புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த நடிகர் விஜய் சார்பாக த.வெ.க. நிர்வாகிகள் அனுமதி கேட்டது தொடர்பாக, "விஜய்யின் ரோடு ஷோ! பீதியில் புதுவை மக்கள்'” என்கிற தலைப்பில் கடந்த நவம்பர் 29- டிசம்பர் 2 ஆம் தேதி நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில் ரோடு ஷோவுக்குப் பதில் அரங்கக் கூட்டம் நடத்த அனுமதிதரலாமென்று காவல்துறை உயரதிகாரிகள் கூறியிருந்ததை வெளிப்படுத்தியிருந்தோம்.
நாம் கூறியிருந்தபடியே காவல் துறையினர், ரோடு ஷோவுக்கு அனுமதிதருவதால் வரும் சிக்கல்கள் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் விளக்கினர். அதோடு, பொதுநல அமைப்பு களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பி யதைப் பார்த்து ரங்கசாமி யோசிக்கத் துவங்கினார். கவர்னர் கைலாசநாதன் அலுவலகத்திலிருந்து முதலமைச்சர் என்ன நினைக்கிறார் என விசாரித்தனர், இதுவும் ரங்கசாமிக்குத் தெரிய வந்தது.
சுலபமாக அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த விஜய்க்கும் அவரது டீமுக்கும் இது அதிர்ச்சியைத் தந்தது. இதனால் த.வ
புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த நடிகர் விஜய் சார்பாக த.வெ.க. நிர்வாகிகள் அனுமதி கேட்டது தொடர்பாக, "விஜய்யின் ரோடு ஷோ! பீதியில் புதுவை மக்கள்'” என்கிற தலைப்பில் கடந்த நவம்பர் 29- டிசம்பர் 2 ஆம் தேதி நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில் ரோடு ஷோவுக்குப் பதில் அரங்கக் கூட்டம் நடத்த அனுமதிதரலாமென்று காவல்துறை உயரதிகாரிகள் கூறியிருந்ததை வெளிப்படுத்தியிருந்தோம்.
நாம் கூறியிருந்தபடியே காவல் துறையினர், ரோடு ஷோவுக்கு அனுமதிதருவதால் வரும் சிக்கல்கள் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் விளக்கினர். அதோடு, பொதுநல அமைப்பு களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பி யதைப் பார்த்து ரங்கசாமி யோசிக்கத் துவங்கினார். கவர்னர் கைலாசநாதன் அலுவலகத்திலிருந்து முதலமைச்சர் என்ன நினைக்கிறார் என விசாரித்தனர், இதுவும் ரங்கசாமிக்குத் தெரிய வந்தது.
சுலபமாக அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த விஜய்க்கும் அவரது டீமுக்கும் இது அதிர்ச்சியைத் தந்தது. இதனால் த.வெ.க. பொதுச்செயலாளரும், புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்ஸி ஆனந்த், புதுவை மாநில காவல்துறை தலைவரைச் சந்திக்க நவம்பர் 29-ஆம் தேதி வந்தார். அவர் விடுமுறையில் டெல்லிக்குச் சென்றிருப்பதை தெரிந்து கொள்ளாமலே அலுவலகத்துக்குச் சென்று ஏமாந்துபோய், செய்தி யாளர்களின் கேள்விகளுக்கு பதில்சொல்லாமல் எஸ்கேப் பானார்.
டிசம்பர் 1-ஆம் தேதி மீண்டும் டி.ஜி.பி.யை சந்திக்க வந்தவர், ஐ.ஜி. அஜித்குமார் சிங்களாவைத்தான் பார்க்க முடிந்தது. ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தருகிறோம் என்றார். இந்த பதிலால் அதிர்ச்சியானவர் இரவு 10 மணிக்கு முதலமைச்சரைச் சந்தித்து பேசினார். “ரோடு ஷோவின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய சிக்கலாகிடும்னு சொல்றாங்க, பா.ஜ.க.வும் அனுமதி தராதீங்கன்னு அழுத்தம் தருது''’எனச் சொன்னார் ரங்கசாமி. இந்த பதிலை எதிர்பார்க்காத ஆனந்த், இதனை அப்படியே விஜய்யிடம் தெரிவித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/vijay1-2025-12-05-10-20-42.jpg)
இதனைத் தன்னுடன் இருந்தவர்களிடம் விஜய் கூறியபோது, நான் அனுமதி வாங்கித் தர்றேன் எனச் சொல்லிக்கொண்டு சென்னையி லிருந்து புதுச்சேரிக்கு கிளம்பிவந்தார் த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா. டிசம்பர் 2-ஆம் தேதி த.வெ.க. நிர்வாகிகள் முதலமைச்சரைச் சந்தித்தனர். அனுமதி தரலாமா, வேண்டாமா என்பது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி. கலைவாணன் கலந்துகொண்ட கூட்டம் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடை பெற்றது.
