ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு மூலம் எடப் பாடி பழனிச்சாமிக்கு பா.ஜ.க. செக் வைத்திருக் கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
கடந்த பொதுத்தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், அ.தி. மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் ஜி.கே.வாச னின் த.மா.கா.வும் களமிறங்கின. காங் கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெராவும், த.மா.கா. சார்பில் யுவராஜாவும் போட்டியிட, சுமார் 9,000 வாக்குகள் வித்தி யாசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
திடீர் மாரடைப்பால் கடந்த 4-ந்தேதி மரணமடைந்தார் திருமகன். தற்போது இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். ஜனவரி 31-ல் மனுத்தாக்கல் ஆரம்பம். பிப்ரவரி 27-ல் வாக்குப் பதிவும், மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக் கையும் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்தபோது, ""கட்சிக் குள் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸுக்கிடையே அதிகார போட்டி நடந்துவரும் நிலையில் இது தொடர் பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை போய், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பிற்கு பிறகுதான் இடைத்தேர்தல் நடக்கும் என எடப்பாடியும், பன்னீரும் நம்பிக்கையுடன் இருந்தனர். அதனால், இடைத்தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு, தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவேண் டும் என டெல்லி லாபிகள் மூலம் தொடர் முயற்சி யில் இருந்துவந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே திடீரென இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் எடப்பாடி பழனிச்சாமி செம அப்செட்டாகி யிருக்கிறார்''’என்கிறார் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஒருவர்.
எடப்பாடி அப்செட்டாவதற்கு என்ன காரணம் என அவர் தரப்பிடமே நாம் விசாரித்த போது,’’""அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை, அதுவும் தனது தலைமையாக இருக்க வேண்டுமென்றுதான் ஓ.பி.எஸ்.ஸுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. ஆனால், இப்போதுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்.ஸும் என இரட்டை தலைமையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வைத்திருப்பது தான் நடைமுறையில் இருக்கிறது.
இந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது வேட்பாளரை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. அதற்கு சாதகமாக உச்சநீதிமன்றத் தில் தீர்ப்பு வரும் என்பதும் அவரது யோச னையாக இருந்தது. அதனால்தான் கடந்த வாரம் இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி யிடம் ஜி.கே.வாசன் பேசியபோது, த.மா.கா. போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டதற்கு க்ரீன் சிக்னல் தரவில்லை எடப்பாடி. த.மா.கா. போட்டியிட்டால் தி.மு.க. கூட்டணி ஈசியாக ஜெயித்து விடும். அதனால் எந்த சூழலிலும் அ.தி.மு.க.தான் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
அ.தி.மு.க ஜெயித்தால், எடப் பாடியின் இமேஜ் உயர்ந்து, ஓ.பி.எஸ். ஸுக்கும் பா.ஜ. க.வுக்கும் ஒரே சமயத்தில் செக் வைக்க முடியும் என அவரை ஆத ரிக்கும் சீனியர்கள் தூபம் போட்டிருந் தனர். எடப்பாடி யும் அதைத்தான் நம்பி மகிழ்ந்திருந் தார். ஆனால், தீர்ப்பு வருவதற்கு முன்பே இடைத் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால், இரட்டை தலைமை சிஸ்டத்தில்தான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமோ என்ற அச்சம்தான் அவரை அப்செட்டாக்கியிருக்கிறது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கும் பி-பார்ம் படிவத்தில் ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்.ஸும் இணைந்து கையெழுத்திட வேண்டும் என்பதால் எடப் பாடி செம அப்செட்'' என்று சுட்டிக்காட்டு கிறார் முன்னாள் அமைச்சர். இதற்கிடையே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியிடம் மீண்டும் விவாதித்துள்ளார் ஜி.கே.வாசன். இதுகுறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி.
அந்த ஆலோசனையில், ’கொங்கு மண்டல வி.ஐ.பி.க்களான முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி யும், வேலுமணியும், ’ஒற்றைத் தலைமைக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நிலையில் இடைத்தேர்தலில் நாம் ரிஸ்க் எடுப்பது தேவையற்றது. எப்படிப் பார்த்தாலும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமான மனநிலையில்தான் மக்கள் இருப்பார்கள். அப்படியிருக்கையில் அ.தி.மு.க.தான் போட்டியிட வேண்டும் என நினைப்பது சரியாக இருக்காது. கூட்டணி தர்மத்தை மதித்து த.மா.கா.வுக்கு ஒதுக்கிவிடலாம். கட்சி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு தீர்க்கமான முடிவை எடுப் பது நல்லது’ என எடப்பாடியிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்ற வர்கள், ’கடந்த பொதுத்தேர்தலில் த.மா.கா. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது த.மா.கா.வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் இடைத் தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் அக்கட்சி போட்டியிட வேண்டும். அப்போது, சின்னத்திற்காக நீங்களும் ஓ.பி.எஸ்.ஸும் இணைந்து கையெழுத்திட்டால்தான் த.மா.கா.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும். அப்படிக் கையெழுத்திட் டால் இரட்டைத் தலைமையை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக இமேஜ் வரும் என சொல்லியியிருக் கிறார்கள். இதனால் குழம்பிப் போயிருக்கிறார் எடப்பாடி.
