யோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவை என்ற பெயரில் இடிக்கப் பட்ட நிலையில்... நீண்டகால வழக்கு விசாரணைக்குப் பின் அந்த இடத் தில் ராமர் கோயில் கட்ட உத்தர விட்டது உச்சநீதிமன்றம். மத்திய அரசு அதற்கான குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு மாநிலத் தேர்தல் களில் கவனம் செலுத்தி வருவதால் ராமர் கோயில் பற்றி நினைக்கவில்லை. அதாவது ராமருக்கு கோயில் கட்டிவிட்டால் அதன் பிறகு இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதால் கோயில் கட்டும் பணியில் சுணக்கம் காட்டிவருவதாக காவி கட்டிய பக்தர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

hh

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ராமர் கோயில் கட்ட நிதி வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகளும் கரசேவை புரத்தில் முகாமிட்டு வசூல் வேட்டை நடத் திக் கொண்டிருக்கின்றன. அந்த வசூலுக்கு வரவு-செலவு கணக்குகளே இல்லை. இந்த நிலையில் தான்... "ராமர் கோயில் கட்டு மானப் பணிக்குழுவில் அமித்ஷாவையும், ஆதித்யநாத்தையும் சேர்க்க வேண்டும்' என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லிவருகிறது. "கரசேவைக்காக அமித்ஷா போன்றவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் அவர்களை சேர்க்க வேண்டும். இதுவரை ராமர் பெயரை வைத்து அரசியல் செய்தது போதும். இதன் பிறகாவது அரசியல் செய்வதை விட வேண்டும்' என்றும் காவிகள் பலமாக குரல் உயர்த்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டையில் இருந்து அயோத்திக்கு செங்கல் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்துள்ள அகில பாரத ஸ்ரீராம் சேனா தேசிய பொதுச்செயலாளர் ஆதி மதனகோபாலை சந்தித்தோம்...

Advertisment

""சுப்பிரமணியசுவாமி தனது பிறந்த நாளை அயோத்தியில் நித்திய கோபால் தாஸ் தலைமையில் கொண்டாடினார். அப்போது, "நவம்பரில் தீர்ப்பு வரும். அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும்' என்று சொன்னார். ஏனென்றால் அவரும் இந்த வழக்கில் இணைந்து வழக்கை துரிதமாக கொண்டுவந்தவர். அவர் சொன்னபடியே நடந்துவிட்டது. அதனால்தான் அவர் சொன்னதை நம்பி செங்கல் பூஜை செய்துகொண்டு போனோம்.

அங்கே போய் ரயிலை விட்டு இறங்கியதும், எங்களை பாதுகாப்பாக போலீசார் கர சேவைபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே நாங் கள் கொண்டு சென்ற செங் கற்களை ஒப்படைத்தோம். அங்கே கண்ட இடத்திலும் ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, ரசீது இல்லாமலும், உண்டியல் வைத்துக்கொண்டும் "ராமர் கோயில் கட்ட நிதி கொடுங்கள்' என்று வசூல்வேட்டை நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றிக் கேட்டால், "20 வருடங்களுக்கு மேலாக இப்படி ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வசூல் செய்து வருகின்றன என்றும் அதற்கு இதுவரை கணக்கே காட்டவில்லை' என்றும் சொல்கிறார்கள். ஆனால், இப்ப ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் "பண மில்லை நிதி கொடுங்கள்' என்று கேட்கிறார்கள். இதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

aa

Advertisment

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள். அவர்களிடமும் வசூல் அதிகமாக நடக்கிறது. ஆனால் எதற்கும் கணக்கு இல்லை. அப்படியானால் அந்தப் பணம் எங்கே செல்கிறது? தீர்ப்புக்குப் பிறகுகூட குறிப்பிட்ட இடம் பழைய பந்தலில்தான் இருக்கிறது. அதைக்கூட மாற்றி அமைக்கவில்லை.

இந்த நேரத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் சரத்சர்மா, "பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, முதல்வர் ஆதித்யநாத் போன்றவர்களை திருப்பணிக்குழுவில் இணைக்க வேண்டும்' என்றும் சொல்லி இருக்கிறார். ஆனால் "அமித்ஷாவை சேர்க்கக்கூடாது' என்று நாங்கள் சொல்கிறோம். அவரைச் சேர்த்தாலோ, ஆதித்யநாத்தை சேர்த் தாலோ பிரச்சினைகள் வரும். அதனால் கோயில் கட்டமாட்டார்கள். இதைவைத்து மறுபடியும் பா.ஜ.க. அரசியல்தான் செய்யும். அப்படி அவர்களைச் சேர்த்தால் சுப்பிரமணியசாமியையும் சேர்க்கவேண்டும். பல வருடங்களாக ராமர் கோயில் கட்ட அயோத்தியிலேயே தங்கி உள்ள நித்தியகோபால் தாஸை தலைவராகப் போடவேண்டும். இந்தியாவில் உள்ள முதல்வர்கள், கரசேவையில் ஈடுபட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடுபத்தினரையும் இணைக்க வேண்டும்.

மத்திய அரசு குழு அமைத்து கோயில் கட்ட நினைக்கிறதோ இல்லையோ, 2020 ஏப்ரல் 2-ந் தேதி ராமநவமி அன்று அயோத்தி யில் ராமர்கோயில் கட்ட அடிக்கல் நாட்டவிருக் கிறோம். அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்புக் கொடுக்கிறோம். அவர் வந்து கலந்துகொள்வார் என்றும் நம்பு கிறோம். அதற்காக மார்ச் 29-ந் தேதி ராமேஸ் வரத்தில் இருந்து புறப்படுகிறோம். இனிமேலும் ராமர் பெயரைச் சொல்லி பா.ஜ.க. அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

-இரா.பகத்சிங்

_________________

பெண் பக்தர்களுக்கு ஆபத்து!

""பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், மசூதிக்கு பக்கத்தில்தான் உள்ளது. அதனால் அந்த கோயிலை விரிவாக்கம் செய்ய காசி விஸ்வநாதர் டெவலப்மெண்ட் டிரஸ்ட் மூலம் சுற்றியுள்ள நிலங்களை வாங்கிவிட்டார்கள். அதில் பார்க்கிங் கட்டப் போறார்களாம். அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு அன்று காசி விஸ்வநாதருக்கும் குடமுழுக்கு நடத்த திட்டம் வைத்திருக்கிறார்கள்.

பிரதமர் தொகுதியில் காசிவிஸ்வநாதரை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்து தனியாக வரும் இளம் பெண் பக்தர்களை குறிவைக்கும் இளைஞர் கும்பல், ரயில் நிலையத்திலேயே அவர்களிடம் "கைடு' என்று சொல்லி அழைத்துச் சென்று கஞ்சா போன்ற போதையை ஏற்றி சீரழித்து பணம், பொருட்களை பறிப்பதை நான் கண்கூடாக பார்த்து போட்டோ எடுத் தேன். ஓர் இளைஞன் முகத்தை திருப்பிக்கொண் டான். இது சம்பந்தமாக பிரதமருக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன்'' என்றார் ஆதி மதனகோபால்.

-செம்பருத்தி