பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க. எதிர்ப்பு என்பது தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தமிழ் தேசிய இயக்கங்கள் என அனைவரும் ஒரே நேர் கோட்டில் தமிழகத்தில் இதுவரை நின்றதில்லை. இன்று அனைவரும் ஒரே நேர்கோட்டில் நின்று பா.ஜ.க.வை எதிர்க்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம் பா.ஜ.க. மாநில தலைவர்.
கர்நாடகாவை சேர்ந்த பி.எல்.சந்தோஷ் என்கிற ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வாரிசாக அரசியலில் அடி யெடுத்து வைத்தவர் தமிழக பா.ஜ.க. தலைவர். கர்நாட காவில் பா.ஜ.க.வின் தோல்விக்கு மிக முக்கியமான காரண மாக அமைந்த இந்த மாநிலத் தலைவர். அங்கு பி.எல்.சந்தோஷ் கடைப்பிடித்த அனைத்து நெகட்டிவ் விசயங்களையும் தமிழகத்துக்குள் கொண்டுவந்தார்.
கே.டி.ராகவனின் HONEY TROP’வீடியோவில் ஆரம்பித்த இவரது பயணம் தமிழகத்தில் நிலைநாட்டப்பட்ட அனைத்து அரசியல் சக்திகளையும் எதிர்ப்பதில் பயணித்தது. தி.மு.க.வினரை எதிர்க்கும்போது அதை வரவேற்ற பா.ஜ.க. வினர், இவர் அ.தி.மு.க. தலைவர்களான அண்ணாவையும் ஜெயலலிதாவையும் எதிர்த்தபோது அதிர்ந்து போனார்கள். அவர்களை மட்டுமல்ல, தமிழர்கள் தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட அனைவரையும் எதிர்த்தார். அவரது இந்தப்பயணம் பி.எல்.சந்தோஷால் வெகுவாகப் பாராட் டப்பட்டது. சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த சந்தோஷுக்கு தமிழக பிராமணர்களைப் பிடிக்காது. காஞ்சி மடத்துக்கு நெருக்கமான தமிழக பிராமணர் களை ஓரம்கட்டினார். தமிழகத்தின் ஜீவநாடியாக கருதப்படும் திராவிட சித்தாந்தத்தை எதிர்த்தார். இதுவரை தமி ழகத்தை ஆண்ட காங்கிரஸ், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி, தற்போது ஆண்டு கொண்டிருக்கும் ஸ்டாலின் என அனைவரையும் பா.ஜ.க. மா.த. வம்புக்கு இழுத்ததை ஆர்.எஸ்.எஸ். ரசித்தது. ஆனால், அரசியல் ரீதியாக ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய அங்கமான பா.ஜ.க. பலவீனம் அடைந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் திராவிட சித்தாந்தத்தை அடித்து நொறுக்கினால்தான், அதற்குப்பதில் இந்துத்துவாவை கொண்டுவர முடியும் என்கிற வாதம் எடுபட்டது. ஆனால் தமிழகத்தில் திராவிடத் தத்துவம் வெறும் ஒரு சமூக இயக்கமாக மட்டும் இல்லை. இங்கே கோயிலுக்குச் சென்றவர்கள் இஸ்லாமியர்களை விரோதமா கப் பார்ப்பதில்லை. இந்துக்கள்தான் உயர்வானவர்கள் என்று நினைத்ததில்லை. தங்களது சாதிப் பெயர்களை பெயருக் குப் பின்னால் வைத்துக்கொள்ள மறுக்கும் அளவிற்கு திராவிட இயக்கத் தத்துவங்கள் தமிழ் சமூகத்தில் வேரூன்றி இருக்கின்றன. தமிழர்கள் ஒரு முடிவெடுத் தால் உலகம் முழுக்க அதைப் பின்பற்றுவார்கள். யாழ்ப்பாணத் தமிழ்ப் பெயர்களில் சாதி கிடையாது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இட ஒதுக்கீட்டில் பாடம் கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள். அவர்களது ஒவ்வொரு அசைவும் அரசியலில் பிரதிபலிக்கும். தமிழர்களின் மூலங்களை தொடும்போது அதற்கு ஒரு அரசியல் அசைவு இருக்கும் என்பதை பா.ஜ.க. உணரவில்லை.
