Advertisment

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக!

strike

"அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் வாக்குகளைக் குறிவைத்து பா.ஜ.க. காய் நகர்த்தி வருகிறது. இதன்மூலம் அந்தக் குடும் பத்தினரின் வாக்குகளையும்கூட கவர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை அக்கட்சியினருக்கு இருக்கிறது''’என்று ஆதங்கத்துடன் பேசினார்,  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து.   

Advertisment

என்ன விவகாரம் இது? 

வழக்கமாக தி.மு.க.வுக்கு விழக்கூடிய  வாக்குகளை,  2026 சட்டமன்ற தேர்தலின் போது,  எந்தெந்த வழிகளில் எல்லாம்  தட்டிப் பறித்துவிடமுடியும் என்ற அசைன்மெண்ட் தமிழக பா.ஜ.க.வினருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.

Advertisment

தி.மு.க. அளித்திருந்த எந்தெந்த வாக்குறுதி கள் நிறைவேற்றப்படவில்லை? யார் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்கள்? என கேள்விகள் வரிசைகட்டி நிற்கும்போது, பளிச்சென்று தெரிவது   ‘ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை முற்றி லும் ஒழிக்கப்படும்’ என்பது போன்ற நிறை வேற்றப்படாத வாக்குறுதிகள். மேலும் அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் டி.என். பி.எஸ்.சி. மூலம் மேற்கொள்ளப்படும் பணிநிய மனங்களின் எண்ணிக்கை குறையும் அபாயத்தை எதிர்கொள்ளும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகியவைதான். 

குறிப்பாக, அரசு ஊழியர்கள்  ‘CPS ஒழிப்பு இயக்கம்’ என்ற பெயரில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதிய ஓய்வூதியத் திட்டமான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (Contributory Pension Scheme #CPS)முற்றிலுமாகக் கைவிட்டு, பழைய ஓய்வூதி

"அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் வாக்குகளைக் குறிவைத்து பா.ஜ.க. காய் நகர்த்தி வருகிறது. இதன்மூலம் அந்தக் குடும் பத்தினரின் வாக்குகளையும்கூட கவர்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை அக்கட்சியினருக்கு இருக்கிறது''’என்று ஆதங்கத்துடன் பேசினார்,  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து.   

Advertisment

என்ன விவகாரம் இது? 

வழக்கமாக தி.மு.க.வுக்கு விழக்கூடிய  வாக்குகளை,  2026 சட்டமன்ற தேர்தலின் போது,  எந்தெந்த வழிகளில் எல்லாம்  தட்டிப் பறித்துவிடமுடியும் என்ற அசைன்மெண்ட் தமிழக பா.ஜ.க.வினருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.

Advertisment

தி.மு.க. அளித்திருந்த எந்தெந்த வாக்குறுதி கள் நிறைவேற்றப்படவில்லை? யார் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்கள்? என கேள்விகள் வரிசைகட்டி நிற்கும்போது, பளிச்சென்று தெரிவது   ‘ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை முற்றி லும் ஒழிக்கப்படும்’ என்பது போன்ற நிறை வேற்றப்படாத வாக்குறுதிகள். மேலும் அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் டி.என். பி.எஸ்.சி. மூலம் மேற்கொள்ளப்படும் பணிநிய மனங்களின் எண்ணிக்கை குறையும் அபாயத்தை எதிர்கொள்ளும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகியவைதான். 

குறிப்பாக, அரசு ஊழியர்கள்  ‘CPS ஒழிப்பு இயக்கம்’ என்ற பெயரில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதிய ஓய்வூதியத் திட்டமான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (Contributory Pension Scheme #CPS)முற்றிலுமாகக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme)மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த இயக்கம். 

அடுத்தது,  அரசுத் துறைகளில் அவுட் சோர்சிங் (வெளிமுகமை) முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை. அது என்ன அவுட்சோர்சிங்? இது ஒரு வணிகநடைமுறை ஆகும். அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமித்து வருவதால், இளை ஞர்களின் அரசு வேலை கனவு தகர்ந்துபோகிறது.

strike1

தமிழ்நாடு அரசின் கீழ் பல துறைகள் உள்ளன. அத்துறைகளில் உள்ள அரசு வேலை வாய்ப்புகளில் அவுட்சோர்சிங் முறை தற்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. காலிப் பணியிடங் களில் பத்தில் ஒரு மடங்குதான், டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் வாயிலாக அரசுப் பணிகளில் நியமனம் நடை பெறுகிறது. மீதமுள்ள பணிகளுக்கு அவுட் சோர்சிங் நியமன முறையே கடைப்பிடிக்கப் படுகிறது. எப்படியென்றால், அவுட்சோர்சிங்கில் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான  ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனத்துடன் அரசு தொடர்பு வைத்துக்கொள்ளும். அந்த ஊழியர் களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் அந்த நிறுவனமே பார்த்துக்கொள்ளும். இதன்மூலம் கோடானு கோடிகள் அத்தகைய நிறுவனங்களுக்கு ஆண்டு வருமானமாகக் கிடைக்கிறது. 

அவுட்சோர்சிங் நிறுவனங் கள் பலவும் செலவைக் குறைக் கும் நோக்கத்துடன் செயல்படு வதால், பணியாளர்களின் பாதுகாப்பு அம்சங்களில் அவ் வளவாக கவனம் செலுத்துவ தில்லை. அவுட்சோர்சிங் நிய மனங்கள் அரசு பொதுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங் களில் மட்டுமே இருந்துவந்த நிலையில், தற்போது நேரடியாக அரசுத்துறையின் அடிப்படைப் பணிகள் முழுவதற்கும் அந்த நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்படுகிறது. மேலும், மாநில அளவில் தலைமைப் பொறுப்பு களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் நடவடிக்கைகளும் தற்போது அதிகப்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார். 

மாரிமுத்து மேலும் ஆதங்கத்துடன், "தமிழ்நாட்டில் பல வழிகளிலும் கட்சியை வளர்த்துக்கொள்ள பா.ஜ.க. துடிக்கிறது அந்த வகையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் சங்கத் தலைவர்களைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்புவதற்கு பெருமுயற்சி எடுத்து வருகிறது. புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்வது, தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருபவர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, அவுட் சோர்சிங் முறையிலான பணிநியமனத்தைக் கைவிடுவது போன்றவை, தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஆகும். அதனை தி.மு.க. அரசு நிறைவேற்றாத கோபம், அரசு ஊழியர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருப்பது நியாயமானதுதான். அதற்காக, தி.மு.க. அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்று பா.ஜ.க. விரிக்கும் வலையில் சிக்குவது சரியல்ல. மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதில் பொதுநலன் சார்ந்து சிந்திக்கவேண்டும். அரசியல் புரித லுடன் வாக்களிப்பது மிகமிக முக்கியம். தீயோ ரின் திசை திருப்புதலுக்கு இடமளித்து, தங்களது குடும்பத்தினரின் வாக்குச் சிந்தனையை மாற்றி விடக்கூடாது. அரசு ஊழியர்களோ, ஆசிரியர் களோ, அவர்களது தனிப்பட்ட கோபம் வேறு, நாட்டின் நலன் சார்ந்த கொள்கை அடிப்படை யிலான சமூக அக்கறை என்பது வேறு. 

என் அனுபவத்தில் சொல்கிறேன், தி.மு.க.ஆட்சியில் நியமிக்கப்பட்டதாலேயே தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் பணி யாற்றிய  10000 சாலைப் பணியாளர்கள் 2002-ல் அ.தி.மு.க. ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட னர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எடுத்த இந்த முடிவால் பாதிப்புக்கு ஆளானவர்களில் ஒருவர்தான் சாலைப்பணி யாளர் பழனிச்சாமி. 2024-ல் நடந்த பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் அவரிடம்  ‘சாலைப் பணியாளர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்ட அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட லாமா?’ என்று கோபமாகக் கேட் டேன். அப்போது பழனிச்சாமி கூறிய விளக்கம் என்னை ஆச்ச ரியப்படுத்தியது.  ‘என்னுடைய சொந்த பாதிப்புகளுக்காக எனது அரசியல் நிலைப்பாட்டினை ஒருக்காலும் மாற்றிக்கொள்ள மாட்டேன்’என்று அத்தனை உறுதியாகச் சொன்னார்.  

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக் கும் தங்களது கோரிக்கை நிறைவேறாத தனிப்பட்ட ஆதங்கம் நிறைய இருக்கிறது. கொள்கை முடிவுகள் காரணமாக பாதிக்கக் கூடிய பொது கோரிக்கையில் மிகவும் கவனத் துடன் ஆராய்ந்து அதனைச் சரிசெய்து கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை யாகும். ஏனென்றால், இத்தகைய பாதிப்புகளின் கோபத்தை வெளிப்படுத்த தொழிற்சங்கங் களுக்கு உரிமை இருக்கிறது. 2003-ல் தொழிற்சங்கங்கள் நடத்திய கூட்டங்களால், 2004-ல் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதி களிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் வாக்குகளை அ.தி.மு.க. இழந்தது.  

முதலமைச்சரோ, அமைச்சர்களோ, சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்களோ, ஊழியர்கள் நிர்வாகம் தொடர்பான ஆலோ சனைகளைச் சரிபார்த்து, ஊழியர் நலன் கருதி முடிவுகளை எடுத்தாலே எந்தவொரு பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிடும். 

எப்படி பார்த்தாலும், அரசு இயந்திரத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இயக்கக்கூடியவர் களைத் தேர்வு செய்வதில், ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சமூகப் பொறுப் புணர்வு அதிகமாகவே இருக்கிறது''” என்றார். 

நமது நட்பு வட்டத்தில் உள்ள, பெயர் குறிப்பிட விரும்பாத,  ஓய்வுபெற்ற அந்த முன் னாள் கோட்டாட்சியர், "மகளிர் உரிமைத் தொகை போன்ற மக்கள் நலன் சார்ந்த  திட்டங் களை நிறைவேற்றி வருவதால், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. இந்நிலை யில்,  பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து வதோ, அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறையை ஒழிப்பதோ, அரசுக்கு மேலும் நெருக்கடியைத் தரும். கோரிக்கை யுடன் போராடுபவர்கள், இந்தச் சிக்கலை அறியாதவர்கள் அல்ல. இந்திய அளவில் பா.ஜ.க.வை காலூன்றவே விடாத மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. பா.ஜ.க.வின் நாட்டுப்பற்றெல்லாம் வெறும் உதட்டளவில்தான். இன்று வரையிலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்,  பிரிவினைவாதத்தைத் தூண்டும் மதவாதிகளாகவே அவர்கள் தங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அனைத்துச் சமுதாயத்தினரிடமும் சகோதரத்துவத்துடன் பழகுபவர்கள் தமிழர்கள். ஏதோ ஒரு காரணத்துக்காக, வெறுப்பு அரசியலை முன்னிறுத்தி பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருவது, தமிழ்நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி விடும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான வாக்காளர்கள் அரசியல் தெளிவுள்ளவர்கள். இதையறிந்தும்,  தமிழ்நாட்டு அரசியலில் பா.ஜ.க. குறுக்குசால் ஓட்டுகிறது''’என்றார் வேதனையுடன். 

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தாலும், தி.மு.க. எதிர்கொள்ளவேண்டிய தேர்தல் கால சவாலாக உள்ளது. 

nkn051125
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe