Advertisment

பா.ஜ.க. அவுட்! த.வெ.க. இன்! புதுச்சேரி முதல்வரின் புது ரூட்!

sdf

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. இணைந்து கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சராக ரங்கசாமியும், சபா நாயகராக செல்வம், உள்துறை அமைச்ச ராக நமச்சிவாயம் ஆகியோர் உள்ளனர். தற்போது என்.ஆர்.காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்குமிடையே முட்டல்மோதல் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக, முதல்வர் ரங்கசாமியை மிரட்டுவதற்காக, சி.பி.ஐ. ரெய்டு தொடர்ச்சியாக நடத்தப் படுகிறது. கெஜ்ரிவாலை சிறையிலடைத்தது போல் உங்களையும் அடைப்போமென்று பா.ஜ.க. மிரட்டுகிறது.

Advertisment

ds

இதுகுறித்து புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை. ரங்கசாமியை முதலமைச்சராக்கவே வாக்களித்தனர். ஆட்சியமைக்கும்போது பா.ஜ.க.வுக்கு சபாநாயகர் பதவி, இரண்டு அமைச்சர் பதவிகளைத் தந்தார் முதலமைச்சர் ரங்கசாமி. பதவிக்கு வந்ததும் தனிஆவர்த்தனம் செய்யத் துவங்கினர். 2026, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற வே

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. இணைந்து கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சராக ரங்கசாமியும், சபா நாயகராக செல்வம், உள்துறை அமைச்ச ராக நமச்சிவாயம் ஆகியோர் உள்ளனர். தற்போது என்.ஆர்.காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்குமிடையே முட்டல்மோதல் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக, முதல்வர் ரங்கசாமியை மிரட்டுவதற்காக, சி.பி.ஐ. ரெய்டு தொடர்ச்சியாக நடத்தப் படுகிறது. கெஜ்ரிவாலை சிறையிலடைத்தது போல் உங்களையும் அடைப்போமென்று பா.ஜ.க. மிரட்டுகிறது.

Advertisment

ds

இதுகுறித்து புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை. ரங்கசாமியை முதலமைச்சராக்கவே வாக்களித்தனர். ஆட்சியமைக்கும்போது பா.ஜ.க.வுக்கு சபாநாயகர் பதவி, இரண்டு அமைச்சர் பதவிகளைத் தந்தார் முதலமைச்சர் ரங்கசாமி. பதவிக்கு வந்ததும் தனிஆவர்த்தனம் செய்யத் துவங்கினர். 2026, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற வேண்டுமென்று டெல்லி பா.ஜ.க. காய்நகர்த்துகிறது. இதற்காக லெப்டினன்ட் கவர்னராக தமிழிசை சௌந்தர்ராஜன், சி.பி.ராதாகிருஷ்ணனை அடுத்தடுத்து நியமித்து, முதல்வரை டம்மியாக்கி, கவர்னர்களே நிர்வாகம் செய்தனர். நியமன எம்.எல்.ஏக்கள் என்ற பெயரிலும் 3 பா.ஜ.க.வினரை கவர்னர் நியமித்தார். இதையெல்லாம் வெளிப்படையாக எதிர்க்காமல் அமைதிகாத்தார் முதல்வர்.

இதையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், பா.ஜ.க. சார்பில் உள்துறை அமைச்சரான நமச்சிவா யத்தை களமிறக்க தன்னிச்சையாக முடிவெடுத்தது பா.ஜ.க. அதையும் தடுக்கமுடியாமல் கைபிசைந்தார் ரங்கசாமி. காங்கிரஸ் வைத்தியலிங்கத்திடம் 1.2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் நமச்சிவாயம். இதில், மொத்தமுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில், ஏனாம், இந்திராநகரில் மட்டுமே பா.ஜ.க. அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. இதிலிருந்தே இந்த கூட்டணிமீது மக்கள் அதிருப்தியாக இருப்பதைப் புரிந்துகொண்ட ரங்கசாமி, இனியும் இக்கூட்டணியைத் தொடர்வது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தார். பா.ஜ.க. தலைமைக்கு மத்திய உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட்டில், ரங்கசாமிக்கு செல்வாக்கு குறையவில்லை, பா.ஜ.க.வோ மாநிலத்தில் வளரவில்லை, உறுப்பினர் சேர்க்கையும் மோசமென்று குறிப்பிட்டு, கூட்டணி முறிந்தால் பா.ஜ.க.வுக்கு தான் நட்டம், இப்போதுள்ள எம்.எல்.ஏ.க்களும் தேறமாட்டார்களென்று தெரிவித்தது.

