"எனக்கு துணை ஜனாதிபதியைத் தெரி யும்!" என்ற ஒரு பொய் யைப் பூசிக்கொண்டு, ரயில்வே பணி, நீட் தேர்வுத் தேர்ச்சி, உள்கட்சியில் உயர் பதவிகளை வாங்கிக் கொடுப்பது எனப் பலவற்றையும் முடித் துத்தருவதாக கூறிக் கொண்டு கோடிக் கணக்கில் வசூலித்து ஆட்டையைப் போட்டுள் ளார் பா.ஜ.க. நிர்வாகி முத்துசாமி.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்டு, தலைநகர் டெல்லியில் வசித்துவரும் தென்னிந்திய மக்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்தும் பணியைச் செய்து கட்சியை அவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கான கன்வீனர் என்ற பொறுப்பை பா.ஜ.க.வில் வகித்து வந்தார் இவர். ஆனால் இப்பொறுப்புக்கான பணிகள் அதிகமாக இருந்ததால், மாநிலவாரி யாக நான்காகப் பிரித்து நான்கு பேரை இப்பதவியில் அமர்த்தியது பா.ஜ.க. அதையடுத்து, டெல்லிவாழ் தமிழர்களுக்கான கன்வீனராகப் பொறுப்பு வகித்துவருகிறார்.
தன்னுடைய அரசியலின் தொடக்கத்தில் பல கட்சிகளுக்கு மாறி, இறுதியாக பா.ஜ.க.வில் ஐக்கியமானவர் இந்த முத்துசாமி. இவருக்கு சொந்த ஊர் தர்மபுரி என்றாலும், பிறந்து வளர்ந்த தெல்லாம் டெல்லியில்தான். இவர், முக்கியமான பா.ஜ.க. பிரமுகர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து, அவர்களுக்கு நெருக்கமாகக் காட்டி கட்சியில் வளர்ந்து, தென்னிந்திய கன்வீனர் என்ற பொறுப்புவரை வளர்ந்துள்ளார்.
அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து, தமிழ் நாடு முழுக்க, அவரோடு மிக வும் நெருக்கமாக இருப்பதாகச் செய்தியைப் பரப்பி பா.ஜ.க.வினரை வாய்பிளக்க வைத்திருக் கிறார். தனக்காக, சஞ்சய், தண்டபாணி ஆகியோ ரைக் களமிறக்கிவிட்டு, அவர்களின் மூலமாக, ரயில்வே பணி, கட்சியில் உயர் பதவிகளைப் பெற விரும்பு வோரைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவை யானதைச் செய்துகொடுப்ப தாகக் கூறி பணத்தை லட்சக் கணக்கில் வசூலித்து வந்திருக்கிறார். இதை நம்பி, சென்னை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி எனப் பல மாவட்டங்களிலும் தங்கள் தேவைக்காக பணத்துடன் இவரை அணுகியவர்களிடம் லட்சக்கணக்கில் வசூலித் துள்ளாராம். அதேபோல நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதையும் செய்து தருவதாகக்கூறி லட்சக் கணக்கில் வாங்கியுள்ளாராம். இப்படி பணம் பெற்றுக்கொண்டு எதையுமே செய்து தராததால், பணம் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டால் மிரட்டி அனுப்பியிருக்கிறார். இதனால் பணத்தைக் கொடுத்தவர்கள் வெளியில் சொல்லவும் முடியாமல் தவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான், பா.ஜ.க. மாஜி எம்.எல்.ஏ.க்களான இருவர், டெல்லியில் சில முக்கிய விஷயங்களை முடித்துத் தரச்சொல்லிக் கேட்டதும், "அதற்கென்ன நம்மிடம் துணை ஜனாதிபதியே இருக்கும் சூழ்நிலையில், அவரை வைத்தே காரியத்தை கச்சிதமாக முடிச்சிடலாம்!" எனப்பேசி, 22 லட்சம் ரூபாயைக் கறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் இவர்மீதான மோசடிப்புகாரை பா.ஜ.க. மேலிடம் வரை கொண்டுசென்றுள்ளனர். ஆனால் அப்புகார்களைத் தமிழ்நாட்டின் முன்னாள் பா.ஜ.க. தலைவரின் தயவோடு வெளித்தெரியாமல் மூடி மறைத்துள்ளார்.
இந்நிலையில், மாஜி எம்.எல்.ஏ., கட்சித் தலைமைக்கும், துணை ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தைப் பார்த்த துணை ஜனாதிபதி, அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளவற்றில் உண்மைத்தன்மை இருக்கும் பட்சத்தில் அதன்மீது நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்திருக் கிறார். அந்த கடிதத்தின் மீது எந்த மேல் நடவடிக் கையும் எடுக்காமலிருக்க, முன்னாள் தலைவர்களின் பக்கபலத்தோடு முத்துசாமி காய்களை நகர்த்திவருவ தாகக் கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் தமிழ் பரப்பும் சேவைக்கெனத் தொடங்கப்பட்ட டெல்லி தமிழ்ச் சங்கத்தில் முத்து சாமி உறுப்பினராக இருக்கிறார். அப்படி இருந்துகொண்டு, அந்த சங்கத்திலும் இவர் பல்வேறு மோசடிகளைச் செய்துவருவதாக இவர்மீது பலரும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
முத்துசாமியின் கன்வீனர் பதவியால் டெல்லிவாழ் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும், இந்த பதவியை வைத்துக்கொண்டு, கேட்பதற்கு யாருமில்லாமல் இவர் ஆடும் ஆட்டத்துக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்து கிறார்கள்.
கன்வீனர் முத்துசாமி மீதான குற்றச்சாட்டு கள் குறித்து அவரிடம் கேட்டபோது, "இவர்கள் என் மீது பொய்யான தகவலைப் பரப்பி வரு கின்றனர். அடி மட்டத் தொண்டனாகக் கட்சியில் இணைந்து வளர்ந்து பெரும் பொறுப்புக்கு வந்திருப்பதால் எனது வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே வேண்டுமென்றே என் மீது பொய்ப்புகார்களை கட்சியின் தலைமைக்கு அளிக்கிறார்கள். என்னை நம்பி ஊர்க்காரர்கள் வந்து பிரச்சனையைச் சொல்லும்போது, கட்சியின் நன்மைக்காகச் செய்து கொடுத்துள்ளேன். இது கட்சியின் வளர்ச்சிக்காகத் தானே தவிர தனிப்பட்டு எனது நன்மைக்காகக் கிடையாது" என்றார். பா.ஜ.க. தலைமை இத்தகைய குற்றச்சாட்டுகளின்மீது ரகசியமாக விசாரணை நடத்தினால் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் சிக்கக்கூடும் என்று தெரியவருகிறது.