ஹாங்காங்கில் முதலீடாகும் கறுப்பு பணம்! சி.பி.ஐ. வலையத்தில் ஆளுந்தரப்பு!

cbi

ஹாங்காங்குக்கு சட்டவிரோதமாக ரூ.1038 கோடி கருப்பு பணம் கடத்தப்பட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வர... சி.பி.ஐ. இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

சி.பி.ஐ. தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, ""கடந்த 2014, 2015-ல் இந்தியாவிலிருந்து ஹாங் காங்கிற்கு ரூ. 1038 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சீனாவின் ஆளுகைக்குள் இருக்கும் ஹாங்காங் தற்போது வளர்ச்சியடைந்த பொருளாதார மண்டலமாக உள்ளதால், உலகிலுள்ள முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அங்கு முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

cbi

சென்னை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரியமேடு, எழும்பூர், பிராட்வே, ராயப்பேட்டை பகுதிகளில் இயங்கிவரும் 48 தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த 51 கரண்ட் அக்கவுண்டு களிலிருந்து பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் (எஸ்.பி.ஐ) மற்றும் ஓர் தனியார் வங்கி என நான்கு வங்கி மூலம் ஹாங்காங்கிற்கு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்துள் ளதை

ஹாங்காங்குக்கு சட்டவிரோதமாக ரூ.1038 கோடி கருப்பு பணம் கடத்தப்பட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வர... சி.பி.ஐ. இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

சி.பி.ஐ. தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, ""கடந்த 2014, 2015-ல் இந்தியாவிலிருந்து ஹாங் காங்கிற்கு ரூ. 1038 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சீனாவின் ஆளுகைக்குள் இருக்கும் ஹாங்காங் தற்போது வளர்ச்சியடைந்த பொருளாதார மண்டலமாக உள்ளதால், உலகிலுள்ள முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அங்கு முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

cbi

சென்னை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரியமேடு, எழும்பூர், பிராட்வே, ராயப்பேட்டை பகுதிகளில் இயங்கிவரும் 48 தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த 51 கரண்ட் அக்கவுண்டு களிலிருந்து பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் (எஸ்.பி.ஐ) மற்றும் ஓர் தனியார் வங்கி என நான்கு வங்கி மூலம் ஹாங்காங்கிற்கு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்துள் ளதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

மேலும் போலியான ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரை விங் லைசன்ஸ், பான் கார்டு மற்றும் போலி ரென்டல் அக்ரிமெண்டு (வாடகைப் பத்திரம்) என அனைத்துமே போலி யாக தயாரித்து வங்கிக் கணக்கை துவக்கி மோசடி யில் ஈடுபட்டுள்ளதும் ஆரம்பகட்ட விசா ரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனங்களை விசாரணை செய்ததில் 48 நிறுவனங்களில் 24 நிறுவனங்கள் போலி யானது என்றும் அதுபோன்ற நிறுவனமே கிடையா தென்றும், மேலும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி மற்றும் ஊழியர் களின் துணையுடனே நடந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. டிராவல்ஸ் நிறுவனங் களை விசாரித்ததில் சுற்றுலாவுக்காக சென்ற பயணிகளின் செலவிற்காக பணம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதுபோல யாரும் பயணிக்கவில்லை என சி.பி.ஐ. யின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, இதை யடுத்து ஐ.பி.சி. 120 (பி), ஐ.பி.சி. 409, ஐ.பி.சி. 420, ஐ.பி.சி. 468, ஐ.பி.சி. 471, பி.சி. ஆக்ட் 1988 13(1)(டி), பி.சி. ஆக்ட் 1988 13(2) என ஏழு பிரிவுகளில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்திவருகின்றது.

cbi

இந்த பணம் யார் அனுப் பியது, இதன் பின்னணியில் யார், யார் என வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. தரப்பில் கேட் டோம். “""ஹாங்காங்கைப் பொருத்தவரை யார் வேண்டு மானாலும் அங்கு முதலீடு செய்யலாம், பல்லாயிரம் கோடி கள் நாளொன்றுக்கு இங்கு வணிகம் நடக்கிறது. முதலீடு களை ஈர்க்க தாராள வரிச் சலுகை வழங்கப்படுகிறது. ஹாங் காங்கில் எந்த நாட்டவரும் நேரடியாக முதலீடு செய்து தொழில் தொடங்கலாம். இந்தியாவிலோ, பிறநாடுகளிலோ அப்படிச் செய்யமுடியாது. ஏற்றுமதி இறக்குமதி மீது எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமலிருப்பதை "ப்ரீ ட்ரேடு' என்பார்கள். ஹாங்காங்தான் தற்போதைய "ஏசியன் ப்ரீ டிரேடு ஹப்' ஆகும். இதில் ஆளுங்கட்சிப் பிரமுகர் சிக்கியுள்ளார்.

ஹாங்காங்கில் நாதன் தெருவிலுள்ள "சின்ங்கின் மேன்ஷன்' எனப்படும் பகுதியில்தான் பெரும்பாலான இந்திய வர்த்தகர்கள் உள்ளனர். இந்த பணமும் அப்பகுதிக்குதான் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது.''

நாட்டு மக்களோ விலைவாசியேற் றம், வேலையிழப்பு என கையில் காசின்றி உணவுக்கே ததிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருக்க... ஆளும் அரசியல் கட்சிப் பிரமுகர்களோ வங்கி அதிகாரி களின் ஒத்துழைப்புடன் பல ஆயிரம் கோடி சட்டவிரோத பரிவர்த்தனை செய்து கருப்பு பணத்தை முதலீடு செய்து வெள்ளைப்பணமாக மாற்றி வருகின்றனர்.

-அரவிந்த்

_____________

ஐ.பி.எல்.சூதாட்டம்! -ரகசிய விசாரணை!

இந்தியாவில் ஒவ்வோராண்டும் நடத்தப்படும் ஐ.பி.எல். போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாதவை. 2008-ல் ccதொடங்கப்பட்ட இந்த போட்டியில் கோடிக்கணக்கில் சூதாட்டம் நடைபெறுவதாக 2013-ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பாக மும்பை மற்றும் சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில் 2013-ஆம் ஆண்டு கிட்டி, பிரசாந்த் உள்ளிட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இந்தி நடிகர் விண்டூ ரந்த்வா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் பெயரும் இணைக்கப்பட்டது. விண்டூ ரந்த்வா, குருநாத் மெய்யப்பன் ஆகியோருக்கு சூதாட இடம் கொடுத்தது, பணம் வழங்கியது, மேலும் இருவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தியது என சென்னை "ராட்டிசன் ப்ளூ' நட்சத்திர விடுதி உரிமையாளர் விக்ரம் அகர்வால் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 23 பேருக்கு தொடர்பிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பட்டியலிட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டு கடந்த 8-ஆம் தேதி புதன்கிழமை, விக்ரம் அகர்வாலிடம் சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து விக்ரம், மீடியாக்களை தவிர்த்து அங்கிருந்து புறப்பட்டார். விசாரணை பற்றியும் போலீஸார் தரப்பிலும் எதுவும் கூறப்படவில்லை.

nkn140120
இதையும் படியுங்கள்
Subscribe