Advertisment

தலைமை நீதிபதியை அவமதித்த பா.ஜ.க.! பரபரப்பு குற்றச்சாட்டு!

ss

பூஷன் ராமகிருஷ்ணா கவாய் எனும் பி.ஆர்.கவாய், இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14ஆம் தேதி பதவி யேற்றார். நீதிபதி பி.ஆர்.கவாய், பட்டியலினத் தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர். நீதிபதி கவாய்க்கு முன்பு, நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், 2007-ல் இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தார்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 14 ஆண்டு கள் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 2019, மே 24-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கவாய், 6 மாதப் பணிக்குப் பிறகு, 2025 நவம்பர் 23-ல் ஓய்வு பெறுவார்.

Advertisment

cji

ராகுல் காந்தி சம்பந்தப்பட்ட அவதூறு வழக்கில், சூரத் அமர்வு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித் தது. இருப்பினும், அதிகபட்ச தண்டனையை வழங்குவதற்கான குறிப்பிட்ட காரணங்களை கீழ் நீதிமன்றம் வழங்கவில

பூஷன் ராமகிருஷ்ணா கவாய் எனும் பி.ஆர்.கவாய், இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14ஆம் தேதி பதவி யேற்றார். நீதிபதி பி.ஆர்.கவாய், பட்டியலினத் தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர். நீதிபதி கவாய்க்கு முன்பு, நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், 2007-ல் இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தார்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 14 ஆண்டு கள் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 2019, மே 24-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கவாய், 6 மாதப் பணிக்குப் பிறகு, 2025 நவம்பர் 23-ல் ஓய்வு பெறுவார்.

Advertisment

cji

ராகுல் காந்தி சம்பந்தப்பட்ட அவதூறு வழக்கில், சூரத் அமர்வு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித் தது. இருப்பினும், அதிகபட்ச தண்டனையை வழங்குவதற்கான குறிப்பிட்ட காரணங்களை கீழ் நீதிமன்றம் வழங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்த வழக்கு நீதிபதி பூஷன் கவாய் தலைமையிலான அமர்வு முன் விசா ரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் கட்சியுட னான தனது குடும்பத்தினரின் நீண்டகாலத் தொடர்பைக் காரணம் காட்டி, தானாக முன்வந்து வழக்கிலிருந்து விலக முன்வந்தார் நீதிபதி கவாய்.

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை, 2024ஆம் ஆண்டு, நீதிபதி கள் பூஷன் கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகி யோர் அடங்கிய அமர்வுமுன் நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, 17 மாதங்கள் சிறையிலிருந்த சிசோடியா விடுவிக்கப்பட்டார். பி.ஆர்.கவாய், தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவு செய்துள்ள ஒரு விவகாரம் தான் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர்.கவாய்க்கு பாராட்டு விழாவையும், மாநில வழக்குரைஞர்களின் கருத்தரங்கையும் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் மும்பையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தியது. இதில் பங்கேற்பதற்காக வந்த நீதிபதிக்கு, அம்மாநிலத்தின் உயர் அதிகாரி கள் நேரில் வந்து வரவேற்பு அளிக்க வேண்டும். அதுதான் அரசாங்க நடைமுறை. ஆனால் அவர் வந்தபோது உயரதிகாரிகள் யாரும் அவருக்கு வரவேற்பு அளிக்கவில்லை. இதுகுறித்து, அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும், எக்ஸ் தளத்திலும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

Advertisment

அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசும்போது, "நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல, இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே உயர்வானது. அந்த மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின்படி செccயல்பட வேண்டும். நாட்டின் அடித்தளம் வலுவாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களும் சரிசமமானவை. அவை மூன்றும் பரஸ்பரம் மரியாதை அளித்துச் செயல்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

தனது எக்ஸ் தளப்பதிவில், அவர் பட்டிய லினத்தவர் என்பதற்காகவே மஹாராஷ்டிர மாநில உயரதிகாரிகள், அவர் அந்த மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, அவரை வரவேற்பதற்கு வராதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், "இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிய என்னை ஒரு மாநிலத்தின் உயரதி காரியான டி.ஜி.பி. உள்ளிட்ட எந்த அதிகாரி களும் வரவேற்க வராதது வருத்தம் அளிக்கிறது. நீதித்துறை, சட்ட மன்றம் மற்றும் நிர்வாகம் ஆகி யவை ஒன்றுக் கொன்று பரஸ்பர மரியாதையை அளிக்க வேண்டும். ஒரு உயர்ந்த பதவியில் இருப் பவர் ஒரு மாநிலத் திற்கு வரும்போது அவரை வரவேற்பது என்பது ஏதோ நடைமுறையான நிகழ்வு அல்ல, அது மரியாதையின் குறியீடு' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து சட்ட வல்லுநர்கள் கூறுகையில், "பா.ஜ.க. அரசு, பட்டியலினத்தவர்களுக்கும், பழங் குடியினருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வெற்றுப் பேச்சுக்களால் நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் மஹாராஷ்டிராவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு வரவேற்பு அளிக்க முன்வரவில்லை. இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வரவேற்பு அளிக்கும் வழக்கமான நடைமுறையை செய்வதற்கே யோசிக்கிறது பா.ஜ.க. அதற்கு காரணம் அவர் தலித் என்பதால் மட்டுமே!'' எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உரிய மரியாதை தரப்படாதது தனிப்பட்ட விவ காரம் அல்ல. ஒரு வழக்கமான நடைமுறையை மீறுவது தவறான செயல். இதுபோல் எனக்கும் நடந்திருக்கிறது. அலுவலகத்தில் பிரதமர், ஜனாதிபதி புகைப்படங்கள் இருக்கும், ஆனால் துணை ஜனாதிபதி படம் இருக்காது. இதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது'' எனச் சுட்டிக்காட்டியுள்ளார். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் ஜனாதிபதியை புறக்கணித்த கட்சியினர்தானே இவர்கள்!

nkn240525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe