"ஹலோ தலைவரே, தனது அதிகாரத் தின் மூலம் தமிழக அரசியலில் விளையாட ஆரம்பிக்கிறது பா.ஜ.க.வின் தேசியத் தலைமை.''”

Advertisment

"ஆமாம்பா, அமித்ஷாவின் தூதர்கள் எடப்பாடியை மிரட்டியதாகச் சொல்கிறார்களே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. வுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டிருக்கும் பைஜெயந்த் பாண்டேவும், முரளிதர் முஹோலும், அமித்ஷாவின் தூதர்களாக எடப் பாடியை சந்தித்திருக்கிறார்கள். அப்போது, "உங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக நீங்களே இருக்கலாம். ஆனால் உங்கள் கட்சியான அ.தி. மு.க.வுக்கு என்று புதிதாக, டெல்லி விரும்பும் வேறொருவரை நீங்கள் பொதுச்செயலாளராக உட்கார வைக்கவேண்டும். இது அமித்ஷாவின் அறிவுரை. இதை மீறினால் உங்கள் கட்சி, உங்கள் போட்டியாளர்களால் பிளவுபடுவது உறுதி. அதன்பின் புதிதாக உதயமாகும் போட்டி அ.தி.மு.க., விஜய் கட்சியுடன் கூட்டணி வைக் கும். அதன்மூலம் நிறைய சாதிக்கும். அதனால் இப்போதே அமித்ஷாவின் முடிவை நீங்கள் ஏற்கவேண்டும். இல்லையென்றால் பல விதங்களிலும்  நீங்கள்தான் சங்கடங்களை அனுபவிப்பீர்கள்'’ என்றெல்லாம் ஆயுதத் தை நீட்டாத குறையாய், கறார் குரலில் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனால் எடப்பாடி ரொம்பவே குழம்பிப்போயிருக்கிறார். இவர் களை விட்டு விலகவும் முடியவில்லை, இவர்களோடு ஒட்டவும் முடியவில்லையே என்று அவர் புலம்பித் தவிக்கிறா ராம். அதே சமயம், டெல்லி நினைப்பதுபோல் அ.தி.மு.க.வுக்கு இரட்டைத் தலைமையை அனுமதிக்க முடியாது என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறாராம்.''”

"இந்த சந்திப்பை வைத்து தமிழக பா.ஜ.க.விலும் சர்ச்சைகள் எழுந்திருக்கிறதே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, எடப்பாடியை சந்திப் பதற்கு முன்பு, பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர் களான பைஜெயந்த் பாண்டேவும், முரளிதர் முஹோலும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்திருக்கிறார் கள். அடுத்து அவர்களை அமித்ஷாவின் உத்தரவுப் படி, எடப்பாடியைச் சந்திக்க அழைத்துச் சென்றி ருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரன். அப்போது, தமிழக பா.ஜ.க.வின் சீனியர்களை எல்லாம் விட்டுவிட்டு, அண்மையில் கட்சிக்கு வந்த தொழிலதிபரான ஜெ.பி. என்கிற ஜெயப்பிரகாஷை மட்டும் அவர் அழைத்துச் சென்றாராம். இதிலிருந்துதான் சர்ச்சை பூதம் கிளம்பியிருக்கிறது. "நயினாருக்கும் ஜெ.பி.க்கும் இடையே வர்த்தக ரீதியிலான நட்பு ஆரம்பித்துவிட்டதா?' என்கிற கேள்வியை பா.ஜ.க. சீனியர்கள் எழுப்பிவருகின்றனர். இதற் கிடையே, நயினார் தன் பிரச்சாரத் துக்கு மாஜி மாநிலத் தலைவர், தன் தமிழக டூருக்குப் பயன் படுத்திய பஸ்சை பயன்படுத்த விரும்பியிருக்கிறார். அது அமர்பிரசாத் ரெட்டியின் வசம் துருப்பிடித்துப் போயிருந்ததாம். அதை பல லட்சங்களை இறைத்து டூருக்குத் தோதாக ரெடி செய்திருக்கிறார்கள்.''”

"விஜயலட்சுமி கண்டத்திலிருந்து நாம் தமிழர் சீமான் ஏறத்தாழ தப்பிவிட்டார் போலிருக் கிறதே?''

"நாம் தமிழர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்குப் போட்டிருந்த நிலையில்... இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ’நாம் தமிழர்’ சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த மாதம்  நடந்த விசாரணையின்போது, "நடிகையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், மறுத்தால் சீமானைக் கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து செய்யப்படும்' என்றும் கறார் குரலில் நீதிபதிகள் தெரிவித்தனர். மீண்டும் இந்த வழக்கு 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டு  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மேலும் "விஜயலட்சுமிக்கு எதிராக, தான் கூறிய குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுகிறேன் எனவும், அவரைப் பற்றி இனி எந்த அவதூறு கருத்தையும் கூற மாட்டேன்' எனவும் அப்போது சீமான் தெரிவித்தார். இதனை ஏற்று, அவர்களின் வழக்கை முடித்து வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அந்த வகையில், தன் மீதான பாலியல் வழக்கி-ருந்து சீமானுக்கு ரிலீஃப் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.''’ 

"சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மீது த.வெ.க.வில் சேர்ந்துள்ள முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரியான அருண்ராஜ் சந்தேகம் கிளப்பி யுள்ளாரே?''”

"ஆமாங்க தலைவரே, த.வெ.க. சார்பில் இந்த விசாரணைக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்காங்க. வழக்கறிஞர்கள் தீக்ஷிதா கோஹில், பிரஞ்சல் அகர்வால், யாஷ் எஸ்.விஜய் ஆகியோர் மூலமாக தாக்கல்செய்யப்பட்டுள்ள இம்மனுவில், "மாநில காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு பாரபட்சமாகச் செயல்படுகிறது. அதனால் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசா ரணைக்கு உத்தரவிடவேண்டும்'னு கேட்கப் போறாங்களாம்.''”

"இன்னொரு பக்கம் த.வெக. நிர்வாகிகள் ஜாமீன் கேட்டு நீதிமன்றப் படியேறிக்கிட்டி ருக்கிறாங்களே?''”

"ஆமாம்பா, மா.செ. மதியழகனுக்கு அடைக் கலம் கொடுத்ததாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ள பவுன்ராஜ், கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுசெய்தார். சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை ஆரம்ப நிலையிருப்பதைக் காட்டி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செஞ்சுட்டார். மா.செ. மதியழகன் இதுவரை ஜாமீன் கேட்டு மனு போடவேயில்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக போலீசார் தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் கரூர் நீதிமன்றத்தில் சரணடைஞ் சிருக்கார். இப்படி நீதிமன்ற வாசலுக்கும், காவல்நிலைய வாசலுக்குமாக அலைஞ்சிக்கிட்டி ருக்கு த.வெ.க.''”

"டெல்லித் தலைமை, அருண்ராஜ், ஆதவ் அர்ஜுன் மூலமா கரூர் விவகாரத்தில் அடுத்த காயை நகர்த்தியிருக்கிற விவரம் தெரியுமா?''”

"அதென்ன நகர்வுப்பா… நீயே விளக்கமா சொல்லிடு...''”

"கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வழக்கம்போல பனையூருக்கே அழைச்சு நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டி ருக்கார். டெல்லி தலைமையோ அருண்ராஜ் மற் றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் பேசி, விஜயை கரூருக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப் பட்ட குடும்பங்களை சந்திக்க அறிவுறுத்தும்படி சொல்லியிருக்கு. பாதிக்கப்பட்ட குடும்பங்களை கரூரில் சென்று சந்திப்பதற்கு விஜய்க்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தால், இத்தனை பெரிய உயிர்ப்பலி சம்பவம் நடந்தும் மீண்டும் விஜய் மக்களைச் சந்திக்க அனுமதி தந்திருக்கிறது.  மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்தால் என்னாவது என தி.மு.க.வை குற்றம்சாட்டலாம். ஒருவேளை அனுமதி கொடுக்க மறுப்புத் தெரிவித்தால் பாதிக் கப்பட்ட மக்களை த.வெ.க. தலைவர் சந்தித்தால் அவருக்கு பெயர் கிடைக்குமென கருதி அனுமதி மறுக்கிறது தி.மு.க. என்று அரசியல் செய்யலாம் எனவும் டெல்லித் தலைமை திட்டமிட்டுள்ளதாம். இதற்கு அச்சாரமா கரூருக்கு விஜய் போனால் அவர் உயிருக்கு ஆபத்து என பா.ஜ.க. இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டது.''”

"கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பா, சி.பி.ஐ. விசாரணை கோரி த.வெ.க. பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உயர்நீதிமன்றத்துல மனு தாக்கல் செய்திருக்கிறதா செய்தி வெளியானதே… அது என்ன ஆச்சு?''”