இந்தக் கூட்டம் நடை பெறுவதற்கு முன்பே பா.ஜ.க.வைச் சேர்ந்த புதுவை சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம், "விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி தரக்கூடாது'' என தெரிவித்தார். "கூட்டத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம், எவ்வளவு பணம் கட்டணும்'' என கேட்டார் ஆதவ் அர்ஜுனா. "அதெல்லாம் தேவையில்லை, ரோடு ஷோவுக்கு அனுமதி தரமுடியாது'' என்றனர் காவல்துறை உயரதிகாரிகள். அதன்பின் ஆதவ் அர்ஜுனா கெஞ்சியபோதும், ரங்கசாமியும் சப்போர்ட்டாகப் பேசியும் அதிகாரிகள் மசியவில்லை. "திறந்த வெளிக் கூட்டம் நடத்திக்கொள்ளுங்கள், அதுவும் டிசம்பர் 5-ஆம் தேதிக்குப் பதில் வேறு தேதி, இடத்தை செலக்ட் செய்து சொல்லுங்கள்'' என்றனர், வேறு வழியில்லாமல் சரியென ஒப்புக்கொண்டது த.வெ.க.
இதுகுறித்து ஆளும்கட்சி பிரமுகர்களிடம் பேசியபோது, “"2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க.வோடு கூட்டணி வைக்க காய் நகர்த்திவந்தார் முதலமைச்சர் ரங்கசாமி. ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டதும் தரும் மூடில்தான் இருந்தார். ரங்கசாமி எப்படியும் அனுமதி தருவார், இதனால் என்.ஆர்.சி. - த.வெ.க. உறவு மலரும், தேர்தல் நெருக்கத்தில் தங்களைக் கழட்டிவிடவும் வாய்ப்புள்ளது என பயந்து, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி தரக்கூடாது என மறைமுகமாக பா.ஜ.க. நெருக்கடி தந்தது. தங்களது எண்ணத்தை சபாநாயகர் செல்வம் மூலமாக பொதுமக்கள் மத்தியிலும் தெரிவித்தது. பா.ஜ.க.வினரிடம் நான் பேசுகிறேன் எனச்சொல்லி ஆதவ் அர்ஜுனா மேற்கொண்ட சில நகர்வுகளையும் பா.ஜக. கண்டுகொள்ளவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காட்டி பயமுறுத்தியதால் என்.ஆராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை''’என்றார்கள்.
விஜய்யை தங்களது வழிக்குக் கொண்டுவர பா.ஜ.க. டெல்லி தலைமை முயலும்போது தானாக கிடைத்த வழியை ஏன் பா.ஜ.க. அடைக்கவேண்டும் என விசாரித்தபோது, "புதுவையில் இருப்பதே 30 எம்.எல்.ஏ. சீட்கள்தான். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரிய கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங் களிலும், மீதியுள்ள 15 இடங் களில் பா.ஜ.க.வும் போட்டியிட நினைக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியிலுள்ள பா.ஜ.க., புதுவையில் இல்லை எனச் சொல்லியுள்ளது. தேர்தல் நெருக்கத்தில் ஒருவேளை அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொண்டாலும் மூன்று இடங்களைத் தந்தால் போதுமென கணக்குப்போட்டு வைத்துள்ளது.
இந்நிலையில் ரங்கசாமி விருப்பப்படி த.வெ.க. கூட்டணிக்கு வந்தால், அக்கட்சி 10 சீட்களைக் கேட்கும், அதற்கு 5 இடங்களாவது தரவேண்டியிருக்கும், மீதியிருக்கும் குறைவான இடங்களில் போட்டியிட்டால் தங்களது முதலமைச்சர் நாற்காலி கனவு கலைந்துவிடும் என ஆலோசித்தே புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- த.வெ.க.வை சேரவிடக்கூடாது என காய் நகர்த்திவருகிறது பா.ஜ.க.'' என்றார்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us