ந்திய தேர்தல் ஆணை யம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தமிழகத்தில் தொடங்கி யிருக்கின்றன. வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர் இடம்பெறுதல்; இறந்த வர்கள் பெயரை நீக்குதல்; போலி வாக்காளர்களை அகற்றுதல்; இரட்டைப் பதிவுகளை களைதல் உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த திருத்தப் பணிகளை தொடங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். 

Advertisment

இந்த திருத்தப் பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோ சனை நடத்திய தி.மு.க., அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. தி.மு.க.வின் தோழமைக்கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தைத் தனித்தனியாக அணுகுகின்றன.

Advertisment

வாக்காளர் திருத்தப்பணி களில் தி.மு.க. ஆதரவு வாக்காளர்கள் நீக்கப்படுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான வட இந்தியர்களை தமிழக வாக் காளர்களாக சேர்ப்பதுமான சதிகள் நடக்கும் என தி.மு.க. உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் சந்தேகிப்பதால், தேர்தல் ஆணையம் முன் னெடுத்துள்ள இந்த திருத்தப் பணிகளை கண்காணிக்க, பி.எல்.ஏ-1 மற்றும் பி.எல்.ஏ-2 எனும் பூத் லெவல் முகவர்களை அமைத்து அவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பைக் காட்டிவருகிறது தி.மு.க..      

இதில் பி.எல்.ஏ.-1 என்பது தி.மு.க.வின் மாவட்ட செய லாளர். பி.எல்.ஏ.-2 என்பது கிளைக் கழக நிர்வாகி. இவர்கள் அனைவரையும் அழைத்து பயிற்சி அளித்துள்ளது தி.மு.க. தலைமை. அதேபோல, தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசில் பி.எல்.ஏ.-1 என்பவர் மாவட்ட தலைவராகவும், பி.எல்.ஏ.-2 என்பவர் கிளை நிர்வாகியாகவும் இருக்கின்றனர்.  

Advertisment

இந்த நிலையில், ஒவ்வொரு தொகுதிவாரியாக திருத்தப் பணிகளை கடந்த 4-ந் தேதி முதல் தொடங்கிய தேர்தல் அலுவலர்கள் (பூத் லெவல் ஆபீசர்ஸ்), வீடு வீடாகச் சென்று விண்ணப்ப படிவங்களை கொடுத்துவருகிறார்கள். உடனே பூர்த்தி செய்து கொடுக்க வலியுறுத்தும் அவர்கள், உடனே முடியாது என்பவர்களிடம், "பூர்த்தி செய்து வைத்திருங்கள் மீண்டும் ஒருமுறை உங்களைப் பார்க்க வருவோம்; அப்போது கொடுக்க வேண்டும்' என்று அறிவுறுத்திச் செல்கின்றனர். விண்ணப்பங்கள் முறையாக கொடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் பல இடங்களில் எழுந்துள்ளது. 

தேர்தல் அலுவலர்களுடன் தி.மு.க.வின் பூத் லெவல் நிர்வாகி களும் பயணித்து திருத்தப் பணிகளை கண்காணிக்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் இந்த பணிகளில் கவனம் செலுத்த வில்லை. சென்னையில் முதல் நாள் மற்றும் இரண்டாம் நாட்களில் நடந்த திருத்தப் பணிகளின்போது தேர்தல் அலுவலர்களுடன் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பூத் லெவல் கமிட்டியினர் யாரையும் பார்க்க முடியவில்லை. இது, அக்கட்சி களின் தொண்டர்களிடம்  ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் மேலிட தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா சென்னைக்கு திடீரென வந்தார். அவரது தலைமையில் கடந்த 4-ந்தேதி எஸ்.ஐ.ஆர். கண்காணிப்பு குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்தது. இதில், தொகுதியின் பொறுப்பாளர், அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் கள் கலந்துகொண்டனர். அவர் களிடம் திருத்தப் பணிகளை கவனிப்பது குறித்து விவாதித்தார் பாண்டா. மேலும், எஸ்.ஐ.ஆர். குறித்து தேர்தல் ஆணையம் கொடுத்திருந்த குறிப்புகளை வைத்து பொன்.ராதாகிருஷ் ணனும் அ.மலையும் அமைப் பாளர்களுக்கு க்ளாஸ் எடுத்தனர். 

தமிழக பா.ஜ.க.வில் ஏற் கனவே, மாவட்ட தலைவர்களை பி.எல்.ஏ-1 ஆக நியமிக்கப்பட்டு அதற்குரிய ஆணைகள் வழங்கப் பட்டுவிட்டன. தற்போது, இதனை மாற்றி ஒவ்வொரு தொகுதியின் பொறுப்பாளர் களை பி.எல்.ஏ-1 ஆக நியமித்து அறிவித்துள்ளனர். இந்த நியமனம், பா.ஜ.க.வில் குழப் பத்தை அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து விசாரித்த போது, "பி.எல்.ஏ.-1 ஆக மாவட்டத் தலைவர்களை நிய மித்து அது குறித்த கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு பா.ஜ.க. வழங்கிவிட்டது. அதனை தற்போது மாற்றி, தொகுதி பொறுப்பாளரை பி.எல்.ஏ.-1 ஆக நியமித்துள்ளனர். திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் துவக்கிவிட்ட நிலையில், பி.எல்.ஏ.1-யை  மாற்றியமைக்க முடியாது. அப்படியே மாற்றி னாலும் அதனை தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்ளாது. இதுகூட தெரியாமல் மாற்றி யமைத்திருப்பதால் கட்சிக்குள் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. 

இதற்கிடையே, வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளை கவனிப்பதற்காக 1 மாதத்திற்கு ஒவ்வொரு பூத்துக்கும் 10,000 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்  கிறது. 

அதனை விநியோகிக்கத் தான் பாண்டா வந்தார்... கூட் டமும் நடத்தினார். ஒரு பூத்துக்கு 10,000 வீதம் ஒரு தொகுதிக்கு 25 லட்சம் முதல் 40 லட்சம்வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகையை எப்படி, யார் யாருக்கு பிரித்துக் கொடுப்பது? என்கிற குழப்பமும் ஏற் பட்டுள்ளது. 

ஏனெனில், ஏற்கனவே பி.எல்.ஏ-1 ஆக மாவட்ட தலைவரின் பெயர்தான், தேர்தல் ஆணையத்தில் பதிவாகி யிருப்பதால், தங்களிடம் தான் கொடுக்க வேண்டும் என அவர்களும், எங்களைத்தான் பி.எல்.ஏ.ஆக தற்போது நியமித் திருக்கிறார்கள் என்பதால் எங்களிடம் தான் பணத்தைக் கொடுக்க வேண்டும் என தொகுதிப் பொறுப்பாளர்களும் மல்லுக்கட்டுகிறார்கள்.   

இதுதவிர, பி.எல்.ஏ-2வாக நாடாளுமன்ற தேர்தலின் போது அ.மலையால் நிய மிக்கப்பட்டவர்களின் பட்டி யல்தான் இப்போதும் தேர்தல் ஆணைய லிஸ்ட்டில் இருக்கிறது. 

நயினார் நாகேந்திரனால் பி.எல்.ஏ-2வாக  தற்போது நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெப் சைட்டில் ஏறவில்லை. அதனால், இந்த இரண்டு தரப்பும் தங்க ளிடம்தான் பணம் தர வேண்டுமென தகராறு செய் வார்கள். ஆக, திருத்தப் பணிகளை கவனிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள பணத்தை பங்கு போடுவதில் ஏக ரகளை பா.ஜ.க.வில் நடக்கப்போகிறது. கட்சித் தலைமையின் நிர்வாகக் குளறுபடிகளால் இத்தனை குழப்பங்களும் ரகளைகளும் வெடிக்கின்றன” என்கிறது கமலாலய வட்டாரம்.