ரூர் பிரச்சினையில் பொறுப்புணர்வு சிறிதுமின்றி ஆணவம், திமிர் கலந்த வார்த்தைகளால் விஜய் வீடியோவில் பேசுவதைப் பார்த்தால் அவருக்கு அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டது” என ஆரூடம் கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Advertisment

கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகத்தை துவங்கிய விஜய், செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய அவரது முதல் பிரச்சார பயணத்திலேயே கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர். 

Advertisment

இப்படி, ‘நேரத்தைக் கடத்தினால் அதிக கூட்டத்தைக் காட்டலாம்’ என்ற விஜய்யின் பிரச்சார ஃபார்முலாவினால், அரியலூரில் 6 பேர், திருவாரூரில் 17 பேர், நாகையில் 5 பேர் எனத் தொடர்ந்து இறுதியாக செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை, நாமக்கல்லில் நடந்த பிரச்சாரத்தில் 35 பேரை ஐ.சி.யூ.விற்கு அனுப்பிவிட்டு, கரூரில் ஏதுமறியாத குழந்தைகள், ரசிகர்கள், கூட்டத்தில் சிக்கிக்கொண்ட பெரியவர்கள் என 41 அப்பாவி உயிர்களை தனது அரசியல் வெறிக்கு பலிகொடுத்துவிட்டார் விஜய்.

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிசனை அமைத்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். 

Advertisment

அதேநேரம், தன்னுடைய தொண்டர்களும் ரசிகர்களும், ஆர்வத்தில் தன்னைப் பார்க்கவந்த பொதுமக்களும் அந்த கோரச்சம்பவத்தில் உயிரிழந்ததை நேரில் கண்டும்கூட கரூரிலிருந்து அவசர அவசரமாக திருச்சி வந்து, தனி விமானம் மூலம் சென்னை திரும்பி, ஏர்போர்ட் ஊழியர்களுடன் செல்ஃபி எடுத்து, தனது பனையூர் பங்களாவிற்குள் பதுங்கிக்கொண்டார் விஜய்.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்து உண்மையை அறிவதற்காக டெல்லியிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டவர்கள் கரூர் வந்து இறங்கினர். அதற்கு முதல்நாளே, அதாவது அந்த கோரச்சம்பவம் நடந்த மறுநாளான செப்டம்பர் 28-ஆம் தேதியன்றே நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் நேரில்வந்து தனது விசாரணையைத் துவங்கினார். பின்னர், மறுநாள் நெரிசலில் சிக்கி உயிரிழந்த வடிவேல்புரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை விமலின் பெற்றோர், அங்கிருக்கும் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த சுகன்யாவின் குடும்பத்தினர், 5 பேர் உயிரிழந்த ஏமூர் புதூரிலிருக்கும் குடும் பத்தினர் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் களையும்,  சம்பவ இடத்தில் இருந்த பொது மக்களையும், சமூக ஆர்வலர்களையும் நேரில் சந்தித்து தனது விசாரணையை தொடர்ந்து வருகிறார்.

karur1

இதற்கிடையே, 29ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்விடத்திற்கு வந்த அதன் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் உள்ளிட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களையும் பொதுமக்களையும் சந் தித்தபிறகு, ‘நடந்த சம்ப வத்திற்கு அதிக கூட்ட மும், அதனால் ஏற்பட்ட கடும் நெருக்கடியுமே காரணம்’ எனக்கூறினர். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் வந்ததாகக் கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரோ, "கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை'’ எனக் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தியது. 

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் போதே, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீதும் வழக்குப் பதிவுசெய்து அவர்களை உடனே கைதுசெய்ய வேண்டும் என்ற குரல்கள் மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது. இதற்கு எதிர்வினையாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை அள்ளிக்கொட்டி வதந்திகளை பரப்பத்துவங்கியது த.வெ.க.வுக்கு ஆதரவான ஒரு கூட்டம்.

இந்நிலையில்தான், கரூர் கோரச் சம்பவத் திற்கு காரணமான த.வெ.க. மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த கரூர் நகர காவல்துறையினர், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் பதுங்கியிருந்த மதியழகனையும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த பவுன்ராஜ் என்பவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.  அப்போது நடந்த விசாரணையின்போது, கரூர் நீதிபதி பரத்குமார், கைதுசெய்யப்பட்ட அந்த இருவரையும் 15 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார். 

செப்டம்பர் 30 அன்று இந்த  நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே டெல்லியிலிருந்து என்.டி.ஏ. கூட்டணி சார்பாக கரூர் வந்த பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களை விசாரிக்கத் துவங்கியது.  “நடிகர் விஜய் தாமதமாக வந்ததும், அதிக கூட்டமும், கூட்டத்திற்கு வந்திருந்த த.வெ.க. தொண்டர்களின் அத்துமீறலுமே காரணம்” எனக் கூற, முகம்சுருங்கியபடி அதை அப்படியே ஹேமமாலினிக்கு ஆங்கிலத்தில் எடுத்துச் சொன்னார் அ.மலை.  

கரூர் கொடூர சம்பவத்திற்குப் பிறகு, 3 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலோ, அறிக்கையோ விடாமல் பதுங்கியிருந்த த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் வீடியோ மூலமாக பொதுவெளிக்கு வந்தார். 

