Advertisment

அ.தி.மு.க.வை டம்மியாக்கிய பா.ஜ.க! - புதுச்சேரி களேபரம்!

pondy

மிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் அ.தி.மு.க. -பா.ஜ.க. இடையே மோதல் நடந்துவருகிறது. எந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கவேண்டும், யாருக்கு எத்தனை தொகுதி என்பதை டெல்லி பா.ஜ.க.வே முடிவு செய்கிறது. அதே நேரத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 2021 நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைத்து என்.ஆர்.சி. 16, பா.ஜ.க. 9, அ.தி.மு.க. 5 இடங்களில் போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற வில்லை. இந்த 2026 ச

மிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் அ.தி.மு.க. -பா.ஜ.க. இடையே மோதல் நடந்துவருகிறது. எந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கவேண்டும், யாருக்கு எத்தனை தொகுதி என்பதை டெல்லி பா.ஜ.க.வே முடிவு செய்கிறது. அதே நேரத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 2021 நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைத்து என்.ஆர்.சி. 16, பா.ஜ.க. 9, அ.தி.மு.க. 5 இடங்களில் போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற வில்லை. இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஒரு பொருட்டாகக்கூட புதுவையில் பா.ஜ.க. மதிக்கவில்லை. நாங்களும் கூட்டணியில்தான் இருக்கிறோமென புதுவை மாநிலச் செயலாளர் அன்பழகன்தான் சொல்லிக்கொண்டிருக்கிறாரே தவிர என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. மவுனமாகவே இருக்கிறது. 

Advertisment

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காரைக்காலில், "நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும்!' என்ற தலைப் பில் பா.ஜ.க. நடத்திய கூட்டத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். அவரை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று சந்தித்துப் பேசினார். அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், 10 இடங் களில் பா.ஜ.க., 2 இடங் களில் அ.தி.மு.க., 2 இடங்களில் லாட் டரி மார்ட்டின் மகன் நடத் தும் ல.ஜ. க.வுக்கு என பேசியுள்ள னர்.  இது குறித்து ஏப்ரல் 13ஆம் தேதி ஒன்றிய அமைச்சரும் புதுவை பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா, முதலமைச்சர் ரங்க சாமியை நேரில் சந்தித்து "அமித்ஷா சீட் குறித்து உங்களிடம் பேசச் சொன்னார்' எனச் சொல்லி பேசியுள்ளார். அப்போது கூட்டணிக்குள் ல.ஜ.க.வை சேர்ப்பது குறித்து அதிருப்தி தெரி வித்துள்ளார். "அவுங்க நம்ம கூட்டணியில் இருந்தால் பலமா இருக்கும், நமக்கான செலவு களை அவரே பார்த்துப்பார்'' என மாண்டவியா சொல்ல, அதை மறுத்துள்ளார் ரங்கசாமி. மறு நாள் தொகுதிப் பங்கீடு குறித்து அமித்ஷாவை சந்தித்தபோது, "சார்லஸ் நம்ம கூட்டணியில் இருக்கட்டும்'' என்றபோது மறுத்துள்ளார். அந்த இரண்டு தொகுதிகளை பா.ஜ.க. எடுத்துக் கட்டும் அல்லது அ.தி.மு.க.வுக்கு ஒதுக்குங்கள் எனச் சொல்லியுள்ளார், ரங்கசாமி சந்தித்துவிட்டு சென்றபின் சார்லஸ் மார்ட்டின் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார். 

Advertisment

இந்நிலையில் என்.டி.ஏ. கூட்டணியில் தங்களுக்கு இரண்டு சீட் தான் பா.ஜ.க. ஒதுக்கு கிறது என்பதைக்கேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதமே, 'காணாமல்போன அ.தி.மு.க.! புதுச் சேரியில் தத்தளிக் கும் ர.ர.க்கள்!' என்ற தலைப்பில் செய்தி வெளியிட் டிருந்தோம். அதில், புதுவையில் அ.தி. மு.க.வை பா.ஜ.க. ஒருபொருட் டாகவே மதிக்க வில்லையெனக் கூறியிருந்தோம், அதன்படியே நடக்கிறது. இச்சூழலில், என்.டி.ஏ. கூட்டணியிலுள்ள கட்சிகள், மற்றவர் களை வாரிவிட சுயேட்சையாக வேட் பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார் களாம்!

nkn210226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe