Advertisment

பா.ஜ.க. தான் போட்டியிட வேண்டும்! -வேலூர் தொகுதியில் திடீர் குரல்!

vv

ட்டுக்கு பணம் என்ற புகாரில் ரெய்டுகள் நடத்தப்பட்டு எம்.பி. தேர்தல் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. "எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் நான்தான் வேட்பாளர்' என்று ஏ.சி.சண்முகம் தொகுதியை சுற்றிவந்த நிலையில், பா.ஜ.க.தான் போட்டியிட வேண்டும் என்று ஒரு குரல் தற்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

Advertisment

vv

தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச்செய லாளரான தலித் பாண்டியன் தனது இயக்கத்தை கலை

ட்டுக்கு பணம் என்ற புகாரில் ரெய்டுகள் நடத்தப்பட்டு எம்.பி. தேர்தல் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. "எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் நான்தான் வேட்பாளர்' என்று ஏ.சி.சண்முகம் தொகுதியை சுற்றிவந்த நிலையில், பா.ஜ.க.தான் போட்டியிட வேண்டும் என்று ஒரு குரல் தற்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

Advertisment

vv

தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச்செய லாளரான தலித் பாண்டியன் தனது இயக்கத்தை கலைத்துவிட்டு, பா.ஜ.க.வுடன் இணைவதற்குப் பேச்சுவார்த்தையை சுமுகமாக முடித்துள்ளார். நடப்பு மக்களவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் கரூரில் இணைப்புவிழா நடத்தப்போவதாக கூறினார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ""தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு மக்களவைத் தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் ஓரிரு தொகுதியிலாவது பா.ஜ.க. வென்றிருக்கும். பா.ஜ.க. சார்பில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றி ருந்தாலும் தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் கிடைத் திருப்பார். பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. வேண்டாத சுமை. அ.தி.மு.க.வை ஒப்புக்கு துணைக்கு வைத்துக் கொண்டு, வேலூர் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும். அதிலும், பெண் வேட்பாளரை நிறுத்தினால் எளிதாக வெற்றிபெற முடியும். இதை டெல்லி தலைமையிடமே கூறியிருக்கிறேன்'' என்றார்.

இதுகுறித்து, பா.ஜ.க.வின் முக்கிய மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது…""2014 மக்களவைத் தேர்தலில் மோடியைப் பற்றி அறிந் திராத சமயத்திலேயே வேலூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் 3,25,000 வாக்குகளை பெற்றார். இப்போது எங்கள் கட்சியைச் சேர்ந்த யார் நின்றாலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம்'' என்றார்.

இவர்களுடைய கருத்தை அ.தி.மு.க. தரப்பில் தெரிவித்தபோது. “""ஏ.சி.சண்முகத்துக்கு என வாக்குறுதி தரப்பட்டுவிட்டது. அவரும் தொகுதியை வலம் வருகிறார், இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு உதவினார். இப்போதும் கட்சி நிர்வாகிகளுக்கு பணத்தை வாரி இறைக்கிறார். அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்றால் மட்டுமே தீவிரமாக வேலை பார்ப்போம்'' என்கிறார்கள்.

தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கும் ஏ.சி.சண்முகம் தரப்பில் பேசியபோது, ""இஸ்லாமிய வாக்குகள் இந்த தொகுதியில் கணிசமாக இருக் கிறது.. வெற்றியை தீர்மானிப்பது அந்த வாக்குகள் தான். தாமரைக்கு எக்காலத்திலும் இஸ்லாமியர்கள் வாக்களிக்கமாட்டார்கள்'' என்கிறார்கள்.

பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடும்படி ஏ.சி.சண்முகத்திடம் வற்புறுத்துவதாகவும் அவர் தயங்குவதாகவும் தெரிகிறது. எனவேதான் பா.ஜ.க. வினர் இப்படி குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

-து.ராஜா

Advertisment
nkn090719
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe