பிரதமர் மோடி, சென்னைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, பா.ஜ.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர். இவர் பா.ஜ.க.வில் எஸ்.சி. -எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கும் இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு தனது பி.எஸ்.ஓ. பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப் பேட்டை சாமிநாயக்கர் தெருவுக்குச் சென்ற பாலசந்தர், அங்கு நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். பாலசந்தரின் பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ அருந்தச் சென்றார். அப்போது இருசக்கர வாகனத் தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், பாலசந்தரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து பா.ஜ.க. பிரமுகரைக் கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் விசாரணை மேற்கொண் டார். அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. ஃபுட் டேஜை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் இறங்கினர்.
பாலசந்தர் கொலையில் இருவேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பழைய பகையின் காரணமாக கோடம்பாக்கம் ஸ்ரீ தூண்டுத லில் இந்த கொலை நடந்ததா என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்துள்ளது. அதேபோல், மாமூல் வசூலிக்கும் தொழில் போட்டியால் கொலை நடந் திருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக் கிறார்கள். இந்து மகாசபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயுடன் இணைந்து செயல் பட்டுவந்தவர்தான் ரவுடி பாலச்சந்தர். அப் போது, தனக்கு போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக, ஸ்ரீயின் ஆலோ சனைப்படி, பசுவின் தலையை வெட்டி வீட்டின் உள்ளே போட்டுவிட்டு, தனக் கெதிராக இஸ்லாமிய இயக்கத்தினர் இப்படிச் செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் போலீசாரிடம் சொன்னார். இப்படிச் செய்தால் போலீஸ் பாதுகாப்பு கிடைக்கு மென எதிர்பார்த் தவருக்கு, சிறைத்தண்டனைதான் கிடைத்தது.
தனக்கு யோசனையும் சொல்லிக் கொடுத்து, மறுபுறம் போலீசுக்கும் போட்டுக் கொடுத்ததாக ஸ்ரீ மீது பாலசந்தருக்கு கடும்கோபம். அதேபோல, கோடம்பாக்கம் ஸ்ரீ மீது, நிரஞ்சனி என்பவர் கீழ்ப்பாக்கம் காவல்துறையிடம் கொடுத்த பாலியல் புகார் விவகாரத்தில் முக்கிய சாட்சியாக இருந்தவர் பாலசந்தர். இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒருவர் மீது ஒருவருக்கு தீராப்பகை உண்டானது. பா.ஜ.க.வில் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் எல்.முருகனுக்கு தீவிர ஆதரவாளராக இருந்து, பா.ஜ.க. எஸ்.சி. எஸ்.டி. பிரிவின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் பதவியைக் கைப்பற்றினார் பாலசந்தர். அதோடு போலீஸ் பாதுகாப்பையும் பெற்றார்.
இச்சூழலில், சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன்கள் பிரதீப், சஞ்சய் ஆகியோர் கூட்டாளியுடன் சேர்ந்து பாலசந்தரை கொலை செய்துள்ளது தெரியவந்துள் ளது. இதன் பின்னணியில், மாமூல் வசூலிப்பது தொடர்பான பிரச்சினை இருந்துள்ளதாம். சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மீன் கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் பிரதீப் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் எடுக்க, சிந்தாதிரிப்பேட்டையில் துணிக்கடை நடத்திவரும் பாலசந்தரின் உறவினரான ரூபன் சக்கரவர்த்தியிடம் பணம் கேட்டதற்கு அவர் மறுத்துள்ளார். இந்நிலை யில், வேறொருவர் மூலம் பணத்தை ஏற்பாடு செய்து ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிரதீப், தன் தம்பி சஞ்சயுடன் ரூபன் சக்கரவர்த்தியின் கடைக்குச் சென்று, ஜாமீனில் எடுக்க பணம் கொடுக்காததால், அவரைத் தீர்த்துக்கட்டப்போவதாக மிரட்டி யிருக்கிறார். இதுகுறித்து போலீசில் புகாரளிக்க வைத்துள்ளார் பாலசந்தர். அதேபோல, தர்கா மோகனால் பாதிக்கப்பட்ட வசந்தா என்பவருக்கு ஆதரவாகவும் பாலசந்தர் காவல் நிலையத்தில் புகாரளிக்க வைத்துள்ளார்.
அந்த புகாரின்பேரில் தர்கா மோகனும் அவரது மருமகன் தினேஷும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இது பிரதீப்புக்கும், சஞ்சய்க்கும் ஆத்தி ரத்தை அதிகரிக்கச் செய்தது. எனவே இருவரும், தங்கள் நண்பன் கலைவாணனையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு, பாலசந்தரை நோட்டம்விட்டு, காவலுக்கு இருந்த போலீஸ் அருகிலில்லாத நேரத்தில் கொலை செய்துவிட்டு தப்பித்துள்ளனர். பாலசந்தரின் உயிருக்கு குறி வைக்கப்படு வது தெரிந்திருந்தும், அவரது பாதுகாப் பில் அசட்டையாக இருந்ததாகக் கூறி, அவரது பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ண னை சஸ்பெண்ட் செய்ய போலீஸ் கமி ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரிடம் கொலை நடந்தது குறித்த விவரங்களைத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். குற்றவாளிகள் நால்வரை எடப்பாடியில் வைத்து சிறப்புப் படையினர் கைது செய்தனர்.
இந்த கொலைச் சம்பவத்துக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இன்னொருபுறம், ரவுடிகளைத் தொடர்ச்சியாக பா.ஜ.க.வில் இணைத்து வந்ததால்தான் இப்படியான அரசியல் கொலைகள் நடப்பதாக சமூக வலைத் தளங்களில் பலரும் காய்ச்சி எடுக்கிறார்கள்.