ஜெயிலில் பா.ஜ.க. மாவட்டத் தலைவர்கள்! - டெல்டா களேபரம்

ss

ர்மபுரம் ஆதீனத்தின் சன்னிதானமாக இருந்துவரும் மாசிலாமணி தேசிகர் குறித்து ஆபாச வீடியோலி ஆடியோ இருப்பதாகக் கூறி கோடிக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாக சன்னிதா னத்தின் தம்பி விருத்தகிரி கொடுத்த புகாரின் பேரில், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தனியார் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட நான்கு பேரை கைதுசெய்தனர். தலைமறைவாக இருந்த மயிலாடு துறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் பதுங்கியிருந்ததாக கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவைச்சேர்ந்த செய்யூர் ஜெயச் சந்திரன், சன்னிதானத்தின் உதவியாளர் திருவை யாறு செந்தில், ஆதீனத்தின் புகைப்படக்காரரான பிரபாகரன் உள்ளிட்ட மீதமுள்ளவர்கள் இன்றுவரை கைதுசெய்யப்படாமல் தலைமறைவாக இருக்கின்றனர்.

dd

"அகோரத்தின் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு, குற்றப்பின்னணி உடையவர் என்பதை யெல்லாம் விசாரிக்காமல் அவருக்கு பொறுப்பைக் கொடுத்தாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது''”என விலகிவிட்டனர் மயிலாடுதுறை பா.ஜ.க.வினர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவாரூர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நிதியைச் சுருட்டிக் கொண்டதாக விமர்சித்துவந்த முன்னாள் பா.ஜ.க. விவசாய அணி மாவட்டச் செயலாளர் மதுசூதன னை கொலைசெய்ய முயற்சித்ததாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்டச் செயலா ளர் செந்தில்அரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாஸ்கர் உள்ளிட்ட மூன்று பேரை கைதுசெய்து சிறையில் அடைத் துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. வட்டாரத்தில் விச

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. வட்டாரத்தில் விசாரித்தோம்... "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முன்னதாக பா.ஜ.க. தலைமை கொடுத்த பணம் பூத்துகளுக்கும், நிர்வாகிகளுக்கும் முழுமையாகச் செல்ல வில்லை எனவும், கட்சித் தலைமை கொடுத்த பணத் தை செலவுசெய்யாமல் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட சிலர் சுருட்டிக் கொண்டதாகவும் மதுசூதனன் தொடர்ந்து விமர்சித்துவந்தார். இதுகுறித்து தலைமைக்கும் மனு கொடுத்திருந்தார். தலை மையோ இதுதொடர்பான அறிக்கையை தயாரித்து அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. இதற் கிடையே நடந்த தகராறில் மதுசூதனனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் எங்களை அதிர்ச்சியாக்கிவிட்டது.

dd

தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனின் மகன், அவரது அண்ணன் பூண்டி கலைச்செல்வனின் மகனின் குட்டி தாதா ராஜ்யத்தை கண்டித்து ஹெச்.ராஜா தலைமையில் கொரடாச்சேரியில் பெரும் ஆர்ப்பாட்டமே நடந்தது. மதுசூதனன் தி.மு.க.விலிருந்து இரண்டு வருடத்திற்கு முன்பு கலைவாணனோடு மோதல் ஏற்பட்டு பா.ஜ.க.விற்கு தாவினார். அன்றுமுதல் கருப்பு முருகானந்தத்தின் ஆதரவாளராக இருந்துவருகிறார். கருப்பு முருகானந்தத்திற்கும், தி.மு.க. மா.செ.விற்கும் சமுதாயரீதியில் நெருக்கம் அதிகம்.

நடந்து முடிந்த தேர்தலில்கூட தஞ்சை, நாகை தொகுதிகளுக்கான பண வரவுசெலவுகளை மதுசூதனனிடமே கருப்பு கொடுத்திருந்தார். அவரோ, தொடர்ந்து சொந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்றுகூட பார்க்காமல், பா.ஜ.க. மாவட்ட தலைவராக இருக்க வேற ஆட்களே இல்லையா? என பாஸ்கரைத் தாக்கிப் பதிவிட்டிருந்தாராம். ஒருகட்டத்தில் தேர்தல் நிதியை சுருட்டிவிட்டதாக பதிவிட்டு பாஸ்கரை மேலும் எரிச்சல் அடையச்செய்துவிட்டார். ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்களிடம்கூறி மதுசூதனனை மிரட்டிவிடச் சொல்லியிருக்கிறார். சென்றவர்கள் போதையில் அரிவாளால் சரமாரி யாக வெட்டிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த மதுசூதனனை அருகில் இருந்தோர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித் தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பா.ஜ.க. மாவட்ட தலைவரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்தும் கட்சித் தலைமை வாய்திறக்கவில்லை, விசாரணையும் நடத்தவில்லை''’ என்கிறது பா.ஜ.க. வட்டாரம்.