“"அதுதொடர்பா என் காதுக்கு சில விஷயங் கள் வந்துச்சு தலைவரே... இந்த விவகாரத்துல ஆதவ் அர்ஜுனா இணைய மனு எனும் இ-பெட்டிஷன்தான் போட்டிருக்கார். அதோட அந்த மனுவுல யார் அட்வகேட்னு பெயரோ, வக்கீலோட கையொப்பமோ இல்லை. அதோட இ-பெட்டிஷன் போட்டாலும் நீதிமன்றத்துக்கு மேனுவல் காப்பி தரணும். இது எதுவுமே ஆதவ் அர்ஜுனா தரப்பிலிருந்து தரப்படலை. வீறாப்பா பத்திரிகையாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை கேட்டிருக்கிறதா சொல்லி, விஜய்யிடம் பெயரெடுத்துவிட்டுப்  போயிட்டாரு. அட்மிஷன் ரேஞ்சிலேயே தூக்கிப் போட்டுட்டது கோர்ட்.''’

"ஆதவ் அர்ஜுனாவோட சி.பி.ஐ. விசாரணை மனு விவரம் பத்தி நீ சொன்னதால, பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்தனோட சி.பி.ஐ. விசாரணை மனு பற்றி நான் சொல்றேன். டெல்லி நீதிமன்றத்தில் உமா போட்டதாகக் கூறப்படும் மனு குறித்து, தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைமை யாரைக் கேட்டு மனு போட்டீங்க, தலைமையிடம் இதுபோல மனு செய்வதற்கு அனுமதி வாங்கினீங்களானு கேள்வியெழுப்பியிருக்கு. இதனால சுதாரிச்ச உமா ஆனந்தன், நான் மனுவும்  போடல, அதுல கையெழுத்தும் போடலன்னு, அட்வகேட் ராகாவாச்சாரி மேல பாரத்தை போட்டுட்டு விவரமா ஒதுங்கிட்டாங்களாம்.''”

"அது சரி... புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் இரண்டுபேரோட முன்ஜாமீன் மனு விவகாரம் என்ன ஆச்சு?''”

rang2

"தமிழகத்துல அவங்களோட முன்ஜாமீன் விவகாரம் தள்ளுபடியானதும், டெல்லி அட்வகேட் நாலைஞ்சு பேரை பார்த்து உச்சநீதிமன்றத்தை அணுக லாமான்னு விசாரிச்சிருக்காங்க. அப்ப அவங்க, தமிழக அரசு இந்த விவகாரத்தை சாஃப்டா டீல் பண்ணிட்டிருக்கு. உங்க பெட்டிஷனைப் பார்த்துட்டு விஜய்யோட பேரை ஏன் எஃப்.ஐ.ஆர்.ல சேர்க்கலைன்னு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்புனா சிக்கலாயிடும். அதனால பார்த்து யோசிச்சுப் பண்ணுங்கனு சொல்லியிருக்காங்க. அதனால மறுபடியும் தமிழகத்திலே முன்ஜாமீன் கேட்டு மனு செய்வோம்ங்கிற யோசனையில் இருக்காங்களாம் இரண்டு பேரும்.''’

"நாமக்கல்லில் எடப்பாடி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் த.வெ.க.வைச் சேர்ந்த தொண்டரொருவர் த.வெ.க. கொடியை உயர்த்திப்பிடித்ததை கவனிச்சியா?''”

"ஆமாம் தலைவரே, அதோட எடப்பாடியும் நம் கூட்டணி மிகப் பலம்வாய்ந்த கூட்டணியாக மாறிவிட்டது என்பதற்கு இதுவே அடையாளம். தேர்தலுக்கு முன்னதாக ஒரு பலம்வாய்ந்த கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் என்றிருந் தேன். அது உண்மையாகிவிட்டது என்ற பாணியில் தன்னுடைய பிரச்சாரத்தைச் செய்துள்ளார். ஆக, எல்லாமே டெல்லியிலிருந்து வகுத்துக் கொடுத்த திட்டத்துக்கேற்ப தமிழகத்தில் காட்சியமைப்புகள் மேற்கொள்ளப்படுகிறதோ என்கிற சந்தேகம் தி.மு.க.வுக்கு வந்திருக்காம்.''”