இப்படிப்பட்ட சூழலில், கட்சியில் உள்ள தனது ஆதரவு மா.செ.க்கள் கூட்டத்தை 23-ந்தேதி கூட்டி இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்க ஓ.பி.எஸ். திட்டமிட்டிருப்பதால், எடப்பாடியும் தனது ஆதரவு மா.செ.க்களையும், எம்.எல்.ஏ.க்களையும் கூட்டி விவாதிக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஜி.கே.வாசனின் த.மா.கா. தரப்பில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என த.மா.கா.வின் பொதுச்செய லாளர் முனவர் பாஷாவிடம் நாம் பேசியபோது, ‘""அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா. இருக்கிறது. இந்த கூட் டணி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தலைவர் ஜி.கே.வாசன் விரும்பு கிறார். கடந்த தேர்தலில் எங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் மீண்டும் எங்களுக்கே வாய்ப்பு வழங்க வேண் டும் என கேட் பது எங்களின் உரிமை. அது குறித்து அ.தி.மு.க. தலைமையிடம் எங்கள் தலைவர் பேசியிருக்கிறார். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். இரட்டை இலை சின்னம் பெறுவதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமெனில், சுயேட்சை சின்னத்தில் போட்டியிட த.மா.கா. தயங்காது’''’என்கிறார் முனவர்பாஷா.
இந்தநிலையில், பா.ஜ.க.வும் இந்த இடைத்தேர்தலை சீரியஸாக கவனிக்கிறது. தேர்தலை எதிர்கொள்வதற்காக லோக்கல் தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துள்ளார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. கடலூரில் நடக்கும் பா.ஜ.க. மாநில செயற்குழு மற்றும் அலுவலக நிர்வாகிகளின் கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்படவிருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, ""இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிட விரும்புகிறது. இதனை கட்சியின் மேலிடத்திற்கும் தெரிவித்துவிட் டார். அ.தி.மு.க. கட்சி பஞ்சாயத்தில் ஒருவேளை எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை யில் எடப்பாடி துள்ளிக் குதிப்பார். அதனால், தீர்ப்பு வருவதற்கு முன்பே இடைத்தேர்தலை நடத்தும்போது, கட்சியின் சின்னம் விவகாரத்தினால் தன்னிச்சையாக எடப்பாடியால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவரை இயங்கவிடாமல் செக் வைத்து விடலாம் என்கிற திட்டத்தில்தான் தேர்தல் தேதியை குறுகிய காலத்தில் அறிவிக்க வைத்திருக்கிறது எங்கள் தேசிய தலைமை. அதாவது, அ.தி. மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என விரும்புகிறார் அண்ணாமலை. இந்த தொகுதி ஏற்கனவே த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, பா.ஜ.க. போட்டியிட விரும்பி னால் எங்களுக்காக ஜி.கே.வாசன் விட்டுக் கொடுத்து விடுவார்.
அதேசமயம், பா.ஜ.க. மீதுள்ள கோபத்தில் வீம்புக்காக இந்த தேர்தலை எடப்பாடி சந்திக்கும் வகையில் வேட்பாளரை நிறுத்தினால், ஓ.பி.எஸ்., பா.ஜ.க .வை ஆதரிப்பார். எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.வில் இருக்கும் கொங்கு வேளாளர்கள் அல்லாத சமூகத்தினரின் வாக்குகளை ஓ.பி.எஸ். மூலம் பா.ஜ.க. திரட்டும். அதனால், இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி இருப்பதால், பா.ஜ.க. வுக்கு விட்டுத்தருவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை. இப் படிப்பட்ட சிக்கலை உருவாக்கி எடப்பாடிக்கு செக் வைக்கத்தான் இடைத்தேர்தல் உடனடியாக அறிவிக்கபட்டிருக்கிறது. அதனால், இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும். இதுகுறித்து, மாநில செயற்குழுவில் விரிவாக விவாதிப்போம்'' என்று சுட்டிக் காட்டுகிறார்கள் பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள்.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் பொறியில் சிக்கிக்கொள்ளாமல், கூட்டணி தர்மத்தை மதித்து த.மா.கா.வுக்கு ஒதுக்குகிறோம் என அறிவித்து விடுங்கள். த.மா.கா. போட்டியிட்டாலும் பா.ஜ.க. போட்டியிட்டாலும் நமக்கு கவ லையில்லை. வேடிக்கை மட்டும் நாம் பார்க்கலாம் என்று எடப் பாடிக்கு அட்வைஸ் பண்ணியிருக் கிறார்கள் அவருக்கு நெருக்கமான அரசியல் வியூக வகுப்பாளர்கள்.
_____________
இறுதிச் சுற்று!
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி விலக வலியுறுத்தி கவர்னருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை ஜன. 19-ம் தேதி காலை, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடத்தியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான வழக்கறிஞர் சிவராஜசேகரன் ஏற்பாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில், கவர்னருக்கு எதிரான முழக்கங்கள் எதிரொலித்தன. ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் பலரும், கவர்னரின் எதேச்சதிகாரப் போக்கினைச் சுட்டிக்காட்டினார்கள். "பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், கவர்னர் மூலம் மத்திய அரசு சிக்கலை உருவாக்குகிறது' என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
-இளையர்
படம்: ஸ்டாலின்