திகாலையிலேயே புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்கு நான்கு கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து இறங்கினர். ரெய்டு எனச் சொன்னதும் வீட்டிலிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். அதே நேரத்தில், சென்னையிலுள்ள ஐசரிகணேஷின் வேல்ஸ் யுனிவர்சிட்டிக்கு சொந்தமான இடங்கள், ஜி-ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டது அதிர்வலையை ஏற் படுத்தி யது. ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை பாய்ந் திருக்கிறது. தற்போது மீண்டும் வேகம் காட்டி யுள்ளனர்.

vv

விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ஐசரிகணேஷின் வேல்ஸ் யூனிவர்சிட்டி போலி ஆவணங்களைக் கொடுத்து, எந்தவித அடிப்படைக் கட்டுமானங்களும் இல்லாமல் மருத்துவக்கல்லூரியைத் துவங்கியது எனக்கூறி ஏற்கனவே வழக்கு இருக்கிறது. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த அந்த வழக்கின் அடிப்படையில் ஐசரிகணேஷையும், விஜயபாஸ்கரையும் ரெய்டுக்கு உட்படுத்தினார்கள் என்கிற தகவல்கள் பரவியது. ஆனால், விஜயபாஸ் கர் மீது ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் உள்ளன. மிகப்பிரபலமான குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரித்துவருகிறது. ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிடும்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக சுமார் 87 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்தார் என ஒரு வழக்கு அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தமிழக அரசானது, சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றை விஜயபாஸ்கர் மீது பதிவு செய்துள்ளது. அதற்கு அனுமதி தருவதில் கவர்னர் கண்டு கொள்ளவில்லை. பலமுறை விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இவற்றில் ஒன்றை காரணமாக வைத்துக் கொண்டு தற்போது அமலாக்கத்துறை விஜயபாஸ்கர் மீது பாய்ந்திருக்கிறது. சமீபகாலமாக அமலாக்கத்துறை ஒரு புதுவிதமான டெக்னிக்கை பயன்படுத்துகிறது. தி.மு.க.வை சேர்ந்த ஒருவரை குறிவைக்கும்போது. அ.தி.மு.க.வை சேர்ந்தவர் களையும் இணைத்து ரெய்டு நடத்துகிறது. சமீபத்தில் தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான ஒரு காண்ட்ராக்டர் வீட்டில் அமலாக்கத்துறை பாய்ந்தது. அப்பொழுது அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு ஆடிட்டர் வீடும் ரெய்டுக்கு உள்ளாக்கப் பட்டது. அதுபோல ஜி-ஸ்கொயர் மீது ரெய்டு வரும்போது, அ.தி.மு.க.வின் விஜயபாஸ்கர் மீதும் ரெய்டு பாய்ந்திருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

விஜயபாஸ்கர் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா ஆகியோருக்கு நெருக்கமானவர். சமீபத்தில் சென்னைக்கு வந்த ஒன்றிய அமைச்சரை நள்ளிரவில் ரகசியமாக விஜயபாஸ்கர் சந்தித்தார் எனச் செய்திகள் வெளிவந்தன. வேலுமணிக்கு அடுத்தபடியாக பா.ஜ.க.வுடன் மிக நெருங்கிய தொடர்பை வைத்திருந்தவர் விஜயபாஸ்கர். பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமையவில்லை என்றால் அ.தி.மு.க.வை உடைத்து இரட்டை இலையை முடக்கும் அசைன்மெண்ட் பா.ஜ.க. தலைமையால் கொடுக்கப்பட்டது. அதில் முக்கியமானவர் விஜயபாஸ்கர். பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர கடைசிவரை முயன்றது.

கடந்த நான்காம் தேதி சென்னைக்கு வந்தார் பிரதமர். அவரது வருகைக்கு முன் எட்டு சீட்டுகள் எங்களுக்கு கொடுத்தால் போதும் என அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. பேரம் பேசியது. பிரதமரும் தனது பர்சனல் நம்பரில் எடப்பாடியை தொடர்பு கொண்டார். ஆனால், எடப்பாடி பிரதமரின் போனை எடுக்கவில்லை. அந்த பேரத்தின் போதே முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி உட்பட பல அ.தி.மு.க.வினர் மீது வழக்குகள் உள்ளன. அவர்கள் சிறைக்கு செல்வார்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு மிரட்டலுக்குத்தான் தற்போது பா.ம.க. பணிந்து பா.ஜ.க. கூட்டணிக்குள் சங்கமித்தது.

இந்த மிரட்டல் பற்றி அ.தி.மு.க.வினரிடம் பேசிய எடப்பாடி, “ரெய்டு, கைது இவையெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விசயங்கள். பா.ஜ.க., அ.தி.மு.க.வை விழுங்கப் பார்க்கிறது. "பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அ.தி.மு.க. என்கிற கட்சி காணாமல் போய்விடும். எனவே, கூட்டணி இல் லை'”என அறிவித்தார். அப்போது அ.தி.மு.க.வை உடைப்பதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டன. அதன் ஒருகட்டமாக அமலாக்கத்துறையை ஏவி மிரட்டத் தொடங்கியுள்ளது என்கின்றன'' அ.தி.மு.க. வட்டாரங்கள்.

Advertisment

விஜயபாஸ்கருக்கு ரெய்டு வரும் தகவல் முன் கூட்டியே தெரியும். கடந்த பத்து நாட்களாக அவர் அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவில்லை. திருச்சி வேட்பாளராக, மணல் மாபியா கரிகாலனின் தம்பி கருப்பையாவை நிற்க வைக்க முயற்சி மேற்கொண்டதைத் தவிர அ.தி.மு.க.வின் தேர்தல் நடவடிக்கைகளில் நான் இல்லை, என்மீது கை வைக்காதீர்கள் என்கிற சிக்னலை விஜயபாஸ்கர் பா.ஜ.க.வுக்கு அளித்து வந்தார். அதையும் மீறி அமலாக்கத்துறை விஜயபாஸ்கர் மீது பாய்ந்து விட்டது. இதை சிம்பிளாக முடித்துக்கொள்ள விஜயபாஸ்கர் முயன்று வருகிறார். சென்னையில் உள்ள அவர் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடந்தபோது ஆவேசமாக பா.ஜ.க.விற்கு எதிராகக் கோஷமிட்ட விஜயபாஸ்கர் இப்போது இல்லை.

“விஜயபாஸ்கரைத் தொடர்ந்து வேலுமணி, தங்கமணி, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் மீதும் ரெய்டுகள் வரும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொதுவாக தேர்தல் அறிவிப்பு வந்தால் மத்திய அரசு ஏஜென்சிகள் இதுபோன்ற ரெய்டுகளை நடத்தாது. அதை யெல்லாம் தாண்டி அமலாக்கத்துறை அ.தி.மு.க.வின் விஜயபாஸ்கர் மீது பாய்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. மீது கடும் கோபத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் அமலாக்கத் துறை போன்ற ஒன்றிய அரசின் ரெய்டுகளால் அடிக்கும்'' என்கிறார்கள் அரசியல் பார்வை யாளர்கள்.