மு.க.அழகிரியின் நிழலாக நீடிப்பவர், மதுரையின் முன்னாள் துணைமேயர் மன்னர். "யார் பிரிந்தாலும் அழகிரியை விட்டு நீ பிரியக்கூடாது' என்று கலைஞரே இவரிடம் கூறினாராம். ""மன்னன் என் மனசாட்சி'' என்று மு.க.அழகிரியே பலமுறை கூறியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.

நக்கீரன்: அழகிரி என்ன எதிர்பார்க்கிறார்?

மன்னன்: அவர் எந்தப் பொறுப்பும் கேட்கவில்லை. அவர் இறங்கி வரும்போது ஏன் எட்டி உதைக்கிறார்கள்? அதுதான் புரியவில்லை.

நக்கீரன்: அழகிரி தன்னை ஸ்டாலினுக்கு போட்டியாக நினைக்கிறாரா?

Advertisment

மன்னன்: தி.மு.க.வின் அரசியல் வாரிசு தம்பிதான் என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தவர் அழகிரி.

mannanநக்கீரன்: அழகிரியை எதிர்ப்பவர்கள் யார்?

மன்னன்: அவர் வந்தால் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதற்காக தற்போது தென்மாவட்டப் பொறுப்புகளில் உள்ள சிலர் சொல்லியிருக்கலாம். யார் எதைச் சொன்னாலும் கட்சிக்குத் தெரிய வேண்டாமா!

Advertisment

நக்கீரன்: அழகிரி விசுவாசிகளின் அடுத்த மூவ்.

மன்னன்: 21.08.18 அன்று மதுரைக்கு வருகிறார். யோசிப்போம். ஆனால் அண்ணனை விட்டுப் போகவே மாட்டோம். தி.மு.க.வை விட்டும் போக மாட்டோம்.

நக்கீரன்: தி.மு.க.வில் அழகிரி சேர்க்கப்படாவிட்டால்?

மன்னன்: எங்கள் ரத்தம் தி.மு.க. எங்கள் வழிகாட்டி அண்ணன் அழகிரி. எத்தகைய நிலை வந்தாலும் அண்ணனின் பின்னால் நிற்போம்.

நக்கீரன்: பா.ஜ.க. தலைவர்கள் அழகிரியோடு பேசிக்கொண்டிருக்கிறார்களா?

மன்னன்: அவர் மத்திய அமைச்சராக இருந்தவர். பேசத்தான் செய்வார்கள்.

நக்கீரன்: நீங்கள் எல்லாரும் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்கிறீர்களா?

மன்னன்: எங்களை பிரிக்காதீர்கள்.

நக்கீரன்: தமிழக பா.ஜ.க.வில் அழகிரிக்கு முக்கிய பொறுப்புத் தரப்போவதாக பரபரப்பு நிலவுகிறதே?

மன்னன்: இதே கேள்வியை அண்ணனின் ஆதரவாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். இது நடக்காது. கலைஞரின் மகன் திராவிடக் கோட்பாடுகளுக்கு எதிராக எப்போதும் நடக்கமாட்டார்.

நக்கீரன்: மு.க.அழகிரி பா.ஜ.கவுக்குப் போனால்?

மன்னன்: நான் உட்பட தி.மு.க.வின் எந்தத்தொண்டரும் பா.ஜ.க.வுக்கு போகமாட்டார்கள்.

-சந்திப்பு: அண்ணல்