"ஹலோ தலைவரே, பல்வேறு பரபரப்புகளுக்கு நடுவில் சட்டமன்றக் கூட்டம் நடந்து வருகிறது.''”
"ஆமாம்பா, தமிழக அரசுக்கு செக் வைக்க எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சிகள் ஒண்ணும் பெருசா எடுபடலையே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக சட்டமன்றம் கடந்த 6ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் முதல் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி சட்டமன்றத்தில் அமளிதுமளியை ஏற்படுத்திவிடவேண்டும் என்று அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. முதல்நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடியோ, திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறி அடுத்தடுத்த நாட்களில், சட்டசபை பக்கமே தலைகாட்டவில்லை. அ.தி.மு.க. சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்ட நிலையிலும் எடப்பாடி சபைக்கு வராததால், பல தரப்பிலும் கேள்விகள் எழுந்தது. ஆனால் அ.தி.மு.க. தரப்போ, இரவு பகலாக கட்சிக்கு உழைத்துவருவதால், எடப்பாடிக்கு இப்படியாகிவிட்டது என்று சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார்கள். ஆனாலும் அதை அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பவில்லை. அ.தி.மு.க.வைப் போலவே, சட்டசபையில் சூறாவளியைக் கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ.க. தரப்பும், பெரிதாக சோபிக்கவில்லை.''”
"எடப்பாடியைக் காய்ச்சலில் படுக்க வைத்தது பா.ஜ.க.தான் என்று அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே டாக் இருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, சட்டமன்றக் கூட்டம் தொடங்கிய 6ஆம் தேதி, எடப்பாடியின் சம்மந்தியும் பிரபல கட்டிட காண்ட்ராக்டருமான ஈரோடு ராமலிங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டை நடத்த ஆரம்பித்தார்கள். சென்னை, ஈரோடு, பெங்களூர் உள்ளிட்ட 25 இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இவரைக் குறிவைத்து ரெய்டுகள் நடந்தன. அப்போது ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் அள்ளி னர். அப்போது தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம், பா.ஜ.க. மேலிடத்தை எடப்பாடி அணுகிய தால், அப்போது அடுத்தகட்டப் பாய்ச்சலை வருமானவரித்துறை நிறுத்தி வைத்தது. இந்தச் சூழலில் தற்போது, பா.ஜ.க.வுடன் இனி கூட்டணியே கிடையாது என எடப்பாடி நெஞ்சு நிமிர்த்தியதால், அவர் மீது டெல்லி கடும் கோபமடைந்திருக்கிறதாம். எனவே அவரை அடிபணிய வைக்கவே, ராமலிங்கத்தின் மீதான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துவிட்டார் களாம். எடப்பாடியின் பெரும் முதலீடு ராமலிங்கத்தின் மூலம் நடந்திருப்பதால், ஹைவோல்ட் அதிர்ச்சிக்கு ஆளான எடப்பாடி, வீட்டில் முடங்கியபடியே டெல்லியுடன் மன்றாடிவருகிறார் என்கிற தகவலும் வெளியே கசிய ஆரம்பித்திருக்கிறது. ஆக எடப்பாடியைக் காய்ச்சலில் முடக்கிவிட்டது பா.ஜ.க. என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.''”
"உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்கட்டும். இடைத்தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கில் மீண்டும் நிற்போம் என்று காங்கிரஸ் கூறுகிறதே?''”
"ஈரோடு கிழக்குக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையடுத்து, ஈரோடு கிழக்கில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்றும், வேட்பாளர் யார் என்பதை மேலிடத்தில் ஆலோசனை நடத்திவிட்டு விரைவில் அறிவிப்போம் என்றும் சொல்லியிருக்கிறார் மாநில காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை. ஆனால், காங்கிரசில் யார் நின்றாலும் நாம் தான் செலவு செய்யவேண்டியிருக்கிறது. நாமே உழைக்கவும் வேண்டியிருக்கிறது. அதனால் நாமே நின்றுவிடலாமே என்று தி.மு.க. சீனியர்கள், தங்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம், "காங்கிரஸ் விரும்பினால் நின்றுவிட்டுப் போகட்டும். அங்கே நாம் நின்றால், அவர்கள் தொகுதியை நாம் பறித்துக்கொண்டது போல் ஆகிவிடும்' என்று ஸ்டாலின் சொல்லிவருகிறாராம். எனினும் தி.மு.க.வினர் மத்தியில் ஆதங்கம் தொடர்கிறது என்கிறார்கள். ”.
"அ.தி.மு.க.வும் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கிறதே?''”
