Advertisment

கறுப்பு பலூன்.. துரோகி போஸ்டர்.. பேனர் கிழிப்பு.. சிவகங்கையில் மூக்கறுபட்ட எடப்பாடி பழனிச்சாமி!

eps

ர்.கே நகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட விழாவிற்குப் பிறகு, "ஓ.பி.எஸ்.ஸை ஆதரிக்கும் சமூக மக்கள் பெருமளவில் இருக்குமிடத்திலேயே பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களை நடத்துங்கள். அப்பொழுதுதான் நாம் யாரென்று தெரியும்'' என சவால்விட்டு சிவகங்கையில் நடை பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மூக்கறுபட்டு திரும்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

ee

ஓ.பி.எஸ். ஆதரவு சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிவகங்கையில் மார்ச் 11-ஆம் தேதியன்று ஜெ. பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என முடிவுசெய்யப்பட்டது. இதில் சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகை தரும் இ.பி.எஸ்-ஸுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழக சார்பில் வரவேற்பு, மதுரை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் வரவேற்பு, தொடர்ச்சியாக கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரவேற்பு, திருப்புத்தூரில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கும், சிவகங்கையில் வேலுநாச்சியார் திருவுருவ சிலைக்கும் மாலையணித்து மரியாதை, சிவகங்கை கீழ்பாத்தி கண்மாய் அருகில் அமைக்கப்பட்ட

ர்.கே நகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட விழாவிற்குப் பிறகு, "ஓ.பி.எஸ்.ஸை ஆதரிக்கும் சமூக மக்கள் பெருமளவில் இருக்குமிடத்திலேயே பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களை நடத்துங்கள். அப்பொழுதுதான் நாம் யாரென்று தெரியும்'' என சவால்விட்டு சிவகங்கையில் நடை பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மூக்கறுபட்டு திரும்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

ee

ஓ.பி.எஸ். ஆதரவு சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிவகங்கையில் மார்ச் 11-ஆம் தேதியன்று ஜெ. பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என முடிவுசெய்யப்பட்டது. இதில் சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகை தரும் இ.பி.எஸ்-ஸுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழக சார்பில் வரவேற்பு, மதுரை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் வரவேற்பு, தொடர்ச்சியாக கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வரவேற்பு, திருப்புத்தூரில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கும், சிவகங்கையில் வேலுநாச்சியார் திருவுருவ சிலைக்கும் மாலையணித்து மரியாதை, சிவகங்கை கீழ்பாத்தி கண்மாய் அருகில் அமைக்கப்பட்ட மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை என தலைமைக் கழகத்தால் பயண அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

இதேவேளையில் துரோகி எடப்பாடி பழனிசாமி வரும் நாளன்று பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்து ரகளையை ஆரம்பித்தது ஓ.பி.எஸ். டீம்.

Advertisment

ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ். இருவேறு அறிவிப்பு களால் காவல்துறை இரு தரப்புக்கும் அனுமதி மறுத்த நிலையில், இருதரப்பும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையினை அணுகியிருந் தது. வழக்கினை விசாரித்த நீதிமன்றமோ இரு தரப்பிடமும், "ஆர்ப் பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராது என சிவகங்கை டி.எஸ். பி.யிடம் உறுதியளித்து விட்டு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி யளித்தது. "வீரத்திற்கு பெயர் போன சிவகங்கை மண்ணில் துரோகத்திற்கு பெயர்போன எடப்பாடியே வராதே. அ.தி.மு.க.வை 8 முறை தோல்வியுறச் செய்த எடப்பாடியே வராதே! என வாசகங்கள் அடங்கிய போஸ்டருடன் வெறும் ஜட்டி அணிந்து, வாயில் பால் பாட்டில் வைத்திருக்கும் எடப்பாடி குறித்தான போஸ்டர்களை சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒட்டி, எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் ஓ.பி.எஸ். அணியினர்.