அந்த 4 நிமிட வீடியோவில், வரவழைக்கப் பட்ட சோகமுகத்துடன் பேசிய அவர், எந்த இடத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூடக் கூறாமல், "“5 பிரச்சார இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அங்கு எல்லாம் ஒன்னுமே நடக்கல...'’என அப்பட்டமாக பொய் கூறியதோடு, “"சி.எம். சார், உங்களுக்கு பழி வாங்கவேண்டும் என்ற எண்ணமிருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க'’ என முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கைவிடும் தொனியில் பேசினார். அவரின் இந்தப் பேச்சு விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல் த.வெ.க. ஆதரவாளர்கள் மத்தியிலும், கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில்தான், “விஜய்யின் அந்த பொறுப்பற்ற பேச்சுக்கு பின்னணியில் இருப்பது பா.ஜ.க.தான்” என அடித்துக்கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதுகுறித்து தமிழ்நாட்டு அரசியலையும், விஜய்யின் வியூகங்களையும் அருகிலிருந்து கவனித்துவரும் சிலரிடம் பேசினோம். "குற்றம்சாட்டப்பட்ட ஒருவரையே யாராவது உண்மை கண்டறியும் குழுவிற்கு அழைப்பார்களா? ஆனால், என்.டி.ஏ. சார்பாக வந்த      உண்மை கண்டறியும் குழு செய்தியாளர்களிடம் பேசும்போதே, ‘த.வெ.க. தலைவர் விஜய்யும் எங்களுடன் இணைந்து கொள்ளவேண்டும்’ எனக்கூறியதிலிருந்தே விஜய்யைக் காப்பாற்ற அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது தெரியவில்லையா?''’என நம்மிடமே கேள்வி கேட்டனர். 

karur2

மேலும், “"கலவர பூமியான மணிப்பூருக்கு செல்லாத உண்மை கண்டறியும் குழுவினர் கரூருக்கு வந்ததே விஜய்யை காப்பாற்றத்தான். கடந்த 29-ஆம் தேதி அதிகாலையில் பனையூர் பங்களாவிலிருந்து பட்டினப்பாக்கத்திலுள்ள தனது மற்றொரு இல்லத்திற்கு செல்வதற்கு முன்னரே, ஆடிட்டர் குருமூர்த்திக்கு நெருக்கமான பா.ஜ.க.வின் அரசியல் புரோக்கர்கள் சிலர் அங்கு வந்துவிட்டனர். அவர்களுடன், ‘டீலிங்’ முடிந்தபிறகுதான் மீண்டும் பனையூருக்குத் திரும்பினார் விஜய். 30-ஆம் தேதி அவர் வெளியிட்ட வீடியோவும், அந்த பா.ஜ.க.வினரின் ஸ்கிரிப்ட்படி, அவர்களின் முன்னிலையிலேயே பட்டினப்பாக்கம் இல்லத்தில் வைத்து ஷூட் செய்யப்பட்டதுதான். அதைத்தான் அடுத்த நாள் மாலை வெளியிட்டார் விஜய். அப்போது, பா.ஜ.க.வின் முக்கிய புள்ளி ஒருவரும் விஜயுடன் அலைபேசியில் பேசியதாகவும் தகவல். தற்போது, த.வெ.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட உள்ள நிலையில், விரைவில் விஜய் டெல்லிக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது''’என ஷாக் கொடுத்தனர் நம்மிடம்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜி, இந்த விவகாரம் குறித்து வீடியோ ஆதாரங்களுடன் விளக்கமளித்தார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், “கரூர் துயர சம்பவம் மிகக் கொடுமையானது, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சம்பவம் நடந்த உடனே முதல்வர் நேரில்வந்து ஆறுதல் தெரிவித்தார். கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி.

"கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவி களையும் செய்துள்ளோம். நான் கரூரைச் சார்ந்தவன், எனது தொகுதி மக்களை எனது சொந் தங்களாக கருதுபவன். அவர்களின் ஒவ்வொரு நல்லது கெட்டதிலும் நான் நிற்கின்றேன்.  ஆகவே இந்த துயர சம்பவத்தில் முதல் ஆளாகச் சென்று உதவிகளை செய்திருக்கின்றேன். அனைத்துக் கட்சியினரும் வேறுபாடுகளின்றி உதவிசெய்தனர்.

த.வெ.க. கூட்டத்தில் எங்கேயாவது தண்ணீர் பாட்டில் இருந்ததா? ஒரு பிஸ்கட் பாக்கெட்டாவது இருந்ததா? அந்த இடத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செருப்புகள்தான் மிஞ்சியது. காலையிலிருந்து அவர்கள் காத்திருந்தனர். அங்கு குறித்த நேரத்தில் விஜய் வந்திருந்தால் இந்த பிரச்சினையே ஏற் பட்டிருக்காது. விஜய் கூட்டத்திற்கு வந்தவர்கள் கட்டுப்பாடற்றவர்கள். ஒரு தவறு நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பொறுப் பேற்கவேண்டும். ஓடி ஒளியக்கூடாது''’ என்றார்.

பாட்டிலுக்கு பத்து ரூபாய் என விஜய் விமர்சித்தது பற்றிய கேள்விக்கு, "அந்த சம்பவங்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சம்பவம். அதற்கு எடப்பாடி பழனிச்சாமியே பொறுப்பேற்கவேண்டும். அந்த பத்து ரூபாய் கூடுதல் தொகை எடப்பாடிக்குதான் சென்றது. எனக்கு யாரும் சான்றிதழ் கொடுக்க வேண்டாம்'' என்றும் விளக்கமளித்தார்.