முதல்வரின் எச்சரிக்கையைக் கண்டு பா.ஜ.க. அலறுகிறது! -கனிமொழி ஆவேசம்!

ss

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தனது ஆக்ரோச சாட்டையை சுழற்றியபடி இருக்கும் முதல்வர் ஸ்டாலின், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்திருக்கிறார். இந்தச் சூழலில், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையையும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையையும் அரசியல் காரணங்களுக்காகவே தி.மு.க. எதிர்க்கிறது என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டுகிறாரே?

kk

"தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் -இதுதான் ஒரே இலக்கு!' என நமது முதல்வர் கையில் எடுத்திருப்பது வெறும் வார்த்தை அல்ல, தமிழ் மொழியையும், தமிழினத்தை யும் காப்பாற்றுவதற்கான உறுதிமொழி அது. அதன் தாக்கத் தையும் வீரியத்தையும் எதிர்கொள்ள முடியாமல்தான், அரசியல் எனச் சொல்லி நழுவிச் செல்கிறது ஒன்றிய அரசு. தி.மு.க.வின் வரலாறும், களப் போராட்டங் களும் ஒன்றிய அமைச்சருக்குத் தெரியாது. அதனால்தான் உணர்வுரீதியான, மொழி ரீதியான உரிமை சார்ந்த எங்களின் எதிர்ப்பினை அரசியல் காரணம் எனச் சொல்கிறார். அரசியலுக்காக இதை நாங்கள் செய்யவேண்டிய எந்த அவசியமுமில்லை. ஏனெனில், தமிழ் நாட்டின் அரசியல் களத்தில் பா.ஜ.க.வுக்கு இடமே இல்லை என்கிறபோது தி.மு.க. எதற்காக அரசியல் செய்யப்போகிறது? அமைச்சரின் குற்றச்சாட்டு ஒரு பிதற்றல். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாநில உரிமை களுக்காக குரல் கொடுப்பதும் போராடுவதும் தி.மு.க. மட்டும் தான். அதனால், அரசியலுக்காக போராட வேண்டிய தேவை தி.மு.க.வுக்கு இல்லை. மக்களின் உரிமைகளுக்காக போராடுவதுதான் அரசியல் எனில், அந்த அரசியலை செய்யவும் முதல்வர் தயங்கமாட்டார்.

இந்தியை தமிழர்கள் கற்றுக்கொள்வதில்

இந்தியை தமிழர்கள் கற்றுக்கொள்வதில் தி.மு.க.வுக்கு என்ன பிரச்சினை?

இந்தியை மட்டுமல்ல, எந்த ஒரு மொழி யையும் புதிதாக தமிழர்கள் கற்றுக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், மும்மொழிக் கொள்கை என்கிற பேரில், தங்களிடமுள்ள அதி காரத்தைப் பயன்படுத்தி இந்தியைத் திணிக்கிற போதுதான் அதனை எதிர்க்க வேண்டியதிருக்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தராமல், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண் டால்தான் தமிழகத்திற்கான நிதியை தருவோம் என ஒன்றிய அமைச்சர் மிரட்டிப் பார்க்கிறார். இவரது மிரட்டல், இந்தியை திணிப்பதாகத்தானே இருக் கிறது. அவரது மிரட்டலை மானமும், சுய மரியாதையுமுள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதனால்தான் நம்முடைய முதல்வர் ஸ்டாலின், எங்கள் தமிழ்நாட்டு பிள்ளைகள், எந்த மொழியில் படிக்க வேண்டும்? எத்தனை மொழிகளைப் படிக்க வேண்டும் என நீ (பா.ஜ.க.) நிர்ணயம் செய்யாதே என எச்சரிக்கிறார். மொழியைக் கற்றுக்கொள்வதில் தி.மு.க.வுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; ஆனால், வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்து இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதுதான் பிரச்சினை. டெல்லியின் மிரட்டலுக்குப் பணியக்கூடிய தலைவர், நம்முடைய முதல்வர் கிடையாது.

இந்தியை கற்றுக்கொள்வதினால் தமிழர் களின் முன்னேற்றம் உலக அளவில் இருக்கும். அதனை தி.மு.க. அரசு தடுக்கிறது என்கிறார்களே?

ஒரு மொழியை கற்றுக்கொள்வது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. இந்தியை படித்தால்தான் முன்னேற்றம் எனச் சொல்வது நகைப்பிற்குரிய விசயமாகப்படுகிறது. இன்றைக்கு தமிழர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தொழில் நுட்ப வல்லுநர்களாக, விஞ்ஞானிகளாக, தொழில் முனைவோர்களாக மிக உயர்ந்த இடங்களில் பணியாற்றிவருகிறார்கள். அவர்கள் யாருக்கும் இந்தி தெரியாது. அவர்கள் உயரவில்லையா? உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணனை நியமித்திருக்கிறார் நம் முதல்வர். ஒடிசா அரசின் ஆலோசகராகவும் தேர்தல் ஆணையராகவும் இதற்கு முன்பு பணியாற்றியவர் அவர். அவருக்கு இந்தி தெரியாது. ஆனால், ஒடிசாவின் வளர்ச்சிக்கு ஒரு தமிழராக இருந்து ஆக்கப்பூர்வமான வழிகளைச் சொன்னவர் அவர். அதனால் இந்தி மொழிக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் தொடர்பு இருந்தது இல்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தி மொழி அவசியம் கிடையாது. இன்றைய சூழலில், தொலைக்காட்சித் தொடரை பார்ப்பதற்காகத்தான் இந்தியை கற்கிறார்கள். அதற்கு மட்டும்தான் இந்தி மொழி உதவுகிறது.

