பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை ஒரு HONEY TRAP SPY என்கிற பரபரப்பான புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரைக் கிளப்புபவர் காயத்ரி ரகுராம். பா.ஜ.க.வுக்கு அண்ணாமலை தலைவரானதிலிருந்து இன்றுவரை நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியிலும் ஆபாசக் கூத்துக்கள் நிறைந்திருக்கிறது.
அழகான பெண் ஒருவர் பா.ஜ.க. தலைவரிடம் பேசுவார். அவர் அந்தப் பெண்ணிடம் பேசுவது எல்லாம் வீடியோ காலில் ரெக்கார்டு செய்யப்படும். இதுபோல அந்த தலைவர் பிரதமர் மோடியைத் திட்டுவதும் அமித்ஷாவைத் திட்டுவதும் ரெக்கார்டு செய்யப்படும். இப்படி நூற்றுக்கணக்கான மணி நேரம் நீடிக்கும் வீடியோ டேப்புகள்தான் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் கொள்கை, கோட்பாடு, தத்துவம். இதை வைத்துதான் தமிழகத்தில் தாமரையை மலர வைக்கவும், திராவிட ஆட்சியை நீக்கவும் அண்ணாமலை முதலமைச்சராகவும் முயற்சி மேற்கொண்டுள்ளார் என பரபரப்பான புகார்கள் அண்ணாமலைக்கு எதிராக எழுந்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தை அண்ணாமலை கூட்டினார். கூட்டத்தில் கலந்துகொண் டவர்களிடம் செல்போன்கள் பறிக்கப் பட்டன. அதில் பேசும்போது அண்ணாமலை மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராக பேசினார்.
"நான் போலீசாக இருக் கும்போதே மூன்று என்கவுன் டர் செய்தவன். என்னால் "எடப்பாடி வாழ்க" என தினமும் மூன்றுமுறை கத்த முடியாது. நாம் தனித்துப் போட்டியிடலாம்' என்று பேசியதோடு, "காயத்ரி ரகுராம் எல்லாம் ஒரு ஆளே கிடை யாது. அவர் துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் என்ன பண்ணி னார் என்று எனக்குத் தெரியும்' என்று பரபரப்பாக குற்றம் சாட்டி னார். ஆபாசமாக தன்னைப் பற்றிப் பேசிய அண்ணாமலையை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்க ஆயத்தமாகிறார் காயத்ரி ரகுராம். அவரது வட்டாரங்களில் கேட்ட போது காயத்ரி ரகுராம் துபாய் ஓட்டலில் தங்கியிருந்தபோது அண்ணாமலை தனது நண்பர்களை அவரது அறைக்கு அனுப்பி அவரிடம் பேச வைத்தார். அந்த உரையாடல் மற்றும் அங்கு நடந்த நிகழ்வுகள் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளன. அதை வைத்துதான் காயத்ரி ரகுராமை அண்ணாமலை மிரட்டிவருகிறார்.
இது ஒரு ஐஞசஊவ பதஆடடஒசஏ. எதிரி நாட்டு ஒற்றர்களை பெண்களை அனுப்பி அவர்களிடம் உள்ள தகவல்களைப் பெறுவது, ராணுவத்தில் உள்ள ஒரு வழக்கம். அவ்வப்போது போலீசாரும் இந்த ஐஞசஊவ பதஆடடஒசஏ டெக்னிக்கை பயன்படுத்துவார்கள். சமீபத்தில் திருச்சி சூர்யா, அண்ணாமலையின் மற்றொரு தளபதியான அமர்பிரசாத் ரெட்டிக்கு மிக நெருக்கமான அலிஷா என்கிற பைக் ரேஸரை சந்தித்தார். பா.ஜ.க. நிர் வாகியான அலிஷாவிடம் அவரது அந்தரங்க உறுப்புகள் பற்றி சூர்யா கமெண்ட் அடித்துள்ளார். அவை ரெக்கார்டு செய்யப்பட்டு அந்த வீடியோ ஒரு டி.வி. சேனலில் பேட்டி எடுப்பவரிடம் தரப்பட்டது. ஏற்கெனவே சூர்யா, டெய்சி யிடம் பேசிய ஆபாசப் பேச்சை நக்கீரன் வெளியிட்டது. அது போல இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டது. இந்தத் தகவலை சூர்யாவிடம் டிவி சேனலைச் சேர்ந்தவர்கள் சொல்லி விட்டார்கள். அதனால்தான் நான் பா.ஜ.க.வை விட்டு விலகுகிறேன் என சூர்யா அறிவித்தார். இத்தனைக்கும், சூர்யா அண்ணாமலைக்கு நெருக்கமானவர். அவருக்கு எதிராக அமர் பிரசாத் ரெட்டி எடுத்த ‘மூவ்’ தான் இந்த அலிஷா வீடியோ. ஆனால் அமர் மீதும், அண்ணாமலை மீதும் கடும் கோபம் கொண்ட சூர்யா, "பா.ஜ.க. ஒரு கட்சியே அல்ல, அதில் நீடிக்க முடியாது' என அறிவித்து விட்டார்.