மதுரை விமான நிலைய உள் வளாகத்திலிருந்து சிறிய பேருந்தில் எடப்பாடி பழனிசாமி வெளியே வந்தபோது, அந்த பேருந்தினுள் உடன் பயணித்த அ.ம.மு.க. அயலக செயலாளர் ராஜேஸ்வரன், எடப்பாடிக்கு எதிராக கோஷமிட்டு அதிர்ச்சியளித்தார். இதையடுத்து அவர்மீது மாஜிக்கள் எடப்பாடி பழனிசாமி, மணிகண்டன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்திய தாக, அவர்கள் மீது அவனியாபுரம் போலீசில் புகாரளித்தார். அ.தி.மு.க. தரப்பிலும் ராஜேஸ்வரன் மீது புகாரளிக்கப்பட்டது.

e

11-ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் எதிர்புறம் கூடிய ஓ.பி.எஸ். அணியினர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிராக கறுப்பு பலூன்களை பறக்க விட்டனர். துரோகி எடப்பாடி பழனிசாமி என கோஷம் போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்த நிலையில், "மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் எடப்பாடிக்கு எதிராகக் கூச்சலிட்டது மக்கள் புரட்சியைக் காட்டுகின்றது. கொடநாடு கொலை, கொள்ளை நடத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு தண்டனை வழங்க கொல்லங்குடி காளி கோயிலில் காசு வெட்டி வேண்டிக்கொள்வோம். எடப்பாடி பழனி சாமி எனும் நச்சுப் பாம்பின் குணம் தற்போது அண்ணாமலைக்கு புரிந்திருக்கும்'' என்றார் ஓ.பி.எஸ். அணியின் கொ.ப.செ. மருது அழகுராஜ்.

இது இப்படியிக்க, இ.பி.எஸ்.ஸின் 11லிஆம் தேதி சிவகங்கை சுற்றுப்பயண விவரத் திட்டத்தில் இரு மாற்றங்கள் இணைக்கப்பட்டன. அவை, சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் இல்ல மணமக்களை வாழ்த்துவது, திருப்பத்தூரில் இருக்கும் கோகுல இந்திராவின் வீட்டிற்கு செல்வதுமே. முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூவுடன் இணைந்து வரும் வழியில் தன்னை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிந்ததை பார்த்துக் கொண்டே வந்த எடப்பாடி பழனிச்சாமி குறித்த நேரத்தில் கோகுல இந்திரா வின் இல்லத்திற்கு வந்தார். வீட்டினுள் நுழைந்தவருக்கு, மதுரையில் தன்னோடு கலந்துகொள்ளாத முன்னாள் அமைச்சர் காமராஜ் அங்கிருந்ததைக் கண்டு ஷாக்! வந்த வேகத்திலேயே முன்னாள் அமைச்சர் காமராஜைப் பார்த்து, "என்னய்யா இங்க இருக்க? கூட்டத்துக்கு வரலையா?'' என்றார் இ.பி.எஸ்.

மாலை வேளையில் கீழ்ப்பாத்தியில் அமைக் கப்பட்ட மேடையிலே எடப்பாடி, "ஓ.பி.எஸ். எனும் பி டீமைக்கொண்டு அ.தி.மு.க.வை முடக்க நினைக்கின்றது தி.மு.க.'' என பேசிவிட்டு இறுக்கமான முகத்துடன் சனிக்கிழமையன்று பிள்ளையார்பட்டியில் தங்குவதாக இருந்த திட்டத்தினை கைவிட்டு விராலிமலை வழியாக திருச்சி சென்று சென்னை விமானத்தில் ஏறினார்.

"மூக்கறுபட்டுத் தான் சென்னைக்கு சென்றுள்ளார் இ.பி.எஸ். கறுப்பு பலூன், துரோகி போஸ்டர், பேனர் கிழிப்பு என அத்தனையும் இ.பி.எஸ்.ஸை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. வளர்மதிக்கு மட்டும் முக்கியத் துவம் கொடுக்கப்படுகின்றது என கோகுல இந்திரா முறுக்கிக்கொண்டு தலைமையால் நடத்தப்பட்ட மகளிர் தினத்தை புறக்கணித்திருந்தார். கோகுல இந்திரா வெளியேறினால் வெளியேறட்டும் என்ற மனநிலையில் இருந்த இ.பி.எஸ்.ஸிடம் சி.வி. சண்முகம் அழுத்தம் கொடுக்க, பயண விவரம் மாற்றப்பட்டு கோகுல இந்திரா வீட்டிற்கு செல்லவேண்டியதாயிற்று'' என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

படங்கள்: விவேக்

nkn150323
இதையும் படியுங்கள்
Subscribe