ராங்கால் பா.ஜ.க. அரசுக்கு எதிராக அணி திரளும் மாநிலங்கள்! ஸ்டாலின் வியூகம்! மறதியின் பிடியில் சசிகலா!

ss

"ஹலோ தலைவரே, டெல்லியின் ஏடாகூடமான நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்புத் திட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஜரூராக இறங்கியிருக்காரே.''”

"ஆமாம்பா, இதற்கான குழுக்களை தென் மாநிலங்களுக்கு முதல்வர் அனுப்பியிருக்கிறாரே?'

rr

’"உண்மைதாங்க தலைவரே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கூட்டு நடவடிக்கைக் குழுவில் பிற மாநில எம்.பி.க்களை இணைக்கவும், 22ஆம் தேதி, சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டத்திற்கு, பிற மாநில அரசியல் கட்சித் தலைவர்களை அழைக்கவும் தலா இரண்டுபேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார் ஸ்டாலின். அதன்படி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தயாநிதிமாறன் எம்.பி. ஆகிய இருவரையும் 11ஆம் தேதி ஒடிசாவுக்கு அனுப்பினார். அவர்கள் அங்கே நவீன் பட்நாயக்கை சந்தித்தனர். அதேபோல, அமைச்சர் பொன்முடியும், எம்.பி. அப்துல்லாவும், கர்நாடகா சென்று முதல்வர் சித்தராமையாவை யும், துணை முதல்வர் சிவக்குமாரையும் சந்தித்தனர். ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைக்க அமைச்சர் எ.வ.வேலுவும், எம்.பி. வில்சனும் அனுப்பப்பட்டனர். தெலுங்கானா மாநில தலைவர்களை அழைக்க அமைச்சர் நேருவும், கனிமொழி எம்.பி.யும் சென்றனர். இவர்கள் செல்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் முதல்வர் ஸ்டாலினும் தன் பங்குக்குப் பேசி கூட்டத்திற்கு அழைத்திருக் கிறார். இதையெல்லாம் டெல்லி அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.''”

"நடிகர் விஜய் பற்றி தி.மு.க. அதிகமாக யோசிக்கிறது போலிருக்கே?''”

"நடிகர் விஜய்யின் த.வெ.க., தமிழக அரசியலில் எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற சிந்தனை தி.மு.க.வுக்கு இருக்கிறது. அதனால் இதுபற்றி இரண்டுகட்ட சர்வேயை தி.மு.க. எடுத்திருக்கிறது. பென் அமைப்பு மூலம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயின்போது, விஜய்க்கு இந்தமுறை வாய்ப்பு தந்துதான் பார்ப்போம் என்று நினைக்கக்கூடிய வர்கள் எத்தனை சதம் பேர் என்று வட்ட வாரியாக கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை எப்படி தங்கள் பக்கம் திருப்புவது என்று தி.மு.க. யோசித்து வருகிறது. இந்த முறை சட்டமன்றத் தேர்தல் களத்தில் விஜய்யையும் சமாளிக்கவேண்டி இருப்பதால், த.வெக.வை எப்படி எல்லாம் துவம்சம் செய்வது என்கிற கணக்குகளை பரபரப்பாகப் போட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க.''”

"ஒரு முக்கியமான ஐ.ஏ.எஸ். அதிகாரி மறுபடியும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறாரே?''

’"ஆமாங்க தலைவரே, தமிழக அரசின் தொல்லியல்துறை ஆணையரும் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரியாகத் தன்னைக் காட்டிக் கொள்பவருமான உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மீது, தற்போது பரபரப்பான புகார்கள் எழுந்து கோட்டை வட்டாரத்தைப் பரபரப்பாக்கி வருகின்றன. ஏற்கனவே ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர்வாதத்துடன் சேர்ந்து உதயசந்திரன் மீதும் ஒருசேரப் புகார்கள் எழுந

"ஹலோ தலைவரே, டெல்லியின் ஏடாகூடமான நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்புத் திட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஜரூராக இறங்கியிருக்காரே.''”

"ஆமாம்பா, இதற்கான குழுக்களை தென் மாநிலங்களுக்கு முதல்வர் அனுப்பியிருக்கிறாரே?'

rr

’"உண்மைதாங்க தலைவரே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கூட்டு நடவடிக்கைக் குழுவில் பிற மாநில எம்.பி.க்களை இணைக்கவும், 22ஆம் தேதி, சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டத்திற்கு, பிற மாநில அரசியல் கட்சித் தலைவர்களை அழைக்கவும் தலா இரண்டுபேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார் ஸ்டாலின். அதன்படி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தயாநிதிமாறன் எம்.பி. ஆகிய இருவரையும் 11ஆம் தேதி ஒடிசாவுக்கு அனுப்பினார். அவர்கள் அங்கே நவீன் பட்நாயக்கை சந்தித்தனர். அதேபோல, அமைச்சர் பொன்முடியும், எம்.பி. அப்துல்லாவும், கர்நாடகா சென்று முதல்வர் சித்தராமையாவை யும், துணை முதல்வர் சிவக்குமாரையும் சந்தித்தனர். ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைக்க அமைச்சர் எ.வ.வேலுவும், எம்.பி. வில்சனும் அனுப்பப்பட்டனர். தெலுங்கானா மாநில தலைவர்களை அழைக்க அமைச்சர் நேருவும், கனிமொழி எம்.பி.யும் சென்றனர். இவர்கள் செல்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் முதல்வர் ஸ்டாலினும் தன் பங்குக்குப் பேசி கூட்டத்திற்கு அழைத்திருக் கிறார். இதையெல்லாம் டெல்லி அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.''”

"நடிகர் விஜய் பற்றி தி.மு.க. அதிகமாக யோசிக்கிறது போலிருக்கே?''”

"நடிகர் விஜய்யின் த.வெ.க., தமிழக அரசியலில் எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற சிந்தனை தி.மு.க.வுக்கு இருக்கிறது. அதனால் இதுபற்றி இரண்டுகட்ட சர்வேயை தி.மு.க. எடுத்திருக்கிறது. பென் அமைப்பு மூலம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயின்போது, விஜய்க்கு இந்தமுறை வாய்ப்பு தந்துதான் பார்ப்போம் என்று நினைக்கக்கூடிய வர்கள் எத்தனை சதம் பேர் என்று வட்ட வாரியாக கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை எப்படி தங்கள் பக்கம் திருப்புவது என்று தி.மு.க. யோசித்து வருகிறது. இந்த முறை சட்டமன்றத் தேர்தல் களத்தில் விஜய்யையும் சமாளிக்கவேண்டி இருப்பதால், த.வெக.வை எப்படி எல்லாம் துவம்சம் செய்வது என்கிற கணக்குகளை பரபரப்பாகப் போட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க.''”

"ஒரு முக்கியமான ஐ.ஏ.எஸ். அதிகாரி மறுபடியும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறாரே?''

’"ஆமாங்க தலைவரே, தமிழக அரசின் தொல்லியல்துறை ஆணையரும் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரியாகத் தன்னைக் காட்டிக் கொள்பவருமான உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மீது, தற்போது பரபரப்பான புகார்கள் எழுந்து கோட்டை வட்டாரத்தைப் பரபரப்பாக்கி வருகின்றன. ஏற்கனவே ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர்வாதத்துடன் சேர்ந்து உதயசந்திரன் மீதும் ஒருசேரப் புகார்கள் எழுந்து அடங்கின. அந்த நேரத்தில் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் சட்டம் ஒழுங்கு துறையிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் அவரை அதே பதவிக்குக் கொண்டுவந்தவர் உதயசந்திரன் தான் என்கிறார்கள். இப்போது மீண்டும் உதயச்சந்திரன் மீது பல்வேறு அதிகார துஷ் பிரயோகப் புகார்கள், எல்லா மட்டங்களிலும் ஒருசேர எழுந்திருப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''”

’"சரிப்பா, கோவை விமான நிலையத்தில் எடப்பாடியை பா.ஜ.க. தலைவர்கள் ரகசிய மாகச் சந்தித்து கூட்டணி பற்றி பேசி இருக்கிறார்களே?''”

rr

"வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு கோவை விமான நிலையம் வந்த எடப்பாடியை, பா.ஜ.க.வைச் சேர்ந்த மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனும், சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் சந்தித் தனர். அவர்களுடன் 40 நிமிடம் பேசியிருக் கிறார் எடப்பாடி. அப்போது அவர்கள், ’பா.ஜ.க. கூட்டணிக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் . எங்களுடன் இணைய உங்களுக்கு என்ன தயக்கம்? என்று கேட்க, எடப்பாடியோ பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் முஸ்லீம் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போய்விடும். அதுமட்டுமல்ல, அ.தி.மு.க.வில் இருக்கும் முஸ்லீம்கள் கூட எங்களை ஆதரிக்கமாட்டார்கள் என்று எங்கள் கட்சி சீனியர்கள் நினைக்கிறார்கள். அவர்களை மீறி எப்படி கூட்டணி வைக்கமுடியும்?’ என்றிருக்கிறார்.''”

"இதற்கு சி.பி.ஆர். என்ன சொன்னாராம்?''”

rr

“"எடப்பாடியின் வாதத்தைக் கேட்ட சி.பி.ஆரோ., ’"நாடாளுமன்றத் தேர்தலில் எங்க ளுடன் நீங்கள் கூட்டணி வைக்கவில்லையே. அப்படி இருந்தும் சிறுபான்மையினர் ஓட்டு உங்களுக்கு விழுந்ததா? அப்புறம் எதற்கு அவர் களை நினைத்து மருகுகிறீர்கள்? எங்களுடன் இணைந்தால் பா.ஜ.க. இந்து உணர்வாளர்களின் வாக்குகளும் உங்களுக்குக் கிடைக்குமே'’என்று சொல்லியிருக்கிறார். எடப்பாடியோ, "இப் போது எந்த முடிவையும் எடுக்க முடியாது. கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் வரும் போது கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் விவாதித்து முடிவை எடுப்போம்' என்றிருக்கிறார்.அப்போது, குறுக்கிட்ட நயினார் நாகேந்திரன், "விஜய், உங்களோடு கூட்டணி வைக்க வரு வார்னு நீங்கள் நம்பிக்கிட்டு இருக்கீங்க. தனது பலத்தை இதுவரை அவர் நிரூ பிக்காத நிலையில் அக்கட்சிக்கு முக்கியத் துவம் தராதீர்கள். தந்தீர்களானால் அ.தி.மு.க. வோட் பேங்கில் அவர்தான் பலமாவார்’என்று சொல்லியிருக்கிறார். அவர்களின் சந்திப்பில் நடந்த விசயங்களை இப்போது பகிரங்கமாகப் போட்டு உடைக் கிறார்கள் கமலாலயத் தரப்பினர்.''”

"வேலுமணி இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில், எடப் பாடியை சந்திப்பதை செங் கோட்டையன் தவிர்த்திருக் கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, கோவை யில் 10ஆம் தேதி நடந்த வேலுமணி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு எடப்பாடி இல்லாத நேரமாகப் பார்த்து தான் செங்கோட்டையன் அங்கே சென்றிருக் கிறார். இதேபோல் தங்கமணி, செல்லூர் ராஜு உள்ளிட்ட சிலரும் இதேபோல் எடப்பாடியைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டனர். அங்கு வந்த மாஜி மந்திரி ஒருவரிடம் மனம்திறந்த செங் கோட்டையன், ’அண்மையில் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் நடந்த கட்சியின் காணொலிக் கூட்டத்தின்போது என்னிடம் பேசாமலே புறக்கணித்தார் எடப்பாடி. இவர் இப்போது மட்டுமல்ல. ஜெ.’மறைந்த சூழலில் எடப்பாடி முதல்வரான போது, என்னை அமைச்சராக்க முனைந்தார் சசிகலா. அப்போது எடப்பாடி, இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களே இருக்கட்டும் என்று என்னை கவனமாகத் தவிர்த்தார். அடுத்து பள்ளிக் கல்வித்துறையை வைத்திருந்த பாண்டியராஜன், அப்போது ஓ.பி.எஸ்.. பக்கம் சென்றார். உடனே அந்தத் துறைக்கு என்னை அமைச்சராக்கும்படி தினகரன் எடப்பாடியிடம் வலியுறுத்தினார். அப்போதும் எடப்பாடி ரொம்பவே தயங்கினார். ஆனால் அதையும் மீறி என்னை அமைச்சராகக் கொண்டுவந்தவர் தின கரன்தான்’என்றும் தன் ஆதங்கத்தை வெளிப் படுத்தியிருக்கிறார். இப்போது எடப்பாடிக்கு எதிரான சூறாவளி அ.தி.மு.க. வில் வலுக்கத் தொடங்கிவிட்டது என்கிறார்கள்.''”

"இப்பவே கோவையில் அரசியல் களம் சூடாகிவிட்டதே?''”

"ஆமாங்க தலைவரே, அதுக்குக் காரணம், இந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மா.த. கோவை யில்தான் போட்டியிடப் போகிறாராம். இதையறிந்த தி.மு.க. தரப்பும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அவரை எப்படி யும் தோற்கடித்தே தீருவது என்று கங்கணம் கட்டியிருக்கின்றன. இதற்கிடையே மீண் டும் பா.ஜ.க.வின் மாநிலத் தலை வர் பதவியோ அல்லது ராஜ்ய சபா சீட்டோ கிடைக்கா விட்டால் அவர் தனியாக ஒரு கட்சியைத் தொடங்குவார் என்கிற டாக்கும் பா.ஜ.க.வி லேயே இருக்கிறது. அதே போல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் கோவை பகுதியிலேயே போட்டி யிடப் போகிறாராம். இந்த நிலையில் பா.ஜ.க. மா.த.வை தோற்கடித்து வானதியை ஜெயிக்க வைத்தால், பா.ஜ.க.வில் ஒரு உள்நாட்டுக் குழப்பம் ஏற்படும் என்று கணக்குப் போடும் அமைச்சர் செந்தில்பாலாஜி, அதற்கான ரூட்டுகளை இப்போதே போட ஆரம்பித்துவிட்டாராம். இதற்கிடையே, அ.தி.மு.க.வில் ஆதிக்கம் செய்ய நினைக்கும் சசிகலாவை அண்மைக்காலமாக மறதி நோய் ஆட்டிவைக்கிறதாம். அதனால் பலநேரம் தொடர்பில்லாமல் பேசுகிறாராம். அதனால் அவரை எப்படி முன்னெடுப்பது என்கிற குழப்பம் அ.தி.மு.க.வில் அவரை இணைக்க நினைப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதாம்.''”

"சரிப்பா, ராமநாதபுரம் தி.மு.க. பஞ்சா யத்து அறிவாலயம்வரை வந்திருக்கிறதே?''”

