கொடைக்கானல் மலையில் வலைவிரித்த பா.ஜ.க.! - கழகங்களின் வாக்குகள் கபளீரம்!

kodaikanal

பா.ஜ.க. ஆழமாக காலூன்றாத சில மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது. தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளுக்கு நிகராக தன்னை வளர்த்துக்கொள்ள அனைத்து அஸ்திரங்களையும் பிரயோகித்து வருகிறது பா.ஜ.க. அதன் ஒரு அம்சமாக ஜாதி அஸ்திரத்தையும் கையிலெடுத்துள்ளதாக திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலைப் பகுதிகளிலுள்ள மன்னவனூர், புதுபுத்தூர், பழம்புத்தூர், கூக்கல், பூம்பாறை, கிழவரை, வில்பட்டி, பூலத்தூர், பண்ணைக்காடு உள்பட சில மலைக்கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்களை தங்கள் கட்சி வலைக்குள் இழுக்கத்தான் சில அதிரடி அஸ்திரங்களை பா.ஜ.க. வீசியுள்ளது.

kodaikanal

இதுசம்பந்தமாக ஆதித் தமிழர் கட்சியின் கொடைக்கானல் ஒன்றிய செயலாளர் திருமுருகனிடம் கேட்டபோது, ""கொடைக்கானலிலுள்ள மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் வசிக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு மத

பா.ஜ.க. ஆழமாக காலூன்றாத சில மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது. தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளுக்கு நிகராக தன்னை வளர்த்துக்கொள்ள அனைத்து அஸ்திரங்களையும் பிரயோகித்து வருகிறது பா.ஜ.க. அதன் ஒரு அம்சமாக ஜாதி அஸ்திரத்தையும் கையிலெடுத்துள்ளதாக திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலைப் பகுதிகளிலுள்ள மன்னவனூர், புதுபுத்தூர், பழம்புத்தூர், கூக்கல், பூம்பாறை, கிழவரை, வில்பட்டி, பூலத்தூர், பண்ணைக்காடு உள்பட சில மலைக்கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்களை தங்கள் கட்சி வலைக்குள் இழுக்கத்தான் சில அதிரடி அஸ்திரங்களை பா.ஜ.க. வீசியுள்ளது.

kodaikanal

இதுசம்பந்தமாக ஆதித் தமிழர் கட்சியின் கொடைக்கானல் ஒன்றிய செயலாளர் திருமுருகனிடம் கேட்டபோது, ""கொடைக்கானலிலுள்ள மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் வசிக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு மதவாத கட்சியான பி.ஜே.பி. இதுவரை ஒரு துரும்பு அளவுகூட நன்மை செய்யவில்லை. முன்னாள் முதல்வர் கலைஞர்தான் எங்க தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு பல திட்டங்களையும் சலுகைகளையும் செய்துகொடுத்திருக்கிறார். அந்த நன்றியை எங்க சமூக மக்கள் இதுவரை மறக்கவில்லை.

தற்போது மாநில தலைவராக இருக்கக்கூடிய முருகன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மன்னவனூர், புதுபுத்தூர், கூக்கல் பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்களிடம் போய் உங்க சமூகத்தைச் சேர்ந்தவர்தான் தலைவராக இருக்கிறார். வரக்கூடிய தேர்தலில் முதலமைச்சராக வந்துவிடுவார். அதன்மூலம் உங்களின் அடிப்படை வசதிகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படும். பட்டா இல்லாத வீடுகளுக்குக்கூட உடனே பட்டா கொடுக்கப்படும். வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என ஆசைகாட்டி பி.ஜே.பி.யில் சேர்த்துக்கொண்டு சாதி அரசியல் செய்துவருகிறார்கள். இதன்மூலம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெரும் பாலானோர் பி.ஜே.பி.க்குத் தாவிவிட்டனர்'' என்று கூறினார்.

புதுபுத்தூரைச் சேர்ந்த ஆறுமுகமோ, ""வீடு இருந்தும்கூட எங்க பகுதிகளிலுள்ள பெரும்பாலான வீடுகளுக்கு பட்டா இல்லை. அதனால வீடுகளையும் சரிசெய்ய முடியலை. புதிதாக வீடுகட்டவும் முடியவில்லை. வங்கிகளிலும் லோன் தர மறுக்கிறார்கள் அதற்காகத்தான் தொடர்ந்து பல வருடங்களாக பட்டா கேட்டு போராடிவருகிறோம். தற்போது எங்க எம்.எல்.ஏ.வான ஐ.பி. செந்தில்குமாரிடமும் பட்டா கேட்டு வலியுறுத்தி வருகிறோம்.

இந்த நிலையில்தான் திடீரென பி.ஜே.பி.யினர் எங்க பகுதிக்கு வந்து நீங்கள் எல்லாம் பி.ஜே.பி.யில் சேர்ந்துவிட்டால் உங்களுக்கு இடது கையில் பட்டா வலது வலது கையில் கொடியைப் பிடியுங்கள். அதுமட்டுமல்ல உங்களுக்கு பொறுப்புகளும் பணமும் கொடுக்கிறோம். இப்படி பொறுப்புகளுக்கு வரக்கூடிய கட்சிக்காரர்களுக்கு மோடிஜி மூலம் கார்களும் கொடுக்கப்படும் என்று கூறி எங்கள் பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை பி.ஜே.பி.யில் சேரவைத்திருக்கிறார்கள். நானும் பி.ஜே.பி.யில் சேர்ந்துவிட்டேன். எங்களுக்கு யார் பட்டா கொடுக்கிறாங்களோ, அவங்களுக்குத்தான் நாங்கள் ஓட்டுப் போடு வோம்'' என்றார்.

இதுசம்பந்தமாக பழனி சட்டமன்ற உறுப் பினர் செந்தில்குமாரிடம் கேட்டபோது,“""சுப்ரீம் கோர்ட்டில் பட்டா சம்பந்தப்பட்ட வழக்கு உள்ளது. அதை மத்தியில் ஆளக்கூடிய பி.ஜே.பி. அரசும் மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை. தற்போது தேர்தலுக்காக பி.ஜே.பி.யினர் பொய்யான வாக்குறுதியைக் கூறி அந்த சமூக மக்களை ஏமாற்றிவருகிறார்கள். ஆனால் எங்க தலைவர் கலைஞர் ஆட்சியில்தான் அருத்ததியர் சமூக மக்களுக்காக 3 சதவீத இட ஒதுக்கீடு வாங்கிக்கொடுத்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மற்ற சமூக மக்களுக்கும் முன்னாள் தலைவரும் இன்னாள் தலைவருமான ஸ்டாலினும் தொடர்ந்து உழைத்துக்கொண்டு வருகிறார். எங்க ஓட்டு வங்கியை யாரும் பிரிக்கமுடியாது. வரக்கூடிய தேர்தலில் தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவார். அதன்மூலம் என் தொகுதியிலுள்ள ஒட்டுமொத்த மலைவாழ் மக்களுக்கும் உறுதியாக பட்டா கொடுக்கப்படும்'' என்று கூறினார்

இது சம்பந்தமாக பி.ஜே.பி. மாவட்ட தலைவர் கனகராஜிடம் கேட்டபோது, ""கொடைக்கானல் நகரம் முதல் மேல்மலை கீழ்மலைப் பகுதியிலுள்ள 8,500 குடும்பங்களுக்குமேல் கொரோனா காலத்தில் கேஸ் சிலிண்டர் கொடுத்தோம். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மூன்று மாதத்திற்கு சிலிண்டர் இலவசமாகவும் கொடுத்தோம். அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு மோடிஜியின் திட்டம் மூலம் நான்கு மாதத்திற்கு 2000 ரூபாய் வீதம் ஆறு ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொடுத்திருக் கிறோம். மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு லோன் வாங்கிக்கொடுத்திருக் கிறோம். கொரோனா காலத்தில் மட்டுமல்ல தொடர்ந்து மக்களுக்கு உதவிசெய்து வருவதன் மூலம்தான் ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் 200-க்கும் மேற்பட்டவர்கள் தாங்களாகவே இணைந்து எங்க கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். எங்க தலைவர் பெயரைச் சொல்லி ஜாதி அரசியல் செய்யவில்லை'' என்று கூறினார்.

ஜாதி, மத்திய அரசின் திட்டங்கள், மதவாதம் என்ற வலையைவிரித்து, கட்சி உறுப்பினர்கள் என்ற மீன்களை அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஜாக்கிரதை… ஜாக்கிரதை… மாநிலக் கட்சிகள் ஜாக்கிரதை.

nkn300121
இதையும் படியுங்கள்
Subscribe