பா.ஜ.க. ஆட்டம் ஆரம்பம்! கைதாகும் புதுச்சேரி அதிகாரிகள்!

s

புதுச்சேரி மாநில தலைமை பொறியாளர், செயற்பொறியாளர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரின் உறவினர் உள்ளிட்டோர் சி.பி.ஐ. வளையத்தில் சிக்கி சிறை சென்றிருப்பது அம்மாநிலத்தை அதிரவைத்துள்ளது.

புதுச்சேரி மாநில தலைமை பொறியாளரான தீனதயாளன், தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக காரைக்காலுக்கு வந்தபோது, கடற்கரையிலிருந்த அரசு சொகுசு விடுதியில் தங்கினார். அவருடன் காரைக்கால் கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், நீர்ப்பாசனப்பிரிவு செயற்பொறியாளர் மகேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த மாஜி அ.தி.மு.க. அமைச்சர் காமராஜின் அண்ணன் மகனும் ஒப்பந்தக்காரருமான இளமுருகன், பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணிகளுக்காக லஞ்சம் கொடுத்தபோது, சி.பி.ஐ. அதிகாரிகள் கையுங்களவுமாகப் பிடித்தனர்.

oo

அதையடுத்து, தீனதயாளனின் வீடு, காரைக்கால் பட்டம்மாள் நகரிலுள்ள சிதம்பரநாதன் வீடு, மன்னார்குடி யிலுள்ள இளமுருகு வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோத னைகள் நடத்தப்பட்டது. அனைவரத

புதுச்சேரி மாநில தலைமை பொறியாளர், செயற்பொறியாளர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரின் உறவினர் உள்ளிட்டோர் சி.பி.ஐ. வளையத்தில் சிக்கி சிறை சென்றிருப்பது அம்மாநிலத்தை அதிரவைத்துள்ளது.

புதுச்சேரி மாநில தலைமை பொறியாளரான தீனதயாளன், தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக காரைக்காலுக்கு வந்தபோது, கடற்கரையிலிருந்த அரசு சொகுசு விடுதியில் தங்கினார். அவருடன் காரைக்கால் கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், நீர்ப்பாசனப்பிரிவு செயற்பொறியாளர் மகேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த மாஜி அ.தி.மு.க. அமைச்சர் காமராஜின் அண்ணன் மகனும் ஒப்பந்தக்காரருமான இளமுருகன், பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணிகளுக்காக லஞ்சம் கொடுத்தபோது, சி.பி.ஐ. அதிகாரிகள் கையுங்களவுமாகப் பிடித்தனர்.

oo

அதையடுத்து, தீனதயாளனின் வீடு, காரைக்கால் பட்டம்மாள் நகரிலுள்ள சிதம்பரநாதன் வீடு, மன்னார்குடி யிலுள்ள இளமுருகு வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோத னைகள் நடத்தப்பட்டது. அனைவரது வீட்டிலிருந்தும் இலட்சக்கணக்கில் ரொக்கமும், நகைகளும், சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணைக்கு பின் சந்திர சேகரன், மகேஸ் உள்ளிட்டவர்களை விடுவித்து விட்டு தீனதயாளன், சிதம்பரநாதன், இளமுருகன் ஆகிய மூவரையும் கைது செய்து விடிய விடிய விசாரணை செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத் துள்ளனர். இந்த விவகாரம் புதுச்சேரி சட்டசபை கூடியதுமே எதிரொலித் தது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா, இச்சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டு மென்றும், பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டுமென்றும் குரலெழுப்பினார். அவருக்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கேள்வியெழுப்பினர், தர்ணாவில் ஈடுபட்ட சிவாவை சபையிலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

இதுகுறித்து புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம். "புதுச்சேரி யில் பா.ஜ.க.வும், என்.ஆர். காங்கிரஸும் கூட்டணி ஆட்சியிலிருக்கும் சூழலில், முதல்வர் ரங்கசாமி, வாய்மொழி ஒப்பந்தப்படி முதல்வர் பதவியை விட்டுத்தராமலும், பா.ஜ.க.வுக்கு எதிரான போக்கிலுமாக செயல் பட்டுவருகிறார். இது, பா.ஜ.க.வுக்கு நெருடலை உண்டாக்கியதால், அவரது ஆட்சிக்கு நெருக்கடி கொ டுக்கத் தொடங்கியுள்ளனர். அப்ப டித்தான் காரைக்கால் பார்வதீஸ் வரர் கோயில் நிலமோசடி விவகா ரத்தில் லஞ்சம் பெற்றதாக துணை ஆட்சியர் ஜான்சன், சர்வேயர் ரேணுகாதேவி, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் ஆகியோர் கைது செய்யப்பட்டது'' என்கிறார்கள்.

