லக தேவேந்திரகுல வேளாளர் ஒருங்கிணைப்பு மற்றும் அடையாள மீட்பு தேசிய மாநாடு என்றுதான் அழைப்பு விடுத்தார்கள். மேடையோ, புதிய தமிழகம் கட்சியின் 10-வது மாநில மாநாடு என்று நிறம் மாறியிருந்தது. காரசார பேச்சுகளுக்கு யாரும் ஒரு குறையும் வைக்கவில்லை.

Advertisment

""நம் கட்சியில் புல்லுருவிகள் இருக்கிறார்கள். அச்சுறுத்தும் திருட்டு நாய்களை எச்சரிக்கிறேன். உங்களையெல்லாம் தேவேந்திரகுல மக்களுக்கு காவு கொடுப்பேன்'' என்று சிலிர்த்தார் வி.கே.அய்யன் என்ற நிர்வாகி.

krishnasamy

"இளவரசர்' என்று வர்ணிக்கப்பட்ட, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதல்வர் ஷ்யாம் ""ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி பரிசு வாங்கியவர்கள் நாங்கள்தான். மற்றவர்கள் பெண் கொடுக்க வேண்டும் என்பதற்காக பட்டியலினத்திலிருந்து வெளியேறவில்லை. அதிகாரத்தை தேடிப் போய்க்கொண்டிருக்கிறோம். இனி, நமது போராட்டம் அமைதியாக இருக்காது'' என்று சீறினார்.

Advertisment

shyam

திடலில் பெரும்பாலான சேர்கள் காலியாக இருந்ததாலோ என்னவோ... டாக்டர் கிருஷ்ணசாமி, “""60 ஏக்கர் நிலத்தில், கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இவ்வளவு பெரிய இடத்தில், மாநாடு நடத்தியதில்லை. ஆனால், நமக்கு கூட்டம் சேர்க்கும் சக்தி கிடையாது'' என்று ஒத்துக்கொண்டு, வழக்கமான பேச்சுக்கு திரும்பினார். ""பள்ளன், குடும்பன் என்று நம்மை ஒதுக்கினால் வாள்தான் பேசும்; அப்படித்தான் பேசியிருக்கிறது. எங்களுடைய மண்ணை இன்னொருவருடைய மண் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? யாரும் ஊருக்குள் வந்தால் நீங்கள் கேட்க வேண்டும். இது தேவேந்திரர் மண். தேவேந்திரர் காலடி மண் என்று சொல்ல வேண்டும். வாக்கு சேகரிக்க வரும்போது, வேறு யாரையும் தேவேந்திரகுலத்தவர் வசிக்கும் கிராமங்களுக்குள் வர விடக்கூடாது. எதிரிகள் சமுதாயத்துக்கு வெளியிலும் இருக்கிறார்கள். நமக்குள்ளும் இருக்கிறார்கள்.

1997-ல், வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக் கழகம் தொடங்கியபோது கலவரம் வெடித்து, இந்தியாவே தென் தமிழகத்தை எப்படி திரும்பிப் பார்க்க வைத்ததோ, அதுபோன்ற ஒரு போராட்டத்துக்கு நீங்கள் தயாராக வேண்டும் என்பதற்கான பிரகடனம்தான் இது. மத்திய, மாநில அரசுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன். அவகாசம் தருகிறேன். அக்டோபர் 6-ஆம் தேதிக்குள், பட்டியலினத்திலிருந்து தேவேந்திரகுல மக்களை வெளியேற்றியதற்கான அரசாணை பிறப்பிக்காவிட்டால் -நாங்கள் பேருந்துகள் ஓடாது என்று சொன்னால் ஓடாது. அதற்கு ஆயத்தமாவதற்கான அழைப்பு விடுப்பதற்காகவே இந்த மாநாடு. 1997-ல் கயத்தாறில் என்னைக் கைது செய்தபோது, என்ன நடந்தது? ரயிலை மறிப்பதற்கு 5000 பேர் திரண்டார்கள். 1000 பேருந்துகளை உடைத்தார்கள். 300 பேருந்துகள் தவிடுபொடியானது. நான் சொல்லிக்கொடுத்தா போராட்டம் நடத்தினார்கள்? நான் இப்படி பேசுவதை மிரட்டல் என்று சொன்னால் மிரட்டல்தான்''’என்று கொளுத்திப் போட்டுவிட்டு, கலைஞர், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, கமல்ஹாசன், சீமான், பாரதிராஜா என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.

வீர தீரம் வெளிப்பட வேண்டும்’ என்று பலரும் அனல் கக்கிய அந்த மாநாட்டில் தனம், அனிதா ஆகிய இரு சிறுமிகள் மட்டும், ""நம்மை இழிவுபடுத்துவது நமது செயலும் குடிப்பழக்கமும்தான். அதை விட்டொழித்தாலே, சமூக மாற்றம் ஏற்படும். ஆத்திரத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை. விவேகம் வேண்டும்'' என்று டச்சிங்காகப் பேசினார்கள்.

மாநாட்டு நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்த அந்த உளவுத்துறை அதிகாரி ""தமிழக வாக்காளர்களில் 20 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர். தென் மாவட்டங்களில், தேவேந்திர சமுதாய மக்களே தாழ்த்தப்பட்டோரில் மெஜாரிட்டியாக உள்ளனர். இந்த ஓட்டுக் கணக்கை முன்வைத்துத்தான், டெல்லியில் ‘லாபி’ செய்திருக்கிறார் கிருஷ்ணசாமி. பா.ஜ.க.வும் சாதியை வைத்தாவது வாக்குகள் விழாதா என்ற நப்பாசையில், இந்த மாநாடு நடத்துவதற்கு ‘ஸ்பான்சர்’ செய்திருக்கிறது. கலவரத்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு ஆட்சியைக் கலைத்து, கவர்னர் மூலம் அரசாங்கத்தை நடத்த டெல்லி ப்ளான் போடுகிறது'' என்றார்.

-சி.என்.இராமகிருஷ்ணன்