ருபுறம் தி.மு.க.வின் சகோதர யுத்தத்தை ஊதிப் பெரிதாக்கும் பா.ஜ.க. தலைமை, இன்னொருபுறம் மு.க.ஸ்டாலினிடம் கை குலுக்கத் துடிக்கிறது. கடந்த எம்.பி. தேர்தல் போலவே மாநிலந்தோறும் உருவாக்கப்பட்ட மோடியின் அறிவுஜீவி குழு 2019 தேர்தலுக்காக சுறுசுறுப்படைந்திருக்கிறது. அந்த வட்டத்திலுள்ள டெல்லியில் இருக்கும் தமிழக ஆடிட்டர் ஒருவரிடம் நாம் பேசியபோது, ""எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து குறைந்தபட்சம் 10 எம்.பி. சீட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்பதும், காங்கிரசுக்கு ஒரு சீட்டும் கிடைக்க கூடாது என்பதும் பா.ஜ.க. தலைவர்களின் விருப்பம். அந்தவகையில், தமிழகத்தில் வாக்கு பலம்கொண்ட அ.தி.மு.க., தி.மு.க. இரண்டில் அ.தி.மு.க.வை பலகீனப்படுத்திவிட்டோம். தி.மு.க.வை பலகீனப்படுத்த பா.ஜ.க. தேர்ந்தெடுத்திருப்பது இரண்டு நபர்கள். ஒன்று, ரஜினி. மற்றொன்று அழகிரி.

amtisha-vnaidu

அதே நேரத்தில், தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பா.ஜ.க.வுக்கு வெற்றியும் காங்கிரஸுக்கு தோல்வியும் கிடைக்கும். கலைஞர் உடல்நலன் குன்றியிருந்தபோதே இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. ஸ்டாலினின் பிடிகொடுக்கவில்லை. கலைஞர் மறைவுக்குப் பிறகு, ஸ்டாலினுக்கு எதிராக முதலில் ஒரு குரல் எழும்பவேண்டும் என்பது மட்டுமே பா.ஜ.க.வின் விருப்பம். அதன்படிதான் அழகிரியின் குரல் ஒலிக்கிறது. அழகிரி என்ற ட்ரம்ப் கார்டை களமிறக்க பா.ஜ.க. தீவிரமாகிவிட்டது.

ஸ்டாலினின் அணுகுமுறையாலும் ஸ்டாலின் ஆதரவு மா.செ.க்களின் அணுகுமுறையாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிருப்தியாளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். "மத்திய உளவுத்துறை மூலம் அந்த அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என மாவட்ட வாரியாக ஒரு புள்ளிவிபரத்தைக் கேட்டு வாங்கி, அவர்களை அழகிரியின் தலைமையில் ஒருங்கிணைக்க முடியும்' என பா.ஜ.க. தலைமை நம்புகிறது.

stalinஇந்தக் கலவரச் சூழலில், தி.மு.க.வுடன் கூட்டணி என்கிற இன்னொரு கதவும் தட்டப்படுகிறது. இதற்கான அசைன்மென்ட்டில் உள்ள அமித்ஷா, வெங்கய்யா நாயுடு இருவரும் தங்களது சோர்ஸ்கள் மூலம் ஸ்டாலினுக்கு தகவலை பாஸ் செய்திருக்கிறார்கள். "நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு 30, பா.ஜ.க.வுக்கு 10 என தொகுதிகளை பகிர்ந்துகொள்ளலாம். தேர்தல் செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கூட்டணியில் யாரை சேர்த்துக்கொள்ள வேண்டுமோ அவர்களை வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. சிறுபான்மையினர் வாக்குகளை இழக்காமல் இருக்க, மாற்று யோசனை இருக்கிறது' என சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், வழக்கம் போல இப்போதும் ஸ்டாலினிடமிருந்து பாசிட்டிவ்வான பதில் வரவில்லை. பிடி கொடுக்காமல் மறுக்கிறார்''’என்று விவரிக்கின்றார் அந்த ஆடிட்டர்.

பா.ஜ.க. தரப்பில் மேலும் விசாரித்தபோது, ’’""தி.மு.க.வில் ஸ்டாலின், தன் வலிமையை நிரூபிக்க திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் தேவைப்படுகின்றன. அதில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க. ஸ்ட்ராங்காக இருக்கும். ஸ்டாலினின் கை ஓங்கக்கூடாது என்பதற்காக,, ஜனவரிக்குள் நடக்க வேண்டிய இடைத்தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்த பா.ஜ.க. வியூகம் வகுக்கிறது. ஒருவேளை, முன்கூட்டியே இடைத்தேர்தல் நடந்தால், தி.மு.க.வை தோற்கடித்து ஸ்டாலினைப் பலவீனப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டு செயல்படும்''’என்கிறார்கள் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரான முரளிதரராவுக்கு நெருக்கமானவர்கள்.

-இரா.இளையசெல்வன்

__________________________________

Advertisment

கனிமொழி நிலை!

kanimozhiசகோதரர்கள் இருவரும் முரண்பட்டு நிற்பதை ஆரம்பத்திலிருந்தே கனிமொழி ரசிக்கவில்லை. இருவரும் இணைந்தே கட்சியை நடத்திச் செல்லவேண்டும் என்று விரும்பியே, "மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்கவேண்டும்' என மு.க.ஸ்டாலினிடமும் கலைஞர் குடும்பத்தினரிடமும் வலியுறுத்தி வந்தார். அழகிரியிடமும்கூட, "சர்ச்சைகள் வேண்டாம்; அமைதியா இருங்கள்'‘என்றே சொல்லிவந்திருக்கிறார். ஆனால், ஸ்டாலினிடமிருந்து பாசிட்டிவ்வான பதில்கள் வராததால், இந்த விவகாரத்தில் தலையிடுவதிலிருந்து விலகி நிற்கிறார் கனிமொழி. இதற்கிடையே, கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்வாகும்போது, கட்சியின் மாநில பொறுப்புகளிலும் சில மாற்றங்கள் நடக்கவிருக்கிறது. அப்போது, ஸ்டாலினின் வசம் இருக்கும் பொருளாளர் பதவி அல்லது தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை கனிமொழியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்க்கின்றனர். துணைப் பொதுச்செயலாளர் பதவியை கனிமொழிக்கு கொடுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.

கடிதம் எழுதும் ஆதரவாளர்கள்!

Advertisment

"கட்சியின் நலன் கருதி அழகிரியை அரவணைத்துச் செல்லுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் யாரும் கெட்டுப்போய்விடுவதில்லை. வைகோவால் கட்சி பிளவுப்பட்டபோது, கட்சியையும் சின்னத்தையும் காப்பாற்றுவதற்காக, வைகோவை ஆதரித்த தென்மாவட்ட நிர்வாகிகளை பொதுக்குழுவுக்கு அழைத்துவரும் பொறுப்பை அழகிரியிடம்தான் கொடுத்தார் கலைஞர். ஒவ்வொரு நிர்வாகியையும் சந்தித்து உணர்வுபூர்வமாகப் பேசி, வைகோவின் ஆதரவு நிலையிலிருந்து அவர்களை விலக்கி பொதுக்குழுவில் பங்கேற்க வைத்தவர் அழகிரி. தற்போதைய அரசியல் சூழலிலும், கட்சியில் அழகிரி இருப்பது உங்களுக்கு பலம். நீர் அடித்து நீர் விலகாது என உணர்ந்து அவரை அரவணைத்துக் கொள்ளுங்கள்' என மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமாக கடிதம் எழுதி வருகின்றனர் அழகிரி ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர்.