"அப்பல்லோவில் இருந்தபோதும் அன்பு மணியை சந்திக்க மறுத்துவிட்டாரே ராமதாஸ்?''”

rang1

"உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட  பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். அதேபோல, துணை முதல்வர் உதயநிதியும் சென்றார். இவர்களைப் போலவே அ.தி.மு.க. எடப்பாடியும்  அப்பல்லோ சென்று ராமதாஸை சந்தித்தார். தன் உடல்நலத்தை விசாரித்த இவர்கள் அனைவரிடமும் மிகவும் தெம்பாகப் பேசியிருக்கிறார்  ராமதாஸ். ஆனால்,  மகன் அன்புமணி அப்பல்லோ சென்ற போது, அவரைப் பார்க்க விரும்பவில்லை என ராமதாஸ் உறுதியான குரலில் தெரிவித்து விட்டாராம். அதனால், அன்புமணி நொந்துபோய் திரும்பியிருக்கிறார். எனினும் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர், ’"அய்யா ஐ.சி.யூ.வில் இருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். இந்த நிலையில், இரண்டே நாளில் மருத்துவமனையிலிருந்து தைலாபுரம்  திரும்பி யிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.''” 

"சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் மீது புகார்கள் கிளம்பியிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னை ஏர்போர்ட் டில் தமிழக அரசின் புரோட்டகால் அதிகாரிகளாக இருக்கும் திலீபன் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் மீது கோட்டைக்கு புகார்கள் பறந்துள்ளன. ஏர்போர்ட்டுக்கு வரும் தமிழக அரசின் உயரதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி.கள் ஆகியோரை வரவேற்று அவர்கள் ப்ளைட்டிற்குள் செல்லும் வரை அவர்களுக்கு உதவிகள் செய்து அனுப்பி வைக்கவேண்டும். இதுதான் அவர்களின் பணி. ஆனால், இந்த அதிகாரிகள், தங்களின் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதில்லையாம். இதற்கு மாறாக, தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகள் மூலம் டிக்கெட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பன்னாட்டு விமான நிலையம் வரும் வி.ஐ.பி.களை மரியாதையுடன் வரவேற்று, அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதில் அதீத கவனம் செலுத்துகிறார்களாம். அதாவது, டிராவல்ஸ் ஏஜென்சி களுக்கு ஏஜெண்ட்டுகள் போல இவர்கள் செயல்படுகிறார் களாம். இது குறித்து தமிழக அரசின் பொ துத்துறைக்குப் புகார்கள் குவிந்து வருகின்றன.''”

"தமிழகத் திலும் நீதிபதி யை அவமதிக் கும் சம்பவம்  நடந்திருக் கிறதே?''”

"நெல்லை மாவட்ட சேரன்மகாதேவியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 7ஆம் தேதி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த உண்டியல் திருட்டில் புகழ்பெற்ற, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திரேந்தர் சிங்கை,  நீதிபதி   அருண்சங்கர் முன் ஆஜர்படுத்தினர். அவர் வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கி-ருந்து விடுபட முடியாத ஆத்திரத்தில் இருந்த குற்றவாளி, தனது காலணியைக் கழற்றி வீச, நல்லவேளையாக அது நீதிபதியின் சேம்பரின் வெளிப்பக்கம் பட்டு கீழே விழுந்தது. இதைப் பார்த்த ஒட்டுமொத்த நீதிமன்றமும் உறைந்துபோனது. சுதாரித்துக் கொண்ட போலீஸார், திரேந்தர்சிங்கை மடக்கி இழுத்துச் சென்றனர். இவன் மீது உண்டியல் உடைப்பு வழக்குகள் அதிகமாக இருக்கின்றன என்கிறது போலீஸ் தரப்பு.''”

"நானும் ஒரு தகவலை பகிர்ந்துக்கறேன் தலைவரே.. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு 20 குழந்தைகள் பலியான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த விவகாரத்தில், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை அக்டோபர் 9, வியாழனன்று அதிகாலையில் அசோக்நகர் போலீசார் உதவியுடன் மத்திய பிரதேச தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம் செய்தியாளர்களிடம், "கோல்ட்ரிப் மருந்தில் நச்சுத்தன்மை அதிக அளவில் இருப்பதை கண்டுபிடித்தது தமிழ்நாடு. மத்திய பிரதேசமும், மத்திய அரசும் நச்சுத்தன்மை இல்லை என்று விட்டுவிட்டார்கள். சரியாக ஆய்வு செய்யாத மூத்த மருந்து ஆய்வாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்கள். கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப் படும்'னு தெரிவிச்சிருக்கார்.''