இது காயத்ரிக்கும் சூர்யாவுக்கும் நடந்தது மட்டுமல்ல. மத்திய அமைச்சர் முருகன், அண்ணா மலையைப் பார்த்தால் பத்தடி தூரம் பாய்ந்து ஓடுவார். முருகன் ஒரு கிறிஸ்துவர். அவரது மனைவி சர்ச்சுக்குப் போகிறார் என்பது மட்டுமல்ல, முருகனை HONEY TRAPPING-ங் கில் சிக்க வைத்துள்ளார் அண்ணா மலை. முருகன், கரு.நாகராஜன், கேசவ விநாயகம் மட்டுமல்ல... பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகியான தேஜஸ்வி சூர்யாவை ஒரு நடிகையுடன் பழக வைத்து வீடியோ எடுத்துள்ளார் அண்ணாமலை.
இவையெல்லாம் அண்ணா மலை பா.ஜ.க. தலைவராக வருவ தற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோக் கள். இதில் பா.ஜ.க.வின் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூட இடம் பெற்றிருக்கிறார். இதையெல்லாம் செய்ய அண்ணாமலைக்கு ஏற்பாடு செய்தவர் பி.எல்.சந்தோஷ்.
இவர் கர்நாடக பா.ஜ.க. தலைவ ரான ஜர்கிகோ- என்கிற எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரை தினேஷ் கள்ளஹல்லி என் பவர் மூலம் ஆபாச வீடியோ எடுத்தார். அதுதவிர பசவராஜ், சுதாகர், பி.ஸி.பாட்டீல், சிவராஜ் ஹெப்பர், சோமசேகர், நாராயண கவுடா ஆகிய அமைச்சர்களும் ஆபாச வீடியோ வில் சிக்கினர். இதை எதிர்த்து அந்த அமைச்சர்கள் நீதிமன்றத்தை நாட, நீதிமன்றம் தடை விதித்தது. அதனால் அந்த வீடியோக்கள் வெளிவரவில்லை. ஆனால், எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அடுத்த முதல்வர் பி.எல்.சந்தோஷ் என சொல்லப்பட்ட நிலையில்... ‘"எங்களை ஆபாச வீடியோ எடுத்தவர் முதல்வராவதா?'’ என எதிர்ப்பு கிளம்ப, சந்தோஷ் முதல்வராகவில்லை. அதே ஆபாச வீடியோ பார்முலாவை தமிழகத்தில் அண்ணாமலை கொண்டுவந்தார்.
இத்தனை தலைவர்களையும் HONEY TRAPPING செய்த மதன் ரவிச்சந்திரன் “"என்னை அண்ணாமலை இயக்கினார். அவர்தான் வீடியோ எடுக்கச் சொன் னார்'’என வெளிப்படையாகவே அறிவித்தார். அவர் தற்பொழுது பெங்களூரில் வசதியாக தங்கவைக்கப் பட்டுள்ளார். அவர் எடுத்த ஆபாச வீடியோக்களை வைத்து அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்கிறது தமிழக பா.ஜ.க. வட்டாரங்கள். கே.டி.ராகவன் ஆபாச வீடியோவை அண்ணாமலை வெளியிட்டது அவரை மிரட்டுவதற்காகத் தான். அதில் கே.டி.ராகவன் பலியாகி விட்டார். இந்த ஆபாச வீடியோ வலையில் சிக்காத ஒரு பா.ஜ.க. தலைவர்கூட இல்லை. ஒருவேளை அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் அத்தனை வீடி யோக்களையும் வெளியிட்டு பா.ஜ.க. வை அழித்து விடுவேன் என்பது தான் ‘அண்ணாமலையின் தற்கொலைப்படை ஸ்டைல்’ மிரட்டல்’ என்கிறார்கள் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்.