அ.தி.மு.க.வை உடைக்கும் பா.ஜ.க! எதிரிகளை ரசிக்கும் தி.மு.க.! -வினோத அரசியல் களம்

ss

மிழகம் ஒரு வினோதமான அரசியல் சூழலைச் சந்தித்துவருகிறது என்கிறார் கள் நடுநிலை அரசியல் நோக்கர்கள்.

"ஒவ்வொரு மாநிலத்திலும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து வரும் இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க., இங்கே அ.தி.மு.க.வைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறது. இப்போது அந்தக் கட்சியின் ரிமோட்டை பா.ஜ.க. மேலிடம்தான் இயக்குகிறது. இது தமிழகத்துக்கு நல்லதல்ல''” என்கிறார்கள் அவர்கள்.

"இது உண்மையா?'' என அந்த ஈரோடு மாவட்ட அ.தி.மு.க,. பிரமுகரிடம் கேட்டபோது “"இதில் என்ன சந்தேகம்? தற்போது எங்கள் கட்சியில் விசுவரூபம் எடுத்துவரும் ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு விதை தூவியதே பா.ஜ.க.தான். அதோடு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என இரண்டு தரப்பையும் தூண்டிவிட்டு, அதுவே பிரச்சினையை ஊதிப் பெரி தாக்கிவிட்டது. மோதல் தொடங் கியதும் இப்போது மத்தியஸ்தர் போல நாட்டாமைப் பஞ்சாயத் தையும் அது மேற்கொண்டு வரு கிறது. ஒருவகைய

மிழகம் ஒரு வினோதமான அரசியல் சூழலைச் சந்தித்துவருகிறது என்கிறார் கள் நடுநிலை அரசியல் நோக்கர்கள்.

"ஒவ்வொரு மாநிலத்திலும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து வரும் இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க., இங்கே அ.தி.மு.க.வைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறது. இப்போது அந்தக் கட்சியின் ரிமோட்டை பா.ஜ.க. மேலிடம்தான் இயக்குகிறது. இது தமிழகத்துக்கு நல்லதல்ல''” என்கிறார்கள் அவர்கள்.

"இது உண்மையா?'' என அந்த ஈரோடு மாவட்ட அ.தி.மு.க,. பிரமுகரிடம் கேட்டபோது “"இதில் என்ன சந்தேகம்? தற்போது எங்கள் கட்சியில் விசுவரூபம் எடுத்துவரும் ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு விதை தூவியதே பா.ஜ.க.தான். அதோடு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என இரண்டு தரப்பையும் தூண்டிவிட்டு, அதுவே பிரச்சினையை ஊதிப் பெரி தாக்கிவிட்டது. மோதல் தொடங் கியதும் இப்போது மத்தியஸ்தர் போல நாட்டாமைப் பஞ்சாயத் தையும் அது மேற்கொண்டு வரு கிறது. ஒருவகையில் பா.ஜ.க.வின் மேலிடத்தில் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் சரண்டராகிவிட் டார்கள்''’என்றவர்...

"பா.ஜ.க.வின் இந்தக் கலவர அரசியலால், அ.தி.மு.க. உடைய லாம். அல்லது கொஞ்சம் கொஞ்ச மாக அழியலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அ.தி.மு.க. என்கிற திராவிடக் கட்சி காணாமல் போகலாம். இதன் மூலம் பலமான திராவிடக் கட்சியான தி.மு.க.வுக்கு, தான் மட்டுமே எதிரி என்கிற நிலையை பா.ஜ.க. உருவாக்க நினைக்கிறது''’என்கிறார் கவலையாக.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது...

