குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் எம்.ஆர்.காந்திக்கு எதிராக அ.தி.மு.க.வினர்,
"இந்த முறை நாகர்கோவில் தொகுதியில் நாங்கதான் போட்டியிடுகிறோம், பூத் கமிட்டி அமைக்கப்போகிறோம், தேவையில்லாமல் நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்'' என்று பா.ஜ.க.வினரை எச்சரித்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி, "எனக்கு ஒரேயொரு வாய்ப்பு தாருங்கள்'' என்று பா.ஜ.க. தலைமையிடம் தொடர்ந்து கெஞ்சியதன் அடிப்படையில் 2021-ல் வாய்ப்பளிக்க... எம்.எல்.ஏ.வானார். அதே பாணியில் தற்போதும் முயற்சித்ததால், பா.ஜ.க.வுக்குள்ளேயே முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளடியில் ஈடுபட்டுள்ள னர்.
சில தினங்களுக்கு முன் நடந்த ஆர்.எஸ்.எஸ். மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் நாகர் கோவில் தொகுதியில் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி மீதிருக்கும் அதிருப்தியை பதிவு செய்த ஆர்.எஸ். எஸ்., இம்முறை அத்தொகுதியை அ.தி.மு.க.வுக்கு கொடுக்கலாமென விவாதிக்க, சிட்டிங் தொகுதியை அ.தி. மு.க.வுக்கு விட்டுக் கொடுக்க முடியா தென்று பா.ஜ.க. வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க. விலிருந்து வேறொரு வரை நிறுத்தலா மென்று பா.ஜ.க. து.தலை வர் தேவ் உள்ளிட்டோர் கூறிய கருத்துக்கு ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சூழலில்தான் "நாகர் கோவில் தொகுதியை பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்' என அ.தி.மு.க.வினர் பகிரங்கமாகக் கூறியுள்ளனர். அ.தி.மு.க.வில் சீட் கனவில் பலர் மிதந்தாலும், அத்தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் ஸ்ரீலிஜாதான் வேட்பாளர் எனக் கூறுகிறார்கள் சில நிர்வாகிகள்.
"நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சில் வடக்கு மண்டல தலைவராகவுள்ள எக்ஸ் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகளான ஸ்ரீலிஜா, வார்டு கவுன்சிலராக இருந்தபடி, நாகர்கோவில் தொகுதி முழுக்க மக்கள் பிரச்சினைகளுக்காக பணத்தை தண்ணீராக செலவழித்து வருகிறார். எம்.ஆர்.காந்தி உருவாக்கி வைத்துள்ள அதிருப்தியால் பா.ஜ.க.வினர் தொகுதிக்குள் வாக்கு கேட்டுப் போகமுடியாத சூழலிருப்பதால் அ.தி.மு.க.வினர் மட்டுமே இங்கே நிற்க முடியுமென்பதை எடப்பாடியிடம் விளக்கிவிட்டோம். அவர் தந்த நம்பிக்கையால்தான் ஸ்ரீலிஜா தொகுதி முமுவதும் பூத் கமிட்டி அமைத்து சுற்றிவருகிறார்'' என்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/kumari1-2026-02-23-17-11-36.jpg)
இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, "பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடே முடியல. அதற்குள் அவர்கள் பூத் கமிட்டி போடுகிறார்களென்றால் கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்துவதுதானே பிளான்? நாங்க சிட்டிங் தொகுதியை கேட்டு நெருக்கடி கொடுப்போம். தேர்தல் நேரத்தில் எழும் உட்கட்சி விவகாரத்துக்காக நாங்கள் விட்டுக் கொடுத்து விடுவோமா? அ.தி.மு.க.வில்கூட, நாகர்கோவில் தொகுதியை கேட்கும் எக்ஸ் மா.செ. அசோகன், தளவாய்சுந்தரத்தை கண்டமேனிக்கு திட்டி வீடியோ வெளி யிட்டுள்ளார். நாஞ்சில் கோலப்பனும் பதிலுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார். இப்படியிருக் கையில் எப்படி நாகர்கோவிலில் அ.தி.மு.க. வெற்றிபெறும்?
ஏற்கெனவே அ.தி.மு.க.வில் அதிருப்தி யிலிருக்கும் நிர்வாகிகளிடம் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருக்கிறார். இவர்கள் எப்பவும் த.வெ.க.வுக்கு தாவத் தயாராக இருப்பதால்தான் எடப்பாடியை மிரட்டு கிறார்கள். அவர்களை சமாளிப்பதற்காக சீட் உங்களுக்கு தானென்கிறார் எடப்பாடி'' என்றனர்.
நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி தரப்பினர் கூறும்போது, "நாகர்கோவிலில் பா.ஜ.க. தனித்து நின்றாலும் வெற்றிபெறக்கூடிய சூழலில்தான் உள்ளது. இதற்கு காரணம், எம்.ஆர்.காந்தியின் 5 ஆண்டு கால உழைப்புதான். நாகர்கோவில் மாநகராட்சியிலுள்ள 52 வார்டுகளில், வார்டுக்கு நூறு, இருநூறு வாக்குகளை மட்டும் கொண்டிருக்கும் அ.தி.மு.க., கடந்த மேயர் தேர்த லுக்குப் பிறகு அதுவும் காணாமல்போயிற்று. மேயர் பதவிக்கு அ.தி.மு.க. ஸ்ரீலிஜா உட்பட 5 கவுன்சிலர்களும் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போடாமல் தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்டவர்கள்தான். இவர்களை எப்படி நம்பமுடியும்? நாகர்கோவில் பா.ஜ.க.வுக்குத்தான். அதுவும் எம்.ஆர்.காந்திதான் வேட்பாளர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் அ.தி.மு.க.வினர் வீணாகக் குழப்பத்தை உருவாக்கத் தேவையில்லை'' என்றனர்.
அ.தி.மு.க. ஸ்ரீலிஜா தரப்பினரிடம் கேட்ட போது,"சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்து ஒருநாள் கூட காலெடுத்து வைக்காத எம்.ஆர்.காந்தி மீது தொகுதிக்குள் கடும் அதிருப்தி இருப்பதால் பா.ஜ.க.வுக்கு நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு பதில் 2027-ல் மாநகராட்சி மேயர் பதவி வழங்கப்படும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் பா.ஜ.க.வினர் கொக்கரித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில் கூட இந்த தொகுதி குறித்து பேசப்பட்டது. தொகுதி முமுவதும் ஸ்ரீலிஜா அறியப்பட்ட நபராக வலம்வருவதால். எடப்பாடியின் மைண்ட்செட்டில் அவர் இருப்பதால். பா.ஜ.க. வுக்கு ஒதுக்கப்படவிருக்கும் மற்ற தொகுதிகளில் அவர்கள் கவனத்தைக் காட்டுவதை விட்டுட்டு நாகர்கோவில் தொகுதிக் குள் கூட்டணிக் குழப்பத்தை உருவாக்கவேண்டாம்'' என்றனர்.
சீட்டும் முடிவாகாமல், தொகுதியும் முடிவாகாமல் இரு கட்சிகளின் தலைமை தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் நிலையில்... கடைக்கோடி மாவட்டத்தின் தலைநகரத் தொகுதிக்கு நீயா? நானா? என அ.தி.மு.க., பா.ஜ.க. குஸ்தி போட, தொகுதிவாசிகள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/kumari-2026-02-23-17-11-23.jpg)