Advertisment

sss

ரிப்போர்ட்டை பார்த்ததுமே உதற லெடுத்த பா.ஜ.க. தலைமை, முதல்வர் நாற்காலியே வேண்டாம், கூட்டணியை மட்டும் தொடர்வோமென்ற முடிவெடுத்து, பிரதமர் மோடியின் நெருங்கிய ஆலோசகரான கைலாசநாதனை புதுச்சேரிக்கு கவர்னராக்கியது. அதேபோல், கூட்டணி தொடரவேண்டுமென்று பா.ஜ.க. தூதராக ரங்கசாமியை சந்தித்துப் பேசினார் வாசன். நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனும் பேசினார். இப்போது வலுவாகவுள்ள தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியை வலுவிழக்கச் செய்வது எங்கள் வேலை, நம் கூட்டணியை வலுவாக்குங்கள் என்று பேசிப்பார்த்தார்கள். ஆனால் ரங்கசாமியோ எந்த பிடியும் கொடுக்காமல் பேசியனுப்பினார். இதற்காக, முதலமைச்சர் மீது புதுச்சேரி அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் மணிகண்டன் தந்த புகாரை கையிலெடுத்துள்ளார் கவர்னர்'' என்கிறார்கள்.

புகார் குறித்து மணிகண்டனிடம் நாம் கேட்டபோது, "மாநிலத்தில் 6 மதுபானத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி தரப்பட்டுள் ளது. இந்த அனுமதி தருவதற்காக முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார்கள். இதனை விசாரிக்க வேண்டுமென்று புகார் அனுப்பியுள்ளேன். விசாரிக்கவில்லை யென்றால் நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளேன்'' என்றார்.

இந்த புகாரை வைத்துதான் ரங்கசாமியை மிரட்டிப்பார்க்கிறது பா.ஜ.க.

என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசியபோது, "பா.ஜ.க.வின் சித்து விளையாட்டு பெரிய வருக்கு (ரங்கசாமி) நன்றாகத் தெரியும். 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி போட்டால் தோல்வி நிச்சயமென்று ரிப் போர்ட் வந்துள்ளது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அதில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவேண்டுமென்று பா.ஜ.க.வுக்கு நெருக்கடி தரும்விதமாக தீர்மானம் ஒன்றை போடவுள்ளார். அதனை பா.ஜ.க. கண்டிப்பாக ஒப்புக்கொள்ளாது. அப்படி ஒப்புக்கொள்ளாததால் கூட்டணியில் தொடர வாய்ப்பில்லையென்று சொல்வார். இதனால் கூட்டணி உடைவதற்கு வாய்ப்புள்ளது. கூட் டணி உடைந்தாலும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மறைமுக ஏற்பாடுகளையும் செய்துவருகிறார்'' என்கிறார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுடன் அ.தி.மு.க.வையும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் இணைத்து, கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிடுகிறார் ரங்கசாமி. அ.தி.மு.க.வில் இதற்கு இரு வேறு கருத்துக்கள் உள்ளன. அ.தி.மு.க. வரவில்லையென்றாலும் பரவாயில்லை, விஜய் வந்தால் போதும்... இளைஞர்களின் வாக்குகளைக் கொத்தாக அள்ளிவிடலாமென்று திட்டமிடும் ரங்கசாமி, தங்களுடன் கூட்டணி வைத்தால் மந்திரி சபையில் இடம் தரப்படுமென்று விஜய்க்கு வாக்குறுதி தந்துள்ளாராம்.

புதுச்சேரி அரசியலில் புது ரத்தம் பாயுமா?

nkn021124
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe