நெல்லை மாநகர மா.செ. பொறுப்பில் அமர்த்தப்பட்ட அப்துல்வகாப், மாநகரின் கட்சிப் பொறுப்பிலிருந்த சீனியர் நிர்வாகிகள், கட்சியினரைப் புறக்கணித்து விட்டு, கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவர்களை நீக்கிவிட்டு, தனக்கு வேண்டியவர்களையும், பிற கட்சியிலிருந்து வந்தவர்களையும் அப்பொறுப்புகளில் அமர்த்தினார். அத்துடன் உள்ளாட்சித் தேர்தலின் போதும், மாநகராட்சி கவுன்சிலர்களாகத் தனது ஆதரவாளர்களே வரும்படியாகச் செயல்பட்டதால், நெல்லை மாநகரின் கழக முன்னோடிகளான எக்ஸ் எம்.எல்.ஏ. மாலைராஜா, டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்ளிட்டோர், மா.செ.வுக்கு எதிராக அணி திரண்டதோடு, கட்சித் தலைமைக்கும் புகார்களை அனுப்பினர்.
இதற்கிடையே. நெல்லை தி.மு.க. மேயராகப் போட்டியிடுவதற்கு கட்சி சார்பில் அறிவித்த சரவணனிடம் ஒரு கனமான தொகையை டிமாண்ட் வைத்திருக்கிறார் மா.செ. அப்துல்வகாப். தன்னிடம் அவ்வளவு பணமில்லை எனக்கூறி, முப்பது சதம் தொக
நெல்லை மாநகர மா.செ. பொறுப்பில் அமர்த்தப்பட்ட அப்துல்வகாப், மாநகரின் கட்சிப் பொறுப்பிலிருந்த சீனியர் நிர்வாகிகள், கட்சியினரைப் புறக்கணித்து விட்டு, கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவர்களை நீக்கிவிட்டு, தனக்கு வேண்டியவர்களையும், பிற கட்சியிலிருந்து வந்தவர்களையும் அப்பொறுப்புகளில் அமர்த்தினார். அத்துடன் உள்ளாட்சித் தேர்தலின் போதும், மாநகராட்சி கவுன்சிலர்களாகத் தனது ஆதரவாளர்களே வரும்படியாகச் செயல்பட்டதால், நெல்லை மாநகரின் கழக முன்னோடிகளான எக்ஸ் எம்.எல்.ஏ. மாலைராஜா, டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்ளிட்டோர், மா.செ.வுக்கு எதிராக அணி திரண்டதோடு, கட்சித் தலைமைக்கும் புகார்களை அனுப்பினர்.
இதற்கிடையே. நெல்லை தி.மு.க. மேயராகப் போட்டியிடுவதற்கு கட்சி சார்பில் அறிவித்த சரவணனிடம் ஒரு கனமான தொகையை டிமாண்ட் வைத்திருக்கிறார் மா.செ. அப்துல்வகாப். தன்னிடம் அவ்வளவு பணமில்லை எனக்கூறி, முப்பது சதம் தொகையை மட்டுமே கொடுத்தவர், மீதத்தொகைக்கு ஈடாக தனது வீட்டுப் பத்திரத்தை அவரிடம் கொடுத்திருக்கிறாராம்.
மாநகராட்சியின் காண்ட்ராக்ட பணிகளில் வழக்கமாக மேயர் சரவணன் ஈடுபட்டிருக்கிறார். ஒருசில முக்கிய காண்ட்ராக்ட்களில் மா.செ. தலையீட்டால் அவருக்கு கிடைக்காமல் போயிருக்கிறது. இப்படியாக மேயர் சரவணன், மா.செ. வகாப் இடையே உரசல்கள் எழ, மேயர் சரவணனை அந்த பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, துணை மேயரை மேயராக்க வேண்டும் என்று தனது ஆதரவு கவுன்சிலர்களைத் தூண்டிவிட்டு மாநகராட்சி கமிஷனரிடம் கடிதம் கொடுக்க வைத்திருக்கிறார் வகாப். இதுவும் பெருத்த அதிர்வலைகளைக் கிளப்பியது.
தொடர்ந்து, கட்சிக்கான நிதிக்காக பாளை பகுதியின் நிறுவனம் ஒன்றில் டிமாண்ட் வைக்க, தி.மு.க.வின் தலைமைக்கு நெருக்கமான அந்த நிறுவனத்தின் அதிபரோ, விஷயத்தை கட்சித் தலைமை வரை கொண்டுபோய் விட்டாராம். இதில் கடுப்பானதால், அந்நிறுவனத்திற்கு செக் வைக்கிற வகையில் அந்நிறுவனத்தின் எதிரே விதிமீறலாக, தன்னுடைய எம்.எல்.ஏ. நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை அமைக்கவும், அதுவும் சர்ச்சையாகியிருக்கிறது.
இதனால் நடந்தவற்றை விசாரிக்க, குமரி மாவட்ட தி.மு.க. புள்ளியான ஆஸ்டினை அனுப்பியது தலைமை. அவரும் விசாரணை நடத்தி அறிக்கையை கட்சித் தலைமையிடம் கொடுத்திருக்கிறார்.
இதனையடுத்து மேயர் சரவணனையும், மா.செ. அப்துல்வகாப்பையும் அழைத்து விசாரித்தது அறிவாலயம். மேயரின் பத்திரங்களை திரும்ப ஒப்படைக்கச் சொன்னதோடு, மேயர் மாற்றமெல்லாம் நடக்கக்கூடியதல்ல என்றும் கூறி, அப்துல் வகாப்பை கடுமையாக எச்சரித்து அனுப்பி யிருக்கிறது. எனினும், மேயரை மாற்றியே ஆக வேண் டும் என்ற புகாருடன் தனது ஆதரவு கவுன் சிலர்களை மறுபடியும் கிளப்பிவிட்டார் மா.செ., உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவைச் சந்தித்து முறையிட வைத்தார். இதையடுத்து மீண்டும் எச்சரித்தது தலைமை.
விளைவுகளைப் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாகவே செயல்படுகிற மா.செ.வின் லேட்டஸ்ட் டீலிங் தான் புயலைக் கிளப்பிவிட்டது. "நெல்லை பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரனும், மா.செ. அப்துல்வகாப்பும் ரியல் எஸ்டேட் தொழிலின் பங்காளிகள். இவர்கள் பங்காளிகள் என்பது காதும் காதும்வரை தெரிந்த விஷயம். தலைமை வரை போகாதிருந்த இந்த விஷயம், அண்மை யில் நடந்த டீலிங்கில் லைம்லைட்டிற்கு வந்துவிட்டது.
பாளையின் கே.டி.சி. நகரையடுத்த சாலையில், தாழையூத்து செல்லும் மேம்பாலம் அருகிலுள்ள 8 ஏக்கர் நிலத்தை நயினார் நாகேந்திரன் தன்னுடைய மகன் பாலாஜி பெயரில் வாங்கியுள்ளார். சுமார் நூறு கோடி மதிப்பிலான இந்த இடம், உள்ளூர் திட்டக் குழுமத்தின் மனைப் பிரிவு அனுமதியின்றி இருக்கிறது. திட்டக்குழுமத்தின் அனுமதி கிடைத்தால் அதன் மதிப்பு மேலும் ஏறுமாம். ஆனால் திட்டக்குழுவின் அனுமதி கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாம். ஒண்டுவதற்கு சிறிய வீடு கட்டுவதற்காக சிறு, குறு வீட்டு மனைகளை வாங்கியவர்கள், அதற்கான உள்ளூர் திட்டக் குழுமத்தின் அங்கீகாரம் பெற முடி யாமல் பரிதவித்துக் கொண்டிருக்க, மா.செ.வும், தொகுதி எம்.எல்.ஏ.வும், உள்ளூர் திட்டக் குழுமத்தின் உறுப் பினர் எனப் பல பொறுப்புகளைக் கொண்டிருக்கிற அப்துல் வகாப், தனக்கிருக்கும் அந்த அதிகாரத்தைப் பயன் படுத்தி நயினார் நாகேந்திரனின் இடத்திற்கான திட்டக்குழுவின் அங்கீகாரம் கிடைக்க வழிசெய்தது காற்று வாக்கில் பரவியது. விஷய மறிந்த உளவுப் பிரிவும் தலைமைக்கு நோட் போட்டிருக்கிறது. இதனால் அதிர்ந்துபோன தி.மு.க. தலைமை, இறுதியில் அப்துல் வகாப்பை மா.செ. பொறுப்பிருந்து கழட்டிவிட்டுள்ளது. தற்போது, அப்துல் வகாப்பின் எதிர்த்தரப் பிலுள்ள முன்னாள் பாளை எம்.எல்.ஏ.வான டி.பி.எம்.மைதீன்கான் மாவட்ட செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்'' என்கிறார்கள் கட்சியின் சீனியர் புள்ளிகள்.
"கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது இதுதானோ?