"ஈரோடு கிழக்கில் நிற்பது தொடர்பாக ஆலோசிக்க, தங்கள் கட்சியின் மா.செ.க்கள் கூட்டத்தை 11ஆம் தேதி கூட்டியிருக்கிறார் எடப்பாடி. அவரைப் பொறுத்தவரை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் போல, ஈரோடு கிழக்கையும் புறக் கணித்துவிடலாம் என்கிற முடிவில் இருக்கிறாராம். காரணம், ஒன்றரை வருடமே பதவிக் காலம் உள்ள இந்தத் தொகுதியைப் பெற கடுமையான செலவையும், அதிகமான உழைப்பையும் போடவேண்டுமா? என்பது தான் அவரின் வாதமாம். ஆனால், கட்சியின் சீனியர் தலைவர்களோ, கடந்தமுறை ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டதாலும், அவர் ஜெயித்தாக வேண்டும் என்று ஸ்டாலின் கடுமையான உத்தரவு போட்டதாலும் தி.மு.க.வினர் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தனர். பணத்தையும் வாரியிறைத்தார்கள். இப்படிப்பட்ட ஆர்வம் இந்தமுறை தி.மு.க.விடம் இல்லை. அதனால் அங்கே காங்கிரஸ் மீண்டும் நின்றால், நாம் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று சொல்கிறார்களாம். இதற்கிடையே பா.ஜ.க.வோ, தங்கள் கூட்டணி சார்பாக அங்கே த.மா.கா.வை நிற்க வைக்கலாம் என்று நினைக்கிறதாம். அக்கட்சியின் சார்பில் விடியல் சேகரை நிறுத்த நினைக்கிறாராம் த.மா.கா. வாசன்.''”
"இந்த நேரத்தில் பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்திருக்கிறதே?''”
"பா.ஜ.க.வின் மையக்குழுக் கூட்டம் 8ஆம் தேதி, அவர்களின் கட்சி அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. அதில் தேர்தலைச் சந்திப்பது எப்படி என்று நிர்வாகிகள் வகுப்பெடுத்திருக்கிறார்கள். ஆனால் தொண்டர்கள் எவரும் அதில் முழுக்கவனம் செலுத்தவில்லையாம். காரணம், பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர்களுக்கான தேர்தல் தற்போது நடந்திருக்கிறது. இதில் பதிவான வாக்குகளை வெளிப்படையாக எண்ணாமல் பா.ஜ.க.வின் மாநில நிர்வாகியும், சீனியர் நிர்வாகியான கேசவவிநாயகத்தை மட்டுமே தனிப்பட்ட முறையில் தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதாம். இதை பா.ஜ.க.வினர் விரும்பவில்லை. தங்களுக்கு விசுவாசம் காட்டக்கூடியவர்களை மட்டுமே இந்த இருவரும் தேர்வு செய்வார்கள் என்பதால், அவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருக்கிறது. அங்கே எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் இருக்க முடியாது என்பதால், அவரவர்களும் மனதிற்குள் எரிமலையாக குமுறிவருகிறார்களாம். மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நாளில் இவர்களின் கோபம் வெடிக்கலாம் என்கிற சூழல் அங்கே ஏற்பட்டிருக்கிறது.''”
"எல்காட் நிறுவன இயக்குநர் நீண்ட விடுப்பில் சென்றிருக்கிறாரே?''”
"தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்குகிறது எல்காட் நிறுவனம். இதன் நிர்வாக இயக்குநராக இருக்கிறார் கண்ணன் ஐ.ஏ.எஸ். கடந்த வாரம் திடீரென நீண்ட விடுப்பில் அவர் சென்றுவிட்டார். ஏற்கனவே முதல்வரின் செயலாளர் களில் ஒருவரான அனுஜார்ஜும் 136 நாட்கள் நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அதுவே பெரும் சர்ச்சையை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் ஏற்படுத்தி யது. தற்போது கண்ணன் ஐ.ஏ.எஸ்.ஸும் நீண்டகால விடுப்பில் சென்றிருப்பதும், அவருக்கு அரசு தரப்பில் அனுமதி கொடுக்கப் பட்டிருப்பதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் லாங் லீவில் செல்வது நிர்வாகத்தில் தேக்க நிலையை உருவாக்கும் என்கிற பேச்சும் கோட்டை வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.''”
"மணல் குவாரிகள் மீது தாக்குதல் நடப்பதாகப் புகார்கள் வருகிறதே?''”
"திருவள்ளூர் மாவட்ட கூனிப்பாளையம் கிராமத்தில் இயங்கிவரும் குவாரிக்குள் எஸ்.ஆர். நிறுவனத்தைச் சார்ந்த ரகு, கண்ணன் ஆகியோர் ஆயுதக் கும்பலுடன் அதிரடியாக நுழைந்து, குவாரி உரிமையாளரை மிரட்டியதோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கினார்களாம். இதை கிராம மக்கள் தட்டிக்கேட்டதால் அவர்களையும் தாக்க முற்பட்டிருக்கிறார்கள். இதனால் ஏரியா மக்கள் அவர்களைத் துரத்த, இதில் மிரண்டுபோன அடாவடிக் கும்பல் தங்கள் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாம். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட குவாரி தரப்பினர், பென்னாலூர்பேட்டை காவல்நிலையத் தில் புகார் அளித்தபோது, அங்கிருந்த காவல் ஆய் வாளரோ, இது தொடர்பாக எஸ்.பி.யும், டி.எஸ்.பி.யும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என்று அலட்சியமாகச் சொன்னாராம். இதற்கு முன்பு பலமுறை எஸ்.ஆர். குரூப்ஸ் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இது அப்பகுதியில் பெரும் பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்கிறார்கள்.''”
"ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நாய்கள் மிரட்டிவருகிறதாமே?''”
"சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள தெற்காசிய விளையாட்டு கிராமத்தில் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஐ.ஏ. எஸ். அதிகாரிகள் நிறைய பேர் வசிக்கின்றனர். அவர் களில் வணிகவரித்துறை ஆணையர் ஜெகன்னாத னும் ஒருவர். இரண்டாவது மாடி யில் இவரது வீடு இருக் கிறது. கோல்டன் ரெட் ரீவர் மற்றும் ஜெர்மன் ஷெப்பேர்ட் எனும் வகையை சேர்ந்த 2 நாய்களை இவர் வளர்க்கிறார். அதோடு காலையும் மாலையும் அவர், அந்த நாய் களை அதிகாரிகளின் பயன்பாட்டுக்கான லிப்ட்டில் அழைத்துச் செல்கிறாராம். அப் போது அந்த நாய்கள், மற்ற அதிகாரிகள் லிப்டுக்கு வரும்போது அவர்கள் மீது பாய் கிறதாம். இதனால், அங்குள்ள அதிகாரிகள் மிரட்சியில் இருக்கிறார்கள். நாய்களை வளர்க்கும் ஜெகன்னாதன், படிக்கட்டுகள் வழியாக நாய்களை அழைத்துச் செல்ல வேண்டியதுதானே? எதற்கு லிப்ட்டை பயன்படுத்த வேண்டும்? என்கிற புகார்க் குரல்கள் இப்போது பலமாக எழுந்திருக் கிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமைச்செயலாளர் முருகா னந்தத்திடமும், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஸ் தாக்கரிடமும் புகார் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.''
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தி.மு.க. அரசு அமைந்ததில் இருந்து ஐ.ஏ.எஸ். வட்டாரத்தில் ஒளிவட்டம் மிகுந்த அதிகாரியாகக் காட்சியளித்தவர் உதய சந்திரன். தனது செல்வாக்கால் அதிகார மையமாக காட்சியளித்த இவருக்கும், ஆட்சி மேலிடத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கிறதாம். காரணம், அரசு தொடர்பான தகவல் களை தனக்கு நெருக்கமான வட்டாரங் களில் பகிரும் அவர், தற்போது தொழி லதிபர் அதானி தமிழகம் வந்தபோது... அவர் யார், யாரைச் சந்தித்தார் என்பது பற்றிய பல தகவல்களை, பலரிடமும் பகிர்ந்துகொண்டாராம். இதையறிந்து முகம்சுழித்த ஆட்சி மேலிடம், அவருக்குக் கொடுத்துவந்த அதிதீவிர முக்கியத் துவத்தைக் குறைக்க முடிவெடுத்திருக் கிறதாம்.''
_____________
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை.இராமகிருட்டிணன், "கடலூரில் சீமான் பெரியார் குறித்து இழிவான செய்தியை பதிவு செய்துள்ளார். பெரியார் சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை சீமான் காட்டவில்லையென்றால், 9ஆம் தேதி காலை 10 மணிக்கு சீமான் வீட்டிற்கு நேரில் செல்லவிருக் கிறேன். அவர் என்னிடத்தில் பெரியார் சொன்னதற்கான ஆதாரத்தை காட்டவேண்டும்'' என கூறியிருந்தார், இந்நிலையில், 9ஆம் தேதி வியாழனன்று காலையில் நீலாங்கரையிலுள்ள சீமானின் வீட்டை த.பெ.தி.க.வினர் முற்றுகையிட்டனர். அப்போது நா.த.க. நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. புதுச்சேரியில் சீமானின் புகைப்படத்தை செருப்பாலடித்தும், நா.த.க. கொடியை காலால் மிதித்தும் த.பெ.தி.க.வினர் போராட்டம் நடத்தினர். சீமானின் பேச்சுக்கு வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்ததோடு, "ஆரிய -பார்ப்பனியத்தின் அடிவருடியாக செயல்படும் சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-கீரன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளை தி.மு.க. மும்முரமாக தொடங்கிவிட்டது. சென்ற முறை இடைத்தேர்தல் நடந்தபோது எந்தெந்த பூத்துகளில் தி.மு.க. அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்களோ, அவர்களே மீண்டும் அதே பகுதியில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக் கப்பட்டுள்ளார்கள். "பொங்கல் முடிந்த பிறகு 17ம் தேதி எல்லோரும் ஈரோட்டுக்கு செல்லுங்கள். அங்கு தங்கி அவரவருக்கு கொடுக்கப்பட்ட இடங்களில் தேர்தல் வேலையை பாருங்கள்' என முதல்வர் கூறியுள்ளாராம். அமைச்சர்களோடு அனைத்து மாவட்ட தி.மு.க. நிர்வாகி களும் தங்களது படையுடன் ஈரோட்டை சூழவுள்ளார்கள்.
-ஜீவாதங்கவேல்