மிழகத்திற்கு வரும் ஆடுமலை, நடிகர் விஜய் பேரைச் சொல்லி அடுத்தகட்ட சீனை நடத்தத் தயாராகிவருகிறார். லண்டனுக்குப் போன ஆடுமலை, அவர் தமிழகத்தில் இல்லாத காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழக பா.ஜ.க.வை ஸ்கேன் செய்து பார்த்ததில் ஆடுமலையால் இங்கு ஒன்றுமே வளர்ச்சியில்லை என்ற முடிவுக்கு தேசிய பா.ஜ.க. வந்துள்ளது. நான் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கு எந்த இடத்திலும் கட்சி நிர்வாகிகளுக் கான அமைப்பு இல்லை. தினமும் கூடுவது, விவாதிப்பது மாவட்ட அளவிலான பிரச்னை களைப் பற்றிப் பேசுவது, மாவட்டத்திற்கான அரசியல் முன்னெடுப்பு என எதையும் பார்க்க முடியவில்லை.

v

ஆடுமலை ஒட்டுமொத்த தமிழக பா.ஜ.க. வையும் சமூகவலைத்தளங்கள் மூலம்தான் இயக்கி வந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக 3 வார் ரூம்கள். அதில் ஒன்று ஆடுமலையின் மனைவி அகிலாவின் தலைமையில் பெங்களூரிலிருந்து இயங்கியது. மற்ற இரண்டு வார் ரூம்கள் வாராஹி என்பவர் தலைமையில் சென்னையிலிருந்து இயங்கியது. இந்த 3 வார் ரூம்களும் ஆடுமலையைப் புகழ்வது தவிர வேறு எதையும் செய்யவில்லை. திராவிட இயக்கம் சார்பாக கருத்து சொல்பவர் களை ஆபாசமாகத் திட்டுவதைத் தவிர எந்த வேலையையும் இந்த வார் ரூம்கள் செய்ய வில்லை. தமிழக தொழிலதிபர்களிடம் மத்திய அரசின் ஏஜன்சிகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் எனச் சொல்லி மிரட்டி பணம் பறிப்பதையே ஒரு பெரிய வேலையாக ஆடுமலையின் இந்த வார் ரூம்கள் செய்து வந்தன. ஆருத்ரா போன்ற நிதி நிறுவன மோசடிகளை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பார்ப்பது இந்த வார் ரூம்களின் முக்கிய வேலையாக இருந்தது.

தமிழிசை பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த காலகட்டத்தில் மொத்தம் 36 லட்சம் உறுப்பினர்கள் மிஸ்டுகால் மூலம் பா.ஜ.க.வில் சேர்ந்தார்கள். அதைத்தவிர கட்சியை முன் னேற்றுவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் பா.ஜ.க.வில் மேற்கொள்ளப்படவில்லை. பல மாவட்டங்களில் கட்சியே இல்லை. மாவட்டத் தலைவர்கள், மண்டல தலைவர்கள் என யாரும் செயல்படவில்லை. தேர்தல் காலத்தில் கட்சிக்கு அளிக்கப்பட்ட நிதி பெரிய அளவில் சுரண் டப்பட்டுள்ளது என சமீபத்தில் நடந்த பா.ஜ.க. வின் மையக்குழு கூட்டத்தில் ஹெச்.ராஜா, ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் என்ற வகையில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.

Advertisment

அந்தக் கூட்டத்தில் பேசிய வானதி உட்பட அனைத்து மாநில நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ஆடுமலையின் செயல்பாடு களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். ஆடுமலையோடு சேர்ந்து பா.ஜ.க. நிர்வாகி களின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான வர் கேசவவிநாயகம். தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு என தனி அலுவலகம் அமைப் பதற்கு நிதி திரட்டப்பட்டு கேசவவிநாயகம் மூலம் கட்டடம் கட்டும் நிறுவன அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பில் முழுவதும் கேசவவிநாயகத்துக்கு நெருக்கமான் கிரீஸ், கோலப்பன், கோவர்த்தன் ஆகியோர் கட்டிட நிர்மாண வேலைகளை செய்துவந்தனர். அதில் பெருமளவு நிதி மோசடி நடந்திருப்பதாக அந்தக் கூட்டத்தில் குரல்கள் எழுந்துள்ளன. நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ரயிலில் நாலு கோடி பணம் பிடிபட்ட விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் தங்கக் கடத்தல் புள்ளிகள் சிக்கியிருப்பது பா.ஜ.க.வினரின் க்ரைம் ரேட்டை பெரிய அளவிற்கு அதிகரித் துள்ளது. இவையெல்லாம் மையக்குழு கூட்டத்தில் விவாதப்பொருளாகியிருக்கிறது.

இந்நிலையில் லண்டனுக்குப் போய் ஆடுமலையை சந்தித்துவிட்டு வந்த அமர் பிரசாத் ரெட்டியும் ஆடுமலைக்கு எதிராக இருக்கிறார். தமிழகத்திற்கு வரும் ஆடுமலை நேரடியாக தான் போட்டியிட்ட பாராளுமன்றத் தொகுதியான கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார். அவர் தலைவராக நீடித் தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்கிற பா.ஜ.க.வின் மேலிடத் திட்டம் தவிடுபொடியாகிவிடும். பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் வருகிற ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அவர் நியமிக்கப் பட்ட பிறகு மாநிலத் தலைமைகளில் பெரிய மாற்றம் உருவாகும். ஆடுமலை மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

vv

Advertisment

இந்நிலையில் ஆடுமலை வேறு ஒரு திட்டத்தை முன்வைத்து தன்னிடம் பேசுபவர் களிடம் புது டெக்னிக்கை கூறி வருகிறார். நான் எப்படியாவது நடிகர் விஜய்யை கன்வின்ஸ் செய்து அவர், பா.ஜ.க. எனக்கு தத்துவார்த்த எதிரி எனச் சொன்னதை மாற்றி, அவரை பா.ஜ.க. அணியில் முதல்வர் வேட்பாளராகக் கொண்டு வருவேன். பா.ஜ.க., த.வெ.க. என கூட்டணி அமைப்பேன் அ.தி.மு.க.வின் தயவு இனி நமக்குத் தேவையில்லை. விஜய்யுடன் சேர்ந்து நாம் தேர்தல் வியூகம் அமைக்கலாம் என கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி வருகிறார்.

இதைக் கேட்கும் பா.ஜ.க. நிர்வாகிகள், நடிகர் விஜய் பா.ஜ.க.வை தனது தத்துவார்த்த எதிரி எனக் குறிப்பிட்டு தந்தை பெரியாரின் கட்டவுட்டை வைத்து மாநாடு நடத்தி இருக்கிறார். அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்வது குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதை. பா.ஜ.க. மேலிடம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதை விரும்புகிறது. ஏதாவது ஒரு புதுக்கதையை விட்டு தனது மாநிலத் தலைவர் பதவியை நீட்டிப்பதற்கு ஆடுமலை முயற்சி செய்கிறார் என அவர் சொன்ன கதையை நிராகரிக்கிறார்கள். ஆனால் ஆடுமலையோ விஜய்யை முன்வைத்து பா.ஜ.க.வினரிடம் பேசி வருகிறார். இது என்ன புதுக் கூத்து என ஆடுமலையின் விஜய் நகர்வைப் பற்றி பா.ஜ.க.வினர் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.