ff

"எம்.ஜி.ஆர். இருந்தவரை அ.தி.மு.க. பலமாக ஒரே தலைமையின்கீழ் இருந்தது. அவருக்கு அடுத்த நிலையில் நாவலர் போன்றவர்கள் இருந்தபோதும், அவர் தன் வாரிசாக யாரையும் கை காட்டவில்லை. அதனால்தான் கட்சியை ஜெயலலிதா கைப்பற்றி னார். இவர் காலத்தில் கட்சியின் திராவிடக் கோட்பாடுகள் உடையத் தொடங்கியது. கட்சி ஆன்மீக நிறத்தைப் பூசிக்கொண்டது. கட்சியில் அனைவரும் அவரின் அடிமைகளாக நடத்தப் பட்டனர். ஆனாலும் தேசிய கட்சிகளிடம் ஜெயலலிதா அடி பணிந்ததில்லை. கடைசி தேர்தலில் கூட மோடியா? இந்த லேடியா? என இரும்புப் பிடி சர்வாதிகாரியாக இருந்தார். ஏன் பா.ஜ.க.வின் வாஜ்பாய் அரசையே கலைத்தார். இதுதானே வரலாறு. அதே சமயம் சசிகலாவுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் கட்சியை கம்பெனியாக மாற்றிவிட்டது. மேலும் அவரது மறைவு, கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. தி.மு.க.வில் கலைஞருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின்தான் என கலைஞர் இருக்கும் போதே அடையாளம் காட்டப்பட்டது. ஆனால் ஜெ. யாரையும் அடையாளம் காட்டவில்லை. அப்படி, இவர்தான் எனது அரசியல் வாரிசு என அவர் கைகாட்டியிருந்தால் இப்போது உள்ள அதிகார யுத்தம், குழாயடிச் சண்டைபோல் மாறி இருக்காது. திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு ஆளுமைமிக்க வாரிசு அரசியல்தான் தேவை. அது ஒற்றைத் தலைமையாகவும் இருக்கவேண்டும்.

தி.மு.க.வில் அது நிறைகுடமாக உள்ளது. குறைந்தபட்சம் இன்னும் ஐம்பது ஆண்டு காலம் தி.மு.க.வை யாரும் அசைக்க முடியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அ.தி.மு.க. என்கிற முகமூடியை பா.ஜ.க. அணியுமானால் தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜ.க. என்கிற அபாயம் வந்துவிடும்''’ என்றவர்...

"பா.ஜ.க. யாரையெல்லாம் பேச வைக்கிறது என்பதைப் பாருங்கள். அ.தி.மு.க.வில் நடக்கும் சண்டைக்கும் தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் சி.வி.சண்முகம் முதல்வரை ஒருமையில் திட்டுகிறார். அதேபோல் ஜெயக்குமாரும், எஸ்.பி.வேலுமணியும் தி.மு.க.வை திட்டுகிறார்கள். இந்த மூவருமே ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள். இவர்களை எடப்பாடி ரசிக்கிறார். அவருடைய சொத்து மதிப்பே பல ஆயிரம் கோடிகளை தாண்டும். இது போதாதென்று கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள் கொள்ளை யடிக்கப்பட்டன. இதற்காகவே கொலைகள் நடந்திருக்கிறது. எனவே கட்சியின் முகமே மாறிவிட்டது''’என்றார் வருத்தமாக.

இது குறித்து தி.மு.க. தரப்பு என்ன நினைக்கிறது? என அதன் மாநிலப் பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்டோம்.

அவரோ, "பா.ஜ.க., தி.மு.க.விடம் வாலாட்ட முடியாது. அதேநேரம், அ.தி.மு.க.வினரின் ஊழல்களுக்கு ஆதாரங்கள் கையில் இருந்தும், முதல்வர் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார். அவர்களின் அட்டகாசங்களை ரசிக்கிறார். அவர்கள் மீதான ரெய்டுகள் எல்லாம் சிறுவர்கள் விளையாடும் திருடன் போலீஸ் விளையாட்டுபோல் ஆகிவிட்டது. இனியும் அ.தி.மு.க.வினரின் கூத்தடிப்புகளை கைகட்டி வேடிக்கை பார்க்காமல் சட்டப்படியான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தீவிரப்படுத்த வேண்டும். இல்லையேல் ஊழலுக்கு தண்டனை இல்லை என்கிற தைரியம் இங்கே பெருகிவிடும்''’ என்றார் அழுத்தமாக.

முதல்வர் என்ன செய்யப்போகிறார்?

nkn020722
இதையும் படியுங்கள்
Subscribe