பா.ஜ.க. அலுவலகத்தை ஏன் இடிக்கக்கூடாது? -நோட்டீஸ் கொடுத்த நகராட்சி

ff

ந்தியாவிலேயே அதிக நன்கொடை பெறும் கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது. அதற்கேற்றாற்போல் மாநில கட்சிகளுக்கு சொந்தமாக அலுவலகம் உள்ளதோ இல்லையோ தேசியக் கட்சியான பா.ஜ.க.வுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிது புதிதாக அலுவலகங்கள் உருவாகி வருகின்றன.

புதுக்கோட்

ந்தியாவிலேயே அதிக நன்கொடை பெறும் கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது. அதற்கேற்றாற்போல் மாநில கட்சிகளுக்கு சொந்தமாக அலுவலகம் உள்ளதோ இல்லையோ தேசியக் கட்சியான பா.ஜ.க.வுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிது புதிதாக அலுவலகங்கள் உருவாகி வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டுவந்த நிலையில் வாடகைப் பாக்கியால் இழுத்துமூடும் நிலையில் இருந்தது. தற்போது வாடகைப் பாக்கி கொடுத்திருக்கிறார்கள்.

bjpoffice

ஒருபக்கம் வாடகைப் பாக்கி பிரச்சனை யிருந்தாலும், மற்றொரு பக்கம் சொந்தமாக கட்சி அலுவலகம் கட்டிவருகிறார்கள் பா.ஜ.க.வினர். பொறியாளர் ராம்ஜி, சேகர் பொறுப்பில். 3 மாடிகளுக்கு மேல் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த கட்டிடம் கட்ட முறையாக அனுமதி பெறவில்லை.

இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன் கடந்த மாதம், "அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடத்தை ஏன் இடிக்கக்கூடாது' என்று நோட்டிஸ் கொடுத்திருக் கிறார். அதன்பிறகே அனுமதிக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பதில் கொடுத்துள்ளனர் கட்சியினர்.

இதுகுறித்து புதிய மாவட்டப் பொறுப்பாளர் செல்வம் அழகப்பனிடம் கேட்டபோது... “"அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டுறாங்களா? எனக்கு தெரியாது. யாரு கட்டடப் பொறுப்பாளரோ அவ ரிடம்தான் கேட்கணும்''”என்று ஒதுங்கிக்கொண்டார். கட்டடப் பொறுப்பாளரான சேகரிடம் கருத்துக் கேட்க தொடர்பு கொண்டபோது, நம் அழைப்பை ஏற்கவில்லை.

nkn300322
இதையும் படியுங்கள்
Subscribe