தொகுதிச் சீரமைப்பின் மூலம் அதன் எல்லைகளை ஒழுங்குபடுத்துவதும் ஒரேசீராக உருவாக்குவதும் ஆரோக்கியமானதுதானே?

kk

தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகையின் அடிப்படையில் செய்ய ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் சீரமைப்பு செய்வது, தமிழ்நாட்டிற்கு மிக ஆபத்தானது. பா.ஜ.க.வின் சூழ்ச்சிகளில் இந்த திட்டமும் ஒன்று. அதாவது, சுதந்திரமடைந்ததற்கு பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை உருவாக்குவதில் மக்கள் தொகை அடிப்படையாக இருந்தது. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை (நாம் இருவர் நமக்கு இருவர் திட்டம்) மறைந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் நடைமுறைப்படுத்தியிருந்ததால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் முழுமையாக நிறைவேறிய பிறகுதான் தொகுதி மறுசீரமைப்பை முன்னெடுக்க வேண்டும் என்பதைக் கொண்டுவந்தார். இதற்காக அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கேற்ப, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன. அதற்கான கால அவகாசம் 2026-ல் முடிவடைவதால், மறுசீரமைப்பை மக்கள் தொகையின் அடிப்படையில் நடத்த ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. இதன்படி நடந்தால், தமிழ்நாட்டிலுள்ள 39 எம்.பி.க்களின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும். காரணம், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால், உ.பி., ம.பி., ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல வடமாநிலங்கள் இத்திட்டத்தை நிறைவேற்ற வில்லை. அதனால், அந்த மாநிலத்தின் மக்கள் தொகை ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது. இதனால், தொகுதி மறு சீரமைப்பில் அந்த மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரிக்கும்.

அதேசமயம், தமிழ்நாட்டில் அதன் எண்ணிக்கையும், நாடாளுமன்றத்திலும் நம் வலிமையும் குறையும். இதனால், எந்த உரிமை யையும் நாடாளுமன்றத்தில் நாம் எழுப்பமுடியாது. தமிழ்நாட்டில் போதுமான பிரதிநிதிகள் இல்லை எனில் நமக்கான மரியாதை டெல்லியில் இருக்காது. அப்படி ஒரு சூழல் உரு வானால் நமது உரிமைகளை எப்படி கேட்க முடியும்? போதுமான பிரதி நிதித்துவம் தற்போது இருக்கும் போதே நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். பிரதிநிதித்துவம் குறைந்து போனால்? அவ்வளவு தான். மக்கள் தொகை அடிப் படையிலான மறுசீரமைப்பு என்பது வடக்கு வாழும்; தெற்கு சாகும். அதனால்தான், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை எதிர்க் கிறோம். ஒன்றிய அரசு திட்ட மிடுவது தென்மாநிலங்களை ஒழிக்கும் சூழ்ச்சி.

தொகுதி மறுசீரமைப்பு நடக்காத போது தி.மு.க. ஏன் பதறுகிறது என்று பா.ஜ.க. தலைவர்களும், தமிழ்நாட் டின் எண்ணிக்கை குறையாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதியாகக் கூறியிரு க்கிறார்களே?

தமிழ்நாட்டின் நாடாளு மன்ற எண்ணிக்கை குறையாது என கூறுகிற அமித்ஷா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் எம்.பி.க்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தமாட் டோம் என கூற முடியுமா? அவரால் முடியாது. ஏன்னா, அதைத் தான் செய்யப் போகிறார் கள். இதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டிய திருக்கிறது. அதாவது, தொகுதி மறுசீரமைப்பு பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது ஒன்றிய அரசு. அதுமட்டுமல்ல, மகளிர் மசோதா குறித்த விவாதம் வந்தபோது, தொகுதி மறு சீரமைப்பை நடத்தி முடித்த பிறகு மகளிர் மசோதா செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆக, தொகுதி மறுசீரமைப்பை நடத்தப்போகி றார்கள் என்பது உறுதியாகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்துதான், வரும்முன் காப்போம் பாணியில் அதனைத் தடுக்கும் வகையில், இப்போதே கேள்வி கேட்கிறார் நம்முடைய முதலமைச்சர். அவரின் நேர்மையான கேள்வி களுக்கு பா.ஜ.க.வினரால் பதில் சொல்ல முடியவில்லை, தடுமாறுகிறார்கள்.

ஒன்றிய அரசின் திட்டத்தைத் தடுப்பதில் தி.மு.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை?

தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய அரசின் சதியை முறியடிக்க, அவர்களின் மறைமுகத் திட்டத்தை முதல்கட்டமாக அம்பலப்படுத்தியதுடன் கடுமை யாக எதிர்வினையாற்றியிருக்கிறார் முதல்வர். அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து தமிழ்நாட்டின் எதிர்ப்பைக் காட்டி யிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன் களையும், எதிர்காலத்தையும், யாருக் காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமை களுக்காக ஒன்றுபடுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், இதுதான் ஒரே இலக்கு என்பதே நம் முதல்வரின் முழக்கம். அந்த முழக்கம், ஒன்றிய அரசை பணிய வைக்கும். முதலமைச்சரின் பிரகடனத்தையும் தி.மு.க.வின் நகர்வு களையும் கண்டு பா.ஜ.க. அலறத்தொடங்கி யிருக்கிறது.

nkn080325
இதையும் படியுங்கள்
Subscribe