காரைக்கால் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "காரைக்காலில் நடைபெற்றுவரும் பெரிய பெரிய ஒப்பந்தப் பணிகள் அனைத்துமே தமிழகத்தைச் சேர்ந்த மாஜி காமராஜின் அண்ணன் மகன் இளமுருகனுக்கும், வேறு சில அ.தி.மு.க. பிரமுகர்களின் உறவினர் களுக்குமே கொடுக்கப்படுகின்றன. அவர்கள் அதிக கமிசனை கரெக் டாகக் கொடுப்பதால் முன்னுரிமை அளிக்கிறார்கள். இத்தகைய போக்கு, தலைமை பொறியாளராக தீன தயாளன் வந்தபிறகு அதிகரித்து விட்டது. இந்த தீனதயாளன், மத்திய பொதுப்பணித் துறையிலிருந்து, புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டதற்கு பின் னணியில் முதல்வர் ரங்க சாமியின் கைவரிசை இருப் பதாகப் பேசப்படுவதால், இது உள்ளூர் ஒப்பந்த தாரர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியது.

oo

இந்நிலையில், நபார்டு நிதியான 9 கோடியில் காரைக்காலில் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளை இளமுருகு தர மற்றதாக செய்வதாக புகார்கள் எழுந்த தால் அதை பா.ஜ.க.வினர் கையிலெடுத் தனர். இரண்டு வாரத்தில் தீனதயாள னின் மகளின் திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவரை பக்காவாகக் கண் காணித்து தூக்கியுள்ளனர்'' என்கிறார்கள்.

சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "தீனதயாளன் மீதும், காரைக்கால் மாவட்டத்தி லுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் தொடர்ந்து புகார் கள் வந்தன. அதையடுத்து தொடர்ந்து கண்காணித்ததில், இளமுருக னுக்கு கொடுத்திருந்த வேலைக்காக 50 லட்சம் கமிஷன் பேசப் பட்டு, ஏற்கெனவே 25 லட்சத்தை இளமுருகன் கொடுத்துவிட்ட தாகவும், பாக்கியை தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது வசூலிக்கவிருந்ததையும் கண்டுபிடித்தோம். நாங்கள் விரித்த வலையில் சாலைப்பிரிவு செயற்பொறியாளர் சிதம்பரநாதன், காரைக்கால் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், நீர்ப்பாசனப்பிரிவு பொறியாளர் மகேஷ், உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன், அதிகாரிகளின் ஓட்டுநர்கள் என அனை வரும் சிக்கினார்கள். சாதாரண உதவிப் பொறியாளரான ரவிச்சந்தி ரன் காரைக்காலில் 10 கோடி மதிப்பிற்கு வீடு கட்டியிருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். சிதம்பரநாதன் வீட்டிலிருந்து 8 லட்சமும், தீனதயாளன் வீட்டில் 73 லட்சமும், 40 ஏக்கருக்கான நிலப்பத்திரங் களும் கிடைத்திருக்கிறது'' என்றனர் இந்நிலையில், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒருவார கால சிறை நீட்டிப்பு வழங்கி காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரி சட்டசபையில் பேசிய முதல்வர் ரங்கசாமி, "பா.ஜ.க. தொடர்ச்சியாக புதுச்சேரியின் வளர்ச்சியை தடுத்துவருகிறது. தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மட்டுமே தமிழக முதல்வரின் வளர்ச்சிப் பணிகளால் வளர்ந்திருக்கிறது'' என்று புகழ்ந்திருப்பது, பா.ஜ.க.வை கைவிட்டுவிட்டு, தி.மு.க.வோடு கூட்டணி அமைக்க அச்சாரம் போடுகிறாரோ என்ற சந்தேகத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.

nkn290325
இதையும் படியுங்கள்
Subscribe