அதன் விளைவு இன்று பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக வருவதற்கு யோசிக்கக்கூடிய அளவிற்கு அரசியல் ரீதியாக பா.ஜ.க. தனிமைப்பட்டு நிற்கிறது. அ.தி.மு.க.வை அதன் தலைவர்களை கடுமை யாக எதிர்த்ததன் விளைவு, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, அமித்ஷா உட்பட அ.தி.மு.க. ஆதரவு பா.ஜ.க. அமைச்சர்கள் அ.தி.மு.க.விடம் பேச முடியவில்லை. மைனாரிட்டி மக்களிடம் மிக வலுவாகத் தொடங்கிய பா.ஜ.க. எதிர்ப்பு, ஆல விருட்சமாக வளர்ந்து அ.தி.மு.க. வினர் மத்தியில் உறுதியாகப் பரவியுள்ளது. இயல்பாகவே பா.ஜ.க. எதிர்ப்பாளர்களான தி.மு.க.வினர் முன்பை விட வேக மாக பா.ஜ.க.வை எதிர்க்கின்றனர். இதனால் சிறிய கட்சி களான பா.ம.க., வி.சி.க. உட்பட இந்த எதிர்ப்பில் கைகோர்க் கின்றன.
சமீபத்தில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க. எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தால் பா.ஜ.க. ஆதரவாளரான டாக்டர் கிருஷ்ணசாமியே மோடியை எதிர்த்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்.
சென்னைக்கு வந்த ஜே.பி.நட்டா அ.தி.மு.க.வை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஆனால் பா.ஜ.க. மா.த.வோ ஜே.பி.நட்டாவை வைத்துக் கொண்டே திராவிடக் கட்சிகளை விளாசினார். நட்டாவின் நண்பரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நட்டாவிடம், ’"மா.த.வின் செயல்பாடு கள்தான் தமிழகத்தில் எழுந்துள்ள இன்றைய பா.ஜ.க. எதிர்ப்பு நிலைமைக் குக் காரணம்''’என்று விளக்கினார். அதைக் கேட்ட நட்டா, "தி.மு.க. இல்லை, அ.தி.மு.க. இல்லை, ஓ.பி.எஸ். ஒரு லெட்டர்பேடு கட்சி. என்னை விமான நிலையத்தில் வரவேற்ற ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் இவர் களை வைத்து தமிழகத்தில் நீ என்ன புரட்சியா செய்யப்போகிறாய்? கல்லை வைத்துதான் கோட்டை கட்ட வேண் டும். காற்றில் யாராவது கோட்டை கட்ட முடியுமா?'' என ஆவேசமாகக் கேட்டி ருக்கிறார். எடப்பாடிக்கு நெருக்கமான வர்களிடம் நட்டா பேசியபோது, “"அ.தி.மு.க. மீது நீங்கள் ரெய்டு நடத்தி னாலும் பரவாயில்லை. அதுவும் எங்க ளுக்கு சாதகமாகத்தான் முடியும்''’எனச் சொல்லியிருக்கிறார்கள். சசிகலாவும், “பா.ஜ.க.வை எதிர்க்கும் எடப்பாடி நிலைதான் சரியானது. நமக்கு அ.தி.மு.க. என்கிற சுவர் வேண்டும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்” என்று சொல்லியிருக்கிறார். அனைத்துத் தரப் பிலிருந்தும் பெருகும் எதிர்ப்பு அலை யைப் பார்த்து மிரண்டு போய் இருக் கிறது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. “விரைவில் மா.த.வுக்கு ஆப்பு வரும்'' ’என் கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.