அ.தி.மு.க.வை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே எல்லாம் நடந்து கொண்டிருந்தாலும் அவருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் தீவிரம் காட்டியபடியே இருக் கிறது மோடியின் பா.ஜ.க. அரசு. கடந்த இரு இதழ் களுக்கு முன்பு, ‘"பட்டியல் ரெடி! எடப்பாடிக்கு எதிராக மோடி ஸ்கெட்ச்!'’என்ற அட்டைப்பட செய்தியில், மாஜி மந்திரி விஜயபாஸ் கர் உட்பட பலர் மீது மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட உள்ளன என்று சுட்டிக்காட்டி யிருந்தோம். அதன்படி ரெய்டுகளை நடத்தத் துவங்கியுள்ளது ஒன்றிய அரசின் வருமானவரித்துறை.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டே வாங்கி வைத்திருக்கும் சூழலில் அந்த ஸ்டேவை உடைக்கும் வகையில் அந்த வழக்கை சமீபத்தில் தூசு தட்டியிருக்கிறது.
வழக்கு விசாரணையின் முடிவில் எடப்பாடிக்கு சிக்கல் உருவாகும் என்று குற்றவியல் வழக்கறிஞர்கள் சொல்லிவரும் நிலையில், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா உள்பட ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய தி.மு.க. அரசிடம் தற்போது அனுமதி கேட்டிருக்கிறது ஒன்றிய அரசின் சி.பி.ஐ. இந்த நிலையில்தான் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான மதுரை-திண்டுக்கல் நிறுவனங்களில் ரெய்டு நடத்தி அதிரடியைக் காட்டியிருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இதுகுறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது,”"நாடாளுமன்றத் தேர்தலை (2024) மையப்படுத்தியே காய்களை இப்போ திலிருந்தே நகர்த்திவருகிறார்கள் மோடியும் அமித்ஷாவும். நாடாளு மன்ற தேர்தலில் இந்த முறை தமிழகத்தி லிருந்து பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கணிச மான எம்.பி.க் களை பெற வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, இந்தமுறை பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி தமிழகத்தில் மும்முனை போட்டியை உருவாக்க வேண்டுமென்பது மோடி-அமித்ஷாவின் திட்டம். உ.பி., ம.பி., மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மும்முனைப் போட்டியை உருவாக்கியே வெற்றிபெற் றுள்ளது பா.ஜ.க. அந்த வகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பா.ஜ.க.வின் தலைமையில் இருக்க வேண் டும் என நினைக்கின்றனர். ஆனால், அது ஒருக்காலும் நடக்காது. எடப்பாடி பழனிச் சாமி அதற்கு ஒத்துழைக்க மாட்டார். அதனால், அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவை உருவாக்கி இரட்டை இலையை முடக்கவிருக் கிறார்கள்.
அ.தி.மு.க.வின் பலமே அதன் சின்னம்தான். அது முடக்கப்பட்டுவிட்டால் அக்கட்சி பலவீனமாகும். சின்னம் முடக்கப்படுகிற போது, அ.தி.மு.க. எடப்பாடி அணி என்றுதான் தேர்தலில் போட்டியிட முடியும். இரட்டை இலை சின்னம் அவரிடம் இருக்காது. மேலும், காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் துடிக்கும் எடப்பாடியின் எண்ணத்துக் கும் செக் வைத்து விடமுடி யும். அந்த நிலையில், பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியை கட்டமைக்க விருக்கிறார்கள்.
அந்த கூட்டணியில் சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன், டாக்டர் கிருஷ்ணசாமி, விஜய காந்த் உள்ளிட்ட பலரும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படுவர். இதில் பா.ம.க.வையும் உள்ளிழுக்க முயற்சிகள் நடக்கின்றன. அப்போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, பா.ஜ.க. தலைமை யில் ஒரு கூட்டணி, எடப்பாடி தலைமையில் ஒரு அணி என்று மும்முனைப் போட்டி உருவாகும்.
இப்போதைய சூழலில் மும்முனைப் போட்டி உருவானால் அது தி.மு.க.வுக் குத்தான் சாதகம் என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு சொல்லப்பட் டது. அது குறித்தும் ஆராய்ந் திருக்கிறார்கள். அப்போது, மும்முனைப் போட்டியில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி 30 இடங் களிலும், பா.ஜ.க. கூட்டணி 9 இடங்களிலும் ஜெயிக்கும் என ரிசல்ட் கிடைத்திருக் கிறது. இந்த திட்டத்தின்படி தான், எடப்பாடி உள்பட பண பலம் மிக்க அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் பலரையும் குறிவைத்து வருமானவரித்துறையை ஏவி வருகிறது.
குறிப்பாக, எடப்பாடிக் கும் மாஜி மந்திரிகளுக்கும் வருவாயை அள்ளித்தரும் காண்ட்ராக்ட் நிறுவனங்களை யும், அந்த மாஜிக்களுக்கு பினாமிகளாக இருக்கும் நிறு வனங்களையும் குறி வைக் கிறது மோடி அரசு. தேர்தல் காலத்தில் இத்தகைய பினாமி கள் மூலமாகத்தான் தேர்தல் செலவுகளும், ஓட்டுக்களை பர்ச்சேஸ் செய்வதும் நடக் கும். அதனால் அந்த வழிகளை இப்போதிலிருந்தே அடைக்க முயற்சிக்கிறது பா.ஜ.க.
அதன் ஒரு கட்டம்தான், மதுரை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள நிறுவனங்களில் நடத்தப்படும் ரெய்டுகள். அந்த நிறுவனங்கள் மாஜி மந்திரி விஜயபாஸ்கருக்கு நெருக்கமானது. இதனை அடுத்து, ராஜன் செல்லப்பா, தி.நகர் சத்யா ஆகியோரை குறி வைத்துள்ளது வருமான வரித் துறை. இது மட்டுமல்ல, எடப்பாடி ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்ச ராக இருந்த செங்கோட்டை யன் பீரியடில், ஸ்மார்ட் க்ளாஸ் திட்டத்தில் நடந்த ஊழல்களையும் ஆராய்ந்து வருகிறது மோடி அரசு. அதனால் விரைவில் செங்கோட்டையனும் ரெய்டு வளையத்தில் சிக்குவார். இப்படி எடப்பாடி மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்தவர்களையும், எடப்பாடிக்கு எடுபிடிகளாக இருந்து கோடிகளில் குளித்த மாஜி எம்.எல்.ஏ.க்களையும் ஒரே சமயத்தில் குறி வைத்து அதிரடி ரெய்டு நடத்துவதே பா.ஜ.க.வின் முக்கிய அஜெண்டா. அதற்கான நேரம் மட்டும் குறிக்கப் படாமல் இருக்கிறது''’என்று விரிவாக நம்மிடம் பகிர்ந்துகொண்டனர் டெல்லி சோர்ஸ்கள்.