"தமிழக அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு நடத்திவரும் அடாவடிப் போக்கைக் கண்டித்து, ராம நாதபுரம் இளைஞரணி மா.செ.வான சம்பத்ராஜா, மாநில இளைஞரணியின் ஒப்புதலோடு பொதுக்கூட் டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். அதற்கு மாவட்ட அமைச்சர் ராஜ கண்ணப்ப னையும் தலைமைக்கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தையும் அவர் அழைத்திருந்தார். இதைக்கண்டு கட்சியின் மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான காதர்பாஷா முத்துராமலிங்கம் எரிச்சலானார். எனினும் அதை மறைத்துக்கொண்டு, "கூட்டத்தை எதற்கு அரண்மனை வாசலில் நடத்துற? அவ்வளவு கூட்டமா வரப்போகுது? கூட்டத்தை சந்தைப் பேட்டையில் நடத்து'ன்னு சொல்லியிருக்கிறார். சம்பத்ராஜாவோ, "அந்த அளவுக்கு கூட்டம் வந்துரும்' என்று சொன்னா ராம். இந்த நிலையில் அந்தக் கூட்டத்திற்கு பாதியில் வந்திருக்கிறார் காதர்பாஷா. அவருக்கு சம்பத் ராஜா, மரியாதைக்கு சால்வை அணி விக்க, காதர்பாஷா அதை உதறி எறிந்துவிட்டு, "இளைஞரணித் தலைமையோடு நீ நேரடித் தொடர்பில் இருந்தால் பெரிய ஆளா?' என்று சத்தம் போட்டிருக்கிறார். அவரது உதவியாளர் வாத்தியார் முருகனும் "நீ பதவியில் தொடரணு மா... வேண்டாமா?'’என மிரட்டியிருக்கிறார். இந்த விவகாரம் இப்போது அறிவாலயம்வரை சென்றிருக்கிறது.''”

"புதுக்கோட்டை தி.மு.க.வினர் கடும் கொந்தளிப்பில் இருக்காங்க போலயே?''

"ஆமாங்க தலைவரே, புதுக்கோட்டை மாநகர தி.மு.க. செயலாளராக இருந்த அமைச் சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான ஆ.செந்தில் மரணமடைந்ததால், அந்த பதவிக்கு செந்திலோட மகன் கணேஷை நியமிக்க நேரு முடிவெடுத்தாரு. கட்சி நிர்வாகிகள் சரின்னு சொன்னாலும், இந்தப் பதவியை எதிர்பார்த் திருந்த எம்.எம்.பாலு, வீரமணி, நைனாமுகமது, சுப.செந்தில் உள்பட பலரும் தனித்தனியாக முயற்சி பண்ணிட்டே இருந்தாங்க. இதுக்கிடை யில, கடந்த 11ஆம் தேதி, மாநிலங்களவை எம்.பி. எம்.எம்.அப்துல்லாவின் ஆதரவாளரான வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஸை மாநகர பொறுப்பு செயலாளரா துரைமுருகன் அறிவிச்சாரு. இந்நிலையில் 12ஆம் தேதி, வடக்கு மா செ. செல்லப்பாண்டி யன் தலைமையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட் டத்துல புதிய மாநகரப் பொறுப்பாளர் ராஜேஸும் கலந்துகிட்டார். கூட்டத்துல ராஜேஸ் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, பேசவிடாம மைக்கை நிறுத்தி மாநகர வட்டச் செயலாளர்கள் கலாட்டா பண்ணதோட, சாலை மறியலிலும் இறங்கியிருக்காங்க. இதுக் கிடையில மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு பூட்டுப்போட, போராட்டம் தீவிரமானதால மா.செ. செல்லப்பாண்டியனும், எம்.எல்.ஏ. முத்துராஜாவும் பேச்சுவார்த்தை நடத்தி அப் போதைக்கு கலைஞ்சு போக வச்சிருக்காங்க.. ஆனாலும் ராஜேஸை நீக்கும்வரை போராட் டம் தொடரும்னு சொல்லியிருக்காங்க.''

"ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தி.மு.க. எம்.எல்.ஏ. வையே மதிக்கவில்லை என்று சென்னை தி.மு.க.வினர் ஆதங்கப்படுகிறார்களே?''”

ss"அதுபற்றிச் சொல்றேங்க தலைவரே, சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ராணி அண்ணா நகரில் வாழத் தகுதியற்ற நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான 896 குடியிருப்புகளை அகற்றி, புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கு, பட் ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் நல சங்கத்தினர் 12ஆம் தேதி பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதே போல் கையெழுத்து இயக்கமும் நடந்தது. மேலும், மயிலாப்பூர் தொகுதிக்கு உட் பட்ட பட்டினப் பாக்கம், அம்பேத்கர் பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பழைய வீடு களை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித் தரவேண்டும் என்கிற கோரிக்கையுடன், மயிலாப் பூர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வேலு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சிவ்தாஸ் மீனாவை சந்திக்கப் போயி ருக்கிறார். இரண்டுநாள் சென்றும் அவரை சந்திக்க மறுத்துவிட்டாராம் சிவ்தாஸ் மீனா. இதனால், தி.மு.க. அரசுக்கு எதிராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கின்றனரா? என்கிற கோபம் மயிலை தி.மு.க.வினரிடம் எதிரொலிக்கிறது.''”

"தாம்பரம் சட்டம் -ஒழுங்கு விவகாரத்தில் திணறல் தெரிகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் எல்லைக்குள் பணிபுரிந்த 7 இன்ஸ்பெக்டர்களுக்கு சமீபத்தில் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்கியது தி.மு.க. அரசு. இதனால் அந்த 7 காவல்நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர்கள் பதவி கடந்த 3 மாதங்களாக காலியாக இருக்கிறது. அதே போல், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த க்ரைம் இன்ஸ்பெக்டர், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் இருவரும் பதவி உயர்வில் சென்று விட்டனர். இதனால் அங்கே சட்டம் ஒழுங்கை யார் கவனிப்பது? என்கிற குழப்பம் நிலவுகிறதாம். இது ஒருபுறம் இருக்க, மறை மலை நகர், பல்லாவரம், கூடுவாஞ்சேரி உள் ளிட்ட பல ஸ்டேசன்களில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இன்ஸ்பெக்டர்கள் விதியை மீறி பணிபுரிந்து வருகின்றனர். இவர் களை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக் கப்பட்டும் எவ்வித ஆக்சனும் எடுக்கப்பட வில்லை. இப்படிப் பட்ட கார ணங்களால் டிபார்ட்மெண்டிலே யே அதிருப்தி ஏற்பட் டிருக்கிறது. இதில் கவனம் செலுத்த வேண்டிய போலீஸ் கமிஷனர் தினேஷ் அபினவ் மோடக் கண்டுகொள்ளாததால், இது தொடர்பான பிரச்சனைகளை சட்ட மன்றக் கூட்டத்தில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்கிறார்கள்.''

"நானும் ஒரு தகவலை பகிர்ந்துக்கறேன் தலைவரே.. நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், தமிழ் காட்டுமிராண்டி மொழி என கூறியவரை திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கிறார்கள் என்றெல்லாம் தமிழ் மொழி குறித்த பெரியாரின் கருத்துக்களை எடுத்துக்காட்டிப் பேசி யிருந்தார். தர்மேந்திர பிரதான், தமிழர்களை நாகரிக மற்றவர்கள் எனக்கூறியதை அவைக்குறிப்பிலிருந்தே நீக்கும்படி செய்த கடுப்பில் பெரியாரின் கருத்துக்களை அவைக்குறிப்பில் ஏற்றுவதற்காகவே அவர் பேசியிருக் கிறார் என்கிறார்கள் அதன் பின்னணி தெரிந்தவர் கள். தமிழ் மொழியில் அறிவியலுக்கு ஒவ்வாத புராணக்கதைகள் மிகுந்திருப்பதால் அதனைக் கண்டித்த பெரியார், திருக்குறள் மாநாட்டை நடத்தியதையும், எழுத்துச் சீர்திருத்தம் செய்ததையும் சுட்டிக்காட்டி, பலரும் நிர்மலாவுக்கு எதிராக விமர்சனங்களை வைத்துள்ளனர்!''

nkn150325
இதையும் படியுங்கள்
Subscribe