வழக்குப் பதிவு செய்துள்ள குடவாசல் போலீசாரிடம் கேட்டோம். "மதுசூதனனுக்கும், பாஸ்கருக்கும் இடையே அரசியல்ரீதியா பிரச்சனை இருந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பணத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக தகராறு வந்திருக்கு. தொடர்ந்து பாஸ்கர் குறித்து மதுசூதனன் சமூக வலைத்தளப் பக்கங்களில் அவதூறாகப் பதிவிட்டு வர, செந்தில் அரசன் என்பவர் மூலம் கூலிப்படையை அழைத்து மதுசூதனனை கொலைசெய்யத் திட்டமிட்டதும், அந்த கும்பல் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர், செந்தில் அரசன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பா.ஜ.க. பிரமுகரான ஜெகதீசன், அவரது கூட்டாளி சரவணன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோரை கைது செய்துள்ளோம்''’என்கிறார்கள்

dd

பா.ஜ.க.வில் ஆரம்பகாலத்திலிருந்து இருந்துவரும் மூத்த நிர்வாகி ஒருவரிடம் விசாரித்தோம், “"டெல்டா மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே கட்சியில் குற்றப்பின்னணி உடையவர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. கட்சியை வளர்க்கவேண்டும் என்பதற்காக தகுதியற்ற நபர்களாகவே கட்சிக்குள் சேர்த்து நாசமாகிக் கிடக்கிறது. எங்களைப் போன்ற சீனியர்கள் ஒதுங்கி வேடிக்கை பார்க்கும் நிலைதான் இருக்கிறது. சுயலாபத்திற்காக தமிழகம் முழுவதும் ஊழல்மிக்க, குற்றப்பின்னணி உள்ளவர்களை மாவட்ட தலைவர்களாக, நிர்வாகிகளாக நியமித்து கட்சியை கெடுத்திருப்பது கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம்தான். அவர் இந்த பதவியில் நீடிக்கவேண்டுமா என்கிற வாக்குப்பதிவு இணையதளம் வாயிலாக நடக்கிறது. பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் அனைவருமே குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பது வேதனை. மயிலாடுதுறை மாவட்ட தலைவரான அகோரம் பா.ம.க.விலிருந்து வந்தவர். அவர் வன்னியர் சங்க பிரமுகராக இருந்த கே.ஏ. மூர்த்தியை கொலை செய்த வழக்கில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.

அதேபோல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருக்கும் வேதா, சிற்றரசு, சுரேஷ்குமார் என எல்லோருமே கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ஆள்கடத்தல் என ஆடாத ஆட்டமே இல்லை. குட்டி ராஜ்யமே நடத்துறாங்க. இதுகுறித்து பல ஆதாரங்களோடு தலைமைக்கு புகார் கொடுத்து என்ன பயன்? அவர்களுக்கு தேவை ரவுடிகள்தான் என்பது புரிந்து உண்மையாக உழைத்தவர்கள் ஒதுங்கி வேடிக்கை பார்க்கிறோம். 2020, அக்டோபர் மாதம் கும்பகோணத்தைச் சேர்ந்த பா.ஜ.க. வழக்கறிஞர் வி.ஜி.ரவிக்குமார் போலி ஆவணங்களை வழங்கி மத்திய அரசினுடைய பேனல் அட்வகேட்டாக இருப்பதாக, மத்திய அரசின் சட்டத்துறை செயலாளர் டி.ஜி.பி.க்கு புகார் கொடுத்து அப்போது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வழக்கு நம்பர் 1388/2020. அப்போது அவர் தலைமறைவானார். பல நூறு கோடிக்குமேல் மோசடி செய்து மாட்டிக்கொண்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு இவர்தான் வழக்கறிஞர். ரவிக்குமார் மீது மத்திய சட்டத்துறை செயலரே புகார் கொடுத்து அந்த வழக்கு தற்போதுவரை நிலுவையில் இருக்கிறது. அந்த ரவிக்குமாரையே மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக நியமனம் செய்திருக்கும் கொடுமை எந்த கட்சியிலாவது நடக்குமா? அது பா.ஜ.க.வில் மட்டுமே நடந்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டத் தலைவராக இருக்கும் பாஸ்கரன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருக்கிறது. அதைத் தாண்டி திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் அப்பாவி இளைஞர் ஒருவரை தேர்வு எழுதவைத்து ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது சொந்தக் கட்சி நிர்வாகியையே கொலைசெய்ய முயற்சிக்கும் நிலை உருவாகியிருக்கு''’என்கிறார் ஆதங்கமாக.

திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கரின் ஆதரவாளர்களோ, “"மதுசூதனன் தனது முகநூல் பக்கத்தில் மிகமோசமாகப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது பாஸ்கரை ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது. பலமுறை போனில் கண்டித்திருக்கிறார். ஆனால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டுவந்தார் மதுசூதனன். இதில் ஆத்திரமடைந்த பாஸ்கரின் ஆதரவாளர்கள் மதுசூதனனை பயமுறுத்தி வைப்பதற்காக போயிருக்காங்க. அங்கு மதுசூதனன் ஏட்டிக்குப் போட்டியாக பேச, கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளனர். மதுசூதனன் மீதும் புகார் கொடுத்துள்ளோம். அவர்மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யலை காவல்துறை''’என்கிறார்கள்.

nkn250524
இதையும் படியுங்கள்
Subscribe