எனக்கு யாரும் சாயம் பூச முடியாது' என்ற விஜய், பா.ஜ.க. பின்புலத் தில் புதிய கட்சியைத் தொடங்கவில்லை என மாநாட்டில் அறிவித்தார். ஆனால், பா.ஜ.க.வை எதிர்க்கும் பாசிச எதிர்ப்பை ‘பாயாசம்’ என வர்ணித்தார். ஒரு பக்கம் பா.ஜ.க. எதிர்ப்பு, மறுபக் கம் பா.ஜ.க. ஆதரவு என இரு முகம் காட்டிய விஜய்யை வழிக்குக் கொண்டுவர அஸ்திரங்கள் ஏவ பா.ஜ.க. தயாராகி வருகிறது. விஜய் மீது ஏற்கெனவே வருமான வரித்துறை ரெய்டு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த ரெய்டின்போது கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு விஜய் கொடுத்த விளக்கத்தில் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் கட் அவுட் வைக்கவும், ஆரத்தி எடுக்கவும், பட்டாசு வெடிக்கவும் ரசிகர் மன்றங்களுக்கு நான் பணம் கொடுக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். அந்தக் கணக்கையெல்லாம் மீறி விஜய் மீது வருமான வரித்துறை கொடுத்த வழக்கு இன்றளவிலும் நிலுவையில் இருக்கிறது.
விஜய் தனது மாநாட்டில் தி.மு.க.வை எதிர்த்துப் பேசினார். அ.தி. மு.க.வைப் பற்றி ஒரு வரி கூடப் பேசவில்லை. இதனால் மகிழ்ச்சி யடைந்த அ.தி.மு.க. தலைமை விஜய்யுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது. ஆனால் அந்தப் பேச்சு வார்த்தையில் முக்கிய இடம்பெறுவது பா.ஜ.க. குறித்த விவரங்கள். பா.ஜ.க.வை எப்படி கையாள் வது என்பதில் அ.தி.மு.க.வுக்கே பெரிய குழப்பம் இருந்து வருகிறது. அ.தி.மு.க. ஒன்றாக வேண் டும் என நிலையெடுத்த பா.ஜ.க., அதுபற்றி எடப்பாடியிடம் பேசியது. எடப்பாடி பா.ஜ.க.விற்கு பிடி கொடுக்காமல் நழுவி வந்தார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் களை மீண்டும் சேர்க்க முடியாது என்று அறிவித்தார். இதனால் டென்ஷனான பா.ஜ.க., அமலாக்கத்துறையை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டிற்கு வருமான வரித்துறையை எடப்பாடிக்கு நெருக்கமான இளங்கோவன் வீட்டிற்கும் ஏவியது. இளங்கோவனின் சம்பந்தியான பாலசுப்பிரமணியம் என்பவர் வீட்டில் நடந்த ரெய்டில் அவருக்கு நெருக்கமான வரதராஜன் என்பவர் வீடும் ரெய்டுக்கு உள்ளானது. கடந்த 28ஆம் தேதி இந்த ரெய்டு தொடர் பான விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டது.
விஜய்யின் மாநாடு நடந்த அடுத்த நாளே எடப் பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான இளங்கோவனின் உறவினரிடம் 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டது. அவர் 100 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டார் என கண்டுபிடித்தோம் என்கிற வருமான வரித்துறை யின் அறிவிப்பு, அ.தி.மு.க. வட்டாரத்தை கலகலக்க வைத்தது. ஒரு சாதாரண மனிதராக சைக்கிள் கடை வைத்திருந்த இளங்கோவன் மற்றும் அவரது உறவினர் கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கத் தால்தான் பணக்காரர்கள் ஆனார்கள். இவர்களிடம் புழங்கும் பணமெல்லாம் எடப்பாடியின் பணம். எடப் பாடியை வழிக்குக் கொண்டுவர பா.ஜ.க. இளங்கோவ னிடமிருந்து 142 கோடியை ரெய்டு நடத்திப் பிடித்துள் ளது. இது எடப்பாடியை மிகவும் டென்ஷனாக்கியது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை கட்சி ஒற்றுமையாக வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக தேர்தலைச் சந்திக்க வேண்டும், அதன்மூலம் 2026ல் ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் என்கிற கோரிக்கையை பா.ஜ.க. முன்வைத்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தில் பா.ஜ.க. அணியில் அ.தி.மு.க. இடம்பெற வேண்டும் என்பது பா.ஜ.க. வைக்கும் நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கின்றது. அதற்காகத்தான் இந்த ரெய்டுகள்.
இந்த கோரிக்கையை ஏற்க எடப்பாடி தயங்கு கிறார். தற்பொழுது அரசியலுக்கு வந்துள்ள விஜய் யுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க. இழந்த வாக்கு வங்கிகளை சரி செய்ய முடியும். விஜய்யுடன் கூட்டணி தி.மு.க.வுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எடப்பாடி திட்டமிடுகிறார். விஜயகாந்தைப் போல 40 தொகுதிகளில் விஜய்யை போட்டியிட வைத்து வெற்றி காண முடியும் என கணக்கு போடுகிறார். ஆனால், விஜய்யின் வரவு இளைஞர்கள் மத்தியில் பா.ஜ.க.வை செல்லாக்காசாக்கி விடும் என சீமான் கட்சி போலவே பா.ஜ.க. பயப்படுகிறது. விஜய் தனியாக நின்றால் அவர் அ.தி.மு.க. வாக்குகளை பறித்து விடுவார் என எடப் பாடி பயப்படுகிறார். விஜய் மாநாட்டில் பங்கேற்ற, அதற்காக செலவு செய்த 70 சதவிகிதம் பேர் சரியான தலைமை மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் நிலை குலைந்து நிற்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த இளைஞர் கள் என்கிற ரிப்போர்ட் எடப்பாடிக்கு சென்றுள்ளது. விஜய்யுடன் கூட்டணி அமைக்காவிட்டால் அ.தி.மு.க., சீமான் கட்சியைப்போல சின்ன கட்சியாகிவிடும். ஆனால், பெரியார் வழி, பா.ஜ.க. எதிர்ப்பு என மேடையில் அறிவித்த விஜய், பா.ஜ.க.வுடன் இணைவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ‘தரையில் சிங்கம்... தண்ணீரில் முதலை!’ என இருபக்கமும் தப்பிக்க வழி இல்லாமல் சிக்கிய விவசாயியைப் போல விழித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.
“எடப்பாடியின் பா.ஜ.க. எதிர்ப்பு தொடர வேண்டும் என விஜய்க்கு நெருக்க மான லாட்டரி அதிபரின் மருமகன் அர்ஜுன் ரெட்டி போன்றவர்கள் வலியுறுத்துகிறார்கள். ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி வை; இல்லையென்றால் கட்சி உடையும்’ என எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. பெருந்தலைகள் எடப்பாடியை மிரட்டி வருகிறார்கள். எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. “பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் பரவாயில்லை; நீ கூட் டணிக்கு வா” என எடப்பாடி, விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை விஜய்யும் அ.தி.மு.க.வும் ஏற்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. வெகுவிரைவில் அமலாக்கத்துறையை களமிறக்கி ரெய்டுகள் நடத்த திட்டமிட்டுள்ளது. அப்போது விஜய்யின் பா.ஜ.க. பாசிச எதிர்ப்பு என்பது பல்லிளித்துவிடும்.
மேலும் "விஜய் தரப்புக்கு ரெய்டு கள் மூலம் கடும் நெருக்கடி கொடுத்தால் எப்படியும் நம் வலையில் சிக்கிவிடுவார் என அமித்ஷா ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளார்'’என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.