்றார் அண்ணன் புகழேந்தி. அவர் பாராட்டுகிறாரா, என்னைக் கேலி செய்கிறாரா என்று தெரியவில்லை. அவரது தொனியில் இரண்டும் இருந்தது.
சிறுவயதில் அடுக்குமொழியில் எழுதிய நான், சினிமாவுக்கு வந்து வசனம் எழுத ஆரம்பித்தபொழுது அப்படி எழுதவில்லை. எனது பாணி அடியோடு மாறிப்போனது. அதற்குக் காரணம் சகலகலா வல்லவர் திரு டி.ராஜேந்தர்! அடுக்குமொழி வசனங்களையே ஆயுதமாக்கி தான் எழுதிய அத்தனை படங்களையும் வெற்றிப் படங்க ளாக்கினார். அவர் சோகத்தையும் அடுக்குமொழியில் சொன் னார். சுகத்தையும் அடுக்குமொழியில் சொன்னார். இன்பத்தை யும் அடுக்குமொழியில் சொன்னார். துன்பத்தையும் அடுக்கு மொழியில் சொன்னார். கோபத்தையும் அடுக்கு மொழியில் சொன்னார். வீரத்தையும் அடுக்குமொழியில் சொன்னார்.
அடுக்குமொழி வசனங்களாலேயே தமிழ்நாட்டு ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
சமீபத்தில் அவர் உடல்நலமில்லாமல் வெளிநாடு செல்லும்போதும் கண்கலங்கி அடுக்குமொழியில் பேசிவிட்டுச் சென்றார். நலம் அடைந்து சென்னை திரும்பி வந்ததும், தனக்காக பிரார்த்தனை செய்தவர்கள், வேண்டிக்கொண்டவர் களுக்கு தனது நன்றியை அடுக்கு மொழியிலேயே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிப் பருவத்தில் நான் எழுதிய வசனங்களைக் கேட்டு விட்டு, "அடுக்குமொழி வசனத்திற் கும் நான் ரசிகன்தான். ஆனால் நீங்கள் வசனம் எழுதும்போது உங்களுக்கென்று தனி பாணி அமைத்துக்கொள்ள வேண்டும்'' என்று சொன்னார் அண்ணன் புகழேந்தி.
சினிமாவை நாம் மாற்ற நினைப்போம், ஆனால் சினிமா நம் கையில் இல்லை. சினிமாவின் கையில்தான் நாம். சினிமா நம்மை மாற்றிவிடும் என்பது அப்பொ ழுது எனக்குத் தெரியாது. எனக்கு மட்டுமல்ல... சினிமா நம்மை என்னவாக மாற்றும் என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது.
"முயற்சி செய்வதுதான் நாம், முடிவு செய்வது அவன்'' அதாவது... ஆண்டவன். இது சினிமாவுக்கு அதிகமாகவே பொருந்தும்.
"உங்கள் அண்ணன் சென்னையில் இருக்கிறார் என்று சொன்னீர்களே... அவருடன் போய் தங்கியிருந்து முயற்சி செய்யலாமே'' என்று கேட்டார் அண்ணன் புகழேந்தி.
"இன்னும் அவன் என்னை அழைக்கவில்லையே?'' என்றேன் நான்.
"உடன்பிறந்த அண்ணனை அவன் என்று சொல்கிறீர்களே?'' என்று கேட்டார்.
"நான், அவன் என்று சொன்னது என் அண்ணனை அல்ல... ஆண்டவனை'' என்றேன்.
சிரித்தார்... "உங்களுக்கு வசன அறிவு இருக்கிறது'' என்றார்.
(வளரும்...)