"விருதுநகர் மாவட்ட பா.ஜ.க.வில் சத்தமில்லாமல் ஒரு பஞ்சாயத்து நடக்கிறது' என்று முணுமுணுத்த ‘தாமரை’ கட்சிக்காரர் “""மாநில பொறுப்பில் இருந்தவருக் கும் தற்போது மாவட்ட பொறுப்பில் உள்ளவருக்கும் இடையிலான பண விவகாரம் இது'' என்று பெருமூச்சு விட்டார்.

என்ன விவகாரமாம்?

vv

""தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளராக இருந்தவர் மோகன் ராஜுலு. மூன்று வருடங்களுக்கு முன், திருச்சி துவரங்குறிச்சி அருகே கார் விபத்தில் சிக்கி, பலத்த காயங் களுடன் உயிர்ப்போராட்டம் நடத்தி, சிகிச்சைக்குப்பிறகு மீண்டிருக்கிறார். விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சோலையப்பன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மோகன் ராஜுலுக்கு நெருக்கமானவர் என்றும் பேசப்பட்டவர். இவர், ஏதோ ஒரு விதத்தில் மோகன்ராஜுலுவிடமிருந்து பெற்ற ரூ.32 லட்சத்தை திருப்பித் தரவேண்டியவராக இருக்கிறார். விபத்தின் காரணமாக மோகன் ராஜுலு மிகவும் பலவீனப் பட்டிருப்ப தால், மொத்தப் பணத்தை யும் சுருட்டிவிட பார்த்தார். ஆனாலும், யார் யார் மூல மாகவோ பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை வசூலிக் கும் வேலையில் இறங்கி யிருக்கிறது மோகன்ராஜுலு தரப்பு'' என்றார் அந்தக் கட்சிக்காரர்.

Advertisment

நாம் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சோலையப் பனை தொடர்புகொண்டோம். ""மோகன்ராஜுலுவுக்கு உடம்பு சரியில்ல. பார்ட்டியில் முன்னால மாதிரி அவரு சொன்னத நான் கேட்கலைன்னு ஒரு இது இருக்கும். மோகன்ராஜுலுவே இங்கு வரட்டும். அவருகிட்டயே கேட்போம்'' என்று நழுவிப் பேசினார்.

சென்னையில் வசிக்கும் மோகன்ராஜுலுவோ ""சோலையப்பன் எனக்குத் தரவேண்டிய பணத்துல பெருவாரியா வந்திருச்சு. இன்னும் கொஞ்சம்தான் பாக்கியிருக்கு. மற்றபடி 32 லட்ச ரூபாய் என்கிட்ட இருந்ததாகவும் அதை நான் கொடுத்ததாகவும் சொல்வது வதந்திதான். இப்படித்தாங்க. யாரோ ஒருத்தர் என்னுடைய கிராமத்துக்குப்போயி என் வீட்டை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டு, ஒரு கோடி ரூபாய்க்கு வீடு கட்டிருக்கேன்னு சொன்னாரு. நான் அவரைக் கூப்பிட்டேன். ரொம்ப சிம்பிள். 50 லட்ச ரூபாய் கொடுத் துட்டு வீட்டை வாங்கிக் கோன்னு சொன்னேன். அவரு முழிச்சாரு. "என்னை மன்னிச்சி ருங்க. ஒருத்தர் என்னை எழுதச் சொன்னாரு. அதான்.. எழுதினேன்' னாரு. என்னைப் பற்றி எழுதச் சொன்னவர் யாரென்று உங்களிடம் சொல்ல முடியாது. எங்க கட்சியில் வதந்திகள் கிளப்புவது வாடிக்கை யாகிவிட்டது.

இன்னொரு விஷயம் என் கிட்ட சொன்னாங்க. எனக்கு நடந்தது விபத்தே கிடையாதாம். சதி பண்ணிட் டாங்களாம். அதுவும் திட்டமிட்ட சதியாம். எங்க கட்சிக்குள்ள இருந்தே இதைப் பண்ணிட்டாங்க ளாம். வதந்திகளில் இது ஒரு கொடூரமான வதந்தி. இதையெல் லாம் பொறுத்துக்கிட்டு அமைதியா இருக்கேன். தமிழ்நாட்டுல அடுத்த பா.ஜ.க. தலைவரா யாரைப் போட லாம்னு கட்சி மேலிடத்துல ஆலோ சனை நடந்துக்கிட்டிருக்கு. கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவன் என்ப தால் அந்தப் பட்டியலில் அடியேனும் இருக்கிறேன். அதனால்தான், வதந்தி பரப்பிக்கொண்டே இருக்கி றார்கள்'' என்றார் வேதனையுடன்.

Advertisment

மாநிலத்தில் ஆட்சி, அதிகாரம் எதுவும் இல்லாத நிலையிலேயே, பா.ஜ.க.வில் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் செழிப்பாக இருக்கி றார்கள். இதில், கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற முழக்கத்துடன் செமத்தியான உள்ளடி வேறு.

-ராம்கி