டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நிரபராதிகள் எனத் தீர்ப்பளித்து சிறப்பு நீதிமன்றம் விடுவித் திருக்கிறது. இது தேசிய அளவில் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
2021-22 டெல்லி மதுபானக் கொள்கையின் கீழ் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக 2021-க்கு முன்பு வரை அரசும், தனியாரும் இணைந்து மதுபானக்கடைகளை நடத்தினார்கள். இந்திய அரசு 1991-லிருந்தே தனியார்மய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வந்த நிலையில், அதன் அடிப்படையிலேயே 2021-ல், அரசு மதுபானக் கடைகளை மூடுவது, தனியார் நிறுவனங்களுக்கு சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்குவது, மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை 25லிருந்து 21 ஆகக் குறைப்பது, உரிமக் கட்டணத்தை 8 லட்சத்திலிருந்து 75 லட்சமாக உயர்த்துவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. இது வருவாயை அதிகரிக்கும் என்று அரசு கூறியது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இதில் ஊழலிருப்ப

ஆனால் எதிர்க்கட்சிகள் இதில் ஊழலிருப்ப தாகக் குற்றம்சாட்டின. ஆம் ஆத்மியில் இருக்கும் 5 முக்கிய தலைவர்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
2023 பிப்ரவரியில் டெல்லியின் முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைதுசெய்தது. மார்ச்சில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பஞ்சாப், ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலதி பர்களும் கைதுசெய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பலனாக டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிமீது ஊழல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு, டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்குவந்தது.
இந்நிலையில், ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விசாரணை முடிவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.
தீர்ப்புக்குப் பிறகு அழுதுகொண்டே செய்தியாளர்களைத் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “"நான் ஊழல்வாதி அல்ல. நாங்கள் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது''” என்றார். இந்த வீடியோ வேகமாக வைரலானது.
மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டது என்று ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தெளிவாகக் கூறியது. நீதிமன்றம் தனது கருத்தில், “குற்றப்பத்திரிகையில்” பல குறைபாடுகள் இருப்பதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை என்றும், முதல் பார்வையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான வழக்கு எதுவும் இல்லை’என்றும் கூறியது.
கெஜ்ரிவாலுக்கு மொத்தம் 156 நாட்கள் சிறைவாசம், 500-க்கும் மேற்பட்ட ரெய்டுகள், ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ. தன்னால் முடிந்தவரை ஒரு முதல்வர்மீது போதிய ஆதாரங்களும், சாட்சியங்களும் இல்லாமல் குற்றத்தைச் சுமத்தி நிரூபிக்கப் போராடியுள்ளது. தீர்ப்பில், நீதிபதி, சி.பி.ஐ.யை கிழித்துத் தொங்கவிட்டுள்ளார். போதிய ஆதாரங்களும் சாட்சிகளும் இல்லாமல் ஒரு முதல்வர் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் முன்வந்துள்ளது.
சர்ச்சை எப்படி தொடங்கியது?
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனாதான், முதலில் இதுகுறித்து விசாரணைக்கு பரிந்துரைத்தார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்து பல ஆம் ஆத்மி தலைவர்களின் இடங்களில் சோதனை நடத்தியது. “சவுத் லாபி” கொள்கையை தங்களுக்கு சாதகமாக மாற்ற கோடிக்கணக்கில் பணம்கொடுத்ததாக ஏஜென்சி குற்றம்சாட்டியது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் நிம்மதியை அளித்தாலும், சட்டரீதியான சவால்கள் முழுமையாக முடிவடையவில்லை. சில வழக்குகளில் அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணை மற்றும் ஜாமீன் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் விவாதத்தில் உள்ளன.
இதனால் டெல்லி அரசியலில் என்ன தாக்கம் ஏற்படும்?
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு நீண்ட காலமாக தேசிய அரசியலில் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்துவந்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, அரசியல் சூழலில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மிக்கு புதிய அரசியல் பலத்தைக் கொண்டு வருமா? அல்லது எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்புமா? என்ற கேள்வி யெழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் "குறுகிய கால அரசியலுக்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு விசாரணை அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. இதற்காக பா.ஜ.க. அரசு வெட்கப்படவேண்டும். அனைத் தையும் உறுதியுடன் எதிர்கொண்டு, உண்மையை வெளிவரச் செய்த மதிப்பிற்குரிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மணிஷ் சிசோடி யாவும் பாராட்டுக்குரியவர்கள்''’என பா.ஜ.க.வை கண்டித்து கெஜ்ரி வாலை பாராட்டியுள்ளார்.
கெஜ்ரிவாலை நிரபராதி என நீதிமன்றம் பாராட்டிவிட்டது. மேலிட உத்தரவுகளுக்கு ஏற்ப இந்த வழக்கு திட்டமிட்டுப் புனையப்பட்டதா? இதில் யார் குற்றவாளி? என்பதையும் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிடுவது எதிர்காலத்தில் இத்தகைய வழக்குகள் பதியப்படுவதைத் தடுக்கும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us